Tuesday, December 18th, 2018

 

ஓநாய்களுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர முடியாது-விஜித் விஜயமுனி அதிரடி அறிவிப்பு

நான் சுதந்திரக் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்தவன் என்ற போதிலும், இனியும் இந்த ஓநாய்களுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கூடியது. இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித் விஜயமுனி ஆளுந்தரப்பில் சென்று அமர்ந்துக் கொண்டார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றில் அவர் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நான் சுதந்திரக் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்தவன். ஆனால் இன்று கட்சியிலிருப்பவர்கள் கட்சியை பற்றி சிந்திக்காமல் செயற்படுகின்றனர். இடையில் வந்தவர்கள் கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். பல முக்கிய சந்தர்ப்பங்களில் உயிரை பணயம் வைத்து கட்சிக்காக பாடுபட்டோம். ஆனால், தற்போது கீரியும் பாம்பும் ஒரே மேடையில் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க…


எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தார் சம்பந்தன்

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகியதன் காரணமாக பாராளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மை ஆசனங்களை கொண்டுள்ளதனால் அதன் பாராளுமன்ற குழு தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். பாராளுமன்றம் இன்று பிற்பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதேவேளை,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக விஜித் விஜிதமுனி சொய்ஸா, இந்திக பண்டாரநாயக்க மற்றும் லக்‌ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் ஆளுங் கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். அத்துடன் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே இன்று ஆளுந்தரப்பில் அமர்ந்து கொண்டார். சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் சபாநாயகர் புதிய எதிர்க்கட்சித் தலைவர், புதிய ஆளுந்தரப்பு பிரதான கொறடா மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்காக பெயரிடப்பட்டவர்களை அறிவித்தார். இதேவேளை, பாராளுமன்றத்தில் ஆளும் தரப்புமேலும் படிக்க…


அமெரிக்காவின் தலையீட்டுக்கு சவுதி அரேபியா கண்டனம்!

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலைக்கு சவுதி இளவரசரே பொறுப்பு எனும் அமெரிக்க செனட்டின் தீர்மானத்திற்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் யெமனில் போரில் ஈடுபட்டுள்ள சவுதி தலைமையிலான கூட்டணிப்படைகளுக்கு வழங்கிவரும் ராணுவ உதவிகளை நிறுத்துவதற்கும் அமெரிக்க செனட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட இத்தீர்மானம் பொய்யான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமது பிராந்திய மற்றும் சர்வதேச பங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சு விமர்சித்துள்ளது. ஒக்டோபர் மாதம் இஸ்தான்புல் சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் படுகொலையில் இளவரசர் மொஹம்மட் பின் சல்மானின் ஈடுபாட்டை சவுதி அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது. சவுதி அரேபியா ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை வருத்தத்திற்கு உரியது எனவும் , இந்தப் படுகொலை சவுதி மற்றும் அதன் அமைப்புகளின் கொள்கையை பிரதிபலிக்கவில்லை எனவும்மேலும் படிக்க…


பாகிஸ்தான் சிறையில் 6 ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்ட ஹமீத் அன்சாரி விடுதலை!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட ஹமீத் நேஹால் அன்சாரி விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர் அட்ரிரி-வாகா எல்லையின் ஊடாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானின் காபூல் நகரில் வேலைக்குச் சென்ற பொறியாளர் ஹமீத் நேஹால் அன்சாரி என்பவர் தனக்கு சமூக வலை தளம் மூலம் பழக்கமான பாகிஸ்தான் பெண்ணை கட்டாயத் திருமணத்தில் இருந்து காப்பாற்ற ஆஃப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் இருந்து பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு சென்ற போது கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உளவுபார்க்க வந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராணுவ நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஆனால் தண்டனைக்காலம் முடிவடைந்தும் விடுவிக்கப்படாமல் இருந்த அன்சாரியை விடுவித்த பாகிஸ்தான் இன்று வாகா எல்லையில், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது அன்சாரியும் அங்கு இருந்த அவரது குடும்பத்தினரும் இந்திய மண்ணை விழுந்து வணங்கினர்.


75 நாட்கள் சிகிச்சை – ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு வழங்கப்பட்ட கட்டண விவரம் வெளியானது!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும், மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா உயிரிழந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க பெற்ற கட்டண விவரங்களை அப்பல்லோ மருத்துவமனையின் வழக்குரைஞர் தாக்கல் செய்தார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “75 நாட்கள் அப்பல்லோவில் தங்கியிருந்த ஜெயலலிதாவுக்கு உணவு அளிக்க 1.17 கோடி செலவாகியுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சைக்கு அதாவது மருத்துவச் செலவு 6.85 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு 92.7 இலட்சமும், அறை வாடகைக்கு 24.19 இலட்சமும், பிசியோதெரபி சிசிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு 1.29 கோடியும்மேலும் படிக்க…


அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் – ரணில்

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், “ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசமைப்புக்கு முரணான செயற்பாடுகளை தோற்கடிக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள். இதற்காக பிரேரணைகளை சமர்ப்பித்த மற்றும் நிறைவேற்றிய தரப்பினருக்கும் எமது நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். மாவை சேனாதிராஜா, வடக்கின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனை நாம் தீர்க்க வேண்டும். வடக்கின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண்பதும் எமது அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது. புதிய அரசமைப்பையும் கொண்டுவருவோம். இதன் ஊடாக ஒருமித்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழ்வதற்கு வழியமைப்போம். இனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வ்வை நாம் வழங்குவோம். புதிய அரசமைப்பின் ஊடாக மாகாணசபைகளையும்மேலும் படிக்க…


நிறைவேற்று அதிகார முறையை வைத்துக்கொண்டு பைத்தியக்காரர்களை போன்று செயற்படுகின்றனர் – ஐ.தே.க

நிறைவேற்று அதிகார முறையை வைத்துக்கொண்டு பைத்தியக்காரரர்களை போல செயற்பட்டு, மோசடிகளை செய்து, பணம் உழைத்தனர். ஆகவே அதனை மாற்றியமைக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரபாகரனுடன் அன்று ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரணில் மோசமானவர் என தமிழ் மக்களுக்கு பிரபாகரன் கூறி, ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார். அதன்மூலம்தான் மஹிந்த வெற்றிபெற்றார். இன்று நிறைவேற்று அதிகாரம் பற்றி பேசுகின்றனர். இந்தியாவில் 40 வருடங்களுக்கு மேலாக ஒரே அரசியலமைப்பு காணப்படுகிறது. நாம் இன்று 20ஆவது அரசியலமைப்பை திருத்திக்கொண்டிருக்கின்றோம். 20 உடன் நாம் இதனை நிறுத்திக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். நாடாளுமன்ற பிரதிநிதிகள்மேலும் படிக்க…


பிரான்சைக் கண்டிக்கும் சர்வதேச மன்னிப்பச் சபை – மக்கள் மீது அளவிற்கதிகமான காவற்துறையினர் ஏவல்!

அரச சார்பற்ற நிறுவனமான சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) தனது விசாரணை அறிக்கை ஒன்றில் பிரான்சைக் கண்டித்து உள்ளது. «மஞ்சள் ஆடைப் பேராட்டத்தின் போது, பிரான்ஸ் அளவிற்கு அதிகமான, மட்டற்ற தொகையிலான காவற்துறையினரை ஏவியுள்ளனர். நாங்கள் பார்த்த காணொளிகளில், கூடியிருந்த மக்கள் மீது, அளவு கணக்கில்லாத வன்முறையையும், அளவிற்கதிகமான Flash-Ball தாக்குதலையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது» என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.


ஆறாம் வாரத்துக்கான மஞ்சள் ஆடை போராட்டத்துக்கான அழைப்பு

வரும் சனிக்கிழமை டிசம்பர் 22 ஆம் திகதி மீண்டும் மஞ்சள் மேலாடை போராட்டத்துக்கான அழைப்பு தற்போது முழு மூச்சாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனாததி இம்மானுவல் மக்ரோன் சில சலுகைகளை அறிவித்ததன் பின்னர், கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் வீரியம் சரி பாதியாக குறைந்திருந்தது. இந்நிலையில், வரும் வாரமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிருஸ்துமஸ் நெருங்கியுள்ள இந்த நேரத்தில் <<acte 6>> ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளமை பெரும் நெருக்கடியாக இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் திகதியும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. கடந்த சனிக்கிழமை 66,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடு முழுவதும் குவிந்திருந்தனர். வரும் வாரங்களில் ஆர்ப்பாட்டத்தின் தன்மை குறைந்திருந்தாலும், சோம்ப்ஸ்-எலிசே பகுதியை கிருஸ்துமஸ்துக்காக தயார் செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஐஎஸ் தீவிரவாதிகளை, நீதியின் முன் கொண்டுவர வேண்டும்

ஐஎஸ் தீவிரவாதிகளை நீதிக்கு முன்னால் கொண்டுவர வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நாடியா முராத் தெரிவித்துள்ளார்.தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது நாடியா முராத் இதனைத் தெரிவித்துள்ளார். ஐஎஸ் பிடியில் சிக்கி உள்ள யாசிதி பெண்களை மீட்பதற்கான முயற்சியில் யாருமே ஈடுபடவில்லை எனவும் ஈராக் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் எவையும அப்பெண்களைக் காப்பாற்ற வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் பெண்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த பாலியல் பலாத்காரம் குறித்து பேசக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் தான் தன் முடிவில் உறுதியாக உள்ளதாகவும் பாலியல் பலாத்காரம் குறித்து உரக்கப் பேசுவேன் எனவும் தெரிவித்துள்ள அவர் ஐஎஸ் குற்றவாளிகளை நீதிக்கு முன்னால் கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அரபு நாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து சண்டையிடமேலும் படிக்க…


மிஸ் யுனிவர்ஸ் போட்டி- பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு

பாங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர். நேற்று இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. அதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கத்ரினா எலிசா கிரே ‘மிஸ் யுனிவர்ஸ்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் அழகி டெமி லெய்க் நீல்- பீட்டர்ஸ் கிரீடம் அணிவித்தார். தென் ஆப்பரிக்காவை சேர்ந்த டாமரின் கிரீன், வெனிசுலாவை சேர்ந்த ஸ்தெபானி குட்டரெஸ் ஆகியோர் 2-வது இடங்களை பிடித்தனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் நேகல் சுதாசமா கலந்து கொண்டார். அவரால் முதல் 20 இடங்களுக்குள் கூட வரமுடியவில்லை.


பிரான்ஸில் அடுத்த வருடம் முதல் டிஜிட்டல் வரி அறிமுகம்!

பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான வரி விதிப்புத் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எதையும் எடுக்காத நிலையில் ஜனவரி முதலாம் திகதி முதல் தமது நாட்டில் புதிய டிஜிட்டல் வரி அறிமுகப்படுத்தப்படுமென பிரான்ஸ் அறிவித்துள்ளது. இவ்வரியின் மூலம் 2019ஆம் ஆண்டில் 500 மில்லியன் யூரோக்களை ((£450 மில்லியன்) பிரான்ஸ் பெறமுடியுமென பிரான்ஸ் நிதியமைச்சர் Bruno Le Maire தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது வரிவிதிப்பை அறிமுகப்படுத்துமாறு ஐரோப்பிய ஆணையத்துக்கு, ஜேர்மனியுடன் இணைந்து பிரான்ஸ் அழுத்தம் கொடுத்துவந்தது. ஆனால் அயர்லாந்து, செக் குடியரசு, சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இவ்வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய வரி சீர்திருத்தங்கள் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.


‘மஞ்சள் மேலங்கி’ போராட்டத்தின் எதிரொலியால் எட்டு பேர் உயிரிழப்பு: உள்துறை அமைச்சர்

பிரான்ஸில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக ‘மஞ்சள் மேலங்கி ’ அமைப்பினர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களின் செயற்பாடு அதிக உயிர்சேதங்களை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டின் சுற்றுவட்ட பாதைகளை மறித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை நிறுத்துமாறும் வலியுறுத்தினார். ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் வரி சீர்த்திருத்தத்திற்கு எதிரான மஞ்சள் மேலங்கி குழுவினரின் போராட்டம் குறித்து நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த 30 ஆண்டுகளில் இவ்வாறானதொரு அமைதியின்மை நிலவியதா என்பது எனக்கு தெரியாது. மஞ்சள் மேலங்கி போராட்டக்காரர்களினதும், பிரான்ஸ் மக்களினதும், எமது பாதுகாப்பு தரப்பினதும் பாதுகாப்பிற்காக இப்போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


யேமன் போர்நிறுத்தம்: அமுல் படுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே முறியடிப்பு

யேமனில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு ஒரு சில நிமிடங்களிலேயே அது ஹெளதி கிளர்ச்சியாளர்களால் மீறப்பட்டுள்ளதாக அரசாங்க சார்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுக நகரான ஹொடைடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு யேமனில் போரிடும் கட்சிகளுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், நிவாரணப் பொருட்கள் பரிமாற்றத்திற்கான முக்கிய நுழைவாயிலாக விளங்கும் துறைமுக நகரில் ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும், அரச சார்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு ஹொடைடா பகுதியில் ஹெளதி கிளர்ச்சியாளர்கள், அரச படையினர் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறாக இருதரப்பிற்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து வருவதாக அரச சார்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. அனுசரணையுடன் சுவீடனில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஈரான் ஒத்துழைப்பு ஹெளதி குழுவிற்கும், சவுதி ஆதரவு அரசாங்கமான அப்த் ரப்பு மன்சூர் ஹாதிக்கும் இடையேமேலும் படிக்க…


நியூயோர்க்கில் மரிஜுனா போதைப்பொருளை சட்டபூர்வமாக்க நடவடிக்கை!

பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக மரிஜுனா போதைப்பொருளை சட்டபூர்வமாக்குவதற்கு புத்தாண்டில் முன்னுரிமை வழங்குவதாக, நியூயோர்க் ஆளுநர் அன்ட்ரூ கூமோ தெரிவித்துள்ளார். நியூயோர்க் ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அமெரிக்காவின் பத்து மாநிலங்கள் மற்றும் கொலம்பிய மாவட்டத்தில் மரிஜுனா பாவனை ஏற்கனவே சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், அப்பட்டியலில் நியூயோர்க்கையும் இணைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”நாம் இரண்டு குற்றவியல் நீதி அமைப்புகளை கொண்டிருக்கிறோம். ஒன்று செல்வந்தர்களுக்கானது மற்றையது அனைவருக்குமானது. ஆனால், அந்த அமைப்பு தற்போது முடிவுக் கொண்டுவரப்படவுள்ளது. நாம் தேவையற்ற மற்றும் நியாயமற்ற குற்றவியல் முறைகளை நீக்கவேண்டும். அதற்கமைய பொழுதுபோக்கிற்காக வயது வந்தோருக்கான மரிஜுனா பாவனை சட்டபூர்வமாக்ககப்படவுள்ளது. ஒரு ஜனநாயகவாதி என்ற அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்துவதே எமது நிலைப்பாடு. ஒரு ஜனநாயகம் கொண்ட செனட் சபையையும், சட்டமன்றத்தையும்மேலும் படிக்க…


ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் ஜனன தினம் இன்று

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் 196வது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். அவர் யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தோன்றியவர் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம்.வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் சிறிது நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரீகப் போக்கில்மேலும் படிக்க…


பாடுவோர் பாடலாம் – 14/12/2018

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் 22.30 மணிக்கு


எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பம் சுமூகமடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்கவேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர். அத்தோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர தீர்மானித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த முத்துகெட்டிகம தெரிவித்தார். இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பான எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம்

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த ஆறு வாரகாலமாக அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் எரிபொருள் மின் சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட சியம்பலாப்பிட்டியவே இந்த நியமனங்களை வழங்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த நியமனங்களை இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்தி வடக்கு மாகாணத்தில் இலங்கை மின்சார சபையில் காணப்பட்ட வெற்றிடங்களிற்கு தெற்கு இளைஞர்களை நியமனம் செய்துள்ளமை தற்போதுமேலும் படிக்க…


மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது

மானிப்பாய் பிரதேசத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து வான் உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 11 சந்தேகநபர்களில் இரண்டு பேர் ஆவா குழுவின் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும் அஞ்சித் ஆகியோருடன் தொடர்புடையவர்கள் என்றும், ஏனைய 9 இளைஞர்களும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த 11 பேரும் சுமார் 22 வயது முதல் 24 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் 6 வாள்களுடன் வான் ஒன்றில் பயணித்த போதே, கைது செய்யப்பட்டதாக வட. மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலானமேலும் படிக்க…


எதிர்க்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லை: சுமந்திரன்

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து நடத்தும் கூட்டாட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பே பிரதான எதிர்கட்சியாக இருக்கும். அதனை யாரும் மறுக்க முடியாது. அதனால் நாம் எதிர்கட்சி பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லை” என  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்ற பின்னர் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர்  எதிர்க்கட்சி பதவியை வழங்குமாறு கோரி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “2015 ஆம் ஆண்டு தேசியஅரசாங்கம் உருவாக்கப்பட்டபோது  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்தே ஆட்சியை முன்னெடுத்துச் சென்றனர். இந்நிலையில் அரசியலில் சில முரண்பாடுகள் ஏற்பட்ட போதிலும்  இருவரும் மீண்டும் இணைந்து ஆட்சியைமேலும் படிக்க…


ஆறுமுகநாவலர் ஏன் வெகுண்டெழுந்தார்?


20 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி – மனோ கணேசன்

நிலையான ஆட்சியை அமைப்பதன் மூலம் எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு தமது அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்வோம் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சூளுரைத்துள்ளார். கொழும்பு – மோதரை கோயிலில் நேற்று (திங்கட்கிழமை) வழிப்பாட்டில் ஈடுபட்ட பின்னர், புதிய பிரதமரின் பதவியேற்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஜனநாயம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அராஜகத்தையும் அநீதியையும் எதிர்த்து நாம் பல போராட்டங்களை முன்னெடுத்தோம். ஜனாதிபதியுடன் போராட்டம் செய்தோம், நீதிமன்றங்களில் நீதிக்காக போராடினோம், தெருக்களில் போராட்டம் செய்தோம், எழுச்சிக்கூட்டங்களை நடத்தி மக்களை ஜனநாயக ரீதியில் அழைத்துச் சென்றோம் இன்று இறுதியாக எமக்கு வெற்றிக் கிடைத்துள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றது எமது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியல்ல. அது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அத்தோடு விரைவில் நிலையானதொருமேலும் படிக்க…


அரசியல் சமூக மேடை – 16/12/2018


பாடுவோர் பாடலாம் – 09/12/2018

பிரதி ஞாயிறு தோறும் 15.10 – 16.00 வரை


சங்கமம் – 16/12/2018


தெரிந்து கொள்வோம் – 15/12/2018


அரசியல் சமூக மேடை – 13/12/2018


ஆறுமுக நாவலர் – யாழ் அம்மாவின் கட்டுரை தொகுப்பு


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !