Saturday, October 27th, 2018

 

இன்று நள்ளிரவு முதல் நேர மாற்றம்

இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் பிரான்சில் நேரம் மாறுதலுக்கு உள்ளாக உள்ளது. குளிர் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், இன்று ஒக்டோபர் 27  ஆம் திகதி சனிக்கிழமையுடன் முடிவுக்கு வரும் ஆறுமாத காலம், நாளையில் இருந்து ஒரு மணிநேரம் தாமதமாக சுழல உள்ளது. இன்று நள்ளிரவு கடந்து 12:59 (A/M) மணிக்குப் பின்னர் 1:00என மாறுவதற்கு பதிலாக மீண்டும் 12:00 ( A.M) மணியாக மாற உள்ளது. அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு இந்த நேர மாற்றம் நடைமுறையில் உள்ளது. பிரான்சில் 1975 ஆம் ஆண்டில் இருந்து இந்த நேர மாற்றம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


ரணிலுடன் சீனத் தூதுவர் சந்திப்பு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் cheng xueyua, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பிரதமர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நேற்று நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றிருந்தார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கவுடனான இச்சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் சீனத் தூதுவர் cheng xueyua சந்திப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மகிந்தவுக்கு சீனா வாழ்த்து

புதிய பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு இலங்கைக்கான சீனத்தூதுவர் சாங் சுவான் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி நாளை விசேட உரை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவூட்டுவதற்காகவே இந்த உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன் வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவையின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டார்.


எத்தியோப்பியாவில் ராணுவ வாகனத்துடன் மினி பஸ் மோதிய விபத்தில் 18 பேர் பலி

எத்தியோப்பியா நாட்டின் அம்ஹாரா மாநிலத்தில் இன்று ராணுவ வாகனத்துடன் மினி பஸ் மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் சீரான பராமரிப்பு இல்லாத சாலைகள் மற்றும் ஓட்டுனர்களின் அஜாக்கிரதையால் சாலை விபத்துகள் பெருகி வருகின்றன. இந்நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அம்ஹாரா மாநிலத்தில் இன்று பயணிகள் சென்ற ஒரு மினி பஸ் எதிர்திசையில் வந்த ராணுவ வாகனத்துடன் நேருக்குநேராக மோதிய விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு – பலர் பலியாகி இருக்கலாம் என தகவல்

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அந்த வழிபாட்டு மையத்தில் நுழைந்தார். தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். இந்த  துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கலாம் எனவும், துப்பாக்கியால் சுட்டநபர் போலீசாரிடம் சரணடைந்துள்ளார் எனவும் முதல் கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர். பிட்ஸ்பர்க்கில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்,மேலும் படிக்க…


4 மணிக்கு முன்னர் அலரி மாளிகையை ஒப்படைக்கப் பணிப்பு!

இன்று 4 மணியாகும் போது அலரி மாளிகையை ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசு அறிவித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மான் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று மாலை இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமனம் பெற்றத்தைத் தொடர்ந்து, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தொடர்ந்தும் தங்கியிருக்க அனுமதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆப்பிள் மேக்கிங் நிகழ்வில் வெளியாகும் புதிய சாதனங்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது மிகப் பெரும் நிகழ்வு இம்மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2018ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக இந்த மிகப்பெரும் நிகழ்வினை ஏற்பாடு நெய்துள்ளது. குறித்த நிகழ்வு இம்மாதம் 30ம் திகதி நடைபெற இருக்கின்றது. இதன் இரண்டாவது விழா நியூ யோர்க் நகரின் புரூக்லின் அகாடமியில் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 போன்ற பல வடிவங்களை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஏற்பாடு செய்திருக்கும் புதிய விழாவின் தீம் ‘மேக்கிங்‘ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தவிழாவில் ஆப்பிள் நிறுவனம் தொழில் செய்வோருக்கு ஏற்ற புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட மேக் மினிமேலும் படிக்க…


நீங்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தை நீங்களே இல்லாமலாக்கிவிடாதீர்கள் – ராஜித வேண்டுகோள்

நீங்கள் வென்றெடுத்த ஜனநாயகத்தை நீங்களே இல்லாமலாக்கிவிடாதீர்கள் என்று ஜனாதிபதி மைத்திரியை நோக்கி    ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் பெற்றுக்கொண்ட ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் உரிமைகளை இல்லாமல் செய்துவிட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது செயற்பட்டுள்ள விதமானது நாட்டின் ஜனநாயத்திற்கு முற்றிலும் முரணானதென தெரிவித்துள்ள அவர், உடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமை தொடர்பில் கருத்து தெரிவித்த ராஜித, நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சியை ஏற்படுத்தினோம். இவ்வாறான ஒரு மோசமான நிலைமையை ஏற்படுத்துவதற்காக நாம் பாடுபடவில்லை என்றும் கூறினார். நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளதாக கேள்விப்பட்டோம். ஏன் பயப்படுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பிய  ராஜித, நாடாளுமன்றத்தை கூட்டாமல், நாடாளுமன்றத்தில் மறைத்து முன்னெடுக்கப்படும் சகலமேலும் படிக்க…


பிரதமரின் செயலாளர் பதவிநீக்கம்

பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க அந்த பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 51(1) இலக்க சரத்தின் படி அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை அரச தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக ஜனாதிபதியின் பதில் மேலதிக செயலாளர் நாலக கலுவேவ நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுப்படி உடனடி அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


சமூக ஊடகங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை பாராட்டிய ஒருவர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்!

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை பாராட்டி அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அகதி ஒருவரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஒத்மன் ஹெம்டன் என்ற நபரால் நாட்டின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் எழலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை இந்த முடிவுக்கு வந்துள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஐ,எஸ் அமைப்புக்கு ஆதரவு கருத்துகளை பதிவிட்டதாக கூறி ஜோர்தானில் குடியுரிமை பெற்ற ஒத்மன் அயீத் ஹெம்டன் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் போர்ட் செயின்ட் ஜானில் வைத்து கனேடிய அதிகாரிகள் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில், கனேடிய பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஹெம்டனால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை அவரை உடனடியாகமேலும் படிக்க…


சிரியா உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ரஷ்ய அதிபர்கள் இஸ்தான்புல் வருகை!

இஸ்தான்புல்லில் நடைபெறவுள்ள சிரியா தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 சர்வதேச நாடுகளின் தலைவர்கள் வருகை தந்துள்ளனர். இன்றைய தினம் (சனிக்கிழமை) ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல மக்ரோன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் துருக்கிக்கு விஜயம் செய்துள்ளனர். முன்னதாக துருக்கி ஜனாதிபதி தையுப் எர்டோகனின் அறிவிப்புக்கு இணங்க இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக ஜேர்மன் அரச துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார. நான்கு தரப்பு உச்சி மாநட்டின் போது ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளன. இதன்போது, இட்லிப் பகுதியின் நிலைமை மற்றும் ரஷ்யா – துருக்கி நாடுகளுக்கு இடையே சோச்சி உடன்பாட்டை செயல்படுத்துவதற்கு ஆதரவை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது. கிளர்ச்சியாளர்களால் மோதலின் போது சீர்குலைக்கப்பட்ட சிரியாவின் இட்லிப் மாகாணத்தை மீளமைத்தல் மற்றும்மேலும் படிக்க…


இலங்கையில் அரங்கேறியுள்ள அரசியல் மாற்றம் ஒட்டுமொத்த தமிழர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின்

இலங்கையில் அரங்கேறியிருக்கும் அரசியல் மாற்றங்கள் ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ, தமிழர்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை மத்திய அரசு செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவித்துவரும் ஏழ தமிழர் விடுதலை தள்ளிப் போவதும், இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா எனக் கேள்வியெழுப்பிய மு.க.ஸ்டாலின், தமிழர் நலனுக்கு ஊறு விளைவிக்கும் எத்தகைய செயல்பாடுகளையும் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ பா.ஜ.க. அரசு மேற்கொள்ளக் கூடாது என்றார். அத்தோடு, இலங்கையின் சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும், அறுதிப் பெரும்பான்மை இல்லாமலும் ராஜபக்ஷவை  பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனாவின் நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியது என்றார். இதேவேளை, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க,மேலும் படிக்க…


கஷோக்கியின் மரணம் வெறித்தனமான தேடுதலாக மாறியுள்ளது – சவுதி அமைச்சர்

சவுதி ஊடகவியலாளரின் மரணம் தற்போது வெறித்தனமான ஒரு தேடுதலாக மாறியுள்ளதாக சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சர் அடெல் அல்-ஜூபைர் தெரிவித்துள்ளார். பஹ்ரேனில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஜூபைர், ஊடகவியலாளர் கசோக்கியின் விவகாரம் அமெரிக்காவுக்கும் ரியாத்துக்கும் இடையிலான உறவில் இரும்புத்தாது பூசப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் – 2 ஆம் திகதி ஊடகவியலாளர் கஷோக்கி துருக்கியின் சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டமை இந்த சூழ்நிலையில் உலகளாவிய அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அத்துடன், மேற்குலகிற்கு சவுதி அரேபிய ராஜ்ஜியத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. இந்தநிலையில், சவுதியின் எதிர்வழக்கு தொடரப்படும் என்றும் அதற்கு சில கால அவகாசம் அவசியம் என்றும் வௌிவிவகார அமைச்சர் அடெல் அல்-ஜூபைர் கூறினார். இதேவேளை, இஸ்ரேல் – பாலஸ்தீனம் தொடர்பில் சவுதி அரேபியாவின் நிலைப்பாடு குறித்துமேலும் படிக்க…


இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்துள்ளதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது: அன்புமணி ராமதாஸ்

இலங்கையில் இனப்படுகொலை கூட்டாளிகள் ஒன்றுசேர்ந்திருப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்த போது, அவருக்கு இந்தியா வலிந்து சென்று உதவினாலும் அவர் சீனாவுக்கு மட்டுமே விசுவாசம் காட்டினார். அண்மையில் டெல்லி வந்து, இந்திய பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து விட்டுச்சென்ற ராஜபக்ஷ, சீனாவின் ஆதரவுடன் பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார். இது இலங்கையின் உள்விவகாரம் தான் என்றாலும், இந்த மாற்றம் இந்தியாவின் பாதுகாப்புச் சூழலையும், இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனையும் மிகக்கடுமையாக பாதிக்கும். ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின்மேலும் படிக்க…


ஜனாதிபதி மைத்திரியின் திடீர் மாற்றத்திற்கான காரணம் இதுவா?

சுமூகமாக சென்றுகொண்டிருந்த நல்லாட்சியில் யாருமே சற்றும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட அரசியல் பிரளயத்திற்கான காரணம் என்னவென்பதே பலரது கேள்வியாக உள்ளது. இதற்கான காரணத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல்கள் வெளியான பின்னர், அதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய அக்கறை தொடர்பாக ஜனாதிபதிக்கு பிரச்சினை காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார். கொலைசெய்ய திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதிக்கு சில தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும் நிமல் சிறிபால கூறினார். அதன் பின்னர் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருடன் இது தொடர்பாக கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயமேலும் படிக்க…


மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது: ஆனந்தசங்கரி

இலங்கையில் மாற்றமொன்று ஏற்பட வேண்டிய நேரம் வந்துள்ளதென்றும், அதன் பிரதிபலிப்புகளை பொறுத்திருந்தே பார்க்க வேண்டுமென்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை முதல் மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ஆனந்த சங்கரி, அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 1970ஆம் ஆண்டுமுதல் தான் மஹிந்தவின் நண்பர் என்றும் அந்தவகையில் வாழ்த்து தெரிவிப்பதற்காகவே கொழும்பு வந்ததாகவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் மாற்றமொன்று அவசியமென குறிப்பிட்டுள்ள ஆனந்த சங்கரி, புதிய ஆட்சியாளர்கள் அதனை நிறைவேற்றுவார்களென நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மீள்குடியேற்ற அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா?

மீள்குடியேற்றம், இந்துவிவகார மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து, இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இலங்கையின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது. அதில் குறிப்பாக ஐந்து முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் இன்று மாலை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் மீள்குடியேற்றம், இந்துசமய விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த பதவியை ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் வகித்து வந்திருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, பிரதமராக மஹிந்தவை நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்திமேலும் படிக்க…


ஐ.நா. பிரேரணையை அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் மஹிந்தவுக்கு ஆதரவு – கூட்டமைப்பு

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  இதனைத் தெரிவித்தார். அத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் செயற்படுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் கூட்டமைப்பு முன்வைப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், சிறுபான்மை கட்சிகள் தமது ஆதரவு குறித்து படிப்படியாக வெளிப்படுத்தி வருகின்றன. இதேவேளை, இலங்கையில் இறுதி யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமெனமேலும் படிக்க…


தோற்றிருந்தால் புதைகுழியில் இருந்திருப்பேன் என்ற மைத்திரி, மஹிந்தவுடன் சிரித்தபடி கைகோர்த்துள்ளார்!

தான் தோற்றிருந்தால் புதைகுழியில் இருந்திருப்பேன் என்ற ஜனாதிபதி மஹிந்தவுடன் சிரித்த முகத்துடன் கைகோர்த்துள்ளார் என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இலங்கையில் மாற்றத்தை எதிர்பார்த்து நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றிவிட்டாரென நாட்டின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், அதன் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ”எனது தந்தையை கொலைசெய்தவர்களுடன் இன்று ஆட்சியாளர்கள் கைகோர்த்துவிட்டனர் என்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது கவலையை வெளியிட்டுள்ளார். அத்துடன் ‘தான் தோற்றிருந்தால் இன்று புதைகுழியில் இருந்திருப்பேன்’ என அன்று குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று மஹிந்தவுடன் சிரித்த முகத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளார் என்றும் ஜனாதிபதியின் உண்மையான முகம் இன்றுதான் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். அத்துடன் இந்த விடயம் நாட்டிற்கு சிறந்தமேலும் படிக்க…


நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரச வளங்களுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன் :

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரச வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே மகிந்தவை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானியில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது. நாட்டில் இன்று இரண்டு விசேட வர்த்தமானிகள் வெளியிடப்படுள்ளன. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட வர்த்தமானியில், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் (42) 4 சரத்திற்கு அமைய, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருப்பதாகவும் தனது அதிகாரத்திற்கு அமைய, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரி அறிவித்துள்ளார்.


நெருக்கடியில் சவுதி – பத்திரிகையாளரின் மரண மர்மம் தீரும் வரை ஆயுதங்களை விற்க ஜெர்மனி மறுப்பு

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மங்கள் தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் அறிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை சமீபத்தில் சவுதி அரசு உறுதி செய்தது. இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் உடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள்மேலும் படிக்க…


இடைவிடாமல் அழுததால் பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்

புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது இடைவிடாமல் அழுததால் பெற்ற குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜென்னா போல்வெல் (19). இவருக்கு பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இருந்தது. அந்த குழந்தைக்கு ரெய்னர் என பெயரிட்டிருந்தனர். இந்த நிலையில் ஜென்னா போல்வெல் பரபரப்பாக போலீஸ் நிலையம் வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர் என அழுது கொண்டே புகார் செய்தார். அதை உண்மை என நம்பிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ஜென்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் தனது குழந்தையை குளியல் தொட்டியில் தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாகமேலும் படிக்க…


ஒபாமா உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு அனுப்பிய நபர் கைது – 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிளாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர். இவர்கள் மட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகருக்கும் இதுபோன்ற தபால்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரமாக தேடுதல் வேட்டையை துவங்கிய போலீசார், 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்துள்ளனர். வெடிகுண்டு பார்சல் ஒன்றில் இருந்த இவரது கைரேகையை வைத்துமேலும் படிக்க…


வீட்டில் கொள்ளையர்கள் புகுந்ததால் உரிமையாளர் யன்னல் வழியாக பாய்ந்து உயிரிழப்பு!

வடக்கு லண்டனில் கெம்டன் பகுதியில் உள்ள மாடி வீடொன்றிற்குள் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்ததை அடுத்து, வீட்டில் இருந்த நபர் ஒருவர் மூன்றாம் மாடியின் யன்னல் வழியாக வௌியே பாய்ந்து உயிரிழந்துள்ளார். 49 வயதான ஷெய்கு அடம்ஸ் என்பவர் பிரித்தானிய நேரப்படி வியாழக்கிழமை 23:56 அளவில் மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். ஆயுதம் ஏந்திய இரண்டு பேர் அவரை பலவந்தப்படுத்தியதன் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.


மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வேன்: சுப்ரமணியன் சுவாமி

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு பதவியேற்றுள்ள நிலையில், அவரை டுவிட்டர் மூலம் தனது நண்பன் எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்த, இந்தியாவின் பிரதான கட்சியான பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி , விரைவில் தான் இலங்கைக்கு (கொழும்பு) வருகை தரவுள்ளதாக அறிவித்துள்ளார். சுப்ரமணியன் சுவாமி  இன்று (சனிக்கிழமை), வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். தொலைபேசி மூலம் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளேன். என்னுடன்  பேசிய அவர், இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர்களுடன் கலந்தாலோசித்து தகுந்த தீர்வை எடுக்கப் போவதாக கூறியுள்ளார். மிக விரைவில் இலங்கைக்கு செல்லும் நான், இந்தியாவின் தமிழக மீனவர்கள் எல்லைப் பிரச்சினை தொடர்பில் பேசி, அதற்காக தீர்வொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்” என சுப்ரமணியன் சுவாமி  கூறியுள்ளார்.


ஆட்சியை பிடிக்க முற்பட்டவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைத்துள்ளது: எடப்பாடி

அ.தி.மு.க.வை களைத்து ஆட்சியை பிடிக்க முற்பட்டவர்களுக்கு, இறைவன் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கோவை – சிங்கா நல்லூரில் இடம்பெற்ற திருமணவிழா ஒன்றில் பங்கேற்ற பின்னர், அங்கு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், “தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ஆட்சியை களைக்க வேண்டும் என்றே கூறி வருகிறார். அவருக்கு கதிரை மீது தான் ஆசையே தவிர மக்கள் குறித்து அக்கறை இல்லை. உயர்நீதிமன்றின் தீர்ப்பின் மூலம், தி.மு.க.வினருக்கு தகுந்த பதிலடி கிடைத்தது. உண்மையும் நியாயமும் தான் எப்போதும் வெல்லும்” எனக் கூறியுள்ளார். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணன் அண்மையில் தீர்ப்பு வழங்கினார். அதில், 18 சட்டமன்ற உறுப்பினர்களையும் சபாநாயகர் தனபால் தகுதிமேலும் படிக்க…


நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றி விட்டது – திகாம்பரம்

மக்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்லி இந்த நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் கொண்டுவந்தார்கள். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென்று மஹிந்தவை பிரதமராக்கியுள்ளார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அத்துடன் தமது ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கே என அவர் தெரிவித்தார். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் அவசர கூட்டம் கூடியது. இதில் பிரசன்னமாகியிருந்த அமைச்சர், பின்னர் ஊடகங்களுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது பின்கதவால் செய்யப்பட்ட வேலை. ஆனால் ரணில் விக்ரமசிங்கவே சட்ட ரீதியான பிரதமர். எனவே அவருக்கு ஆதரவாக சிறுபான்மையின கட்சிகளாக நாம் இருக்கின்றோம். நாடாளுமன்றில் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளது. ஆகவே பெரும்பான்மை ஆதரவோடு பிரதமர் தொடர்ந்தும் ஆட்சியை நடத்துவார்” என்று தெரிவித்தார்.


ஐ.தே.க. ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம்

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அலரி மாளிகைக்கு முன்பாக ஐ.தே.க. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பின் பல பகுதிகளிலுமிருந்து அலரி மாளிகை வளாகத்திற்கு இன்று (சனிக்கிழமை) காலை சென்ற ஆதரவாளர்கள் அங்கு ரணிலுக்கு ஆதரவாகவும் மஹிந்தவுக்கு எதிராகவும் கோஷமெழுப்பி வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். அத்தோடு, ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் அலரி மாளிகைக்குள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.  தற்போது பேருந்துகளில் ஏராளமான ஐ.தே.க. ஆதரவாளர்கள் அலரி மாளிகையை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம் செய்துள்ள நிலையில், அது அரசியலமைப்பிற்கு முரணானதென ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர் அலரி மாளிகையிலிருந்து வெளியேற வேண்டுமென மஹிந்த அணியினர் குறிப்பிட்டுள்ளதோடு, அவ்வாறு வெளியேறாவிட்டால் அலரி மாளிகையை சுற்றிவளைப்போம் என குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தேமேலும் படிக்க…


ஐ.தே கவிடம் மஹிந்த கோரிக்கை

நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐ.தே கவிடம்  புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று நாட்டின்  புதிய பிரதமாரக பதவியேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து  செயற்படுமாறு ஐக்கிய தேசிய கட்சியினரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


உலக நாடுகளின் தீவிர கண்காணிப்பில் இலங்கை

அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் முன்நகர்வுகள் தொடர்பாக மிக நுன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளன. இலங்கை அரசியல் யாப்பிற்கு மதிப்பளித்து அரசியல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முன்நகர்வுகள் அமைய வேண்டும் எனவும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தங்களது அரசியல் கடமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன.


மகிந்த ராஜபக்சே பதவி ஏற்பு – தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் : வைகோ அறிக்கை

இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான ஈழத் தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய கொடிய குற்றவாளி அதிபர் பொறுப்பிலிருந்த மகிந்த ராஜபக்சே என்பதை ஐ.நா.மன்றத்தின் பொதுச்செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்தியது. குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பிறகு ராஜபக்சே அரசு நடத்திய இனப் படுகொலையில் கர்ப்பிணித் தாய்மார்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் சித்ரவதை செய்து அழிக்கப்பட்டனர். இந்த இனப்படுகொலையை இலங்கை அதிபர் பொறுப்பில் இருந்த ராஜபக்சே நடத்தியபோது, அதனைச் செயல்படுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர்தான் மைத்திரிபால சிறிசேனா ஆவார். இருவருமே தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளிகள் ஆவார்கள். 2015 தேர்தலின்போதுமேலும் படிக்க…


அற்புதக்‍ கவிஞர் வாலி… அவர் புகழ் வாழி!


தெய்வநிந்தனை சட்டங்களை நீக்க ஆதரவு தெரிவித்து ஐரிஸ் மக்கள் வாக்களிப்பு!

அயர்லாந்து குடியரசின் அரசியலமைப்பில் இருந்து தெய்வ நிந்தனை சட்டங்களை நீக்க ஆதரவு தெரிவித்து மக்கள் வாக்களித்துள்ளதாக, தேர்தலின் பின்னரான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அயர்லாந்து அரசியலமைப்பில் இருந்து தெய்வநிந்தனை சரத்தை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்ததாக கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டவர்களில் 71 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். அயர்லாந்து ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்படுவார்கள் என்ற கேள்வியும் வாக்குகளை பதிவு செய்தவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. மைக்கல் டி ஹிக்கின்ஸ் மீண்டும் தெரிவு செய்யப்படுவார் என்பதே தங்களது முதல் தெரிவாக இருப்பதாக 58 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தமுறைத் தேர்தலில், கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது பதவிக் காலத்திற்காக கடும் போட்டியை சந்திக்கும் ஒரே ஜனாதிபதி வேட்பாளர் மைக்கல் டி ஹிக்கின்ஸ் ஆவார்.


திருமண வாழ்த்து – நிதர்சன் 💝 தாரணி (27/10/2018)

தாயகத்தில் நெல்லியடியை சேர்ந்த சுவிஸ் Lausanne இல் வசிக்கும் சிவனேசன் நளினி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிதர்சன் அவர்களும் யாழ்ப்பாணம்  கந்தரோடை சேர்ந்த சுவிஸ் Lausanne இல் வசிக்கும் கேதீஸ்வரன் சசிகலா தம்பதிகளின் செல்வப்புதல்வி தாரணி அவர்களும் 27ம் திகதி ஒக்டோபர் மாதம் சனிக்கிழமை இன்று  திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள். இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட நிதர்சன் தாரணி தம்பதிகளை வாழ்த்துவோர் அன்பு அப்பா அன்பு அம்மா மாமா மாமி சகோதரிகள் மச்சாள்மார் திரியா நிதியா நிருஷா மற்றும் அப்பம்மாமார்  அம்மம்மாமார் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்காமார் தம்பிமார் தங்கைமார்  சித்தப்பா சித்தி மாமாமார்  மாமிமார் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் உற்றார்  உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் . இன்று  திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட நிதர்சன்மேலும் படிக்க…


உதவுவோமா – 23/10/2018


வாலியின் வரலாற்று பயணம்


பாதுகாப்பை கருதியே கேவியட் மனு தாக்கல் செய்தோம்: பாண்டியராஜன்

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், அ.தி.மு.க.வின் பாதுகாப்பிற்காகவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை), செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன் போது பேசிய அவர், இரு பெரு தொகுதிகளின் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு, நாடாளுமன்ற தேர்தலோடு இணைத்து சட்டமன்ற தொகுதி தேர்தல்களை நடத்தினாலும் சரி, தனித்தனியாக நடத்தினாலும் சரி, தமக்கு எந்த பிரச்சினையும் கிடையாதென கூறியுள்ளார். மேலும் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அ.தி.மு.க. பலமான அணியாக காணப்படுகிறது. எனவே அடுத்தடுத்து எதிர்கொள்ளும் தேர்தல்களில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே எா்போது தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராவேமேலும் படிக்க…


கதைக்கொரு கானம் – 24/10/2018

கிருஷ்ணன் ஓமான்


யூ.வி. சுவாமிநாத ஐயர் – வைரமுத்து பேச்சு


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !