Monday, June 11th, 2018

 

டிரம்புடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு- இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவற்காக சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ள டிரம்ப், இன்று சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நாளை காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றே சிங்கப்பூர் வந்தடைந்தார். சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் விமான தளத்திற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இந்நிலையில், சிங்கப்பூர் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லீமேலும் படிக்க…


வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ-சீமானை கைது செய்ய வேண்டும்- எச்.ராஜா

வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதி ராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதி ராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தினம் ஒரு ஊழல் நடந்தது. ஜி.எஸ்.டி. வரியினால் ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் 7 கோடி கழிப்பறைகள் ஏழை-எளிய மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து மூடியதற்கு காரணம் தமிழக அரசு தான். ஜி.எஸ்.டி. காரணம் இல்லை. உலகத்திலேயே அதிக ஊழல்மேலும் படிக்க…


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார். இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை இன்று மதியம் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்கள்மேலும் படிக்க…


தேர்தல்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்தது எப்போது?

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவது அவசியம் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் மூன்று ஊழல் மோசடி மிகுந்த தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் 1999 இல் வடமேல் மாகாணசபை தேர்தல்,1982 சர்வஜன வாக்கெடுப்பு,1981 இல் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் ஆகியவையே இலங்கையின் வரலாற்றில்  மோசமானவை எனவும் தெரிவித்துள்ளார். 1981 இல் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கான உரிமைகள் அற்ற  வெளிமாவட்டத்தவர்களை அரசாங்கம் ஈடுபடுத்தியது,இதன் காரணமாக வாக்குப்பெட்டிகள் பல காணாமல்போயின, பின்னர் சில கண்டுபிடிக்கப்பட்டன என தேர்தல் ஆணையாளர் நினைவுகூர்ந்துள்ளார். இந்த தேர்தல் மிதவாத தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல்கள் மீது நம்பிக்கை இழக்க காரணமாக அமைந்தது ,வாக்கு சீட்டிற்கு பதில் துப்பாக்கி குண்டுகள் என்ற நிலைமை உருவாகமேலும் படிக்க…


கோத்தபாயவை களமிறக்கத் தயார் – மஹிந்த

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற மக்கள்  ஆதரவு கிடைத்தால் அவரை களமிறக்க நாம் தயார். எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இடையில் எந்த முரண்பாடுகளும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தேசிய அரசாங்கம் மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, எனவே மீண்டும் நாட்டுக்குப் பொருத்தமான ஆட்சி ஒன்றினை உருவாக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் எமக்கு ஏற்பட்டுள்ளது. மக்களும் அந்த பொறுப்பினை எமக்கு வழங்கியுள்ளனர். நாளுக்கு நாள் எம்மை சந்திக்கும் மக்கள் அலை அதிகரித்து வருகின்றது. சந்திக்கும் அனைவரும் இந்த ஆட்சியின் மீதான அதிருப்தியையேமேலும் படிக்க…


மொனராகலையில் துப்பாக்கிகளுடன் 10 பேர் கைது

மொனராகலை, எத்திமலை பகுதியில் 4 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எத்திமலை பகுதியில் பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 35 முதல் 75 வயதுக்கிடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் 4 உள்நாட்டு துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கோட்டபாயவை நாடும் 16 பேர் கொண்ட குழு

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடபோவதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு புஞ்சிபொரளையிலுள்ள திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின்போது  நாட்டின் தற்கால  நிலவரம் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் லக்ஸ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.. இதேவேளை  இந்த 16 பேரின் உண்மையான தோற்றம் எதிர்வரும் தேர்தலின்போது வெளிப்படுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று  குறிப்பிட்டுள்ளார். இவர்கள்,  ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைவதில் எந்ததொரு பயனுமில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எதிர்பார்ப்பு மிக்க ட்ரம்ப் – கிம் சந்திப்பு: நிரந்தர அமைதி குறித்து பேச்சு

ட்ரம்ப் – கிம் சந்திப்பு நாளை (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் செயன்முறை தொடர்பில் விவாதிக்கவுள்ளார் என வட கொரியா தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக ட்ரம்ப் மற்றும் கிம் ஜொங் உன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூர் சென்றடைந்துள்ளனர். இந்த சந்திப்பை, சர்வதேசம் உற்று கவனித்துக் கொண்டிருப்பதாக கிம் தெரிவித்துள்ளதுடன் இந்த உச்சி மாநாடு குறித்து தனக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வட கொரியா அணுவாயுதத் திட்டங்களை கைவிட வேணடும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கும் அதேவேளையில் இதற்கு பதிலாக வடகொரியாவின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்று தெளிவாக கூறமுடியாதுள்ளது. எவ்வாறாயினும் ட்ரம்ப் – கிம் சந்திப்பு நாளை (செவ்வாய்கிழமை) சிங்கப்பூரிலுள்ள சென்டோஸா தீவில் காலை 9மேலும் படிக்க…


மத நல்லிணக்கத்தை திராவிட இயக்கம் தான் ஏற்படுத்தியது: வைகோ

இந்தியாவிற்கே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது திராவிட இயக்கம் தான் என்று, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில், ம.தி.மு.க சார்பில் இடம்பெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே, மேற்படி தெரிவித்தார். இஸ்லாமியர்களுக்கு, கிறுஸ்தவர்களுக்கு, தலித் மக்களுக்கென, அனைவருக்குமிடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது திராவிட இயக்கம் தான் என்று கூறினார். தமிழகம் என்றும் காவலனாக இருக்கும், அதை யாரும் சிதைக்க முடியாதென வைகோ தெரிவித்துள்ளார். மேலும் குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மத நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும், மதச்சார்பின்மை என்ற கொள்கை மேலும் வலுப்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.


விடுதலைப் புலிகளின் அரசியல் துணைப் பொறுப்பாளர் உயிரிழப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல் விவகாரங்களில் துணைப்பொறுப்பாளராக செயற்பட்ட ஐங்கரன் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு  11 மணியளவில்  திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். மூதூரில் பல நூற்றுக்கணக்கானவர்கள் அரசியல் உத்தியோகத்தினை பெறுவதற்கும் மாவீரர் குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஐங்கரன் முக்கிய பங்கு வகித்தவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் அரசியல் செயற்பாடுகள் தவிர்ந்த மக்களுக்கான  பொதுநலத்திட்டங்களையும் முன்னெடுத்தவரெனவும் கூறப்படுகின்றது.


தென்னிலங்கை மீனவர்களை கண்டித்து யாழில் மாபெரும் கண்டப் போராட்டம்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி தென்னிலங்கை மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி யாழில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் சம்மேளனங்கள் ஒன்றிணைந்து இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் குறித்த கண்டனப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளன. இதன்போது, யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன அலுவலகத்துக்கு முன்பாகவிருந்து யாழ்.மாவட்ட செயலகம் வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தமது கண்டனப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சம்மேளன தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், கடையடைப்பிற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லை எனவும், வர்த்தக நிலையங்களும், பேருந்துகளும் வழமைப்போல் இயங்கி வருவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் அங்குள்ள எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.


அன்று களம் கண்ட வன்னி மக்களின் இன்றைய …. நிலை?

ஆறு ஆண்டுகள் சேவையாற்றி விடைபெறும்  சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி முல்லைத்தீவு கட்டளை அதிகாரி கேணல் ரட்ணப் பிரிய பண்டுவுக்கு  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்து மக்கள் வழியனுப்பி வைத்தள்ளனர். குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 66 மாதங்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற கேணல் ரட்ணபிரியபந்துவின் சேவைநலன் பாராட்டும் முகமாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் கிளிநொச்சி மக்கள் , பெண்கள் , தாய்மார்கள் சிறுவர்கள், இளைஞர்கள் முதியவர்கள் அனைவரும்  குறிப்பாக முன்னாள் போராளிகள் புணர்வாழ்வு பெற்றவர்கள் அழுது புலம்புவதை காணக்கூடியதாக இருந்தது . கேணல் ரட்ணபிரியவின் பிரிவை ஒட்டி அழுது கண்ணீர் விட்ட காட்சி பார்க்கும்போது மக்கள் ரத்னபிரியாவுக்கு வைத்திருக்கும் அன்பையொட்டி வியப்படைந்தேன் என்றும் கேணல் ரட்ணபிரியவின் மனிதமேலும் படிக்க…


திருமண வாழ்த்து – இராஜதேவன் & பிராப்தனா (11/06/2018)

நோர்வேயில் வசிக்கும் சகாதேவன் இராஜ இராஜேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் இராஜதேவன் அவர்களும் நோர்வேயில் வசிக்கும் இராஜசூரியர் பராசக்தி தம்பதிகளின் செல்வப்புதல்வி பிராப்தனா அவர்களும் 10ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை டென்மார்க் அபிராமி அம்மன் ஆலயத்தில் அபிராமி உபாசகித்தாயின் ஆசியோடு நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள். நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இராஜதேவன் பிராப்தனா தம்பதிகளை வாழ்த்துவோர்: அன்பு அப்பா, அம்மா, மாமா, மாமி, அன்புத்தங்கை மச்சாள் சத்யா, மச்சான் ஏமாலயன், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி உபாசகித்தாயின் ஆசியோடும் அருளோடும் 16 செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். இராஜ தேவன் பிராப்தனா தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.மேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !