Wednesday, January 16th, 2019

 

“ புரட்சித் தலைவனின் பிறந்தநாள் நினைவுக்கவி “

மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட மக்களின் இதயத்தில் இடம் பிடித்த புரட்சித் தலைவனை பிறந்த நன்நாளாம் தைத்திங்கள் பதினேழில் நினைத்திடுவோம் வாழ்த்திடுவோம் ! இமயம் போன்ற அவரின் இதயம் ஏழை எளியோரையே தாங்கி நின்றது ஏழை மக்களை நேசித்தார் மக்கள் ஆட்சியை ஆதரித்தார் மனித நேயம் காத்த மனிதாபிமானத்தின் சிகரத்தை இன்நாளில் நினைத்திடுவோம் இதயத்தால் வாழ்த்திடுவோம் ! சத்துணவுத் திட்டத்தை அமுலாக்கிய சரித்திர நாயகனை பல்கலைக் கழகங்களை உருவாக்கி கல்விக் கண்ணைத் திறந்த சாதனையாளனை இன்நாளில் நினைத்திடுவோம் இதயத்தால் வாழ்த்திடுவோம் ! சரித்திர நாயகனை சாதனையாளனை வாரி வழங்கிய வள்ளலை காவியம் படைத்த காவியத்தலைவனை புரட்சிகள் செய்த புரட்சித் தலைவனை மூன்றெழுத்து மந்திரத்தை இன்நாளில் நினைத்திடுவோம் இதயத்தால் வாழ்த்திடுவோம் ! கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 17.01.2019


விஷால் – அனிஷா திருமணம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஷால் அனிஷாவுடன் திருமணம் என அவரது டுவிட்டர் பக்கத்தில்  அதிகாரபூர்வ அறிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த விஷால், “எனக்கும் அனிஷாவுக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருந்தோம். இருவருக்கும் காதல் வசப்பட்டது. எங்கள் காதல் விவகாரம் நெருக்கமான சிலருக்கு தெரிந்துவிட்ட நிலையில், இருவீட்டு பெற்றோர்களும் பேசி திருமண திகதியை முடிவு செய்வார்கள். நடிகர் சங்க கட்டடத்தை கட்டிய பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் நடைபெறும்” என்று கூறினார். அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகள் ஆவார். அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் தற்போது வெளியாகிவுள்ளது.


அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – பெட்ரா கிவிடோவா வெற்றி!

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா வெற்றிபெற்றுள்ளார். 107 ஆண்டுகள் பழமையான கிரண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட ஆண்டின் முதலாவது கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. குறித்த போட்டியில் கிரீஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவா மற்றும் ரூமேனியா வீராங்கனை இரினா-கேமிலியா பேகு ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர். இதில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய பெட்ரா கிவிடோவா 6-1 என முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்தும் சிறப்பாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றினார். அந்தவகையில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.


நாம் தொடர்ந்தும் முறையான பிரெக்ஸிற்றுக்காக போராட வேண்டும் : மேர்க்கல்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தத்துடன் ஒழுங்கான முறையில் பிரித்தானியா வெளியேறுவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜேர்மனியின் அதிபர் அஞ்செலா மேர்க்கல் இன்று தெரிவித்துள்ளார். ஆனாலும் ஒப்பந்தம் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறினால் அதற்கு தேவையான தயார்ப்படுத்தல்களையும் ஜேர்மனி முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் பிரித்தானிய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது மிகுந்த கவலையளிப்பதாகவும் பிரித்தானியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரேசா மே தான் தெரிவிக்க வேண்டுமெனவும் அஞ்செலா மேர்க்கல் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறினால் நிச்சயமாக சேதம் விளைவிக்கப்படும் அனால் அந்த சேதத்தின் அளவை மட்டுப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோமென ஜேர்மன் அதிபர் தெரிவித்தார்.


சிரியாவில் குண்டு வெடிப்பு – அமெரிக்க படையினர் நால்வர் பலி!

சிரியாவில் இன்று தற்கொலை குண்டுதாரி ஒருவரால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் அமரிக்க படையினர் நால்வர் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளது. சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதக் குழு முற்றாக அழிக்கப்பட்டதாகவும் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதியின் இக்கருத்துக்கு பல நாட்டு தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன் ஐ.எஸ் முற்றாக அழிக்கப்படவில்லை எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படையினர் மீது இன்று ஐ.எஸ் தீவிரவாத குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிரிக்கும் முயற்சி: மஹிந்த

புதிய அரசியல்மைப்பினைத் தயாரிக்கும் செயற்பாடு நாட்டைப் பிரிக்கும் முயற்சி என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசியலமைப்பு திருத்தம் நாட்டைப் பிரிக்கும் முயற்சியாகும். ஒரு சிலர் இதனைத் திருத்தம் என்கிறனர். ஒருசிலர் சட்டமூல வரைவு என்கிறனர். ஒரு சிலர் அப்படி ஒன்றும் இல்லை என்கின்றனர். ஒவ்வொருவராக தயாரித்த நான்கு அறிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைக்கான ஆரம்பத்தை வைத்துள்ளனர். அவர்கள் அதில் பிரச்சினை இல்லை என்று கூறிய நிலையில் அதனை வாசித்து பார்க்கும் போதுதான் பிரச்சினைகள் தெரிகின்றன. இந்த நாடாளுமன்றத்திற்கு புதிய அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கு அதிகாரம் இல்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. குறைந்தது 113 கூடமேலும் படிக்க…


மைத்திரி பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி சந்திப்பு!

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிலிப்பின்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிலிப்பின்ஸின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேட்ரேவை சந்தித்துள்ளார். பிலிப்பைன்ஸிற்கு நேற்று பிற்பகல் நோக்கி பயணமான ஜனாதிபதி, நேற்று இரவு அங்கு சென்றடைந்தார். பிலிப்பின்ஸின் மெனிலா நகரில் உள்ள நினோய் அகினோ சாவதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய ஜனாதிபதியை, அந்த நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். இந்நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதார, விவசாய, கலாசார மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டு: தமிழிசை

கோடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை தி.மு.க. கூறிவருவதாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறிப்பிட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கோடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டை தி.மு.க. முன்வைத்துள்ளது. இக்குற்றச்சாட்டை எமது தலைமை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளாது. தி.மு.க. எதற்கெடுத்தாலும் பா.ஜ.க. மீது குற்றம் சாட்டினால் மக்களுக்கு சலித்துப்போகும். பின்னர் மத்திய அரசின் மீது குறை கூறினால் மக்களே எதையும் நம்பமாட்டார்கள். மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் நாம் இணைவோம். வெற்றி பெற்றதன் பின்னர் நாம் தி.மு.க.விற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என தமிழிசை மேலும் குறிப்பிட்டார்.


மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை திரும்பப் பெற முடியாது: சுமந்திரன்

மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரங்களை மத்திய அரசால் திரும்பப் பெறமுடியாதவாறே புதிய அரசியல் யாப்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிற்கு இன்று (புதன்கிழமை) மாலை பருத்தித்துறை நகரில் வரவேற்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாணசபைக்கு கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் மீளப்பெற முடியாதவாறு இருக்கவேண்டும். அதாவது கொடுக்கப்படும் அதிகாரங்கள் குறித்து மத்திய அரசில் சட்டம் இயற்ற முடியாதவாறு அமைய வேண்டும். இவ்விடயங்கள் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அதனால்தான் நாங்கள் இதனை சமஷ்டிக்குரிய குணாம்சம் என்று கூறுகின்றோம். ஆகவே அரசியல் அமைப்பு மீறப்படுகின்றபோது அதனைத் தடுக்கவேண்டிய தேவை ஏனைய சமூகத்தைவிட எமது சமூகத்தில் அதிகமாக இருக்கின்றது. இங்குமேலும் படிக்க…


ஐ.தே.க. கூட்டமைப்பிற்கு அடிபணிந்து விட்டது: விமல்

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை கூட்டமைப்பிற்கு அடிபணிந்து விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச குற்றம் சுமத்துகின்றார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மாவை சேனாதிராஜாவும், சுமந்திரனும், வடக்கில் இருவேறு நிகழ்வுகளில் பங்கேற்று தமது அனுமதி இல்லாமல், அமைச்சரவைத் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாது எனக் கூறியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன. மேலும்,அரசாங்கத்திற்கும் தமக்கும் இடையில் உடன்பாடு உள்ளது. எம்முடன் இணைந்து செயற்படவே பிரதமர் வடக்கினைப் பொறுப்பேற்றார். இதனை செய்வதாக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்தே அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். இதனால் கூட்டமைப்பு விரும்பாத எந்தவொருமேலும் படிக்க…


நாட்டை பிளவுபடுத்தும் எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை – அரசாங்கம்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்மொழியப்பட்ட விடயங்களை எதிர்க்கட்சி திசை திருப்ப முயற்சி செய்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவ்வாறு எதிர்க்கட்சியினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக இனவாதத்தை தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவ்வாறு அவர்கள் கூறுவதை போல அரசாங்கம் நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது நாட்டை பிளவுபடுத்தும் எந்த ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவில்லை என கூறினார். மேலும் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பானது நாட்டை ஐக்கிய படுத்தும் முயற்சியாக கொண்டுவரப்படுகின்றது, ஆனால் இந்த ஆவணம் நாட்டை பிளவுபடுத்தும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் அவர்கள்மேலும் படிக்க…


தெரேசா மே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

பிரதமர் தெரேசா மே அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஆளும் கொன்சவேற்றிவ் அரசாங்கம் வெற்றிபெற்றுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு நடைபெற்று சற்று முன்னர் முடிவு வெளியாகியிருந்தது. நேற்றையதினம் பிரதமர் தெரேசா மே யின் பிரெக்ஸிற் உடன்படிக்கை பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தொழிற்கட்சித் தலைவரால் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில் இன்று நண்பகல் முதல் பாராளுமன்றில் அரசுக்கெதிராக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று இரவு 7மணிக்கு நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும் எதிராக 306 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.


தமிழகத்தில் எவரும் அரசியல் செய்ய முடியாது- கமல்ஹாசன்

டெல்லியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் எவரும் அரசியல் செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (புதன்கிழமை) கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதன்போது அவர் செய்தியாளர்களுக்கு  கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். தற்போது மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். டெல்லியை தவிர்த்து விட்டு இங்கு எவரும் அரசியல் செய்ய முடியாது” எனக் கூறினார்.


அரசியல்வாதிகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர்- வியாழேந்திரன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில் பொய்யான புரளிகள் பரப்பப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஊடகப்பிரிவின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இன்று (புதன்கிழமை) அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கடந்த வருடத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்திற்கான திட்டமுன்மொழிவுகள் கோரப்பட்டபோது அதனை முதன் முதலாக உரிய நேரத்திற்குள் சமர்ப்பித்தவன் நான். அதற்கமைய Gam/BattiD/05 எனும் இலக்கம் இடப்பட்ட 20.10.2018 திகதியிடப்பட்ட தங்களால் சமர்ப்பித்த திட்டங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்ட கடிதம் எனக்கும், மாவட்ட செயலகத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தன. எனினும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் சில வேலைத்திட்டங்கள் தடைப்பட்டிருந்தன. இதனை நான் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தேன். மீண்டும் கம்பெரலிய வேலைத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனும் அறிவிப்பின் பின்னர், என்னால் முன்மொழியப்பட்ட கம்பரெலிய வேலைத்திட்டங்களுக்குரியமேலும் படிக்க…


பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளது: ஐரோப்பிய ஒன்றியம்

பிரித்தானிய நாடாளுமன்ற வாக்கெடுப்பை தொடர்ந்து முறையற்ற பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், தமது நோக்கத்தை வெகு விரைவில் தெளிவுபடுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் பிரித்தானியாவை வலியுறுத்தியுள்ளார். மேலும், ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவதற்கான காலம் ஓடிக்கொண்டிருப்பதாகவும் அவர் பிரித்தானியாவை எச்சரித்தார். இதேவேளை, தமது அணுகுமுறை குறித்து தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் பிரித்தானியா காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பிரெக்ஸிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த கட்டம் குறித்து அறிவிக்கும் பொறுப்பு பிரித்தானியாவிற்கே உள்ளது எனத் தெரிவித்த அவர், ஒன்றுபட்ட ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.


பாட்டும் பதமும் – 419 (16/01/2019)

திருமதி. ஜமுனா குகன், சுவிஸ்


சீனாவின் ஆய்வில் முன்னேற்றம்- நிலவுக்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது

நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியுள்ளது. சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன் சாங் இ-4 என்ற விண்கலம் அனுப்பி உள்ள நிலையில், அதன் மூலம் நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை பல்வேறு ஆராய்ச்சிகள் உலக நாடுகள் செய்து வந்தாலும் நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்வது குறித்து முதலில் தொடங்கியது சீனாதான். இதற்காக கடந்த மாதம் 8ஆம் தேதி சாங் இ-4 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது. நிலவின் மறுப்பக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத புகைப்படங்களை சீன விண்வெளி மையத்திற்குமேலும் படிக்க…


சினிமா போல் நினைத்து அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

சினிமா போல நினைத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:- கொடநாடு பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஏற்கனவே கூறி விட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது பற்றி கருத்து கூற முடியாது. சினிமாவில் நடித்ததால் நடிகர் கமல்ஹாசனுக்கு எல்லாமே கதையாக தெரிகிறது. கதையும் இல்லை, கற்பனையும் இல்லை. கோடநாடு பிரச்சினையில் முதல்வருக்கு துளி கூட சம்பந்தம் இல்லை. அரசியலுக்கு லாயக்கு இல்லாமல், சினிமா போல நினைத்துக்கொண்டு அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன், தி.மு.க. நல்ல வி‌ஷயங்களை என்றும் கையில் எடுத்தது கிடையாது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு கொடுத்ததை பாராட்டியது கிடையாது. கஜா புயலின்போது தமிழக அமைச்சர்கள் அங்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர், இதனை அனைவரும் பாராட்டினார்கள். ஆனால்மேலும் படிக்க…


சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர் – ஜெயலலிதாவுக்கு மணி மண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சேலம் அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சம் மதிப்பிலான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகியோருக்கு ரூ.80 லட்சம் செலவில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இந்த மணிமண்டபத்தை இன்று காலை திறந்து வைத்தார். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் விபத்துகளை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி அரியானூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு மகுடஞ்சாவடியில் இன்றுமேலும் படிக்க…


கேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்

கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் நேற்று தடுத்து நிறுத்தியது. பின்னர், பயணிகளின் அடையாள அட்டைகளை பறித்த அந்த கும்பல் அனைவரையும் கீழே இறக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. பேருந்து டிரைவரை, கும்பா பேருந்து நிலையத்திற்கு திரும்பி செல்லும்படி, அந்த கும்பலைச்மேலும் படிக்க…


சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் அண்மையில் வொஷிங்டன் பயணமானார். இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், முற்போக்கான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை தயாராக இருப்பதாகவும் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர்மேலும் படிக்க…


காயங்களை ஏற்படுத்தாமல் புற்றுநோயை அகற்றி சாதனை

ஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த, நபர் ஒருவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உணவு அருந்த, நீர் பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது. குறித்த நபர், பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் நியாஸ் என்ற 56 வயதுடைய நபரென்பது குறிப்பிடதக்கது. எனினும் குறித்த நபருக்கு எவ்வித வெட்டு காயங்களையும் ஏற்படுத்தாமல், அந்த புற்றுநோயை அகற்றுவதற்கு இலங்கை வைத்தியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். டிரான்ரல் எண்டோஸ்கோபிக் டிரான்ஸ்டோனிக் (Transoral endoscopic transonic)தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சத்திர சிகிச்சைக்குள்ளான நோயாளி இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உடல்நிலை தேறியுள்ளார். இந்த சத்திர சிகிச்சை இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான சத்திர சிகிச்சையாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.


வவுனியாவில் 694 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தர அமெரிக்கா வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 694 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினாலேயே இன்று இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிப்பாடுகளை மேற்கொண்ட பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு பசார் வீதி வழியாக  ஊர்வலமாக வந்த அவர்கள் தமது போராட்ட தளத்தை அடைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது எமது பிள்ளைகள் வராது எமக்கு பொங்கல் இல்லை. மாறி மாறி வந்த அரசாங்கங்களில் நாம் நம்பிக்கையிழந்து விட்டோம். கூட்டமைப்பும் எம்மைப் பற்றி பேசாதுமேலும் படிக்க…


நாடு பிளவுபட ஐ.தே.க. இடமளிக்காது – தலதா அதுகோரல

நாட்டை இரண்டாக பிளவுபட ஐக்கிய தேசிய கட்சி ஒரு காலமும் இடமளிக்காதென அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு 2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் எந்தவொரு குற்றத்திற்கும் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு அனுமதியளிக்கவில்லை. அதன்காரணமாகவே தற்பொழுதும் எந்தவொரு குற்றவாளிக்கும் சர்வதேச தண்டனை கிடைப்பதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்குத் திரும்ப முற்பட்ட இரு அகதிகள் கைது

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இராமேஸ்வரம் மண்டபத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவற்படையினர் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை, சந்தேகத்திற்கிடமான வகையில் கண்ணாடிப்படகில் இருவர் பயணிப்பதை அவதானித்த காவற்படையினர், குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர். இதன்போது, சகோதரர்களான சிவராஜா மற்றும் அன்புகுமரன்  என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு படகு மூலம் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற குறித்த இருவரும், மதுரை ஆனையூர் முகாமில் தங்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இந்திய கடலோர காவற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஜனாதிபதி பதவிக்கு நானும் போட்டியிட தயார் – சமல் ராஜபக்ச

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக ராஜபக்ஷ ரெஜிமென்டின் மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். நேற்று நடந்த ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சமல் ராஜபக்ஷ இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு நான் பொருத்தமானவர் எனின், நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கிறேன் என சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன முன்னணியின் வேட்பாளராக ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். எனினும் தற்போது யார் என்பதை உறுதியாக கூற முடியாது என சில நாட்களுக்கு முன்னதாக சமல் ராஜபக்ச கூறியிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளதை அடுத்து, சமல் ராஜபக்ச, தானும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சமல் ராஜபக்சவின் இந்தக் கருத்து, ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே ஜனாதிபதி பதவிக்கான போட்டி,மேலும் படிக்க…


2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளது இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இதுதொடர்பில் அமைச்சரவையில்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் ‘மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்தி கைவிடப்பட்டிருந்ததினால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அடிப்படை வசதி மற்றும் சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதேச அபிவிருத்தியை துரிதபடுத்தும் பொருட்டு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக விவசாயம், கைத்தொழில், கடற்றொழில் மற்றும் சேவைத் துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி இவற்றின் கீழான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். அத்தோடு, பொருளாதார அடிப்படை வசதி, சமூக அடிப்படை வசதி, ஜீவனோபாயம் மற்றும் சுயதொழில்மேலும் படிக்க…


பிரதம மந்திரி தெரசா மே யின் பிரக்சிற் உடன்படிக்கை நிராகரிக்கப் பட்டது-

பிரதம மந்திரி தெரசா மே இன் பிரக்சிற் உடன்படிக்கை 230 வாக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு இது  வரலாற்று தோல்வி மிகப்பெரிய தோல்வி என சுட்டிக்காட்டப்பட்டள்ளது. எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா  வெளியேறுவதற்கான விதிகளை அமைக்கும் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதா அன்றி  நிராகரிப்பதா, என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் 432 வாக்குகள் வாக்களித்தனர்.  இந்த வரலாற்றுத் தோல்வியை அடுத்து தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின்  நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  அல்லது அரசாங்கம் பாராளுமன்றைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனக் கொரியுள்ளார்.


சிறப்பு நட்சத்திரம் மற்றும் ராசி பலன்கள் – 2019


உலக வங்கியின் தலைவராகிறாரா டிரம்ப் மகள்?

உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் பெயர் பரிசீலனையில் உள்ளதாக வரும் தகவல்களுக்கு வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினராக உள்ளன. உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம் என்பவரின் பதவிக்காலம் (அவர் முன்கூட்டியே பதவி விலகுவதால்) வரும் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது புதிய தலைவர் பதவிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகளும் அவரது மூத்த ஆலோசகருமாக இவாங்கா டிரம்ப் முயன்று வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்றமேலும் படிக்க…


கதைக்கொரு கானம் – 16/01/2019

திரு.நாதன் ஐக்கிய இராச்சியம்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !