Tuesday, November 27th, 2018

 

அணுசக்தி பயன்பாட்டை 50 வீதம் குறைப்போம்: பிரான்ஸ் ஜனாதிபதி

சக்திவள உற்பத்தியில் அணுசக்தியின் பங்களிப்பை பிரான்ஸ் 50 வீதத்தால் குறைக்குமென அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். எனினும், தமது தற்போதைய ஆட்சிக்காலத்திற்குள், அதாவது எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இரண்டு அணு உலைகளை மாத்திரமே மூட முடியுமென குறிப்பிட்டுள்ளார். தேசிய ஆற்றல் மூலோபாயம் தொடர்பாக ஜனாதிபதி மக்ரோன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொலைக்காட்சி செவ்வியொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக 2035 ஆம் ஆண்டுக்குள் தமது இலக்கை அடையலாம் என்றும் ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார். பிரான்ஸின் பொருளாதார மற்றும் நட்பு நாடான ஜேர்மனி அணுசக்தியை முற்றாக கைவிட முயற்சித்து வருகின்ற போதும், தமது நாடு முற்றாக கைவிடும் எண்ணம் கிடையாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அணுசக்தியை முற்றாக கைவிடும் வாக்குறுதியில் தாம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லையென்றும், எவ்வாறாறினும் தற்போது 75 வீத பயன்பாட்டில் காணப்படும் அணுசக்தியை 50 வீதமாக குறைக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.மேலும் படிக்க…


உலகெங்கும் தினசரி 137பெண்கள் கொலை : ஐ.நா தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலர்கள் வெளியிட்ட புதியதரவுகளின்படி உலகெங்கிலும் தினமும் சராசரியாக 137பெண்கள் அவர்களது வாழ்க்கைத்துணைவராலோ அல்லது நெருங்கிய குடும்பஉறுப்பினர்களாலோ கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில்தான் பெண்கள் பெரும்பாலும் கொலை செய்யப்படுவதாகவும் அவர்களின் வீடே அவர்களுக்கான மிகவும் அபாயகரமான இடமாக விளங்குவதாகவும் இவ்வலுவலகம் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 87ஆயிரம் பெண்களில் அரைவாசிப்பகுதியினர் அவர்களுக்கு நெருக்கமானவர்களாலேயே கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30ஆயிரம் பெண்கள், அவர்களின் வாழ்க்கைத்துணைவராலும் சுமார் 20ஆயிரம் பெண்கள் அவர்களின் உறவினராலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் இப்புள்ளிவிவர அறிக்கையானது ஒவ்வொருநாடுகளின் அரசாங்கங்களிடமிருந்தும் பெறப்பட்ட மூலாதாரங்களைக் கொண்டே கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அகதிகள் உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அகதிகள் 2 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர். கஜா புயலால் தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கை அகதிகளும் அம்மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளனர். யுத்தக்காலத்தில் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருகைதந்த 300 ஈழத் தமிழர் குடும்பங்கள் பொள்ளாச்சி, ஆழியாறில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இம்முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அரிசி, சர்க்கரை, பருப்பு, பிஸ்கெட், கொசுவர்த்தி, ரொட்டி, மெழுகுவர்த்தி, ஆடைகள், நாப்கின், டீத்தூள் உள்ளிட்ட பொருட்களை அனுப்பியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளதாவது,மேலும் படிக்க…


யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கான ஈகை சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் நினைவெழுச்சி நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர் மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் உறவினர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தமிழரசு கட்சியின் யாழ் அலுவலகத்தில் மாவீரர்கள் தின நிகழ்வு!

தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழரசு கட்சியின் யாழ் அலுவலகத்தில் மாவீரர்கள் தின நிகழ்வு நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர்மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின அஞ்சலி!

முல்லைத்தீவு – விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களுக்கு விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர்மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர். அத்தோடு முல்லைத்தீவு கடற்கரை மாவீரர் அஞ்சலி மற்றும் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம்மேலும் படிக்க…


தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அரசியல் யதார்த்தத்தை நன்கு ஆராய்ந்து பார்ப்பின் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழீழத் தாயகத்தின் மூச்சுக்காற்றெங்கும் நிறைந்திருக்கும் எம் விடுதலை நாயகர்களின் பெருநாள். தமிழீழ மக்களின் விடுதலைக்காய் வீரச்செருக்கோடு களமாடி மண்ணில் விதையாய் வீழ்ந்த எம் வீர மறவர்களை எம் மக்கள் தமது இதயக்கோவிலில் இருத்திப் பூசிக்கும் நன்னாள். தமிழீழ தேசத்தின் தேசிய எழுச்சியையும், சுதந்திர வேட்கையினையும் உலகறியச் செய்து தமிழர் தேசத்தின் மனச்சாட்சியாய் ஆழ வேரோடியிருக்கும் புனிதமேலும் படிக்க…


கார்த்திகை 27 !!! கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)

தமிழ்மானம் காத்த நாள் தன்மான மறவர்களின் நாள் தாயகக் கனவு நாள் தேசீயத்தின் உயிர்ப்பு நாள் தேசப் புதல்வர்களின் நாள் கார்த்திகை இருபத்தியேழு ! எம் இனத்தின் உயிர்ப்பு நாள் எம் ஆயுளுக்கும் இருப்பான நாள் சத்திய வேள்வியின் புனித நாள் நித்தியமான உத்தமர் நாள் வரலாற்றின் புனித நாள் வரலாறாகிய நாள் கார்த்திகை 27 ! காலத்தால் அழியாத காவிய நாள் காந்தள்கள் பூத்துக் குலுங்கிடும் நாள் கல்லறை தெய்வங்களுக்கு ஒளி ஏற்றும் நாள் மரணித்தும் மகுடம் சூடும் நாள் மறவர்களின் மகத்தான நாள் கார்த்திகை 27 ! புனிதர்களின் துயிலும் இல்லமெல்லாம் புனிதமாகும் புனித நாள் புது நானூறு படைத்த நாள் பேதம் இன்றியே ஒளியேற்றும் நாள் ஊரே ஒன்றுகூடித் தொழுதிடும் நாள் உறவுகள் எல்லாம் ஒன்றுகூடும் நாள் உன்னதர்களை நினைத்திடும் நாள் கார்த்திகைமேலும் படிக்க…


ஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீன ஜனாதிபதி ஆர்ஜன்டீனா விஜயம்

ஆர்ஜன்டீனாவில் நடைபெறவுள்ள பதின்மூன்றாவது ஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் பீஜிங்கிலிருந்து புறப்பட்டுள்ளார். ஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான ஆர்ஜன்டீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சீன ஜனாதிபதி இன்று (செவ்வாய்க்கிழமை) புறப்பட்டு சென்றுள்ளார். இதேவேளை, ஸ்பெயின், பனாமா மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளுக்கும் சீன ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த நாடுகளுக்கான சீன ஜனாதிபதியின் விஜயத்தில், அவரது பாரியார் பெங் லியுன் உள்ளிட்ட அரசியல் பிரிவு உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர். சீன ஜனாதிபதியின் இந்த உத்தியோகப்பூர்வ விஜயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ராஜீவ் கொலை – முன்விடுதலைக்கான விதிகள் இல்லையென மத்திய அரசு அறிவிப்பு

தண்டனைக் கைதிகளின் விடுதலைக் குறித்து பரிசீலிக்க, எந்த சட்டவிதிகளும் மத்திய அரசிடம் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பேரறிவாளன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை வழங்கியுள்ள பதிலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாக பேரறிவாளன் நளினி உள்ளிட்ட 7 பேர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலைச் செய்யக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சட்டப்பிரிவு 161 இன்படி, தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு, பேரறிவாளன் எழுப்பிய நான்கு கேள்விகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின் மத்திய உள்துறை பதில் வழங்கியுள்ளது. மத்திய அரசு விடுதலைச் செய்த தண்டனைக் கைதிகள் குறித்தும், இதற்காக மத்திய அரசு விதித்துள்ள, வகுத்துள்ள விதிகளின் நகல்கள் வழங்கவேண்டும் என்பதுமேலும் படிக்க…


சட்டரீதியிலான அரசாங்கம் இன்மையே ஸ்தம்பித நிலைக்கு காரணம் – சுவாமிநாதன்

நாட்டில் இன்று சட்டரீதியிலான அரசாங்கம் இல்லாத காரணத்தினால் தான் அண்மைக்காலமாக நாடே ஸ்தம்பித்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு கூடிய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “நாட்டில் இன்று சட்டரீதியிலான அரசாங்கம் இல்லை. இந்த நெருக்கடியால் கடந்த சில வாரங்களாக நாடே ஸ்தம்பித்துள்ளது. அத்தோடு எந்தவொரு பிரேரணையும் நிறைவேற்றப்படவில்லை. டொலர் விலை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி இதுவிடயத்தில் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஜனநாயகத்தை நிலைநாட்ட அவர் செயற்பட வேண்டும்.” என தெரிவித்தார்.


கண்ணீரில் கரைந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

உறவினர்களின் கண்ணீர் மாவீரர்களின் நினைவுக்கற்களை நனைக்க, கனகபுரம் மாவீரர் துயலும் இல்லத்தில் மாவீரர் நினைவுதினம் மிகவும் உணர்வுபூர்வாக அனுஷ்டிக்கப்பட்டது. தமது பிள்ளைகளை நினைவுகூர்ந்து மண்ணில் புரண்டு தாய்மார் கதறியழ, தீபம் ஏற்றி மாவீரர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. மாலை சரியாக 6.05இற்கு மணி ஒலிக்க, பிரதான சுடரை மாவீரரான பிரிகேடியர் தீபனின் தந்தை ஏற்றிவைத்தார். அதன் பின்னர் ஏனைய மாவீரர்களின் உறவினர்கள் தீபம் ஏற்றி, அகவணக்கம் செலுத்தினர். இதில் இருபத்தைந்து ஆயிரத்திற்கு அதிகமான மாவீரர்களின் உறவினர்கள் கலந்துகொண்டிருந்தனர். கனகபுரம் துயிலும் இல்லத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு! தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. மாவீரர்களின் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில், தமிழீழ உணர்ச்சிப்பாடல்கள் ஒலிக்க மிகவும் உணர்வுபூர்வமாக குறித்த நினைவேந்தல் நிகழ்வுமேலும் படிக்க…


மாவீரர் தினம்: குமரப்பா நினைவிடத்தில் பொலிஸார் கெடுபிடி

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் அமைந்துள்ள லெப்.கேர்ணல் குமரப்பா புலேந்திரனின் நினைவுத்தூபி அருகே, பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த லெப்.கேர்ணல் குமரப்பாவின் நினைவிடத்தில், மாவீரர் தின நிகழ்வுக்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு நிகழ்விற்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன குறிப்பாக பிரத்தியேக கொடிகளை காட்சிப்படுத்த வேண்டாம் என்றும், ஈழப்புரட்சிப் பாடல்களை ஒளிப்பரப்ப வேண்டாம் என்றும் பொலிஸார் கூறிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


வனவிலங்குகளின் உடற்பாகங்களை எடுத்துச்செல்வதை தடுக்குமாறு கோரிக்கை

கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் இரண்டு தொன் யானைத்தந்தங்களை வேட்டையாளர்கள் மிகஇலகுவாக இங்கிலாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக விலங்குகளுக்கான உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. முதலைகள், சிங்கங்கள் மற்றும் காண்டாமிருகங்கள் போன்ற பேரழிவிலிருக்கும் விலங்குகளின் சுமார் 400 உடற்பாகங்கள் வேட்டைகளின் வெற்றிச்சின்னமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வேட்டைக்காரர்கள் நூற்றுக்கணக்கான யானைகள், காண்டாமிருகங்கள், சிறுத்தைப்புலிகள், வரிக்குதிரைகள் மற்றும் சிங்கங்களைக் வேட்டையாடியுள்ளார்கள். அதன் பின்னர் கொல்லப்பட்ட விலங்குகளின் உடற்பாகங்களை வெற்றிச்சின்னமாக அவர்கள் இங்கிலாந்துக்குள் கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் சுமார் 2,500 உடற்பாகங்கள் வெற்றிச்சின்னங்களாக இங்கிலாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் இவற்றில் பேரழிவிலிருக்கும் 400 விலங்குகளின் உடற்பாகங்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இத்தகைய வேட்டைகள் பேரழிவு அச்சுறுத்தல் உள்ள விலங்கினங்கள் அழிவின் விளிம்பிற்கு கொண்டுசெல்லப்படுவதற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் வனவிலங்கு உடற்பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்கவேண்டுமெனவும் விலங்குகளுக்கான உரிமைகள்குழு தெரிவித்துள்ளது.


எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு: பிரான்ஸ் நிதியமைச்சர்

எரிபொருள் விலை உயர்விற்கு எதிரான சமீபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக,பிரான்ஸ் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மஞ்சள் சட்டை போராட்டக்காரர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது வாரமாக தொடர்ந்து வருகின்ற நிலையில், பிரான்ஸ் நிதியமைச்சர் நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த நிதியமைச்சர், ”சமீபத்திய சம்பவங்கள் தேசிய பொருளாதார நடவடிக்கைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17ஆம் திகதி 35 வீதமாகக் காணப்பட்ட வருவாய், படிப்படியாக குறைவடைந்து 24ஆம் திகதி 18 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இது நம் நாட்டின் கௌரவத்தையும் பேரழிவுக்குள்ளாக்கியுள்ளது ”எனத் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்திலிருந்து பின்வாங்குவதற்கான எவ்வித அறிகுறிகளும் அரசாங்கத்தில் தென்படாத நிலையில், எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து சுமார் 20 ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் சட்டை போராட்டத்தை ஆரம்பித்தனர். போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தி முன்னெடுக்கப்பட்டுமேலும் படிக்க…


ஒஸ்ரிய ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு: 100,000 பயணிகள் பாதிப்பு!

ஒஸ்ரியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் சுமார் 100,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழியர்களின் வேதன உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (திங்கட்கிழமை) குறித்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, ஹங்கேரி மற்றும் செக் குடியரசிற்கான முக்கிய ரயில்வே மத்திய வழியாக ஒஸ்ரியா திகழ்கின்றது. இந்நிலையில், குறித்த ரயில்வே போராட்டம் ஐரோப்பிய நாட்டு பயணிகளை வெகுவாக பாதித்துள்ளது. அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டமாகவே இது அமைந்துள்ளதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படுமென ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.


பிரெக்சிற் ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் பிரதமர் மே

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்ட பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரதமர் தெரேசா மே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நேற்று (திங்கட்கிழமை) பிரெக்சிற் ஒப்பந்தத்தை கையளித்த பிரதமர், இது எதிர்வரும் மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் சுமூகமான மற்றும் முறையான வெளியேற்றத்தை உறுதிபடுத்தும் எனத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், ”ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் பிரஸ்சல்ஸ் ஐரோப்பிய கவுன்சிலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்துடன் எமது தேசிய நலனை மையமாகக் கொண்ட எதிர்கால உறவு குறித்த அரசியல் பிரகடனமும் இணைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மக்களின் ஜனநாயக முடிவுகளை எடுத்துக்காட்டுகின்ற வகையிலான இந்த ஒப்பந்தமே பிரித்தானியாவிற்கான சரியான ஒப்பந்தமாகக் நான் கருதுகிறேன். இந்த ஒப்பந்தமானது அதன் எல்லைகள், சட்டங்கள் மற்றும் பணத்தின் மீதான கட்டுப்பாடுகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் பிரித்தானியாவிற்கு உதவும்”மேலும் படிக்க…


ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலானது – நித்யா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவரின் கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலானது என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். பிரியதர்ஷினி இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது நமக்கு பொறுப்பு தேவை சாதாரணமாக நடித்துவிட முடியாது. படத்தில் எந்த இடத்திலும் நித்யா மேனன் தெரியக்கூடாது. அந்த பொறுப்பும் கடமையும் இயக்குனருக்கு மட்டுமல்ல நடிக்கும் நடிகைகளுக்கும் அந்த பொறுப்பும் கடமையும் இருக்க வேண்டும். இயக்குனர் பிரியதர்ஷினி கதையை சொல்லும்போதே அவரது அர்ப்பணிப்பு புரிந்துவிட்டது. அதனால்தான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். உடலளவிலும் மனதளவிலும் ஜெயலலிதாவாக நான் மாற வேண்டியிருக்கிறது. அவரது முழு வாழ்க்கையையும் திரைக்கு கொண்டு வர இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


சுயக்கட்டுப்பாடு தொடர்பில் மோடிக்கு அறிவுரை: மன்மோகன் சிங்

நாட்டின் பிரதமராக இருக்கும் நீங்கள் சுயக்கட்டுப்பாடுடன் வார்த்தைகளை பிரயோகிப்பது சிறந்ததென பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியுள்ளார். டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் அரசியல் பேச்சுக்கள் மற்றும் சொல்லாடல்கள் மிகவும் கீழ்த்தரமாக பயன்படுத்தப்படுகின்றது. அந்தவகையில் பிரதமர் மோடி, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும்போது, ஏனைய சாதாரணவர்களை போன்று தரம் தாழ்ந்த பேச்சுக்களை பேசுவது சிறந்தல்ல. அவர் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பிரதமர் என்பதை மனதில் நிறுத்தி உரையாற்றுவதுடன் சேவைகளையும் வழங்க வேண்டும். மேலும் பிரதமர் ஒருவரின் நடத்தை மதிப்பு மிக்கதாகவும் அதற்குரிய முறையில் சீராகவும் இருக்க வேண்டும்” என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.


மாவீரர் தினத்தில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி

மாவீரர் நாளான இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவு யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கமைய நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றன. இதன்போது மாவீர்ரகளுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், மாவீரர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


மாவீரர் நினைவு தினம்: குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. எனினும், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு கடந்த அரசாங்கம் தடைவிதித்திருந்ததோடு, நல்லாட்சியிலும் அதே நிலைமை தொடர்கிறது. எனினும், ஆங்காங்கே இரகசியமாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்ததோடு, இம்முறை குறிப்பாக யாழ். பல்கலைக்கழகம், வடக்கு கிழக்கிலுள்ள துயிலுமில்லங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ‘மாவீரர்’ எனும் பெயரில் எவ்வித அஞ்சலி நிகழ்வுகளையும் நடத்தவிடமாட்டோம் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதோடு, புலிகளின் சின்னம் மற்றும் கொடிகளைமேலும் படிக்க…


அதிகரிக்கும் அரசியல் குழப்பம்: ஐ.நா. செயலர் இலங்கை விஜயம்?

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விடயம் தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் அரசியல் கட்சிகள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றன. அந்தவகையில், ஐ.நா. செயலர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் பிரதமர் மாற்றப்பட்டமை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை என அடுத்தடுத்து நடந்தேறிய விடயங்கள், உலக அரசியலிலும் பேசுபொருளாக மாறி வருகின்றன. அரசியல் யாப்பை மீறி இவ்விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென சர்வதேச நாடுகள் குறிப்பிட்டு வருவதோடு, அரசியல் யாப்பையும் சட்டம் ஒழுங்கையும் காக்கும் கடமை ஜனாதிபதிக்கு உண்டென வலியுறுத்தி வருகின்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலைகள் தொடர்பாகவும் அதிக கரிசனை வெளியிட்டன. இந்நிலையில், ஐ.நா. செயலரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.


இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 336 ரன்களும், இலங்கை அணி 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 230 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளும், சன்டகன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 17 ஓவர்களில்மேலும் படிக்க…


புயல் நிவாரணத்துக்கு உதவி செய்யுங்கள்- கேரள முதல்வருக்கு கமல்ஹாசன் கடிதம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரள அரசும், மக்களும் உதவ வேண்டும் என்று பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி, கேரள அரசினையும் மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அளித்திட முன் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வுகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும். கஜா புயலின் தாக்கத்தினால் எங்கள் மக்கள் இழந்திருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்களாகும். இருப்பினும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது சகோதரர்களின்மேலும் படிக்க…


ரஜினி, கமல் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை- விஜயசாந்தி அறிவுரை

ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் நிலைக்க கடின உழைப்பு தேவை என்று நடிகை விஜயசாந்தி அறிவுரை வழங்கியுள்ளார். நடிகை விஜயசாந்தி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவுக்கு சென்று வெற்றி பெற்றவர். 1980 களில் இருந்து 2005-ம் ஆண்டு வரை தென்னிந்திய படங்களில் ஆக்‌‌ஷன் கதாபாத்திரங்களிலும் நடித்து அதிரடி நாயகியாக வலம் வந்தார். தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கால்பதித்தவர் தற்போது அதில் மும்முரமாக இயங்கி வருகிறார். ஐதராபாத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை விஜயசாந்தியிடம் ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:- திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக உழைக்க வேண்டும். அதுவும் கடின உழைப்பு. அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல. நான் அரசியலுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தெலுங்கானாவுக்காகமேலும் படிக்க…


செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க செயற்கை கோள் தரை இறங்கியது – ‘நாசா’ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 1997-ம் ஆண்டு ‘நீர்’ ஆதாரத்தை கண்டறிய ‘யத்பைண்டர்’ என்ற விண்கலத்தை அனுப்பியது. 2003-ம் ஆண்டில் ‘பீகிள் 2’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. 2004-ம் ஆண்டில் ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது அங்கு தரை இறங்கி நீர் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தின் உள் பகுதியில் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள ‘இன்சைட்’ என்ற செயற்கைக் கோளை அனுப்பியுள்ளது. இது ரூ.7400 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. கடந்த மே 5-ந் தேதி அமெரிக்காவின்மேலும் படிக்க…


மக்களைக் கொடுத்த மகராசிகளின் கதை


மாவீரர் பாடல் 2018

பாடல் : பாடல் கேட்குதா இசை : S.S தில்லைச்சிவம் வரிகள் : வன்னியூர் குருஸ் குரல் : அம்மு & S. ஆரபி கிட்டார் : C.K தபேலா : பிரான்சுவா


கதைக்கொரு கானம் 22/11/2018

கௌதமன் இலங்கை


அரசியல் சமூக மேடை – 25/11/2018

புலம் பெயர்ந்த தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு தனது இனம் மொழி சார்ந்த தாயக உறவுகளின் வளர்ச்சி தொடர்பான அக்கறை இருக்க முடியுமா ? அல்லது புலம் பெயர்ந்த நாட்டுடன் ஆன உறவுடன் மட்டும் மட்டுப்படுத்தி கொள்வார்களா ?


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !