Friday, February 8th, 2019

 

ஆபத்தான நாடுகள் பட்டியலில் சவுதி! – ஐரோப்பிய ஆணையகம் நடவடிக்கை

பணமோசடி தொடர்பான ஆபத்தான நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா மற்றும் பனாமாவை போன்ற நாடுகளை உள்ளடக்குவது தொடர்பாக ஐரோப்பிய ஆணையகம் ஆலோசித்து வருகின்றது. பணச்சலவை விடயத்தில் இந்நாடுகள் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஆணையகம், அதன் கறுப்புப் பட்டியலில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் எதிர்ப்புகளை தாண்டி ஐரோப்பிய ஒன்றியம் இந்நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தி பினான்ஸியல் ரைம்ஸ் பத்திரிகை இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்றங்கள் மற்றும் பணமோசடிக்கு எதிராக போராட தவறியமை தொடர்பாக 20இற்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பிய ஆணையக உறுப்பினர்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


மகனின் உடலில் இருந்து 5 ஆண்டுகளாக இரத்தம் எடுத்த தாதிக்கு சிறை!

டென்மார்க்கை சேர்ந்த 36 வயதான பெண் தாதியொருவர் பயிற்சி பெறுவதற்காக தனது 7 வயது மகனின் உடலில் இருந்து ஒவ்வொரு வாரமும் ½ லீற்றர் ரத்தம் எடுத்துள்ளார். குறித்த சிறுவன் 11 மாத குழந்தையாக இருந்த காலப்பகுதியிலிருந்து 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  இதனால் தாதியின் மகன் குடல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்ட அந்த பெண் தாதி மீது ஹெர்னிங் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுவரை காலமும் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அவர் தொடர்ந்து தாதியாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மகனின் உடலில் இருந்து எடுத்த ரத்தத்தை தான் பயிற்சி பெற்ற பின், கழிவறையில் கொட்டியதாகவும், ஊசியை குப்பைத் தொட்டியில்மேலும் படிக்க…


தாய்லாந்து மன்னரின் சகோதரி, பிரதமர் தேர்தல் வேட்பாளராக போட்டி!

தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோனின் சகோதாரி எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரதமருக்கான தேர்தல் போட்டியில் முதன்மை பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். பிரதமர் தக்‌ஷின் ஷினவாத்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு நம்பிக்கை வேட்பாளராக இளவரசி உப்போல்ரட்டன ராஜகன்யா சிறிவத்தனா பர்னாவதி (வயது 67) தேர்தலில் போட்டியிடவுள்ளார். இன்று தொடர்பான ஆவணங்கள் இன்று ஊடகங்களின் மத்தியில் வௌிப்படுத்தப்பட்டன. தாய்லாந்தின் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இதுவரை அரசியலில் ஈடுபடாமல் இருந்த நிலையில் நீண்ட கால பாரம்பரிய வரையறையை உடைக்கும் முயற்சியாக தாய்லாந்து இளவரசியின் பிரசன்னம் கருதப்படுகின்றது.  மன்னரின் மூத்த சகோதரி தாய் ராக்ஸ சார்ட்டட் வேட்பாளராக இன்று தன்னை பதிவுசெய்துள்ளார்


பிரேசில் ஜனாதிபதி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரேசில் ஜனாதிபதி ஜெயர் போல்சரோ, சாவ் பாலோ வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியா நோய்த்தொற்றின் அறிகுறி காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை இரவு காச்சல் காரணமாக பிரேசில் ஜனாதிபதி ஜெயர் போல்சரோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்பாக மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக நேற்று (வியாழக்கிழமை) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அவர் தற்போது சாவ் பாலோ வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சியரா லியோனில் அவசரகால நிலை பிரகடனம்

சியரா லியோனில் தொடரும் வன்முறைகள் காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சியரா லியோனில் கடந்த வருடத்தில் மாத்திரம் 8,500-இற்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸாரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நிலவும் பதற்றமான சூழலை கருத்திற்கொண்டு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ (Julius Maada Bio) அறிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களின் குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தற்போதைய சட்டத்தின் பிரகாரம் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பலருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், இதற்கு அந்நாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


ஊழல், மோசடி முறைப்பாடுகள் பொறுப்பேற்பு!

ஊழல், மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முறைப்பாடுகளை பொறுப்பேற்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவே விசாரணை இடம்பெற்றவுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவின் தலைமையிலான இந்த விசேட ஆணைக்குழு கடந்த ஜனவரி 17 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை மூன்று மாதங்களிலும், பரிந்துரைகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கை ஆறு மாதங்களிலும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட கனேடிய எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்!

இலங்கை தமிழர்களின் மனித உரிமையையும் ஜனநாயக உரிமையையும் நிலைநாட்ட, கனேடிய கொன்சவ்வேட்டிவ் கட்சி உறுதியாகக் குரல் கொடுக்குமென கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் அன்ரூ ஸ்சியர் அறிவித்துள்ளார். மிசிசாக்க தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் மரபுத் திங்கள் மற்றும் பொங்கல் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கையைப் பொறுத்தவரையில், மேற்குலக நாடுகளிடமிருந்து கணிசமான தொகை நிதியுதவியைப் பெறுகின்ற ஒரு நாடு என்ற வகையில், இலங்கை தனது ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதற்கும் மனித உரிமையை மதிப்பதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். கனடாவில் ஆட்சியிலுள்ள லிபரல் கட்சி கனடிய தமிழ் மக்களுக்கு கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் குறித்து போதிய எந்த நடவடிக்கையையும் எடுக்காமலிருப்பது கவலைக்குரியது. அதனால் தாம் கடந்த வருடம், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில்,மேலும் படிக்க…


ஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை

உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையில் உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரித்தானியாவும் அமெரிக்காவும் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இங்கு நினைத்துப்பார்க்க முடியாத இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர் என்பதுடன் இது அந்த நாட்டின் மக்கள் தொகைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் போராளிகளுக்குமிடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும் ஹவுத்தி போராளிகளுக்கு ஈரானும் ஆதரவு வழங்கி வருகின்றன. ஏமன் அரசுடன் இணைந்து சவூதி தாக்குதல்களினை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்மேலும் படிக்க…


அமைதியை ஏற்படுத்துவது போரைவிட சிக்கலாக உள்ளது

வெளிநாட்டுப் படைகள் வெளியேறும் வரை அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை என தலிபான்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா தொடர்ந்து தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் சிறப்பு தூதுவரான ஜல்மாய் கலில்ஜாத்துடன் தலிபான் அரசியல் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேற வேண்டும் எனவும் அதுவரை தலிபான்களுக்கு அமைதி ஒப்பந்தத்தில் உடன்பாடில்லை என ஷேர் முகமது அப்பாஸ் நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளார். அமைதியை ஏற்படுத்துவது போரைவிட சிக்கலாக இருக்கிறது எனத் தெரிவித்த அவர் இறுதியாக இதற்குத் தீர்வு எட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அரச படைகளுக்கும் தலிபான்களுக்குமிடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்ற நிலையில் அரச படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்மேலும் படிக்க…


வட மாகாணத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பு

வட மாகாணத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விபரம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சிறுவருக்கெதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் வட மாகாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக யாழ் மாவட்டத்தில் 26 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 20 சிறுவர்களும், வவுனியா மாவட்டத்தில் 12 சிறுவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 32 சிறுவர்களுமாக மொத்தமாக 105 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சி மேற்கொண்டதில் யாழ் மாவட்டத்தில் 10 சிறுவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 சிறுவர்களும், மன்னார் மாவட்டத்தில் 05 சிறுவர்களும்,மேலும் படிக்க…


அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து வாலிபர் பலி

அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பிரவுன் (வயது 24). இவர் போர்ட் வொர்த் நகரில் உள்ள எலக்ட்ரானிக் சிகரெட் கடைக்கு சென்றார். அங்கு எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கிய அவர் கடைக்கு வெளியே தனது காருக்குள் அமர்ந்து அதனை புகைத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியது. இதில் அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. கடை உரிமையாளர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதால்தான் பிரவுன் உயிர் இழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து நிகழ்ந்த 2மேலும் படிக்க…


ஐ.எஸ் பயங்கரவாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்படுவார்கள்: டிரம்ப்

ஈராக், சிரியாவில் அடுத்த ஒரு வார காலத்துக்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படும். அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்படுவார்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலக நாடுகளில் கால்பதித்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தினர். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகள் ஈராக் மற்றும் சிரியாவில் வான்தாக்குதல்களை நடத்த தொடங்கின. இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று கூறிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அங்கிருந்து தங்கள் நாட்டு படைகளை 30 நாட்களுக்குள் திரும்பப்பெற உள்ளதாகவும் அறிவித்தார். ஆனால், சில முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பதவி விலகல், குடியரசு கட்சியினர் மற்றும் நட்பு நாடுகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் டிரம்ப் தனது முடிவை தாமதப்படுத்தினார். இந்த நிலையில் நேற்றுமேலும் படிக்க…


சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியில் சிறந்த நிலையை எட்டியது கட்டார்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசியக் கிண்ண கால்பந்து தொடரில் மகுடம் சூடியதன் மூலம், கட்டார் கால்பந்து அணி சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியில் சிறந்த ஏற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், கட்டார் அணி, நான்கு முறை சம்பியன் அணியான ஜப்பான் அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக வாகை சூடியது. இதன் மூலம், 26 ஆண்டுகளுக்கு பிறகு உலக கால்பந்து தரவரிசைப் பட்டியில் 55ஆவது இடத்திற்கு கட்டார் அணி முன்னேறியுள்ளது. ஆசியக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்னதாக, 93ஆவது இடத்தில் இருந்த கட்டார் அணி, ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் வெற்றியின் பின்னர், 38 இடங்கள் முன்னேறி 1398 புள்ளிகளுடன் 55ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அத்தோடு, ஆசியக் கால்பந்துமேலும் படிக்க…


பேருந்திலிருந்து ஒருவரை பலவந்தமாக வெளியேற்றிய சாரதிக்கு 5 ஆண்டுகள் சிறை!

பிரான்சில் வீடற்ற ஒருவரை பேருந்திலிருந்த பலவந்தமாக வெளியேற்றிய சாரதி ஒருவருக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த போதிலும், குறித்த சாரதிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் Val-d’Oise வைத்து பேருந்து சாரதி ஒருவர் வீடற்ற நபர் ஒருவரை பேருந்திலிருந்த பலவந்தமாக வெளியேற்றியுள்ளார். Garges Sarcelles தரிப்பிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. 37 வயதுடைய குறித்த வீடற்ற நபர் தாக்கப்பட்டமை பல கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருந்தன. இதனையடுத்து 55 வயதுடைய குறித்த சாரதி தேடப்பட்டு வந்த நிலையில், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததோடு, அவருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


ஆயுதப்படைகளின் தொண்டு நிகழ்வுக்கான விருதுகளை வழங்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்!

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் மேர்க்கல் ஆகியோர் என்டெவொர் நிதியம் எனப்படும் ஆயுதப்படைகளின் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கான நிதியை திரட்டும் நிகழ்வின் போது முன்னாள் படையினருக்கு விருதுகளை வழங்கி வைத்தனர். இந்த நிதியத்தின் ஊடாக முன்னாள் முப்படையினருக்கும் நலன்புரி சேவைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் இதனூடாக நிதியளிக்கப்படுகின்றது. குறித்த நிதியத்தின் மூலம் புதிதாக ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் பங்களிப்புடன் ‘அரச குடும்ப நிதியம்’ ஒன்று நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது நடத்தப்பட்ட தொண்டு நிகழ்வின் போது முன்னாள் படையினருக்கு கௌரவிப்பு விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன. இதேபோன்று, கடந்த 2012 ஆம் ஆண்டு இளவரசர் ஹரியின் சகோதரர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேட் ஆகியோரும் பல நிதியங்களின் பங்களிப்புடன் 86 செயற்றிட்டங்களின் ஊடாகமேலும் படிக்க…


ட்ரம்ப் உரையாற்றும்போது உறங்கிய சிறுவன் : இணையத்தில் பரபரப்பாகும் படம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உரையின்போது உறங்கிக்கொண்டிருந்த ஜோசுவா என்ற சிறுவன் இணையத்தில் வைரலாகி வருகிறார். இந்தப் படத்தைப் பார்த்து குறித்த சிறுவனுக்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரைநிகழ்த்துவது வழக்கம். அவ்வாறு நேற்று (புதன்கிழமை) அவர் உரையாற்றும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அமெரிக்க பள்ளி ஒன்றில் ஜோசுவா ட்ரம்ப் என்ற 11 வயது சிறுவன் படித்து வருகிறான். அமெரிக்க அதிபரின் பெயர் இந்தச் சிறுவனுக்கும் சூட்டப்பட்டிருந்ததால் சிறுவனை சக மாணவர்கள் கிண்டலடித்து வந்தனர். இதனால் சிறுவன், கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இப்பிரச்சினையால் அந்தச் சிறுவனையே பள்ளிநிர்வாகம் நீக்கப்போவதாக அறிவித்தது. இச்சிறுவனின் விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியதும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கவனத்துக்கும் சென்றது. அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க கூட்டுமேலும் படிக்க…


அ.தி.மு.க- தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது: கமல்ஹாசன்

நடைபெறவுள்ள தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாதென மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் அரசியல் பயணத்தை ஆரம்பித்த முதல் அ.தி.மு.க.வுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றேன். ஆகையால் அவர்களுடன் இணையும் விருப்பம் எனக்கில்லை. தி.மு.க.வுடனும் இணைந்து செயற்படமாட்டேன். மேலும், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளமையால், யாருடன் கைகோர்க்க வேண்டுமென்பதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆகையால் அழுக்கு படிந்துள்ள கைகளுடன் கை குலுக்கினால் எமது புனிதமான மக்கள் சேவையிலும் அழுக்குப்படிந்து விடும். இதனால் கூட்டணி தொடர்பில் இன்னும் சிந்திக்க வேண்டியுள்ளது” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


மோடியின் ஆட்சிக்கு எதிராக மாணவர் அமைப்புக்கள் போராட்டம்

மோடி அரசாங்கத்திற்கு எதிராக, இந்திய தலைநகர் புதுடெல்லியில் மாணவர் அமைப்புக்களினால் மாபெரும் எதிர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சிறந்த கல்வியையும், வேலை வாய்ப்பினையும் வழங்கக் கோரி இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் அதிகரித்துள்ளன. அந்தவகையில், நேற்று (வியாழக்கிழமை) மோடி அரசாங்கத்திற்கு எதிராக, இந்திய தலைநகர் புதுடெல்லியில் மாணவர் அமைப்புக்களினால் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் மாணவ அமைப்புக்கள் இணைந்து உருவாக்கிய ”இளம் இந்தியா தேசிய ஒருங்கிணைப்பு” என்ற அமைப்பினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. செங்கோட்டையிலிருந்து, நாடாளுமன்ற வளாகம் வரை பேரணியாகச் சென்ற மாணவர்கள், நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவரொருவர் குறிப்பிடுகையில், 2014 ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய மோடி, ஒவ்வொரு வருடமும், 20 மில்லியன்மேலும் படிக்க…


தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கின்றார் ரணில்!

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் பிரதமருக்கும் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தான விதம் தொடர்பாக, தமிழ் முற்போக்கு கூட்டணி அதிருப்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த வாரம் பிரதமர் மற்றும் அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ரவி சமரவீர ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அரசாங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணங்கப்பாடின்றி நிறைவடைந்தது. நேற்றையக் கலந்துரையாடலின் முடிவுகள் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர், அவர் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது. கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக சாதகமான பதிலை அரசாங்கம் வழங்கத் தவறினால், அரசாங்கத்தில் வெளியேறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரிக்கை விடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


படையினர் வசமிருந்த கட்டிடங்கள் உத்தியோக பூர்வமாக கையளிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த கட்டிடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. அதன்படி சைவமங்கையர் கழகத்தின் கட்டிடங்களே நேற்று (வியாழக்கிழமை) மாலை உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிக்கான ஆவணத்தை மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு, சைவமங்கையர் கழகத்தின் தலைவி திருமதி யோகேஸ்வரா சிவாநந்தினியிடம் கையளித்துள்ளார். இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலகத்தின் காணி உத்தியோகஸ்தர் வசந்தன், கிராம அலுவலகர்கள், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். குறித்த கட்டடங்கள் அமையப்பெற்ற காணி ஐந்து ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஒரு சிறிய பௌத்த குருமடம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. விகாராதிபதிகளுடன் கலந்துரையாடி குறித்த குருமடம் அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் சைவமங்கையர் கழகம், போர் காரணமாக மருத்துவ சேவை நிலையமாக இயங்கி வந்தது. அத்தோடு, 1990 தொடக்கம் 2009 வரை இராணுவ முகாம்மேலும் படிக்க…


நாட்டின் எதிர்காலம் கிராமப்புற மாணவர்களின் கல்வியிலேயே தங்கியுள்ளது: சாகல

கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி பயிலும் பிள்ளைகளின் கல்வி நிலையிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியிருப்பதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இதனால், இப்பிள்ளைகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். பல்லேகம பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிராமத்து பாடசாலை பிள்ளைகளின் கல்வியிலேயே எம் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே, கல்வியுடன் விளையாட்டிலும் ஈடுப்பட்டு இப்பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கு எம்மாலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன், இப்பாடசாலையை ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் வேலைத்திட்டத்தில் உள்வாங்கி பாடசாலைக்கு தேவையான புதிய கட்டடங்களை நிர்மாணித்து, பிள்ளைகளின் தேவைகளை பூர்த்திச் செய்ய எதிர்பார்த்துள்ளோம். இப்பிரதேசமேலும் படிக்க…


இழப்பீடு கிடைக்காத வடக்கு மக்கள் மேன்முறையீடு செய்யலாம்: ஹரிசன்

இழப்பீடு கிடைக்கப்பெறாத வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்கள் மேன்முறையீடு செய்யலாம் என விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தினாலும், சேனா படைப்புழுக்களினாலும் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசின் நிவாரணம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே விவசாய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், ”வடக்கில் 50 ஆயிரம் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இழப்பீட்டு தொகை வழங்கும் நடவடிக்கை வடக்கிலுள்ள சகல மாவட்ட செயலகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. எவருக்கும் இழப்பீடு கிடைக்கவில்லை என்றால் மேன்முறையீடு செய்ய முடியும். பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு கொடுப்பனவு செலுத்தப்பட்டு வருகிறது. நிலக்கடலை பாதிப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது குறித்த மதிப்பீடு கிடைக்கப் பெற்றவுடன்மேலும் படிக்க…


சங்கமம் – 03/02/2019


பாட்டும் பதமும் -421 (06/02/2019)

ஜெயந்தி ஜேர்மனி


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !