Wednesday, February 6th, 2019

 

அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் பலி

அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் எதிர்பாராதவிதமாக உள்ளே சிக்கிக்கொண்டதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர் சாம் கிராபோர்ட் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த நாய் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டதால், சாம் கிராபோர்ட் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தார். அவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர். இதை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்ட சாம்மேலும் படிக்க…


30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது விழா

30 ஆண்டுகளுக்கு பிறகு 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வருகிற 24-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. யாரெல்லாம் ஆஸ்கார் விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள்மேலும் படிக்க…


போலி கடனட்டைகள் மூலம் பணம் திருடிய வெளிநாட்டினர் மூவர் கைது

அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியக்க பண இயந்திரங்களில் (ஏ.ரி.எம்.) போலி கடனட்டைகளை பயன்படுத்தி பணம் திருடிய வெளிநாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் மூவரை புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர் என காவல்துறை அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சீன நாட்டினர் எனவும் மற்றையவர் ரூமேனியாவினைச் சேர்ந்தவர் எனவும் தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அத்தியட்சர் தெரிவித்துள்ளார். தானியக்க பண இயந்திரங்களில், அட்டைகளை உட்செலுத்தும் பகுதிகளில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் நுட்பமான இயந்திரம் ஒன்றினை பொருத்தி அதனூடாக ; பணம் எடுப்போரின் அட்டைகள் குறித்த இரகசிய தகவல்களை தமது தொலைபேசிகளுக்கு பெற்று, போலி அட்டைகளை தயாரித்து இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் 200 கடனட்டைகளும் 12 இலட்சம் ரூபாவுக்குமேலும் படிக்க…


சுதந்திர தினமும் தமிழ் மக்களும் – பி.மாணிக்கவாசகம்

நாடு ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று ஏழு தசாப்தங்களாகின்றன. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக, 71 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் வெகு கோலாகலமாக கொழும்பில் கொண்டாடப்பட்டிருக்கின்றது. கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பல்வகை ஊர்திகளும், படையினருடைய அணிவகுப்புக்களும், பாண்ட் வாத்திய அணி நடையும் பார்ப்போரைப் பரவசப்படுத்தியிருந்தன. ஆனால் இந்தப் பரவசம் நாடளாவிய ரீதியில் அனைத்து இலங்கையர்களுக்;கும் ஏற்பட்டிருக்கவில்லை. குறிப்பாக இந்த நாட்டின் பாரம்பரிய வரலாற்றுத் தாயக உரித்துடைய தமிழ் மக்களுக்கு இந்த சுதந்திர தினமும், சுதந்திர தினக் கொண்டாட்டங்களும் பரவசமூட்டுவதாகவோ அல்லது மகிழ்ச்சி அளிப்பதாகவோ அமையவில்லை. வடமாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா என பல இடங்களிலும் சுதந்திர தினம்; கரிநாளாக அல்லது துக்கதினமாக அனுட்டிக்கப்பட்டதும், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதும் இதனை எடுத்துக் காட்டியிருக்கின்றன.; துக்க உணர்வையும் எதிர்ப்பு உணர்வையும் வெளிப்படுத்தி, யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிகள் பகிரங்கமாகவேமேலும் படிக்க…


அடுத்த ஜென்மத்திலும் நடிகையாக வேண்டும் – நதியா

அடுத்த ஜென்மத்திலும் நடிகையாகவே ஆசைப்படுவதாக கூறுகிறார் பிரபல நடிகை நதியா. பூவே பூச்சூடவா  என்ற திரைப்படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த நடிகை நதியா, 80களின் முன்னணி கதாநாயகி ஆவார். முப்பந்தைத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து வரும் நதியா, இப்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வருகின்றார்.  தன்னுடைய சினிமா வாழ்வு குறித்து நதியா ’நடிகையாகணும் புகழ் பெறணும்னு நினைத்ததில்லை. சினிமா வாய்ப்புகள் என்னைத் தேடி வர அர்ப்பணிப்புடன் நடிச்சேன். அதுக்குக் கிடைச்ச பிரதிபலன்தான் ரசிகர்களின் அன்பு. 4 வருடம்தான் நடித்தேன். பிறகு கல்யாணமாகி வெளிநாட்டில் குடியேறிவிட்டேன். சினிமாவை இன்னும் சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம் அப்போதுதான், ரசிகர்கள் என் மேல் வெச்சிருந்த அன்பையும் எனக்கான புகழையும் தெரிஞ்சுகிட்டேன். அப்போ பீல் பண்ணலை. ‘நமக்கான சினிமா கேரியரை இன்னும் நல்லா பயன்படுத்தியிருக்கலாமோன்னு இப்போ நினைக்கிறேன். அதனால் என்ன? நான் அதிகம் எதிர்பார்த்தமேலும் படிக்க…


நியூசிலாந்தில் காட்டுத்தீ: நூறு குடும்பங்கள் கட்டாய வெளியேற்றம்

நியூசிலாந்தின் தெற்கு தீவில் காட்டுத் தீ வேகமாக பரவி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. இதேவேளை, பல சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், சுமார் நூறு குடும்பங்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர். இயற்கை பாரம்பரிய பூங்காவான பீஜியன் பள்ளத்தாக்கில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது இரவு நேரத்தில் வேகமாக பரவியதில் சுமார் ஆயிரத்து 870 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. இந்நிலையில், அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் சிவில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தீயை கட்டுப்படுத்தும் பணியில் 12 தீயணைப்பு வீரர்களும், 10 ஹெலிகொப்டர்கள் மற்றும் இரண்டு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனினும், தீயை கட்டுப்படுத்துவதற்கு குறைந்தது நான்கு நாட்களேனும் தேவைப்படுவதாக தீயணைப்பு வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும் – ஆய்வில் தகவல்!

80 ஆண்டுகளில் பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும் என அமெரிக்காவின் MIT ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. துருவப்பகுதி அருகே பசுமை நிறத்திலும், பிற இடங்களில் வெளிர் நீல நிறுத்திலும் கடல் காட்சியளிப்பதால் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமியின் தோற்றம் தற்போது நீல நிறத்தில் உள்ளது. இதில் கடல் வாழ் நுண்ணுயிரான பைடோப்லாங்டன் முக்கியப் பங்கு வகிக்கிறது. புவி வெப்ப மயமாதலின் காரணமாக இதன் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழிற்கல்வி நிறுவன ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 21-ஆம் நூற்றாண்டு இறுதியில் 3 டிகிரி செல்சியஸ் வரை புவி வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்பதால், கடலில் அடர் நிறம் பரவியது போன்ற தோற்றம் ஏற்பட்டு அது புவியின் வெளிப்புறத் தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும் என கணித்துள்ளனர்.


மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி: பன்னீர் செல்வம்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, ஆளும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அ.தி.மு.கவுடன் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. எவ்வாறாயினும் அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணிதான் எதிர்வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும். அத்துடன் பா.ஜ.க.வுடன் தற்போது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பெப்ரவரி 20 ஆம் திகதிக்குள் இது தொடர்பான இறுதி முடிவுகள் வெளியாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


ஐந்தாவது நாளாகவும் முருகன் உண்ணாவிரதப் போராட்டம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள முருகன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். வேலூர் மத்திய சிறையில், இன்று (புதன்கிழமை) ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் நீடிக்கிறது. கடந்த 28 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், தன்னையும் தன் மனைவி நளினியையும், விடுதலைச் செய்யக்கோரி முருகன், கடந்த மாதம் 30 ஆம் திகதி தமிழக ஆளுநரிடம் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு மீது இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், மன உளைச்சலுக்குள்ளான முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக, அவரது வழக்கறிஞர், புகழேந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று ஐந்தாவது நாளாக உண்ணாவிரதமிருந்து வரும் முருகனிடம், சிறைத்துறை அதிகாரிகள்மேலும் படிக்க…


குற்றமிழைத்தவர் தாய்நாட்டிலேயே தண்டனை பெற வேண்டும்: அஜித் பீ பெரேரா

குற்றமிழைத்தவர் அவர்களது தாய்நாட்டிலேயே தண்டனை அனுபவிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அமையும் என பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்ட கைதிகள் பரிமாற்ற சட்டமூலம் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதன் மீதான உரையின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை மற்றும் தாய்லாந்திற்கிடையில், செய்து கொள்ளப்பட்ட தண்டனைக் கைதிகள் மாற்றத்தற்கு அங்கீகாரத்தைப் பெற இதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கிறோம். இலங்கைப் பிரஜை தாய்லாந்தில் குற்றம் இழைத்து தண்டனைப் பெற்றாலோ, அல்லது தாய்லாந்து பிரஜை இலங்கையில் குற்றம் செய்து தண்டனைப் பெற்றாலோ கைதிகளை தாய்நாட்டிற்கு அனுப்பும் வகையில் இந்த யோசனை அமைந்துள்ளது. இதன்போது, அவர் அனுபவிக்க வேண்டிய தண்டனை அவரது தாய் நாட்டிலேயே, அனுபவிக்கும் வகையில் இந்த சட்டமூலம் அமையும். இதற்கான அனுமதியை நாம் சபையில் எதிர்ப்பார்க்கிறோம்” எனமேலும் படிக்க…


அரசியல் நோக்கத்திற்காக திருநாவுக்கரசரைச் சந்திக்கவில்லை: நடிகர் ரஜினிகாந்த்

அரசியல் நோக்கில், திருநாவுக்கரசரைச் சந்திக்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், திருநாவுக்கரசர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இன்று (புதன்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடினார். தனது மகள் சௌந்தரியாவின் திருமண அழைப்பிழை வழங்க, திருநாவுக்கரசர் வீட்டிற்கு ரஜினிகாந்த் சென்ற அதேவேளை தேசம் காப்போம் மாநாட்டில் பங்கேற்ற திருநாவுக்கரசருக்கு நன்றி கூற திருமாவளவனும் அங்கு சென்றிருந்தார். இந்நிலையில், மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். எனினும் இந்தச் சந்திப்பில் அரசியல் விவாகரம் குறித்து ரஜினியுடன் கலந்துரையாடியதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மக்கள் பணத்தினைக் கொள்ளையடித்தவர்கள் வெளிநாடுகளில் சுகபோகம்: சரத் அமுனுகம!

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்துச் தப்பிச் சென்று வெளிநாடுகளில் சுகபோகம் அனுபவித்து வருபவர்களைக் கைது செய்யவேண்டுமென்பதே மக்களது கோரிக்கையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்ட கைதிகள் பரிமாற்ற சட்டமூலம் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில், அதன் மீதான உரையின்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச்சென்று வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள நபர்களை கைதுசெய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அதை விடுத்து, வெறுமனே தண்டனைக் கைதிகளை பறிமாறுவதால் எதுவும் ஏற்படப்போவதில்லை. கைதிகளை மீளஅழைக்க யோசனை வைத்திருக்கும் இந்த அரசாங்கம் இவ்வாறு மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களை கைதுசெய்வதற்கு என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. வெளிப்படையாக சொன்னால் அர்ஜூன் மகேந்திரன் மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, இலங்கையின் முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அவரைக்மேலும் படிக்க…


20 கிலோ மீற்றர் தூர இலக்கை தாக்கும் பல்குழல் பீரங்கி அறிமுகம்!

இலங்கையில் இராணுவத்தின், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால், 10 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்குழல் பீரங்கி நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் நடைபெற்ற சுதந்திர தின இராணுவ அணிவகுப்பில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பல்குழல் பீரங்கியின் மூலம், 20 கிலோ மீற்றர் வரையுள்ள இலக்குகளைத் தாக்க முடியும். இந்த பல்குழல் பீரங்கிக்கான குண்டுகளும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், பிரிகேடியர் திரான் டி சில்வா தெரிவித்துள்ளார். “இராணுவத்தைச் சேர்ந்த ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் நிபுணர்கள் குழுவும், உள்ளூர் பல்கலைக்கழகங்களும், கலாநிதி சந்தன பெரேராவுடன் இணைந்து, 7 மில்லியன் ரூபாய் செலவில், இந்த பல்குழல் பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பல்குழல் பீரங்கி அனைத்துலக தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக்மேலும் படிக்க…


ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க வேண்டும் – ஸ்பெயின்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுயாட்சி அதிகாரம் மிக்க தமிழ் மக்களுக்கான தேசம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் பார்சிலோனா வலியுறுத்தியுள்ளது. இலங்கை தொடர்பாக ஸ்பெயின் நாட்டின் பிராந்திய அரச கட்டமைப்பிற்குள் ஒன்றான பார்சிலோனாவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயங்கக் கூடாது என்றும் அரசியல் கைதிகளை இலங்கை அரசாங்கம் தாமதமின்றி விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களும் இதில் அடங்குகின்றது. அத்தோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க சிறப்பு தூதுவரை ஐக்கிய நாடுகள் சபை நியமிக்க வேண்டும் என்றும் ஸ்பெயினின் பிராந்திய அரச கட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபைக்குமேலும் படிக்க…


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் இலஞ்சம்

நுண்கடன்களை பெற்றுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் கடன் சேகரிப்பவர்கள் பாலியல் இலஞ்சம் கோருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ஜுவான் ப்பலோ போல்ஸ் விகி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இலங்கைக்கு சென்றிருந்த அவர், 40 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, நுண்டகடன் திட்டம் வறுமையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் எந்ததொரு முன்னேற்றமும் இலங்கையில் தெரியவில்லை. இந்நிலையில் நுண்கடன் திட்டம், தற்போது வறுமையிலுள்ள பெண்களை குறிவைத்தே மேற்கொள்ளப்படுகின்றது. அதிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமை குடும்பங்களேயே நுண்டகடன் நிறுவனம் அதிகம் நாடுகின்றது. அந்தவகையில் அம்மக்களுக்கு கடனை வழங்கும் நிறுவனங்கள் அதனை மீள செலுத்த முடியாத நிலைமை உருவாகும்போதும் மிகவும் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. மேலும் நுண்கடன் நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தாத பெண்களிடம்,மேலும் படிக்க…


“Kavignar Vaaliyin” Vaali 1000 Chat Show | Director&Actor SJ Suryah


திருச்சி முகாமில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதியொருவர் தற்கொலை முயற்சிக்கு முயன்ற சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள், இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நாளன்று தங்களை விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது அப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அகதிகளில் ஒருவர், தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், சிறை பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம்பவத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டோர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேசம்கூட குரல் கொடுக்கின்றது. ஆனால், இதுவரைகாலமும் தங்களுக்காக எவரும் குரல்கொடுக்க முன்வரவில்லையென இலங்கை அகதிகள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இரண்டு மாதங்களில் மரண தண்டனை உறுதி – ஜனாதிபதி

எவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை விதிப்பது உறுதி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார். அவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் வணிகர்களுக்கு இரண்டு மாதங்களில் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்தோடு மரண தண்டனை விதிக்கும் செயற்பாடுகளில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட கூடாது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாரிய குற்றம் இழைத்தவர்களுக்கே மரண தண்டனை வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு வக்காலத்து வாங்க கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டை ஒழுக்கமுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.


புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பெயரில் அடிமை சாசனம் எழுதுவதற்கு அரசு நடவடிக்கை நகர்வினை தடுக்க அனைவரும் இணையுங்கள்: ஆனந்தன் எம்.பி அழைப்பு

தயாராகும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுலாக்குவதன் ஊடாக ஜனநாயக குரல்களை நசுக்கி ஒட்டுமொத்தமாக எம்மீது அடிமைசாசனத்தினை எழுதுவதற்குத் தயாராகும் பெரும்பான்மையின் நாசுக்கான நகர்வினை உடன் நிறுத்துவதற்கு அனைத்து தரப்புக்களும் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானத்திற்காக பாராளுமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையிலும் அதுகுறித்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நாட்டில் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த காலத்தில் அது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டது. ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு தற்போது பத்தாண்டுகளாகின்ற போதும் சத்தமின்றி யுத்தமொன்றை மேற்கொள்வதற்கானமேலும் படிக்க…


வடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்- தேதியை அறிவித்தார் டிரம்ப்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உடனான இரண்டாவது சந்திப்பு வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி செய்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தது வடகொரியா. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர்பதற்றம் நிலவியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு கடும் மோதல் போக்கு நீடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.மேலும் படிக்க…


பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து ஆபத்தான வித்தை – மலேசியாவில் ரஷிய தம்பதி கைது

பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை மலேசிய போலீசார் கைது செய்தனர். ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த தம்பதி தெற்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். பயண செலவிற்காக அவர்கள் தாங்கள் செல்லும் நாடுகளில் வித்தை காட்டி பணம் சேகரிக்கிறார்கள். அந்த வகையில் மலேசியா சென்ற ரஷிய தம்பதி தலைநகர் கோலாலம்பூரில் மக்கள் மத்தியில் வித்தை காட்டினர். அப்போது அந்த 4 மாத குழந்தையின் தந்தை குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டினார். குழந்தையின் காலை பிடித்து தலைகீழாக சுற்றியும், குழந்தையை தலைக்கு மேல் வீசி ஏறிந்து கைகளால் பிடித்தும் வித்தை செய்ய, அருகில்மேலும் படிக்க…


லண்டனில் காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம்

லண்டனில் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த தத்துவமேதை காரல்மார்க்ஸ் கல்லறையை மர்மகும்பல் சேதப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த புரட்சிகர தத்துவமேதை காரல் மார்க்ஸ். இவரது கருத்துக்கள் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை. இவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறினார். அங்கு தங்கியிருந்த அவர் 1885-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி தனது 64-வது வயதில் மரணம் அடந்தார். அவரது கல்லறை வடக்கு லண்டனில் உள்ளது. அங்கு அது நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமானது. இந்த கல்லறையை யாரோ மர்ம கும்பல் இடித்து சேதப்படுத்தியுள்ளனர். கல்லறையில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1880-ம் ஆண்டுகளில் இக்கல்லறை சேதப்படுத்தப்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டது.


திருநாவுக்கரசர், திருமாவளவனுடன் ரஜினி சந்திப்பு- மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கினார்

நடிகர் ரஜினிகாந்த் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து, மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார். அவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அமெரிக்காவில் ரஜினியை திருநாவுக்கரசர் பார்த்ததாக சர்ச்சை வெளியான நிலையில், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகமேலும் படிக்க…


பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் – நடிகை குஷ்பு

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்புவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் குழு உறுப்பினர், பிரசார குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் பொறுப்புகளை ஏற்றுள்ள குஷ்பு தேர்தல் பிரசார வியூகங்களை எவ்வாறு வகுக்கபோகிறார் என்பது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- பிரசார வியூகம் என்ன என்பதை தனிப்பட்ட முறையில் என்னால் எதுவும் சொல்ல முடியாது அதற்காக எங்கள் குழு கூடி ஆலோசித்து முடிவுசெய்யும். காங்கிரசை பொறுத்த வரை இத்தனை ஆண்டு காலம் நாட்டிற்கு என்னென்ன செய்தது என்பதை தண்டோராபோட்டு விளம்பரம் தேடியது கிடையாது. ஏனெனில் அது எங்கள் கடமை.மேலும் படிக்க…


மதுரோ சட்ட விரோதமானவர்: இத்தாலி அமைச்சர் குற்றச்சாட்டு

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சட்டவிரோதமானவர் என இத்தாலி உள்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். இத்தாலியில் பண்ணையொன்றுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த உள்துறை அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மதுரோ ஒரு குற்றவாளி. அவர் சட்டவிரோதமான, முறைக்கேடான ஜனாதிபதி. வெனிசுவேலாவின் சட்டவிரோத ஜனாதிபதி நாட்டு மக்களை கைது செய்து சித்திரவதை செய்து, மக்களை பட்டினியில் ஆழத்தி படுகொலை செய்வதாகவும் அவர் விமர்சித்தார். மேலும், நாட்டின் அரசியலமைப்பின்படி மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இலங்கை வானொலி–“இசை ஞானி”இளையராஜா-“


வன்முறை போராட்டங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்: பிரான்ஸ் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

வன்முறை போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலான சட்டமூலம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று மாதங்களாக தொடர்ந்த யெலோ வெஸ்ட் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இப்புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டமூலம் தேசிய சட்டசபையில் 387 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் மேல்சபையில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் சட்டசபையின் தீர்மானமே இறுதியானது. ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் எரிபொருள் வரி சீர்த்திருத்தத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த நவம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் முடிவின்றி தொடர்ந்து வந்தது. மூன்று மாதங்களாக தொடர்ந்துவரும் இவ்வன்முறை போராட்டத்தில் பொருட் சேதங்கள் மாத்திரமின்றி உயிர் சேதங்கள் பலவும் பதிவாகின. பிரான்ஸ் தலைநகரில் கடந்த 1968ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறை போராட்டத்தை தொடர்ந்து, பல தசாப்தங்களின் பின்னர் வெடித்த கொடிய போராட்டமாக இந்த யெலோ வெஸ்ட் போராட்டம் பார்க்கப்படுகிறது.


காந்தியின் உருவ படம் மீது துப்பாக்கிச்சூடு: பெண் உள்ளிட்ட ஐவர் கைது!

காந்தியின் உருவ படத்தை துப்பாக்கியால் சுடுவது போன்று ஒளிப்படம் எடுத்த இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார். தப்பால் பகுதியிலிருந்த இந்து மகா சபை தேசிய செயலாளர் பூஜா ஷகுண் பாண்டேவை, அவரது கணவர் அசோக் பாண்டேவை உள்ளிட்ட ஐவரை பொலிஸார் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக இந்து மகாசபையின் பெண் தலைவர் உள்ளிட்ட 13 பேர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த பொலிஸாரின்  விசாரணைகளில், காந்தியை சுட்டதால் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சேவின் மரணத்தை மேன்மைப்படுத்தும் வகையில் குறித்த சம்பவம்  நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30ஆம் திகதி உத்தரபிரதேசத்தில் காந்தியின் நினைவு தினத்தினை முன்னிட்டு அலிகார் பகுதியில் உள்ள தப்பாலுக்கு அருகே காந்தியை அவமதிப்பதை போன்றும் உருவப்படத்தை சுட்டும் அவரைமேலும் படிக்க…


ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டும்: நடிகை ஷில்பா ஷெட்டி

நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபாடு கொண்டு நடிகை ஷில்பா ஷெட்டி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில் ஷில்பா ஷெட்டி கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டை பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. இதனால் அக்கட்சியில் சேர முடிவெடுத்தேன். தற்போது நாட்டுக்கு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை காங்கிரஸால் கட்சியினாலேயே கொண்டு வர முடியும். நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனக் கூறினார்.


கைதிகள் தொடர்பான கோவைகள் காணாமல் போகவில்லை: தலதா அத்துகோரள

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான கோவைகள் காணாமல் போனதாக வெளியான செய்தியை சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரள நிராகரித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர, நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் “போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான கோவைகள் காணாமல் போனமை உண்மையானதா? ஜனாதிபதி இவர்களுக்கு மரண தண்டனை வழங்குமாறு கூறியும் ஏன் அதனை செயற்படுத்த தாமதம் காட்டுகின்றீர்கள்?” என கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு பதிலளித்தபோதே தலதா அத்துகோரள மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், “மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பான எந்தவித கோவைகளும் காணாமல் போகவில்லை. அது தொடர்பில் நாம் ஜனாதிபதியை தெளிவுபடுத்தியுள்ளோம். தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட 376 கைதிகள் உள்ளனர், அதேபோல்மேலும் படிக்க…


யாழ்.மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம்: வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்கின் மனு மீதான விசாரணைகள், யாழ்.நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். அதேபோன்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும், வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டத்தரணியும் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, கொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர்கள் உள்ளிட்டோரிடம் சாட்சிகள் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்த மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். குறித்த சம்பவம் குறித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்மேலும் படிக்க…


சட்டவிரோத பதாதைகளை அகற்றுமாறு வடக்கு ஆளுநர் பணிப்புரை!

வடமாகாணத்திலுள்ள சட்டவிரோத பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நகரங்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளின் உண்மைத்தன்மை மற்றும் சட்டத்தன்மையை அவற்றை வைத்தவர்கள் இரண்டு வாரங்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு அடையாளத்தை உறுதிப்படுத்தாத சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் வடக்கு ஆளுநர் பணித்துள்ளார். அத்துடன், சட்டவிரோத பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை வைத்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டதிலிருந்து இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழரின் உரிமைகளை நசுக்குவதற்கு அரசு முயற்சி!- சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்குவதற்கு அரசாங்கம் முயல்வதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  குற்றம் சுமத்தியுள்ளார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சிவசக்தி ஆனந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது, அது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்தாண்டுகள் கடந்துள்ளன. இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலிலேயே உள்ளன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், அச்சட்டத்தினை மாற்றி சர்வதேச நியமனங்களுக்கு உட்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், சர்வதேச ரீதியில் பயங்கரவாதம் தலைதூக்கி வருகின்றமையால் அத்தகைய சட்டமொன்று அவசியமெனவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்மேலும் படிக்க…


உதவுவோமா – 05/02/2019


சமைப்போம் ருசிப்போம் – 05/02/2019

கீரை பருப்பு கறி ,கரோட் கேக்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !