Thursday, February 7th, 2019

 

அவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம் – நூற்றுக்கணக்கான வீடுகள் வசிக்க முடியாத நிலையில் உள்ளன!

வடகிழக்கு அவுஸ்ரேலியாவில் 250க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் வசிக்கு முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக பேரழிவுமிக்க வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து பிரதமர் அன்னாஸ்டாசியா பலாஸ்ஸூக் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார். அதேவேளை, டவுன்ஸ்வில்லே பகுதியில் சுமார் 750 வீடுகள் வௌ்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதிகாரிகளால் மதிப்பிடப்பட்ட பின்னர் அந்த குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் வாழும் மக்கள் வீடுகளில் இருந்து வௌியேறி வேறு இடங்களில் தங்கியுள்ள நிலையில், துரித இருப்பிடங்களை தேடி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை தொடக்கம் சுமார் 1,100 பேர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மீண்டும் சிக்கலுக்குள்ளாவதை பிரிட்டன் விரும்பாது : தெரேசா மே

பிரெக்ஸிற் மாற்றுத் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை சம்மதிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள பிரதமர் தெரேசாமே பிரஸ்ஸல்ஸுக்கு விரைந்துள்ளார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனான இந்தச் சந்திப்பில் வடஅயர்லாந்துக்கும் அயர்லாந்துக்குமிடையிலான சுங்க நடவடிக்கைகளை இலகுவாக்கும் திட்டம் குறித்தும் வலியுறுத்தவுள்ளதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். கடந்தமாதம் பிரதமர் கொண்டுவந்த பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றில் நிராகரிக்கப்பட்டு மாற்றுத் திட்டங்களை நாடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தார். அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய தேவை அவருக்கு உருவானது. எனினும் பிரெக்ஸிற் மாற்றுத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் ரஸ்க்; ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் பிரெக்ஸிற் திட்டத்திற்காக பிரசாரம் செய்தவர்களுக்கு “நரகத்தில் சிறப்பு இடம்” இருப்பதாக தெரிவித்திருந்தார்.


மாலி தாக்குதலில் உயிரிழந்த இராணு வீரரின் இறுதிக்கிரியை: ஐ.நா. அதிகாரி பங்கேற்பு

ஐ.நா. அமைதி காக்கும் பணிகளின்போது உயிரிழந்த பொலனறுவையை சேர்ந்த இலங்கை வீரரின் இறுதிக்கிரியை இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. மாலியில் உயிரிழந்த வீரர்களின் பூதவுடல்கள் கடந்த திங்கட்கிழமை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து பூதவுடல்கள் அவர்களது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி பொலனறுவையை சேர்ந்த இராணுவ வீரரின் இறுதிக்கிரியை இன்று இடம்பெற்றுள்ளது. இறுதி அஞ்சலி நிகழ்வில் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், உயிரிழந்த வீரரின் குடும்ப உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். மாலி நாட்டில் அமைதி காக்கும் பணிகளை மேற்கொள்ளும்போது இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


புலிகளின் எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றிய எந்தவொரு ஆவணத்தையும் வெளியிடவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ். மாநாட்டில் குறித்த ஆவணங்களை வெளியிட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் மாநாட்டில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றி இருந்தேன். ஆனால் புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ நான் ஈடுபடவில்லை. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஆவணம் ஒன்றை வெளியிட்டுவைத்ததாகவும் அந்த ஆவணத்தில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் தவறானது” என தெரிவித்துள்ளார்,


ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டுமென்று நான் கோரவில்லை – விஜயகலா

ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்றோ அல்லது தனி நாடு அமையவேண்டும் என்றோ தான் எண்ணவில்லையென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இனவாதிகளின் செயற்பாடுகள் பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழருக்கான தீர்வைப் பெற்றுதருவார் எனவும் அவர் குறிப்பிட்டார். அண்மையில், யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தெரிவிக்கையில், “யுத்தத்திற்கு முன்னரான காலப் பகுதியில் வடக்கு , கிழக்கு மாகாணங்கள் கல்வியில் முன்னிலையில் இருந்தன. தற்போது பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. கடந்த கால அரசாங்கத்தினால் போதை பொருட்கள் கட்டவிழுத்து விடப்பட்டன. அதனால் பலர் போதைக்கு அடிமையானர்கள். அவர்களின் திறன்கள் அதன் மூலம் மழுங்கடிக்கப்பட்டதோடு வன்முறைக் கலாசாரங்களும் ஊக்குவிக்கப்பட்டன. இந்நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்,மேலும் படிக்க…


4வது பிறந்த தினம் – செல்வன்.முகுந்தன் பரீன் (Barin) 07/02/2019

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் முகுந்தன் வசந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் பரீன் பெப்ரவரி மாதம் 7ம் திகதி இன்று தனது நான்காவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இன்று தனது 4வது பிறந்தநாளை கொண்டாடும் பரீன் செல்லத்தை வாழ்த்துபவர்கள், அப்பா முகுந்தன் (இரசாயனப் பொறியியலாளர்) அம்மா வசந்தினி (சட்டத்தரணி , அவுஸ்திரேலியா), பேரன் k.s.வேலாயுதம் TRT வானொலியின் ஐரோப்பிய செய்தியாளர் ( London), அப்பப்பா கந்தசாமி, அம்மம்மா பிரபாவதி, மாமா ,ஐனந்தன், மாமி நிரூசினி, பாட்டன் -திருநடராசா, பாட்டி சரஸ்வதி அவுஸ்திரேலியா,) பெரியம்மா சுகந்தினி, பெரியப்பா வசந்தன், மாமா ஆரூரன், மாமி அக்ஸயா,(லண் டன்) ,பெரியப்பா மகிந்தன், பெரியம்மா ரஜனி,மாமிமார் மதுசா,மிதுசா, (லண்டன்), பெரியப்பா நாதன், பெரியம்மா நந்தினி, மாமிமார் மாமிகள் சுவேதா, நிவேதா, (பிரான்ஸ்) மற்றும் அவுஸ்திரேலியா வாழ் குடும்ப உறவினர்களும், நண்பர்களும் அவர்கள் மகவுகளும்,பரீன் செல்லம் சகல கலைகளும்மேலும் படிக்க…


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி நாட்டை விட்டு வெளியேற தடை

தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்ல முயன்ற யூசுப் ரசா கிலானியை லாகூரில் உள்ள விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரது பயணத்தை ரத்து செய்தனர். பாகிஸ்தானில் 2008-2012 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமராக இருந்தவர் யூசுப் ரசா கிலானி. இவர் தனது பதவிக்காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒரு விளம்பர நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு 13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தநிலையில், தாய்லாந்து வழியாக தென்கொரியாவுக்கு செல்வதற்காக யூசுப் ரசா கிலானி, லாகூரில் உள்ள விமான நிலையத்துக்கு சென்றார். அங்கு அவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் யூசுப் ரசா கிலானி பெயர் இருப்பதை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவரது பயணத்தைமேலும் படிக்க…


மஹிந்த ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு மார்ச் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை மார்ச் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு அழைக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு புவனேக அளுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் ​தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி, இது சம்பந்தமாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக எழுத்துமூல கோரிக்கையை விடுப்பதற்கு காலம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இது சம்பந்தமாக தமது சேவையாளர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்னும் பூர்த்தியாகவில்லை என்பதால்மேலும் படிக்க…


பா.ஜனதாவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை- எல்கே சுதீஷ் தகவல்

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார். இதன்காரணமாக பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பா.ஜனதா கட்சியுடனும், மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக எல்.கே.சுதீஷ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சை முடிந்து இந்த மாத இறுதியில் அவர் தமிழகம் திரும்புகிறார். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தேர்தலில்மேலும் படிக்க…


வெளிநாடுகளில் தண்டனைக் காலம் முடிந்தும் 434 மீனவர்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர் – வி.கே.சிங்

வெளிநாடுகளில் தண்டனைக்காலம் முடிந்தும் சுமார் 434 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்  என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வின் போது அவர் வெளியிட்டுள்ள எழுத்துமூல அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், வளைகுடா நாடுகளில் 4 ஆயிரத்து 705 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் தண்டனைக் காலம் நிறைவடைந்தும் 434 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 396 பேர் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேவேளை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நாட்டில் உள்ள சிறையில் 483 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் 503 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 1,050 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது. ஆனால் இதுகுறித்த தகவலை அந்த அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அவர்களைமேலும் படிக்க…


கிளி. மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் – வடக்கு ஆளுநர் துரித நடவடிக்கை

கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நடவடிக்கை எடுத்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கைதடியில் உள்ள வட.மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியிருந்தார். அதன்பின்னர் இந்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபடும் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுவது தொடர்பாக, கவனம் செலுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தான் பெண்கள் அச்சமடையத் தேவையில்லை என தலிபான் தலைவர் உறுதிமொழி!

அமெரிக்காவுடன் தலிபான்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஆயுத பலம் மூலம் நாட்டை கைப்பற்றுவது. ஆப்கானிஸ்தானுக்கு அமைதியை கொண்டுவராது என்று தலிபான் சார்பாக இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட குழுவை வழிநடத்திய தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன் ஆயுதம் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றும் நோக்கம் தலிபான்களுக்கு இல்லை என்றும் தலிபான் குழுவை வழிநடத்திய ஷெர் முகம்மது அப்பாஸ் குறிப்பிட்டார். எனினும், வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் வரை சமாதான ஒப்பந்தத்திற்கு இணங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் தரவுகளின்படி, ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் இறப்பதற்கு ஏனைய தரப்புகளைவிட தலிபான்களே முக்கிய காரணியாக உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 70 சதவீத அச்சுறுத்தலுக்கு தலிபான்களே காரணமாக இருக்கின்றனர். இதனிடையே, கட்டாரில் உள்ள தலிபான் அரசியல் பிரிவுக்கு தலைமை வகிக்கும் ஷெர் முகம்மது அப்பாஸ், மொஸ்கோவில் மூத்த ஆப்கானிஸ்தான் எதிர்க்கட்சிமேலும் படிக்க…


பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டனியின் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ரவீந்திர சமரவீர ஆகியோருடன் முதலாளிமார் சம்மேளனத்தினரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையை நடத்த கடந்த இரு தினங்களாக திட்டமிட்டிருந்தபோதிலும், பல்வேறுக் காரணங்களுக்காக தள்ளிப் போடப்பட்டிருந்த நிலையில், இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 700 ரூபாயாக அதிகரித்த கூட்டு ஒப்பந்தத்தில் கைகெழுத்திட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தியும் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்தையில் முக்கிய தீர்மானம் எட்டப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


ராஜீவ் கொலை வழக்கு – தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி அவரின் போராட்டம் வேலூர் மத்திய சிறையில், இன்று (வியாழக்கிழமை) ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது. உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவரும் முருகனிடம், சிறைத்துறை அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எனினும் அதனை அவர் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 28 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும், தன்னையும் தன் மனைவி நளினியையும், விடுதலைச் செய்யக்கோரி முருகன், கடந்த மாதம் 30 ஆம் திகதி தமிழக ஆளுநரிடம் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு மீது இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமையால் மன உளைச்சலுக்குள்ளான முருகன், சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக, அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 20 ஆம் திகதியும் முருகன் முன்விடுதலைக் கோரி, இதுபோன்று உண்ணாவிரதப்மேலும் படிக்க…


2 வருடங்கள் உறவுகளுக்காக காத்திருப்பு – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

காணாமலாக்கப்பட்டோருக்கான அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மாபெரும் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு குறித்த தினத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கியநாடுகள் சபையின் 40ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இந்த விடயம் தொடர்பாக முடிவெடுக்கவேண்டிய கடமை ஐக்கியநாடுகள் சபைக்கு உள்ளதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், தமது உறவுகளை தேடியலையும் தமது அன்னையர், சகோதர, சகோதரிகளுக்காய் சர்வதேசம் குரல்கொடுக்க வேண்டும் என்பதோடு, இனவாத அரசிற்கு கால அவகாசம் துளியேனும் வாழங்ககூடாதென்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி, உடனடியாகமேலும் படிக்க…


தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை பிற்போடப்பட்டது

தேசிய அரசாங்கத்தினை ஸ்தாபிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த பிரேரணை  பிற்போடப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்போவதில்லை என சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தினை நிறுவுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள, நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி.ஆகிய கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. எனினும், அரசாங்க செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அரசதரப்பு பிரதிநிதிகள் வாதிட்டனர். அதற்கமைய, இன்று முழுநாளும் விவாதம் நடத்தப்பட்ட பின்னர், மாலையில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணி கலந்துகொள்ளவில்லையென தீர்மானித்துள்ளது. இதேவேளை தேசிய அரசாங்கத்தினை ஸ்தாபிப்பதற்கு மஹிந்தமேலும் படிக்க…


லாச்சப்பல் : இலங்கை இளைஞன் கை துண்டிப்பு – பழிவாங்கல் நடவடிக்கை ; காவற்துறையினர் தெரிவிப்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, பரிசின் லாச்சப்பல் மற்றும் ஸ்ராலின்கிராட் பகுதிகளிற்கு இடையில் பெரும் வன்முறைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் 29 வயது இளைஞன் ஒருவரின் கை வெட்டித் துண்டாடப்பட்டுள்ளது. ஸ்ராலின்கிராட் அருகிலுள்ள, பரிஸ் 10 இல் அமைந்துள்ள Boulevard de la Villette  இல் நட்ட நடு வீதியில் இந்த இளைஞன் தாக்கப்பட்டுள்ளான். இந்த இளைஞனை, பல இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று, வாள், இரும்புக் கம்பிகள் சகிதம் துரத்தி வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஓடி வந்த இந்த இளைஞன், அங்கு வந்த ஒரு பேருந்தில் ஏற முயன்றபோதும், பயணிகளின் பாதுகாப்புக் கருதி, பேருந்துச்சாரதி கதவைத் திறக்கவில்லை. அந்தப் பேருந்தின் முன்னே வைத்தே, இந்த இளைஞனின் கை, அந்தக் குழுவால் வெட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை, பேருந்தின் கண்காணிப்புக் கருவி ஒளிப்பதிவு செய்துள்ளது. சாரதி நேரடிச் சாட்சியத்தைக்மேலும் படிக்க…


பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2019)

பிரான்ஸ் Bondy யில் வசிக்கும் திருமதி ஜெனிபர் பார்த்தசாரதி இன்று 07/02/2019 வியாழக்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெனிபர் அவர்களை வாழ்த்துவோர் அன்பு கணவர் பார்த்தசாரதி (சாரதி RJ, TRT) தாயகத்தில் இருந்து மாமா நாகராஜா,மாமி மகாலட்சுமி, மச்சாள் அபிராமி, மச்சான் குமரன். பிரான்ஸில் வசிக்கும் தனராஜ் தேவி குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் மச்சான் தர்ஷன். மச்சாள் நந்தகுமார் கிரிஜா குடும்பம், சித்தப்பா ஜெகதீஸ்வரன் உமாராணி குடும்பம்.. பிரான்ஸில் வசிக்கும் அத்தை மாமா சகாயம் பவித்ரா குடும்பம். தாயகம் மற்றும் இந்தியாவில் வசிக்கும் உறவினர்கள் பிரான்ஸ் நண்பர்கள் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்துகின்றனர். இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெனிபர் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து உறவுகளும் அன்பு நேயர்களும்மேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !