Tuesday, January 15th, 2019

 

அரசியல் சமூக மேடை – 13/01/2019

சமகாலப்பார்வை


உதவுவோமா – 15/01/2019


சங்கமம் – 13/01/2019


இஸ்லாமியத் தமிழ் பெருமகன் பேராசிரியர் ம.மு. உவைஸ் 97வது ஜனன தினம்

பேராசிரியர் ம.மு. உவைஸ்; 1922ஆம் ஆண்டு தை மாதம் 15ம் திகதி கொழும்பு – காலி நெடுஞ்சாலையில்  பாணந்துறையில் அமைந்துள்ள கொறக்கானை எனும் சிற்றூரில் பிறந்தார். தகப்பன் பெயர் மகுமூது லெப்பை, தாயார் பெயர் சைனம்பு நாச்சியார் இவர்களுக்கு இவர் ஒரே மகனாவார். ஆரம்பக் கல்வியை ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்க முல்லையில் அமைந்திருந்த தக்ஸலா வித்தியாலயத்தில் பயின்றார்;. அதே விததியாலயத்தில் சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். பாளியைக் கற்றதன் விளைவு பிற்காலத்தில் இலக்கிய ஈடுபாட்டுக்கு வழி வகுத்திருக்கலாம். இவர் 1946ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேரும்வரை தமிழை ஒரு பாடமாக படிக்கும் வாய்ப்பை பெறவில்லை. ஆசிரியர் எவரும் இல்லாமலே தமிழ் கற்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. 1945ம் ஆண்டில் முக்கியமான நிகழ்வு ஒன்று உவைஸின் ; வாழ்க்கையில் நடைபெற்றது. அதே ஆண்டில் பல்கலைகழகமேலும் படிக்க…


கதைக்கொரு கானம் – 02/01/2019

திருமதி குணநாயகி பசுபதி பிரான்ஸ்


ஜனாதிபதி பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார்

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்வின் (Rodrigo Duterte) விசேட அழைப்பின் பேரில் ஐந்து நாள் அரசமுறை விஜயமொன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) முற்பகல் பிலிப்பைன்ஸ் பயணமானார். இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இது தொடர்பான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்கும் (Rodrigo Duterte) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை முற்பகல் இடம்பெறவுள்ளது. இருநாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் உறவுகளை, பரஸ்பர நன்மையை நோக்கமாகக்கொண்டு புதிய துறைகளை நோக்கி விரிவுபடுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் இதன்போது அரச தலைவர்கள் விசேட கவனம் செலுத்தவுள்ளனர். தனது இந்த விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்திமேலும் படிக்க…


பிரான்ஸில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக ஆய்வில் தகவல்!

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரான்சில் குழந்தைகளின் பிறப்பு வீதம் கணிசமான அளவு குறைவடைந்திருந்த அதேவேளை மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. INSEE கணக்கெடுப்பு நிறுவனத்தினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் 69 மில்லியன் மக்கள் வசிப்பதாக கடந்த 1 ஆம் திகதி தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய கடந்த வருடத்தில் பிரான்சில் 758,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2017 ஆண்டோடு ஒப்பிடுகையில் 12,000 குறைவாகும். அதேபோல் கடந்த வருடத்தில் 614,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8,000 அதிகமாகும். குழந்தை பிறப்பு வீதம் ஒரு பெண்ணுக்கு 1.87 வீதத்திலுள்ளது. அதேவேளை, கடந்த நான்கு ஆண்டுகளில் 0.3 வீதம் மக்கள் தொகை அதிகரிப்பையும் பிரான்ஸ் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆளே இல்லாத தீவில் இவ்வளவு சம்பளமா?

அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றும் நபருக்கு 130,000 டொலர் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் 145 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் அதனுடன் இணைந்து  விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். குறித்த தீவில் வேறு குடியிருப்புகள் ஏதும் இல்லை என்பதால் இருவர் மட்டுமே இங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். தற்போது சே ரோட்ஜர்ஸ் மற்றும் ஜில்லியன் மீக்கர் ஆகிய இருவரும் இங்கு பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் இருவரும் வேறு பணி தேடிச் செல்வதால் புதிய பாதுகாப்பு அதிகாரிகளை நிர்வாகம் தேடி வருகிறது. இங்கு பணியாற்ற செல்பவர்கள் கண்டிப்பாகமேலும் படிக்க…


தமிழ் மாணவர்கள் பல்கலைக்கு தேர்வாவதில் வீழ்ச்சி!

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்வதாக கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். சுதர்சன் கவலை வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவை ஒன்றியத்தின் தலைவர் என். நிராஜ் தலைமையில் வெள்ளி விழா காரைதீவு கலாசார மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த விழாவில் பிரதம அதிதியாக  கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கம் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கின்றது. எல்லோராலும் வைத்திய கலாநிதிகளாகவோ, பொறியியலாளர்களாகவோ  வர முடியாது. ஆகவே வர்த்தக, கலை துறைகளுக்கு தெரிவாகின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ் மாணவர்கள் அதிக அளவில் கூடுதல் சிறப்பு புள்ளிகள் மற்றும் அடைவுகளை பெறவும் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதேவேளை  வெளிநாட்டு புலமை பரிசில்களுக்கு தமிழ் மாணவர்கள்மேலும் படிக்க…


நைரோபியில் துப்பாக்கிச்சூடு, அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் :ஒருவர் உயிரிழப்பு நால்வர் காயம்

கென்யத் தலைநகரில் துப்பாக்கிச்சூட்டினை தொடர்ந்து அடுத்தடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர். கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. குறித்த அசம்பாவிதம் இடம்பெற்ற பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சோமாலியாவைத் தளமாக கொண்டு இயங்கும் அல் ஷவால் அமைப்பு குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உரிமை கோரியுள்ளது. துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்ற குறித்த நட்சத்திர விடுதிக்கு நான்கு ஆயுததாரிகள் சென்றதை தாங்கள் பார்த்ததாக சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், குண்டு வெடிப்பு இடம்பெற்ற நட்சத்திர விடுதியிலிருந்த 100 இற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, கென்யாவில் கடந்த 2013ஆம் நடாத்தப்பட்ட இதுபோன்றதொரு தாக்குதல் சம்பவத்தில் 150 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்திருந்தமை மேலும் படிக்க…


மின்சார நாற்காலியில் அமர்வதற்கு பொதுமக்களை ஏமாற்றுகின்றனர் – கபீர் ஹாசிம்

அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான நோக்கம் கொண்ட சிலர் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டியுள்ளார். மாவனெல்ல பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பொதுமக்களை ஏமாற்றி ஊழல் மோசடிகளில் ஈடுபட சிலர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள். இருப்பினும் மோசடி மற்றும் பல்வேறு குற்றம் சாட்டப்பட்டவர்களை நியமிக்க இந்த அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என கூறினார். மேலும் மின்சார நாற்காலியில் அமர்வதற்காக கடந்த காலத்தில் ஒரு தனிநபர் அவருக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து அந்த திட்டம் தோல்வியிலேயே முடிவடைந்தது என அவர் தெரிவித்தார். இருப்பினும் அதே நபர் இப்போது மோசடி செய்தவர்களுக்கும் ஊழல் செய்தவர்களுக்கும் ஆதரவாகமேலும் படிக்க…


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்நிலையில் சுதந்திர கட்சி மற்றும் பெரமுன கட்சிகளின் தலைவர்கள் ‘கை’ அல்லது ‘மொட்டு’ தவிர வேறு ஒரு சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியை உருவாக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் முழு ஆதரவு இருந்தால் ஜனாதிபதி சிறிசேனவை ஆதரிப்பேன் என ஜனாதிபதியின் சகோதரனான டட்லி சிறிசேனவிடம் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவார் என்றும் ஸ்ரீ.ல.சு.க.வின் 4.2 மில்லியன் வாக்குகள் மற்றும் பொதுஜன பெரமுனவின் 1.5 மில்லியன் வாக்குகள் ஆகியவற்றுடன் அவரது வெற்றி நிச்சயம் எனவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி தேர்தல் விசாரிவில் நடக்க கூடும் என்றுமேலும் படிக்க…


வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் – புதிய ஆளுநர்!

வடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் என்று வடக்கின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ். இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தைப்பொங்கல் தின விசேட நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் 2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சிக்கான சலுகையை- கூட்டமைப்புப் பெறக்கூடாது!

தமிழ்த் தேசி­யக் கூட்ட­மைப்­புக்கு எதிர்க் கட்­சிக்­கான சலு­கை­களை வழங்­கக் கூடாது என்று அடுத்த நாடா­ளு­மன்ற அமர்­வுக்கு முன்­னர் சபா­நா­ய­க­ரி­டம் வலி­யு­றுத்­த­வுள்­ளோம் என்று தெரி­வித்­துள்­ளார் மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், பிவித்­துரு ஹெல உறு­ம­யக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான உதய கம்­மன்­பில. கொழும்­பில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது- வரவு- செல­வுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தமை, தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளித்­தமை என பல்­வேறு சாத­னை­களை இரா.சம்­பந்­தன் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்­துக்­கொண்டு செய்­துள்­ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கூட்­ட­மொன்­றில் உரை­யாற்­றிய மாவை சேனா­தி­ராஜா, அமைச்­ச­ர­வை­யின் முடி­வு­க­ளைக் கூட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரு­டன் கலந்­தா­லோ­சித்­து­தான் அரசு மேற்­கொள்­கின்­றது என்று கூறி­யி­ருந்­தார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரனோ, வடக்கு அபி­வி­ருத்தி அமைச்சை தமது வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெற்­றுக்­கொண்­டார்மேலும் படிக்க…


வட மாகாணத்தின் மொழிப்பிரச்சனை தொடர்பில் ஆராய, ஆளுநரால் குழுவொன்று நியமனம்

வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய விசேட குழுவொன்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் மொழிக்கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக அந்த நடவடிக்கைகள் குறிப்பிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை அந்த செயற்பாடுகளுக்கு உதவும் வகையிலேயே இந்த மொழிக் குழு ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த மொழிக் குழுவின் தலைவராக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் மேலும் படிக்க…


உலகின் அதிசிறந்த புகைப் படத்துக்கான சுற்றுலா நகரமாக கொழும்பு தெரிவானது

2019ஆம் ஆண்டுக்கான உலகின் அதிசிறந்த புகைப்படத்துக்கான சுற்றுலா நகரமாக, இலங்கையின் தலைநகரான கொழும்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வெளியாகும் “மிரர்” எனும் பத்திரிகையால் மேற்கொள்ளப்பட்ட தெரிவு கணக்கெடுப்பின்ப​டி, கொழும்புக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு விசேடமாக, உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான வலைத்தளங்களில், சுற்றுலாத்துறையில் முக்கிய கேந்திர நிலையமாக கொழும்பு மாநகர் கணக்கெடுப்பின்படி முன்னிலையில் விளங்குவதாகவும் பிரித்தானியாவின் “மிரர்” பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹொங்கொங் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 16 பேர் காயம்

ஹொங்கொங்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுவர் ஒன்றுடன் மோதுண்டு நேற்று(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 67 வயதான, பேருந்தின் சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. குறித்த விபத்து தொடர்பில் ஹொங்கொங் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை வெற்றி!

உலகின் மிகப்பெரிய ஏர்லேண்டர் விமானத்தின சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை நிறுவனமொன்று ‘ஏர்லேண்டர்’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது. 92 மீற்றர் உயரமும், 44 மீற்றர் அகலமும் கொண்ட இந்த விமானம் கடந்த 2017-ம் ஆண்டு பரிசோதிக்கப்பட்டபோது விபத்தில் சிக்கியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில் தற்போது 25 மில்லியன் யூரோ செலவில் இந்த விமானம் புனரமைக்கப்பட்டது. மேலும் குறித்த விமானத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகமை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


திரிவேணி சங்கமம் நீராடும் நிகழ்வு

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கும்பமேளா திருவிழாவின்; மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி திரிவேணி சங்கமம் பகுதியல் நீராடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ்நகரில் கொண்டாடப்படும் குறித்த திருவிழாவில் 32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 250 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகளுடனும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ‘கும்ப்நகரி’ என்ற தற்காலிக நகரம் உருவாக்கப்படடுள்ளது. குறித்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் திரண்டுள்ளனர். இந்நிலையில் இவ் பக்தர்களுக்கான அடிப்படை வசதிக்கான முன்னேற்பாடுகளை உத்தரப்பிரதேசம் மாநில அரசை சேர்ந்த 28 துறை அதிகாரிகளும், மத்திய அரசின் 6 அமைச்சகங்களை சேர்ந்த உயரதிகாரிகளும் ஏற்பாடு செய்திருந்தனர்.


நான் ரஷ்ய அரசுக்காக வேலை செய்யவில்லை : டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய அரசின் சார்பில் செயல்படுகிறாரா என்பது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறையினர் புலனாய்வு விசாரணை ஒன்றை 2017 ம் ஆண்டு ஆரம்பித்ததாக வெளிவந்துள்ள ஊடக அறிக்கைக்கு அமெரிக்க அதிபர் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான தனது கூட்டங்களைப் பற்றிய விவரங்களை மறைத்தத்துடன் தனது மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளையும் டொனால்ட் ட்ரம்ப் பறிமுதல் செய்ததாக வோஷிங்டன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியும் பொய்யானது எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் புலனாய்வுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கோமியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து ஜனாதிபதி ட்ரம்பின் செயல்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதி புலனாய்வுத்துறை விசாரணையொன்றை ஆரம்பித்ததாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கை கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. இன்று வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடையே பேசிய டொனால்ட் ட்ரம்ப் ‘நான் ரஷ்யாவிற்காக ஒருபோதும் வேலைமேலும் படிக்க…


வெனிசுவேலா சபாநாயகர் கைது செய்யப் பட்டமைக்கு உலக நாடுகள் கண்டனம்!

வெனிசுவேலாவின் சபாநாயகர் ஜூவான் கெய்டோ கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வெனிசுலா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சியினர் நிக்கோலஸ் மடுரோ 2-வது முறையாகவும் ஜனாதிபதியாவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும் அவர் கடந்த 10ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் 2-வது முறையாக வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மடுரோ பதவி விலக வேண்டும் எனவும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ, தாம் ஜனாதிபதியாக தயார் என அறிவித்தார். இந்த நிலையில், தலைநகர் கரகஸில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக சென்ற ஜூவான் கெய்டோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அவர் கைது செய்யப்பட்ட சிலமேலும் படிக்க…


பொங்கல் பண்டிகைக்கு மோடி தமிழில் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். மகர சங்கராந்தி, பொங்கல், மகுபிகு உள்ளிட்ட பண்டிகைகள் இன்று(புதன்கிழமை)) கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மட்டுமின்றி அந்தந்த மொழிகளில் தனித்தனியாக தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். தமிழில் அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், “பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்கக் கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.


‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ ஆனால் தமிழ் மக்களுக்கு மங்கலாகவே தெரிகின்றது – சி.வி.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள் ஆனால், தமிழ் மக்களுக்கு வழிகள் யாவும் மங்கலாகவே தெரிகின்றன என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) தைத்திருநாளை கொண்டாடிக்கெண்டிருக்கின்றனர். இந்நிலையில் தைத்திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘அரசியல் யாப்பு, தேர்தல்கள், ஜெனிவாக்கூட்டங்கள் எல்லாமே தமிழ் மக்களுக்கு மங்கலான பாதைகளையே காட்டி நிற்கின்றன. எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்கள்கூட பல விதங்களில் பிரிந்தே காணப்படுகின்றனர். அரசியல் ரீதியாக, மத ரீதியாக, சமூக ரீதியாக இன்னும் பல வழிகளில் எமது மக்கள் பிரிந்தே நிற்கின்றார்கள். மேலும் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக பல இடங்களில் எம் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில்  காணப்படுகின்றார்கள்.மேலும் படிக்க…


அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை பெற வேண்டும் -மஹிந்த

அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிட வேண்டுமென எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள  மக்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல்  பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தைப்பொங்களை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வெளிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தைத்திருநாள் உழவர் பெருநாள் மட்டுமல்ல, நன்றியறிதல் எனும் உயரிய மனப்பாங்கை வெளிப்படுத்துவதுமாகும் இது தமிழ் மக்கள் உலகிற்கு எடுத்துரைக்கும் நலன்மிகு முன்னுதாரணமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு அதற்கமைய எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்கள் நீங்கி நலங்களும் வளங்களும் பெற்று வாழ வேண்டும். அத்தோடு நாட்டில் நிலவுகின்ற இயற்கை சீற்றத்திலிருந்து மீண்டு அனைவரும் மீள எழு எழுச்சி பெறுவோம். அதற்காக அனைவரும்மேலும் படிக்க…


நாடளாவிய ரீதியில் பொங்கல் கொண்டாட்டம்

உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டியை நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள சகல இந்து ஆலயங்களிலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். குறிப்பாக மன்னாரில் இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, மன்னார் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலும் பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சகல கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். அதேபோன்று வவுனியா மாவட்டத்திலும், மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மிகவும்மேலும் படிக்க…


தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் தைத்திருநாளாக அமையட்டும்: ஜனாதிபதி வாழ்த்து!

தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் இனிய தைத்திருநாளாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடிவரும் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை அளித்துள்ளனர் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையையே அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதையும் இது புலப்படுத்துகின்றது. அத்தோடு வாழ்வின் ஆதாரமான விவசாயத்திற்கு நீர், ஒளி, வெப்பம், காற்று ஆகியவற்றை உருவாக்க உதவிவரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும்மேலும் படிக்க…


தைத் திருநாளுக்கான சிறப்புக்கவி

இன்று தமிழர் திருநாள் தைத்திருநாள் உவகை பொங்கும் உழவர் பெருநாள் உன்னத திருநாள் ஆதவனுக்கு நன்றி செலுத்தும் அரியதோர் நாள் ஆனந்தப் பெருநாள் ! அறுவடை செய்த நெல்லை குற்றியெடுத்து பாலும் சக்கரையும் பாகும் பருப்பும் சேர்த்து பொங்கல் செய்து கட்டிக் கரும்போடு உதயத்து ஆதவனுக்கு உன்னதமாய் படையலிடும் நாள் ! களைப்பு நீங்கி களிப்போடு கதிரவனை வணங்கிடும் நாள் கை கூப்பித் தொழுதிடும் நாள் பொங்கல் திருநாள் வீரத் தமிழர் பெருநாள் வெற்றிகள் குவியும் ஓர்நாள் ! கவலைகள் மறந்து களிப்பில் மிதந்து மனங்கள் மகிழ்ந்து மங்கலம் பாடி மகிழ்ச்சியில் திளைத்திடும் பொங்கல் திருநாள் ! தைத் திருநாள் தமிழர் பெருநாளில் மங்கலம் எங்கும் ஒலிக்கட்டும் மங்காப் புகளும் கிடைக்கட்டும் சங்கடங்கள் தீரட்டும் சமத்துவம் மிளிரட்டும் சந்தோச சாரல் வீசட்டும் ! கவி……ரஜனி அன்ரன் (B.A)மேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !