Day: January 20, 2020
ஆயுதத் தடையை வலுவாக கட்டுப் படுத்தப்பட வேண்டும்: லிபியா மாநாட்டில் மேர்க்கெல் கருத்து
ஆயுதத் தடையை கடந்த காலங்களில் இருந்ததை விட வலுவாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். பெர்லினில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த லிபியா அமைதி உச்சி மாநாட்டில் சுமார் ஐந்து மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்,மேலும் படிக்க...
சர்வதேச பொருளாதார மாநாடு சுவிஸில் ஆரம்பம்
சர்வதேச பொருளாதார மாநாடு சுவிஸ்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில், சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இம்மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ்,மேலும் படிக்க...
இல்-து-பிரான்சுக்குள் வழமைக்குத் திரும்பும் போக்குவரத்து
இன்று திங்கட்கிழமை ஜனவரி 20 ஆம் திகதி இல்-து-பிரான்சுக்குள் போக்குவரத்து வழமைக்குத் திரும்ப உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை RATP சாரதிகள் அளித்த வாக்கின் படி ‘தொடர் வேலை நிறுத்தம்’ கை விடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 1, 2, 3bis, 7bis, 9, 10,மேலும் படிக்க...
லெபனானில் பாதுகாப்பு தரப்பிற்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் மோதல் – 400 பேர் காயம்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையிலான மோதலில் நேற்று (சனிக்கிழமை) சுமார் 400 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமாகிய போராட்டங்களில் இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும், அத்தோடு 377 பேர்மேலும் படிக்க...
யேமனில் பள்ளிவாசல் மீது தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு
யேமனில் இராணுவ முகாமில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. யேமன் நாட்டில் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி படையினருக்கும் இடையே 2015ஆம்மேலும் படிக்க...
உலகில் முதன்முறை உயிருள்ள இயந்திர மனிதன்
ஆப்பிரிக்கத் தவளையின் உயிரணுக்களைக் கொண்டு உலகில் முதன் முறை உயிருள்ள இயந்திர மனிதனை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அதன் பெயர் Xenobot. ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட அந்த இயந்திரம், இளஞ்சிவப்பு நிறத்தில், தசைக் கோளம் போன்ற வித்தியாசமான வடிவில் இருக்கும்.மேலும் படிக்க...
குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி
குழந்தைகளின் கிறுக்கல்களை படம் பிடித்தால் பாட்டுப் பாடும் புதிய செயலி. சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ளது. பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள செயலி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. வீட்டின் சுவர்களில் குழந்தைகள் கிறுக்கும்போது, பெற்றோர்கள் அவர்களைக் கண்டிப்பது வழக்கமான ஒன்று.மேலும் படிக்க...
மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா ஒத்திகை
குடியரசு தின விழா முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் கண்கவரும் வகையில் நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் வாகன ஒத்திகை நடைபெற்றது. இதையடுத்து தேசிய கீதம் இசைக்க இந்திய விமானப்படை அதிகாரிகள்மேலும் படிக்க...
தமிழக முதலமைச்சரின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது – குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு
விவசாயியாக இருந்ததை மறக்காமல் இன்றளவும் விவசாயம் செய்யும் தமிழக முதலமைச்சரின் செயல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், தன்னுடைய செயல்பாடுகள் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களை கவர்ந்துமேலும் படிக்க...
இரட்டையர்களை ஒன்றிணைத்து கின்னஸ் உலக சாதனை படைக்க இலங்கையில் நடவடிக்கை
உலகில் அதிகமான இரட்டையர்களை ஒன்றிணைத்து கிண்ணஸ் உலக சாதனையை ஒன்றை படைக்க இலங்கை இரட்டையர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிகழ்வு இன்று (20) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் வயது வித்தியாசமின்றி இரட்டையர்கள் பங்குபற்ற முடியும். இவர்களைமேலும் படிக்க...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் என்பது கட்டாயமானது!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொதுத் தேர்தல் ஒன்றுமேலும் படிக்க...
காணாமல் போனோர் விவகாரம் – ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு!
காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை வடக்கு, கிழக்கு இணைந்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் கண்டித்துள்ளார். வவுனியாவில் 1065 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (19)மேலும் படிக்க...