Sunday, June 24th, 2018

 

சிறுத்தையை கொலை செய்த இருவர் கைது

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட பத்துபேரை தாக்கிய காயப்படுத்திய சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்யுமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது  சிறுத்தையை கொன்றவர்களை சமூக வலைதளங்கள் ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்கள், ஒளிப்படங்கள் என்பவற்றை ஆதரமாக கொண்டு கைது செய்து விசாரிக்கவும், மற்றும் இறந்த சிறுத்தையை அழிக்கவும் என மூன்று விடயங்களுக்கு நீதி மன்றின் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்திருந்தது. குறித் வழக்கு விசாரணையின் போது வழக்கில் இறுவெட்டு (சிடி) மூலம் சாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு அனைவரையும் கைதுமேலும் படிக்க…


தேர்தல் சகதிக்குள் குதிக்கும் எண்ணம் இல்லை

“என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள்” எனக் கூறும் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அதனை அறிந்துகொண்டே தேர்தல் சகதிக்குள் குதிக்கும் எண்ணம் தமக்கில்லை என்கின்றார். விசுவமடுவில் இராணுவ அதிகாரியொருவர் அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்றபோது அவரை கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் வழியனுப்பி வைத்தனர். கேர்ணல் ரட்ணப்பிரிய அப்பகுதி மக்களுக்கு அளப்பரிய சேவை ஆற்றயிருக்கின்றார். இது எதனைக் காட்டுகின்றது? தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து நிலையால் தமிழர்கள் இராணுவத்தின் உதவியை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதையா?  இதில் சில விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் உள்ளவர்கள் எவ்வளவுதான் புனர்வாழ்வு பெற்றிருந்தாலும், அங்கு புனர் நிர்மாண வேலைகள் நடைபெற்றாலும், அடிப்படையில் அங்குள்ள போரால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வேலைவாய்ப்பின்றி, போதிய வருமானமின்றியே இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் நல்லமேலும் படிக்க…


‘ஹிட்லர், இடியாமீன் போன்றோரின் ஆட்சி அவசியமற்றது’

நாட்டின் ஆட்சியாளர் ஹிட்லராக பரிணமிக்க வேண்டும் என புத்த பெருமான் ஒருபோதும் கூறவில்லை. ஆகவே இந்த நாட்டுக்கு ஹிட்லர், இடியமீன் போன்றோரின் ஆட்சி அவசியமென்று யாராலும் கூற முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாத்தறை அக்குரஸ்ஸ மன்தினந்த பிரிவென்னுக்கு 125 வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டின் ஆட்சியை நிர்வகிப்பது தொடர்பில் புத்த பெருமான் எமக்கு போதனைகள் பல வழங்கியுள்ளார்.  ஆகவே அவரின் போதனையின் பிரகாரம் ஜனநாயக நாடு என்ற வகையில் நாம் எமது ஆட்சியை கொண்டு செல்ல வேண்டும். தன்னுடைய மக்களை அடக்கி கொலை செய்து ஆட்சியை முன்னெடுக்குமாறு புத்த பெருமான் ஆட்சியாளர்களுக்கு போதிக்கவில்லை.  இடைக்கிடையே சாமாதானமாக ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக  கலைந்து செல்லுமாறே புத்தமேலும் படிக்க…


ஐ.தே.க.வின் சர்வாதிகார நிர்வாகமே பிரிவதற்கு காரணம் – டிலான்

அனைவரும் கடந்த காலங்களில் அரசியலில் கடந்து வந்த பாதையினை யாம் அறிவோம். ஆகவே பிறர் தொடர்பில் புறம் கூறுபவர்கள் வரையறைக்குள் செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திலிருந்து விலகிய  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்திற்கு வர முடியாத  நிலைமை  காணப்படுகின்றது என்று அமைச்சர் மனோ கணேசன் அனுதாபம் வெளியிட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். ஐக்கிய தேசிய கட்சியின் முறையற்ற சர்வாதிகார நிர்வாகத்தின் காரணமாக இன்று  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பலவினமடைந்துள்ளது. ஆகவே ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்ப்பு குழுவாக செயற்பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பலப்படுத்தும் பாலமாகவே 16 உறுப்பினர்களும் செயற்படுவோம். தேசிய அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் முறையற்ற விதங்களில் 16 உறுப்பினர்கள் மீதும்மேலும் படிக்க…


சங்கமம் – 24/06/2018


இசையும் கதையும் – 23/06/2018

முகநூல் (பாகம் II) பிரதியாக்கம் செல்வி அஞ்சனா குகன் சுவிஸ்


ஒரே குடும்பத்தின் புகழ் பாட முயற்சிப்பதா? மத்திய பிரதேசத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி

ஒரே குடும்பத்தின் புகழ் பாட முயற்சித்ததில், நாட்டுக்கு உழைத்த பிற தலைவர்களின் உழைப்புக்கு முக்கியத்துவம் தராமல் போவதா என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேசத்தில் நடந்த விழாவில் சாடினார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச மாநிலம் மோகன்புராவில், கட்டப்பட்டு உள்ள ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான மோகன்புரா அணையை அங்கு நேற்று நடந்த விழாவில் மாநிலத்துக்கு அர்ப்பணித்து வைத்தார். மேலும், 3 நீர்ப்பாசன திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “இந்த திட்டங்களுடன் தொடர்பு உடைய ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்த திட்டங்களின் உண்மையான தொடக்க விழா என்பது உங்களின் உழைப்பாலும், வியர்வையாலும் செய்யப்பட்டது ஆகும்” என்று குறிப்பிட்டார். பாரதீய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்து பேசுகையில், “டாக்டர்மேலும் படிக்க…


உலகக் கோப்பை கால்பந்து – பரபரப்பான ஆட்டத்தில் ஸ்வீடனை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்வீடன் அணியின் ஒலா டொல்வானன் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தனது ஆக்ரோ‌ஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்கோ ரூயஸ் ஒரு கோல் அடித்தார். அதற்கு பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜெர்மனி அணியின் டோனிமேலும் படிக்க…


உலகக் கோப்பை கால்பந்து – தென் கொரியாவை 2 – 1 என வீழ்த்தியது மெக்சிகோ

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள மெக்சிகோ மற்றும் தென் கொரியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து மெக்சிகோ அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் கார்லஸ் வெலா ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 66-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஜேவியர் ஹெமாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் தென் கொரியா அணியின் சான் ஹியூங் மின்மேலும் படிக்க…


ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் சுஷ்மா சுவராஜ்

ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 7 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அவர் இத்தாலி, பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய 4 நாடுகளுக்கு சென்றார். முதல் கட்டமாக சுஷ்மா சுவராஜ் இத்தாலி புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் பிரான்சு மற்றும் லக்சம்பர்க் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இத்தாலிக்கு சென்ற சுஷ்மா அந்நாட்டு பிரதமர் ஜியூஸெ பி கான்டை சந்தித்து பேசினார். அதன்பின், பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற சுஷ்மா, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் லக்சம்பர்க் சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்தார். 21-ம் தேதி பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில்மேலும் படிக்க…


சவுதி அரேபியா – கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்தது

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதால் அநாட்டு பெண்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய  பெண்கள் கைது செய்யப்பட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே, நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை  சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று முதல்மேலும் படிக்க…


ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது தாக்குதல்: 45 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் நடைபெற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆலோசனைக் கூட்டத்தின்போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டள்ளது. ஈராக் நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஈராக் இராணுவம் முற்றிலுமாக ஒடுக்கியுள்ளனர். ஆனால், அங்கிருந்து அயல் நாடான சிரியாவின் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் அவ்வப்போது ஈராக் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிரியாவில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க விமானப்படையுடன் அயல் நாடான ஈராக்கின் விமானப்படைகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சிரியாவின் ஹாஜின் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய, மூன்று வீடுகளின்மீது ஈராக் நாட்டு போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் போர்துறை அமைச்சர், ஊடகத்துறை தலைமை பொறுப்பாளர் உட்பட 45மேலும் படிக்க…


விக்கி சம்பந்தன் பாராமுகம் காட்டுகின்றனர்: ஆனந்த சுதாகர் தாயார் குற்றச்சாட்டு

ஆனந்த சுதாகர் விடுதலை தொடர்பில் வடக்கு முதல்வர் க.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக கூறுகின்றனர். இருப்பினும் அவரது விடுதலை தொடர்பில் கதைப்பதாக கூறுகின்றனரே தவிர இதற்கான முடிவை வழங்கவில்லை என அவரது தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். நவோதயா மக்கள் முன்னணி சார்பில் கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார். மேலும் குறித்த விடயம் தொடர்பில் எந்தவொரு அரசியல்வாதிகளும் தங்களுடன் வந்து பேசவில்லை என்று கூறிய அவர், நவோதய மக்கள் முன்னணியின் தலைவரே தற்போது அழைத்து பேசியதாகவும் உதவிகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


சிம்பாப்வே ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டத்தில் குண்டுத்தாக்குதல்

சிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன் ம்நான்காவா ( Emmerson Mnangagwa) கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். சிம்பாப்வேயில் அடுத்த மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி எம்மர்சன் ம்நான்காவா உரையாற்றியிருந்தார்.  ஜனாதிபதி எம்மர்சன் தனது உரையை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியபோது அவரை நோக்கி குண்டு ஒன்று வீசப்பட்டது. இந்தநிலையில் வெடிகுண்டு ஜனாதிபதி மீது படாத வகையில் அவரது பாதுகாவலர்கள் அவரை ஒருபக்கமாக இழுத்து காப்பாற்றியதாகவும் இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன


சாந்தபுரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தேடுதல்

வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை என்பவற்றுடன் ஓருவர் கைதாகி இருந்த நிலையில் இருவர்  தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் தப்பித்து சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் மற்றயவரை பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தேடி வந்த நிலையில் நேற்று இரவு பத்து மணியளவில் பிரதான சந்தேக நபராக தெரிவிக்கப்படும் கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த ஏகாம்பரம்  என்பவர் வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிளிநொச்சி சாந்தபுரம் பகுதிக்கு பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால்   அழைத்து வரப்பட்ட அவர் அங்கு உள்ள பகுதிகளில் ஆயுதங்கள் இருக்கலாம் என  தேடுதல் நடைபெற்று வருகிறது. குறித்த பகுதிக்கு இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் இதுவரை எவ்வித ஆயுதங்களோ வெடிபொருட்களோ மீட்க்கப்படாத நிலையில் இன்று அதிகாலை 1.30 வரை அவரின் வாக்கு மூலங்களுக்கு அமைவாக தேடுதல்மேலும் படிக்க…


கோவில் திருவிழாவில் தீப்பந்து சுற்றிய போது நெருப்பு வீழ்ந்து 20 பேர் படுகாயம்

மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீப்பந்து சுழற்றியபோது அதில் இருந்து நெருப்பு  பக்தர்கள் மீது  வீழ்ந்ததில்; 20 பேர் படுகாயமடைந்த சம்பவம் மட்டு உன்னிச்சை பிரதேசத்தில் சற்று முன்னர் சனிக்கிழமை இரவு (11 மணியவில்) இடம்பெற்றுள்ளது என ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர். மட்டு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை 7 ம் கட்டை மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இடம்ற்று வருகின்றது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அம்மன் வீதி உலா வரும்போது அதற்கு முன்னாள் பக்தர் ஒருவர் தீப்பந்து சுழற்றி கொண்டிருந்த போது திடீரென தீப்பந்தில் இருந்து நெருப்பு பக்தர்கள் மேல் வீழ்ந்து தீப்பற்றியது. இதனையடுத்து பக்தர்கள்; சிதறி பயத்தில் ஓடியதுடன்  தீப்பற்றியவர்களின் உடைகளை கழற்றி தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததுடன் இதில்  படுகாயமடைந்த  சிறுவர்கள் உட்பட 20 பேர்  கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் படிக்க…


இடைவெளிக்குப் பின் ஒரே மேடையில் சம்பந்தன், சி.வி?

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெறும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்விலேயே இருவரும் கலந்துகொள்ளவுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பிரசன்னமாகவுள்ளமையினால் இந் நிகழ்வு தமிழரசுக் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்.


ஜுன் 24 – எம்.எஸ்.வி & கண்ணதாசன் பிறந்ததினம்

மாபெரும் இசைக்கும் நிகரில்லா கவிக்கும் இன்றைய நாள் ஜனன தினம். தொலைக்காட்சிகள் அவ்வளவாகப் புழக்கத்துக்கு வராத காலத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கடந்துசெல்லும் தெருவின் ஏதோ ஒரு ஓட்டு வீட்டின் வானொலியிலிருந்து கசிந்து சாலைக்கு வருகிறது ஒரு பாடல். சற்று வருத்தம் தோய்ந்த மனநிலையில் இருக்கும் உங்களிடம் வந்தடையும் அந்தப் பாடல், ஒன்று உங்கள் கவலையைக் குறைக்கும் அல்லது பல மடங்காக அதிகரித்துவிடும். இந்த மாயங்களைச் செய்யும் பாடலை உருவாக்கிய, சிறிய உருவம் கொண்ட மாபெரும் கலைஞனுக்கு, அது எந்த ஆண்டு வெளியான படம் என்பதுகூட நினைவிருக்காது. கொஞ்சமா… ஆயிரக் கணக்கான பாடல்கள் அல்லவா? எத்தனை இனிமையான சாதனை? “கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு இசை…” என்றவுடன் உங்கள் மனம் ‘எம்.எஸ். விஸ்வநாதன்’ என்று அனிச்சையாக அந்தக் கணநேர வெற்றிடத்தை நிரப்பும். கண்ணதாசனும் எம்.எஸ்.வி-யும் ஒரே தேதியில் பிறந்தவர்கள். மூன்றுமேலும் படிக்க…


கதைக்கொரு கானம் – 20/06/2018

திருமதி.பத்மராணி இராஜரட்ணம் ,பிரான்ஸ்


பந்தாவாக செல்பி ; கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு

மலைப்பாம்பை கழுத்தில் போட்டு போஸ் கொடுத்த வனத்துறை அதிகாரியை அந்த பாம்பு கழுத்தை இறுக்கிய வீடியோ வெளிவந்துள்ளது.  மேற்கு வங்காளம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒரு மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அந்த பாம்பு 18 அடி நீளமும் 40 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. அதைப்பிடித்த அதிகாரி கெத்தாக தனது தோளில் அந்த பாம்பை மாலை போல் போட்டுக்கொண்டு அங்கிருந்த மக்களுக்கு போஸ் கொடுத்தார். அவருடன் சிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பாம்பு அவரின் கழுத்தை இறுக்கத்தொடங்கியது. இதனால், அங்கிருந்த மக்கள் தெறித்து ஓடினர். இருப்பினும் அருகிலிருந்து சக ஊழியர்கள் பாம்பை விடுவித்து அருகிலிருந்த காட்டில் விட்டனர்.


உதவுவோமா – 19/06/2018


அரசியல் சமூக மேடை – 21/06/2018

5 வருட காலத்தில் வடமாகாணசபை சாதித்தவை என்ன ? இது தொடர்பான பார்வை


இந்த மண்ணும் கடல் வானும் மறைந்தாலும் மறக்க முடியாதவை


கவிஞர் கண்ணதாசன் விழாவில் சுபவீ ஆற்றய உரை


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !