Thursday, November 29th, 2018

 

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜேர்மனியில் களைகட்டியது கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்கள் உட்பட பலராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட ஜேர்மனி மக்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். அந்நாட்டின் டிரெஸ்டென் நகரில் 584 ஆவது ஆண்டாக கிறிஸ்மஸ் சந்தை இயங்கத் தொடங்கியுள்ளது. விதவிதமான கேக்குகள், இனிப்புகள், பொம்மைகள் என சந்தை முழுவதும் நாலாவித பொருட்களும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மக்களும் கூட்டம், கூட்டமாக குவியத் தொடங்கி உள்ளனர். கூட்டம் அதிகரித்துள்ளதால் குறித்த பகுதிக்கு பாதுகாப்பு பொலிஸார் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1434 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கிறிஸ்மஸ் சந்தை ஜேர்மனியின் கலாச்சாரங்களில் ஒன்றாக மாறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றிய குடியேறிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இடம்பெயரும் குடியேறிகளின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நிகர இடம்பெயர்வு 2018 ஆம் ஆண்டின் ஜூன் மாத இறுதியில் 74,000 ஆகவும் அதே சமயம் ஏனைய நாடுகளிலிருந்து நிகர குடியேற்றம் 248,000 ஆகவும் காணப்பட்டதாக உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. செப்டம்பர் 2012 க்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றம் மிகக்குறைந்த அளவில் காணப்படுவது இந்த ஆண்டிலேயே என கூறப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய குடியேற்ற எண்ணிக்கை 65,000 ஆக காணப்பட்டது. ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே தொழில்வாய்ய்ப்புகளுக்காக பிரித்தானியாவுக்கு அதிகளவில் குடியேறியுள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.


ஜோர்ஜியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக சலோமே ஸுறாபிஷ்விலி தெரிவு!

ஜோர்ஜிய ஜனாதிபதி தேர்தலில் சலோமே ஸுறாபிஷ்விலி வெற்றிபெற்று, முதலாவது பெண் ஜனாதிபதி என் பெருமையை பெற்றுள்ளார். சுமார் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸில் பிறந்த முன்னாள் இராதஜதந்திரியான ஸுறாபிஷ்விலி 59 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அதேவேளை, அவரை எதிர்த்து போட்டியிட்ட கிரிகல் வஷாட்ஸே 40 வீத வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில், ஜோர்ஜியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள ஸுறாபிஷ்விலிக்கான பதவியேற்பு விழா, எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஸுறாபிஷ்விலி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டிருந்த போதிலும் ஆளும் ஜனநாயக ஜோர்ஜிய கட்சி அவருக்கான ஆதரவை வழங்கியிருந்தது. வஷாட்ஸே ஐக்கிய எதிர்க்கட்சி வேட்பாளராக தேர்தலில் களமிறங்கியிருந்தார். பிரான்ஸில் பிறந்த 66 வயதுடைய ஸுறாபிஷ்விலி, 2004ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஜோர்ஜியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


வெள்ளை மாளிகையில் கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தம்பதியர் திறந்து வைத்தனர்!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்காவில் ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தம்பதியர் திறந்து வைத்தனர். அந்நாட்டு மரபுப்படி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் சார்பில் பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் நிறுவப்படும். இதன் அடிப்படையில், 96 ஆம் ஆண்டாக இந்த ஆண்டு பச்சை வண்ண ஒளி விளக்குகள் நிறைந்த பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் ஒன்றாக திறந்து வைத்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப் மக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


‘2.O’ திரைப்படத்தை பார்வையிட விடுமுறை அறிவித்த பிரபல நிறுவனம்!

லைகா புரடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை பொட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,ஒரு பிரபல நிறுவனம் ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் – அக்ஷய் குமார் – எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ திரைப்படம் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’ திரைப்படம் முழுக்க முழுக்க 3டி-யில் 4டி சத்தத்துடன் வெளியாகி திரையரங்குகளை அதிரவைததுக் கொண்டுயிருக்கின்றது. இந்தநிலையில், ரசிகர்கள் திருவிழா போல  ‘2.O’ திரைப்படத்தை கண்டுகளித்து கொண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள். ‘2.O’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் நிலையில்,   திரைப்படத்தை இன்று எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று  ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள் . ‘2.O’ திரைப்படத்தை பார்க்கும் முனைப்பில்,மேலும் படிக்க…


கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார் சோனியா காந்தி

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 16 ஆம் திகதி கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க சோனியா காந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த நவம்பர் 11 ஆம் திகதி முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு அனுப்பிய பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


யாழிலிருந்து பயணித்த பேருந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். நாத்தாண்டியா, ஹமில்டன் கால்வாயில் குறித்த சொகுசு பேருந்து இன்று (வியாழக்கிழமை) விபத்திற்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்தனர். அவர்களில் மூவர் பெண்களாவர். மேலும் 20 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தீர்மானங்களை எடுப்பதே ஜனநாயகம் – மஹிந்த

சிறுபான்மையை கொண்ட தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை எடுப்பதே உண்மையான ஜனநாயகம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலி மாவட்ட தேர்தல்கள் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். யாழில் தமிழ் மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையை கொண்டிருப்பதால் அங்கு சிங்கள மொழி பேசுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. அதேபோன்று ஹம்பாந்தோட்டையில் சிங்களம் பேசுவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.


நாளை போராட்டத்துக்காக டெல்லியில் ஒன்றிணையும் விவசாயிகள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து, டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர். விவசாய பொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்குதல், தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்தல், அனைத்து நதிகளையும் இணைத்தல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி சென்றுள்ள தமிழக விவசாயிகள், டெல்லி ரயில் நிலையத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் இன்று ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த ரயிலை மறித்த அவர்கள் தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். பின்னர் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து ராம்லீலா மைதானம் வரையில், மண்டை ஓடுகள், எலும்புகளுடன் ஊர்வலமாகச் சென்றனர்.


நீதிமன்றத்தில் எந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் – விமல்

நீதிமன்றத்தில் எந்த தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம் என வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வினைப் புறக்கணித்த, அரசாங்க தரப்பின்னர் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் வைத்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றில் கத்திக் கொண்டுவருகிறார்கள். அதை பற்றி எவரும் கதைக்கவில்லை. நிலையியல் கட்டளைகளை மீறுகிறார்கள். அதைப்பற்றிக் கதைக்கவில்லை. இப்போது நாம் நீதிமன்றத் தீர்ப்பைத்தான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் உயர்நீதிமன்றத்தை மதிக்கிறவர்கள். செங்கோலை வைத்துக்கொண்டு இவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான நிலையில், நீதிமன்றத்தில் எந்த தீர்ப்பு வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம். 26 ஆம் திகதி நாம் மக்களுக்கான பயணத்தை ஆரம்பித்தோம். மக்கள் எமக்கான ஒத்துழைப்புக்களை தந்துக்கொண்டிருக்க வேண்டும்.” என கூறினார்.


சபாநாயகர் சர்வாதிகாரமாக செயற்பட்டுள்ளார் – நிமல்

சபாநாயகர், தெரிவுக்குழுவை சட்டவிரோதமாக தெரிவு செய்துள்ளார் என்றும், இந்த விடயத்தில் அவர் சர்வாதிகாரமாக செயற்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் செயலாளர் நாட்டின் நிதியைப் பயன்படுத்துவதை இரத்து செய்யும் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சபாநாயகர், தெரிவுக்குழுவை சட்டவிரோதமாக தெரிவு செய்திருந்தார். அவர் சர்வாதிகாரமாக செயற்பட்டுள்ளார். அவர் தனக்கு இல்லாத அதிகாரத்தை கைப்பற்றவே இவ்வாறான செயற்றிட்டங்களை மேற்கொள்கிறார். சிறிக்கொத்தவை போல நாடாளுமன்றத்தை மாற்ற அவர் முயற்சிக்கிறார். இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனாலேயே நாம் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கிறோம். அவர் தொடர்ச்சியாக அரசமைப்பையும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறும் வகையிலேயே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார். உலகில் எந்தவொரு சபாநாயகரும் இவ்வாறு செயற்பட்டதில்லை. இது இலங்கை வரலாற்றில் பதியப்படும்.” என தெரிவித்துள்ளார்.


சுவீடன் நாட்டில் கட்டிடம் மீது மோதிய ஏர் இந்தியா விமானம் – 179 பயணிகள் உயிர் தப்பினர்

சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக 179 பயணிகள் உயிர் தப்பினர். சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 179 பயணிகள் மற்றும் 6 விமான பணிப்பெண்கள் இருந்தனர். விமானம் 5-வது டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்டது. பிறகு அந்த விமானத்தை சற்று வேகமாக விமானி இயக்கினார். அப்போது விமானம் சற்று விலகி ஓட ஆரம்பித்தது. அருகில் இருந்த கட்டிடத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கை மோதியது. இதனால் விமானம் குலுங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானி அந்த விமானத்தை உடனடியாக நிறுத்தி விட்டார். இதனால் விமானத்தில் இருந்து 179 பயணிகளும் உயிர் தப்பினார்கள். விமானம் சற்று தடம்மேலும் படிக்க…


புயல் நிவாரணத்துக்கு கேரளா ரூ.10 கோடி உதவி- கமல்ஹாசன் நன்றி

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 கோடி அளித்துள்ள கேரள முதல்- மந்திரி பினராய் விஜயனுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடிதம் எழுதினார். இந்த நிலையில் கஜா புயல் பாதிப்புக்கு கேரள அரசு ரூ.10 கோடி நிதி உதவி வழங்குகிறது. இது தொடர்பாக முதல்- மந்திரி பினராய் விஜயன் தலைமையில் நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பினராய் விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டுக்கு கேரளா துணையாக இருக்கும். கஜா புயல் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவுவதற்காக கேரள அரசு சார்பில் ஏற்கனவே 14 வாகனங்களில்மேலும் படிக்க…


சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்

முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இத்தொடரில் நேற்று இரசிகர்களை மகிழ்வித்த நான்கு முக்கிய போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்க்கலாம்… வெம்ப்லே விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், டோட்டன்ஹாம் அணியும், இண்டர் மிலான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டோட்டன்ஹாம்  அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் போது, டோட்டன்ஹாம் அணியின் வீரரான கிறிஸ்டியன் எரிக்ஸன் 80ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………… பிலிப் விளையாட்டரங்கில் நடைபெற்ற இன்னொரு போட்டியில், பார்சிலோனா அணியும், பி.எஸ்.வி. என்தோவன் அணியும் மோதிக் கொண்டன. இரசிகர்களுக்கு உச்சக்கட்ட பரபரப்பை கொடுத்த இப்போட்டியில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் பார்சிலோனா அணி சார்பில், அணியின் நட்சத்திர வீரரான லியோனல்மேலும் படிக்க…


சட்டரீதியாக கொள்வனவு செய்யப்பட்ட துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில் விற்பனை!

சட்டபூர்வமாக கொள்வனவு செய்யப்பட்ட கைத்துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பில் கல்கரி நபரொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார். 26 வயதுடைய பிலிப் எட்வர்ட் சரசின் என்பவரே ஆயுத கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 2016ஆம் ஆண்டு சட்டபூர்வமாகக் கொள்வனவு செய்யப்பட்ட ஏழு கைத்துப்பாக்கிகளில் மூன்று துப்பாக்கிகள் பொலிஸ் விசாரணைகளின்போது கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது ஒரு துப்பாக்கி கல்கரி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. மற்றுமொரு துப்பாக்கி கனேடிய பசுபிக் ரயில்வே அதிகாரிகளினால் கடந்த டிசம்பர் மாதம் கைப்பற்றப்பட்டிருந்தது. இதேவேளை, மூன்றாவது கைத்துப்பாக்கி போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்யும் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


ரஷ்யா – உக்ரேன் நெருக்கடி: நேட்டோவிடம் உதவி!

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான முறுகல் வலுப்பெற்றுள்ள நிலையில், அதற்க உதவுமாறு நேட்டோ உறுப்பு நாடுகளிடம் உக்ரேன் கோரிக்கை விடுத்துள்ளது. அசோவ் கருங்கடற்பகுதியில் உக்ரேனிய கப்பல்கள் அத்துமீறியதாக தெரிவிக்கப்பட்டு, அவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், அசோவ் கடற்பகுதிக்கு கடற்படை கப்பல்களை அனுப்பி, தமது நாட்டு கப்பல்களை மீட்க உதவுமாறு உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ கோரியுள்ளார். அசோவ் கடற்பகுதியை முற்றுமுழுதாக கைப்பற்றுவதற்கு ரஷ்ய ஜனாதிபதி முனைவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். உக்ரேனுக்குச் சொந்தமான மூன்று கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதோடு, கப்பல் பணியாளர்களை சிறைப்பிடித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்றும், ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும ஐக்கிய நாடுகளை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஆர்ஜன்டீனாவை சென்றடைந்தார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் ஆர்ஜன்டீன தலைநகரை சென்றடைந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) தலைநகரை சென்றடைந்த ஜனாதிபதி மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜிட் மக்ரோன் ஆகியோரை ஆர்ஜன்டீன துணை ஜனாதிபதி கெப்ரியல் மிச்செட்டி வரவேற்றார். இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகள் ஐரோப்பிய பங்காளிகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மக்ரோன் குற்றம்சாட்டியுள்ளார். ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ள நிலையில், அங்கு ட்ரம்பின் கொள்கைகள் குறித்து மக்ரோன் அதிருப்தி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


நாடு பின்னடைவை எதிர்நோக்கும்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை

உடன்பாடற்ற பிரெக்சிற்றினால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நாடு எதிர்நோக்கிய நிதி நெருக்கடியை விட மிக மோசமான பின்னடைவை எதிர்நோக்க நேரிடும் என, இங்கிலாந்து வங்கி எச்சரித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பொருளாதாரம் உடனடியாக 8 வீதத்தினால் வீழ்ச்சியடைவது மாத்திரமின்றி, வீடுகளின் விலைகளும் வீழ்ச்சிக்காணும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிரெக்சிற் எந்தவகையிலும் நாட்டிற்கு மோசமானதாகவே அமையும் என திரைசேறி திணைக்களம் அறிவித்திருந்த நிலையிலேயே இங்கிலாந்து வங்கியின் இந்த ஆய்வு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறிய பின்னரான ஐந்து வருட காலப்பகுதியின் பார்வையின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 2023ஆம் ஆண்டின் இறுதியுடன் நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிரெக்சிற் வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு தொழிற்கட்சி அழைப்பு

நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சி அல்லது பொதுத் தேர்தலை தூண்டும் முயற்சி தோல்வியடைந்தால், மற்றுமொரு பிரெக்சிற் வாக்கெடுப்பை நடத்துவதே அடுத்த தெரிவாகும் என, தொழிற்கட்சியின் நிதிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மற்றுமொரு வாக்கெடுப்பு தவிர்க்க முடியாததா என, ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு நேற்று (புதன்கிழமை) பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தை நாம் விரும்புகிறோம். அதனை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு முடியாத பட்சத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், சட்டரீதியில் அது கடினமானதாகும். எனவே, அதுவும் சாத்தியமற்ற நிலையில் பொது வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.


ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க 25 நிபந்தனைகளுடன் பரிந்துரை!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க 25 நிபந்தனைகள் விதிக்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ள முக்கிய நிபந்தனைகள், “ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலை வளாகம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரில் ஆர்சீனிக், காட்மியம், வெள்ளி, தாமிரம், ப்ளூரைடு ஆகியவை அடங்கியுள்ளனவா என்பதை ஆய்வு செய்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மாதம் ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான சோதனை மாதிரிகளை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் எடுக்க வேண்டும். ஆலையில் வெளியேறும் திடக்கழிவுகளை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைக்க வேண்டும். இந்தமேலும் படிக்க…


பா.ஜ.க இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும் – மம்தா பானர்ஜி!

பா.ஜ.க இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்குமென்று மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சிததுள்ளார். மேற்குவங்க மாநிலம், பலராம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, “ஆளுநர் அலுவலகம் முதல் பிரதமர் அலுவலகம் வரை அனைத்திலும் தனது ஆதரவாளர்களை பா.ஜ.க பணியில் நியமித்துள்ளது. எனவே, இந்தியாவை விட்டு பா.ஜ.க வெளியேற வேண்டும். அக்கட்சி இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும். மேற்குவங்கத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜக வெற்றிபெற்றது. ஆனால் அடுத்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சியால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாது. மத்தியப் பிரதேச தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியுடன், மேற்குவங்கத்தில் பா.ஜ.க தடம்பதிக்க முயற்சிக்கிறது” என்று கூறினார்.


ரணில் ஒருவரே பிரதமர் பதவிக்கு தகுதியானவர்: ஐ.தே.க. குழுக் கூட்டத்தில் தீர்மானம்

மிக நீண்டகாலமாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருவரே நாட்டின் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஒருபோதும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஒரு தனிநபரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக நாட்டின் அரசியலமைப்பை மீற முடியாது என்ற ஒருமித்த கருத்தையும் நேற்றைய கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


மஹிந்தவிற்கும் பெருந்தோட்ட நிறுவன உரிமையாளர் களுக்கும் இடையில் கலந்துரையாடல்

பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஸபக்ஷவிற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களது உரிமையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. தங்களது நாளாந்த வறுமானத்தை 1000 ரூபாவாக அதிகரித்து தரும்படி பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அதற்காக பல இடங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத்தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர். எனினும் 600 ரூபாய்க்கு அதிகமாக நாளாந்த சம்பளத்தை அதிகரிக்க முடியாதென பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளம் தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களது உரிமையாளர்களை பிரதமர் மஹிந்த ராஸபக்ஷ. சந்தித்து கலந்துரையாடவுள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளம் தொடர்பில் தான் பெருந்தோட்ட நிறுவனங்களது உரிமையாளர்களுடன் உரையாடுவதாக பிரதமர் மஹிந்த ராஸபக்ஷ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன்மேலும் படிக்க…


ஜனநாயகத்தை நிலைநிறுத்த ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை: விஜேதாச ராஜபக்ஷ

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பநிலை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில், அதனை தீர்க்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளுந்தரப்பின் சார்பில் இன்று (வியாழக்கிழமை) விஜேதாச ராஜபக்ஷ மாத்திரம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார். அதன்போது ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்- ”கடந்தகாலத்தில் பொறுப்புக்கூறவேண்டிய அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற சிந்தனையால் 3 தசாப்தால யுத்தத்தை நாடு எதிர்கொண்டது. இலங்கை பிரஜைகள் 60000 பேர் உயிரிழந்தனர். 27 ஆயிரம் படையினர் உயிர்நீத்தனர். அதனை மீண்டும் ஏற்படுத்தாத வகையில் அனைவரும் செயற்பட வேண்டும். நல்லாட்சியில் பல விடயங்கள் சுயாதீனப்படுத்தப்பட்டன. நாடு புதிய பாதையில் செல்லுமென்ற நம்பிக்கையில் வாக்களிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நல்லாட்சி சிறந்த முறையில் சென்றது. எனினும், பொறுமையுடன் ஆட்சிநடத்துவதற்கான சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கும் ஐ.தே.க. தலைவர் ரணிலுக்கும் கிடைக்கவில்லை. அவர்கள் அதில் தோல்விகண்டனர். நாட்டில்மேலும் படிக்க…


சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

பல்வேறுப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (வியாழக்கிழமை)  மீண்டும் கூடவுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் செயலாளரின் நிதி உரிமையை சவாலுக்கு உட்படுத்தும் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் இன்றைய அமர்வின் போது  சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது . முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வௌியிட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தினால் நவம்பர் 13ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் 14, 15,மேலும் படிக்க…


‘2.o’ திரைப்படம் வெளியீடு- பிரம்மாண்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

லைகா புரடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’ திரைப்படம், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ‘2.0’ திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் அதிகாலையிலேயே குவிந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை பார்த்து, ரசித்து வருகிறார்கள். தமிழகத்தில் சுமார் 625 திரையரங்குகளிலும் உலகம் முழுவதிலும் 10 ஆயிரம் திரையரங்குகளிலும் ‘2.O’ இத்திரைப்படம் வெளியானது. திரைப்படத்தின் முதல்காட்சிக்காக ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர். ‘2.O’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து டுவிட்டரில் பல்வேறு ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ‘2.O’ திரைப்படத்தில் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். ரஜினிகாந்த் ரோபோ மற்றும் விஞ்ஞானி ஆகிய இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் 500 கோடிக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட மிகப் பிரம்மாண்ட திரைப்படம் இதுவாகும்.  மிக அதிகப்படியான தொழில்நுட்பங்களும், ஹொலிவுட் தரத்துக்குமேலும் படிக்க…


“ தியாகத்தின் மறவன்” (திலீபனின் பிறந்தநாளுக்கான நினைவுக்கவி)

கார்கால கார்த்திகை இருபத்தி ஒன்பதில் மாண்புமிக்க மாவீரர் மாதமதில் பாரெல்லாம் புகழ ஊரெழுவில் உதித்தானே பார்த்தீபன் உன்னத தியாகத்தால் – இன்று தியாகத்தின் மறவனாய் உலகமே போற்றுதே ! விடுதலைத் தீக்காக பசித்தீயை ஒறுத்தான் பட்டினியாய் கிடந்தான் பன்னிருநாள் யாகத்தில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து தியாகத்தின் உச்சத்தையும் வென்றானே ! தியாகத்தின் உச்சத்தை வென்றவனே அகிம்சையின் ஆதிக்க நாயகனே தியாகத்திற்கு வரைவிலக்கணமானவனே தியாகத்திற்கு புது வேதம் எழுதியவனே மகா யாகத்தின் வேள்வியையும் மிஞ்சியதே உன் தியாகம் ! மக்கள் புரட்சிக்கு வித்திட்ட தியாகத்தின் மறவனே பன்னிருநாள் யாகத்தில் உன் தியாகம் வென்றதுவே மகா யாகத்திலும் உன்னதமானது உன் தியாகமே உன் கனவும் பலிக்கட்டும் உன் இலட்சியமும் நிறைவேறட்டும் ! கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A) 29 .11.2018


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !