Sunday, October 14th, 2018

 

ஓட்டல் வெயிட்டரை கரம்பிடித்தார் ராணி எலிசெபத்தின் பேத்தி யூஜெனி!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத்தின் பேத்தியான இளவரசி யூஜெனியின் காதல் திருமணம் வின்ட்சர் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், அவரது இரண்டாம் மகனான இளவரசர் ஆண்ட்ரூ – சாரா தம்பதியரின் மகள் இளவரசி யூஜினி. பிரிட்டன் அரியாசனத்துக்கான முடிவரிசையில் யூஜினி 9-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜேக் ப்ரூக்பேங்கை காதலித்து வந்த யூஜினி அரச குடும்பத்தின் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். பட்டயக்கணக்காளர் தம்பதியரின் மகனான ஜேக் ப்ரூக்பேங், தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு ஓட்டல் வெயிட்டராக பணியாற்றியவர். சுவிட்சர்லாந்தில் பனி சறுக்கு விளையாட்டில் பங்கேற்ற போது யூஜினி மற்றும் ஜேக் ப்ரூக்பேங் இருவரும் நண்பர்களாக அறிமுகம் ஆகினர். பின்னர் நாளடைவில் நட்பு காதலாக மாறியது. அவர்களது திருமணம் லண்டனில் உள்ள வின்ட்சர் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அரசமேலும் படிக்க…


ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விடுதலை!

சட்டவிரோதமான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி சிறைவைக்கப்பட்ட அவர், 20 நாட்களின் பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் சீர்த்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் திட்டமிடப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தின் பின்னணியிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அவர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போது, உளவுத்துறை, விண்வெளி துறை என முக்கியமான விடயங்களில் ரஷ்ய அரசாங்கம் தோல்விகண்டுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டவண்ணமுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். அதனை வெளிக்கொணர முற்படும்போதே இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார். இவ்வாறான கைது நடவடிக்கைகளால் தமது செயற்பாடுகளை தடுத்து நிறுத்தலாமென யாராவது நினைத்தால் அது சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டார். இதேவேளை, அங்கீகரிக்கப்படாத ஆர்ப்பாட்டமொன்றிற்கு திட்டமிட்டதாக தெரிவித்துமேலும் படிக்க…


கனடாவில் கஞ்சாவுக்கு சட்ட அங்கீகாரம்: இவ்வாரம் அமுல்!

மருத்துவ தேவைகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக கஞ்சா செடிகளை வளர்க்கும் நடைமுறை கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சட்டம் இவ்வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு உருகுவேயில் கையாளப்பட்ட இத்திட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, கனடாவும் இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் கனடாவில் கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கான சட்டம் அமுலில் வரவுள்ளது. மருத்துவ தேவைகளை மேம்படுத்தவும், போதைப்பொருள் சம்பந்தமான குற்றங்களை தடுக்கவும் இச்சட்டம் உதவுமென இச்சட்டத்திற்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், நீண்ட நாள் பாவனையானது மக்களின் சுhதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமென இச்சட்டத்திற்கு எதிரானவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கஞ்சாவிற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கும் முதல் ஜீ-7 நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.


குற்றச்சாட்டிலிருந்து பின்வாங்கினார் சின்மயி

பாடகி சின்மயி கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் மிகப்பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் இலங்கைப் பெண் முறைப்பாடுசெய்ததாக கூறிய விடயத்திலிருந்து அவர் பின்வாங்கியுள்ளார். பிரபல டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது இலங்கை பெண் புகார் கூறியதாக சின்மயி டுவிட்டரில் தகவல் வெளியிட்டிருந்தார். ஆனால் பின்னர் அது உண்மையல்ல என்று தெரியவந்தது. தற்போது சின்மயி அப்படியே இந்த விஷயத்திலிருந்து பின்வாங்கியுள்ளார். “அந்த பெண் வேண்டுமானால் ஊடகங்களிடம் இது குறித்து தெரிவிக்கட்டும். நான் இனி ஆதரிக்க மாட்டேன்” என தனது டுவிட்டரில் நேற்று (சனிக்கிழமை) கூறியுள்ளார். இதற்கு முன்னர் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை வைரமுத்து மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் விபத்து: 7பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7பேர் உயிரிழந்துள்ளதுடன் 35பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், மதரிபூர் எனும் இடத்தில் தனியார் பேருந்து ஒன்றுடன் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 2 இலட்சம் இந்திய ரூபாய் வழங்கப்பட வேண்டுமெனவும் 50 ஆயிரம் இந்திய ரூபாய் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு 10 தாக்குதல்கள் நடத்தப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை

இந்தியா எம் நாட்டின் மீது ஒரு முறை தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 தாக்குதல்கள் நடத்தப்படுமென பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும்போது, “நாட்டின் அமைதியையும் வளர்ச்சியை சீர்குழைக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு இந்திய இராணுவத்தினர் பதிலடி கொடுப்பார்களென பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவித் பஜ்வாவுடன் அந்நாட்டு இராணுவ மக்கள் தொடர்பு அதிகாரியான ஆசிப் காபூரும் சென்றுள்ளார். இதன்போது லண்டன் நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆசிப் காபூர் கலந்துகொண்டு மோடியின் கருத்துக்கு பதிலடி வழங்கும் வகையில் உரையாற்றியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு முறை தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 முறைக்குமேலும் படிக்க…


ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்ஸர்லாந்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இதுதொடர்பிலான தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இவ்வாறு அரசியல் புகலிடம் கோருவதற்கான கடிதத்தை வட. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆவா குழுவினால் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்தே இவர்கள் சுவிட்ஸர்லாந்தில் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளவர்கள் பொலிஸாரிடம் தமக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் கூறப்படுகின்றது.


நாட்டின் நலனில் அரசியல்வாதிகள் அக்கறை கொள்ள வேண்டும்: ஜனாதிபதி

நாட்டின் நலனில் அரசியல்வாதிகள் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகள் எமது நாட்டினதும் நாட்டு மக்களதும் நலனில் அக்கறை கொண்டு பொறுப்புடன் செயற்படவேண்டும். அரசியல் இலாபத்திற்காகக் கருத்துக்கள் தெரிவிப்பதை விடுத்து மக்கள் நலன்சார்ந்த திட்டங்களில் அவதானம் செலுத்தவேண்டும். பெரும்பாலான அரசியல்வாதிகள் தமது நேரத்தினை தேவையற்ற கருத்துக்களைக் கூறி வீணடித்து வருகின்றனர். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொறுப்பற்ற கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இயற்கை அனர்த்தம் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.


சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இதுதொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகினால் உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வதற்கு இவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து வரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே இவ்வாறு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து குறித்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் நல்லாட்சி கூட்டணியிலிருந்து விலகினால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு இந்த அமைச்சர்கள் உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேமேலும் படிக்க…


அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல்கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் குறுகியகால புனர்வாழ்வளித்து விடுதலைசெய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்நகரில் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை யாழ். நாவாந்துறை சந்தை பகுதியில் இடம்பெற்றது. சகல தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலமோ அல்லது குறுகிய புனர்வாழ்வு வழங்கியதன் பின்னரோ விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் விலியுறுத்தினர். அத்துடன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கைதிகளிற்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக வரும் வரவு செலவுத்திட்டத்தை பயன்படுத்துவதுடன், ஏனைய முஸ்லிம் மற்றும் பெரும்பான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் தமிழர் தரப்பிற்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்தினர். யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்மேலும் படிக்க…


அடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன: சி.வி.விக்னேஸ்வரன்

அடக்கி ஆளும் சிந்தனையே குடும்பங்களிலும் நாட்டிலும் பல பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலாலயா இசை நடனப் பள்ளியின் வருடாந்த நவராத்திரித் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உரிமைகளும் கடமைகளும் ஒரு சல்லிக் காசின் இருபக்கங்கள். ஒன்றை மட்டும் நாம் வலியுறுத்தி மற்றதை மறந்து நடக்கும் போது குடும்பங்களில் பிரச்சினைகள் உண்டாகின்றன. கணவன் மனைவிமாரிடையே உரிமைகளுடன் கடமைகளும் வலியுறுத்தப்பட்டால் அங்கு அன்பு நிலவும். அடக்கி ஆளும் சிந்தனை எழாது. அடக்கி ஆளும் சிந்தனையே குடும்பங்களிலும் நாட்டிலும் பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளன. சிங்கள மக்களும் தமிழ் மக்களும் மக்கட் கூட்டங்கள் என்ற முறையில் ஆங்கிலேயரால் சம அந்தஸ்து கொடுத்து ஆளப்பட்டு வந்தார்கள். 1919ம் ஆண்டில் உங்களுக்கு தன்னாட்சி தரப்போகின்றோம்மேலும் படிக்க…


கவிப்பேரரசு வைரமுத்து | சின்மயி | உண்மை அறிவோம் | சாட்டை | துரைமுருகன்


18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.லக்ஸா முருகையா (14/10/2018)

ஜெர்மனியில் வசிக்கும் முருகையா சோபினி தம்பதிகளின் செல்வப்புதல்வி லக்ஸா 14ம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது 18வது பிறந்த நாளை  அன்பு சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடுகிறார். இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் லக்ஸாவை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணாமார் திவாகரன் ஜாக்சன் அக்கா தேனிஷா மற்றும் மச்சாள்மார் விஜயகுமாரி சாந்தகுமாரி உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். இன்று தனது 18வது பிறந்த நாளை கொண்டாடும் லக்ஸாவை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு சகோதரர்கள் திவாகரன் ஜாக்சன் அக்கா தேனிஷா அவர்களுக்கும்மேலும் படிக்க…


வைரமுத்துவின் நிகழ்ச்சிக்கு நான் போகவேண்டும் என்பது கட்டாயம் – சின்மயி


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !