Friday, June 1st, 2018

 

திருமணம் முடிக்க பெண்களே இல்லாத கிராமம்!! பிரம்மசாரிகளாகவே வாழும் ஆண்கள்!!

சீனாவின் ஆன்குய் மாகாணத்தில் லாவ்யா கிராமத்தில், பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் பல ஆண்கள் தங்களுடைய வாழ்க்கையை பிரம்மசாரிகளாகவே தொடரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த லாவ்யா கிராமம் உள்ளூரில் ‘பிரம்மசாரி கிரமம்‘ என்று அறியப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1600 பேர் வாழ்கின்ற அந்த கிராமத்தில் 30 முதல் 55 வயது வரையானோரில் 112 பேர் திருமணமாகாமல் பிரம்மசாரி வாழ்க்கை வாழ்வதாக பதிவு செய்துள்ளனர். இது வழக்கத்திற்கு மாறான மிக உயர்ந்த பதிவாகும். இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கின்ற 100 –க்கும் அதிகமான உள்ளூர் ஆடவர்களை அறிந்து வைத்திருப்பதாக சியோங் தெரிவிக்கிறார். “நான் எனக்கொரு மனைவியை தேடிகொள்ள முடியவில்லை. பெண்கள் வேலைக்காக இடம்பெயர்ந்து வேறு எங்காவது சென்றுவிடுகிறார்கள். பின்னர் நான் திருமணம் செய்ய யாரையாவது எவ்வாறு கண்டுபிடிப்பது?” என்று அவர் ஆதங்கப்படுகிறார். இந்த கிராமத்தில் ஆண்கள்மேலும் படிக்க…


நோர்வேயை தொடர்ந்து சுவிஸ்சிலும் “காலா” வுக்கு தடை

தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம் என நோர்வே தடையை தொடர்ந்து சுவிஸ்சிலும் காலா’வுக்கு தடை வாங்கப்பட்டுள்ளது. எமது அன்பான சுவிஸ் வாழ் தமிழர்கள், நடிகர் ரஜனிகாந்த் ரசிகர்கள் மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்! எமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து வருகின்றோம். தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தக முதலீட்டின் பெரும் பங்காளர்களாக இருக்கின்றோம். எமது மக்களை மகிழ்விப்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த எடுக்கின்ற சிறந்த முடிவு இது. எமது மக்களிடம் இருந்துமேலும் படிக்க…


அமெரிக்காவின் தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது: பிரான்ஸ்

உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதற்கான அமெரிக்காவின் தீர்மானமானது, மிருகத்தனமானதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லே ட்ரையன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்புகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு ஐரோப்பிய மட்டத்தில் எதிர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஒரு பட்டியல் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும். ஒன்றுபட்ட உறுதியான அந்த தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.


இளைஞன் வெட்டிக் கொலை: யாழ் சுன்னாகத்தில் ஒருவர் கைது

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கள்ளபாடு வடக்கினை சேர்ந்த 27 வயதுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் சுன்னாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் உள்ள பனங்கூடல் ஒன்றுக்குள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த இளைஞனின் உடலம் காணப்பட்டுள்ளது குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவ இடத்தில் பொலிஸார் நுண்புலனாய்வு பரிசோதகர்கள், சட்டவைத்திய அதிகாரி, நீதிபதி முன்னிலையில் உடலம் காணப்பட்ட இடங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி உடலத்தினை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இந்நிலையில் வெளியான மருத்துவ அறிக்கையில் கழுத்தில் கூரியஆயுததத்தால் வெட்டப்பட்டு அதிகளவான குருதிபோக்கு காரணமாக இறந்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையுடன் தொடர்புடையவரை கைதுசெய்வதற்காக முல்லைத்தீவ மாவட்டமேலும் படிக்க…


தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் நினைவுகூரும் நிகழ்வு

யாழ்ப்பாணம் பொது நூலகமானது எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அதனை நினைவுகூரும் நிகழ்வானது இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வானது தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலகம் முன்பாக இடம்பெற்றது. இதன் போது நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு இவ் தினம் நாளானது நினைவு கூரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி: ஸ்பெயினுக்கு புதிய பிரதமர்

ஸ்பெயின் பிரதமராக சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் பெட்ரோ சான்ஷேஸ் பதவியேற்றுள்ளார். ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியுற்று, மரியானோ ரஜோய் வலுக்கட்டாயமாக பிரதமர் பதிவியிலிருந்து விலக்கப்பட்டதை தொடர்ந்து, பிரதமரட பதவிக்கு புதவியவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜோயிற்கு எதிராக, எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. நாட்டில் ஊழல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டி பிரதமரை பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ரஜோய்க்கு 176 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், அவருக்கு வெறும் 169 வாக்குகள் மாத்திரமே கிடைத்த நிலையில் பதவியிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 180 பேர் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.


அர்ஜூன் அலோசியஸிற்கு பிணை மறுப்பு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரான கசுன் பலிசேன ஆகியோர் பிணை மறுப்புத் தீர்ப்பு வழங்கி நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்தன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) குறித்த மணு மீதான விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கு பிணை மறுப்புத் தீர்ப்பு வழங்கியது சட்டரீதியாகவே என்று சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார். இந்த மனு மூலம் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தம்மை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் மறுப்புத் தெரிவித்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க…


வருட இறுதிக்குள் சகல குடியேற்றவாசிகளுக்கும் காணி உறுதி

இந்த வருடத்தின் இறுதிக்குள் சகல மகாவலி வலய விவசாய மக்களுக்கும் அவர்கள் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் காணிகளின் சட்டபூர்வமான உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அரலகங்வில மகுல்தமன மகா வித்தியாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற மகாவலி பி,சீ மற்றும் ரம்புக்கன் ஓய வலயங்களைச் சேர்ந்த 12 083 குடியேற்றவாசிகளுக்கு ‘ரன்தியவர’ காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். நாட்டை வளப்படுத்த பாடுபடும் மகாவலி விவசாய மக்களுக்கு அவர்கள் நீண்டகாலமாக வசித்துவரும் காணிகளின் சட்டபூர்வ உரிமையை வழங்கும் ‘மகாவலி குடியேற்றவாசிகளுக்கு ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய செயற்திட்டம்’ 2016 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த குறிக்கோளினை நிறைவேற்றும் வகையில் மகாவலி வலயங்களில் ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்கும்மேலும் படிக்க…


விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! எடப்பாடிபழனிசாமி

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து மத்திய அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த விடயமானது தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் கோரிக்கையை ஏற்று, காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் டெல்லியிலும், காவேரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களுரில் செயற்படள்ளதாக அவர் கூறியுள்ளார். மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது, தமிழ்நாடு அரசிற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும், இந்த உத்தரவுகளினால், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாயப் பெருங்குடிமக்களின் வாழ்வாதாரம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி துப்பாக்கி பிரயோகம்: காயமடைந்தோரின் நிலை என்ன?

தூத்துக்குடி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த, 56 பேர் உடல் நிலை தேறிவருவதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விசாரணை என்ற பெயரில் தொந்தரவு கொடுக்க கூடாதென, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆர்பாட்டம் மேற்கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரச மருத்துவ மனையில் கடந்த 9 நாட்களாக தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவர்களை எதிர்வரும் நாட்களில் வீட்டுக்கு அனுப்பலாம் என மருத்துவ மனை தரப்பு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சுமார் 56 பேரினதும் உடல் நிலை தற்போது தேறிவருவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி அரச மருத்துவமனை கூறியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு நெல்லை மற்றும் மதுரை மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மருத்துவர்கள்மேலும் படிக்க…


Blanc-Mesnil -அதிவேகமாக சென்ற மகிழுந்து! – விபத்தில் பெண் பலி!

அதிவேகமாக சென்றுகொண்டிருந்த மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். Blanc-Mesnil நகரில் (செந்தனி) உள்ள Avenue Charles-Floquet வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  புதன்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக Peugeot 607 ரக மகிழுந்து ஒன்று அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்துகொண்டிருந்த Citroën C5 மகிழுந்துடன் மோதியுள்ளது. இதனால் எதிரே வந்த மகிழுந்தில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரு மகிழுந்துகளின் சாரதிகளும் மோசமான காயங்களுக்கு உள்ளாகினர். அதிவேகமாக மகிழுந்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய நபருக்கு சாரதி அனுமதி பத்திரம் (ஓட்டுனர் உரிமம்) இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலைகுள் நுழைந்த காவல்துறையினர்! – நபர் கைது!!

பதினேழாம் வட்டாரத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர், நபர் ஒருவரை கைது செய்தனர். புதன்கிழமை நண்பகல் வேளையில் இந்த சம்பவம் பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த கைது நடவடிக்கைகளுக்கு சற்று முன்னதாக, பாடசாலையின் அருகில் கண்காணிப்பில் CRS அதிகாரிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதன்போது குறித்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் மறித்துள்ளனர். காவல்துறையினர் அவரை சோதனையிட்டுக்கொண்டிருந்த போது, குறித்த நபர் தப்பி ஓடியுள்ளார். பின்னர் அவரை துரத்திக்கொண்டு வந்த காவல்துறையினர், ஆரம்பப்பாடசாலை ஒன்றுக்குள் நுழைந்ததைக் கண்டு, அவரை கைது செய்தனர். குறித்த நபர் போதைப்பொருள் விற்பனை முகவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பாடசாலை மாணவர்களுக்கு மனநல சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளது.


பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை யுவதி!

வவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, யுவதியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சுவிட்சர்லாந்தில் மாயமான 8 வயது சிறுமி: தந்தையை கைது செய்த பொலிஸ்!

சுவிட்சர்லாந்தின் நீயுசேடெல் மாகாணத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மாயமான 8 வயது சிறுமி தொடர்பில் அவரது தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். நீயுசேடெல் மாகாணத்தில் உள்ள La Chaux-de-Fonds நகரத்தில் குடியிருக்கும் இனாயா என்ற 8 வயது சிறுமி சனிக்கிழமை காலை முதல் காணாமல் போனார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாகாணம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மட்டுமின்றி குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே பொலிசாரின் விசாரணையில், குறித்த சிறுமி தமக்கு மிக நெருக்கமான சில பொருட்களையும் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இந்த நிலையில் பொலிசாரால தேடப்பட்டு வந்த சிறுமி பிரான்சில் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி திடீரென்று மாயமானதன்மேலும் படிக்க…


தூத்துக்குடி படுகொலைகள்- இந்திய அரசுக்கு ஐநா வல்லுநர் குழு அழுத்தம்

தூத்துக்குடியில் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையொட்டி, ஸ்டெர்லைட் தாமிர ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழக போலீஸ் அளவுக்கதிகமாக உயிர்குடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது என ஐ.நா. வல்லுநர் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.  இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் வேதாந்தா குழுமத்தின் ஒரு பிரிவாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையை விரிவாக்க முடிவுசெய்யப்பட்ட நிலையில், அதனால் குடிநீர், நிலம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என பாதிக்கப்படும் பகுதி மக்கள் போராடத் தொடங்கினர். போராட்டத்தின் நூறாவது நாளன்று மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.   ”நிராயுதபாணிகளாக வந்த மக்கள் மீது குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி படுகொலை செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறல்” என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த மனிதமேலும் படிக்க…


துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி தந்தது யார்? – நீதிமன்றம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, வழக்கறிஞர் முத்து அமுதநாதனும், கந்தகுமார் என்பவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் விதிமுறைகள்‌ மீறப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டதற்கான அரசாணை தமிழக அரசு தரப்பில் விசாரணையின்போது வழங்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் என்ன?மேலும் படிக்க…


சவப்பெட்டிக்கு பதிலாக காரோடு நல்லடக்கம்!

கார்கள் மீது அதீத மோகம் கொண்ட ஒருவர் தனது இறுதி மூச்சு அடங்கும் போது இந்த உடலைச் சவப்பெட்டிக்கு பதிலாக காரில் வைத்து தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க காரொன்றில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று வட சீனாவில் நடந்தது. சீனாவின்  ஹிபே மாநிலத்தில் பவ்வோடிங் நகருக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில்  “கிய்” என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட  நபர் ஒருவர்  இரு தினங்களுக்கு முன்னர் காலமானார். அவர் தனது உயிலில், “எனது மரணத்துக்குப் பின்    இறுதி சடங்கு பாரம்பரிய முறைப்படி சவப்பெட்டியில் அல்லாமல் சில்வர் ஹூண்டாய் சொனாட்டா  காரொன்றில் வைத்து நல்லடக்கம் செய்யப்படவேண்டும். இது என்னுடைய இறுதி ஆசை” என அந்த உயிலில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது குடும்பத்தினர் 1,173 ஸ்ரேலிங்மேலும் படிக்க…


ஸ்காபரோ பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் வெளிநாட்டு மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

ஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள தனித்த வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோர்னிங் சைட் அவனியூ மற்றும் எல்ஸ்மீர் வீதிப் பகுதியில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ விபத்தில் உயிரிழந்தவர் 18 வயது ஹெலன் கோ என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளதாகவும், மேலும் ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும தெரிவிக்கப்படுகிறது. தீப் பரவலுக்கான தெளிவான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


கனடாவின் உயரிய விருதுக்கு ஈழப்பெண் எழுதிய நூல் பரிந்துரை

ஈழ அகதிகள் தொடர்பான நூல் ஒன்று கனடாவின் ‘அமேசன் பெஸ்ட் நொவல்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கனடாவின் உயர் ‘அமேசன் பெஸ்ட் நொவல்’ விருதின் போது 40ஆயிரம் டொலர் பணப்பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த செரோன் பாலா என்ற பெண் எழுதிய ‘த போட் பீப்பிள்’ என்ற நூலே குறித்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்ற ‘சண்சீ’ கப்பல் அகதிகளை இந்நூல் மையப்படுத்தியுள்ளது. அத்துடன் உள்நாட்டுப் போர் காரணமாக இலங்கையிலிருந்து சென்ற அகதிகளின் நிலைமைகள் குறித்தும் அந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளன.


நம்பிக்கையில்லா தீர்மானம்: ஸ்பெயின் பிரதமரின் பதவி பறிபோகுமா?

ஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜோயிற்கு எதிராக, எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. நாட்டில் ஊழல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டி பிரதமரை பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையிலேயே, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சமீபத்தில் ரஜோயின் கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவருக்கு சுமார் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்தே பிரதமருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கோஷங்களும் வலுப்பெற்றன. ரஜோய் பிரதமராக இருப்பது மக்களுக்கு மட்டுமன்றி அவரது கட்சிக்குமே சுமையாக இருப்பதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க பிரதமருக்கு 176 வாக்குகள் தேவைப்படும் நிலையில், பிரதமர் மற்றும் அவரதுமேலும் படிக்க…


இத்தாலியின் அரசியல் இழுபறிகளுக்கு முற்றுப்புள்ளி

இத்தாலி நாட்டில் பல மாதங்களாக நீடித்துவந்த அரசியல் இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. இத்தாலியின் இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அரசாங்கத்தை தோற்றுவிக்க நேற்று (வியாழக்கிழமை) உடன்பட்ட நிலையிலேயே சிக்கலுக்கு தீர்வு கிட்டியுள்ளது. அரசாங்கத்தை வழிநடத்தி செல்வதற்காக சட்ட பேராசிரியரான கியூசெப் கான்டேவை, ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா மீண்டும் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஐந்து நட்சத்திர இயக்கம், வலதுசாரி கட்சியான பேர்ஸா இத்தாலியா உடனோ அல்லது மைய இடதுசாரி கட்சியான ஜனநாயக கட்சியுடனோ கூட்டணி சேர மறுத்துவிட்டது. இந்நிலையில், மூன்றாம் கட்டமாக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், இத்தாலி மீண்டும் பொது தேர்தலைச் சந்திக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு முடிவு வரை ஒருமேலும் படிக்க…


ஜேர்மனிய அதிபர் – போர்த்துக்கல் பிரதமர் சந்திப்பு

ஜேர்மனியப் பிரதமர் அங்கெலா மெர்க்கில் இன்று (வியாழக்கிழமை) போர்த்துக்கல் தலைநகரான லிஸ்பனில் அந்நாட்டுப் பிரதமர் அன்டோனியோ கொஸ்டாவைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது ஐரோப்பிய நாணய ஒன்றியம், ஐரோப்பாவில் குடியேறுபவர்கள் விவகாரம் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான மேலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்று Porto மற்றும் Braga ஆகிய இடங்களுக்குச் சென்ற அங்கெலா மெர்க்கில் Porto பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.


பிரத்தானியாவின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் மேகன்!

பிரித்தானிய இளவரசர் ஹரியின் கரம்பிடித்து பிரித்தானிய அரச குடும்பத்தில் இணைந்த அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல், பிரத்தானியாவின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். பிரித்தானிய வோக் சஞ்சிகையினால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள 25 பேர் கொண்ட பட்டியலில் மேகனும் இடம்பிடித்துள்ளார். ஸ்கொட்லாந்து அரசியல்வாதி ரூத் டேவிட்சன், ஃபெஷன் டிசைனர் ஸ்டெல்லா மெக்கார்ட்னி மற்றும் ஹரி பொட்டர் ஆசிரியர் ஜே.கே.ரவ்லிங் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் தற்போது சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கலின் பெயருடம் இணைக்கப்பட்டுள்ளது. கலை, பொழுதுபோக்கு, அறிவியல், ஊடகம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பெண்களின் பெயர்களை உள்ளடக்கியதாக இப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்: ஓராண்டு நினைவுக்கு தயாராகும் பிரித்தானியர்கள்

லண்டன் பிரிட்ஜ்ஜில் வானை தாறுமாறாக செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலின் ஓராண்டு நினைவு நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ளது. உலக புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ்ஜில் சென்று கொண்டிருந்த வான் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. கடந்த ஆண்டு இதே மாதம் 3ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த எட்டு பேர் படுகாயமடைந்ததுடன், லணடன் பிரிட்ஜ் தற்காலிகமாக மூடப்பட்டது. இதேவேளை, அதே தினத்தில் லண்டனில் உள்ள பிரப் சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் அங்கிருந்த பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.


திறமை மிக்கவர்களை எதிர் கொண்ட தி.மு.க. எடப்பாடி அரசிற்கு அஞ்சாது: கனிமொழி

திறமை மிக்க முதலமைச்சர்களை எல்லாம் சட்டப்பேரவையில் எதிர்கொண்ட தி.மு.க.விற்கு, எடப்பாடி அரசை பார்த்து அச்சப்பட வேண்டிய தேவை ஏற்படாதென, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில், இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். மக்களையும் ஏனைய கட்சிகளையும் எப்படியெல்லாம் அச்சுறுத்தி அடக்க முடிமோ, அதையெல்லாம் எடப்பாடி அரசு கையாள்கிறார்கள் என்றும் கூறினார். அத்துடன் மக்கள் உரிமைகளை கேட்டு போராடக் கூடாது, அவர்களின் போராட்டங்களை ஒடுக்க வேண்டுமென எண்ணுபவர்கள் நிச்சயமாக மக்களால் தூக்கி எறியப்படுவார்களென, கனிமொழி மேலும் தெரிவித்துள்ளார்.


மகராஷ்டிராவில் இடம்பெற்ற கொடூர விபத்து: 10 பேர் உயிரிழப்பு

மகராஷ்டிரா மாநிலம் மும்பையருகே, கார் மற்றும் லொறி ஆகிய வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற இவ்விபத்தில், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மகராஷ்டிர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தூத்துக்குடி படுகொலை: யாழில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ்.இந்திய துணைத் தூதரகம் முன்பாக, சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் இந்திய மத்திய மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தமிழ் நாட்டு அரசே நீதி கேட்ட மக்களுக்கு துப்பாக்கி குண்டுகளா, மோடி எடப்பாடி அரசே தூத்துக்குடி கொலையாளிகளுக்கு தண்டணை என்ன, தூத்துக்குடிக்கு நியாயம் வழங்கு, மோடியின் கையில் மக்களின் குருதி, மோடி எடப்பாடி ஆட்சியாளர்களே கொலையாளிகளுக்கு தண்டனை என்ன உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பி பதாதைகளை ஏந்தி  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


யாழ்ப்பாண, ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கு, நெதர்லாந்து உத்தரவாதம்

யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை பாதுகாப்பதற்கும், வடமாகாண அபிவிருத்திக்கும் நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் உதவி செய்யுமென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்னிவார்ட் உறுதியளித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் எச்.இ. டோர்வார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 01 மணித்தியாலத்துக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நெதர்லாந்து தூதுவர் ஆராய்ந்துள்ளார். சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் யாழ். மாவட்டத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினைகள் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு இரணைமடுவில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டுமென்று தெரிவித்தற்கு, அவ்வாறு தண்ணீரை இங்கு கொண்டு வருவதற்கும், எவ்வளவு காலம், எவ்வளவு நிதி தேவைமேலும் படிக்க…


அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிகள்: இன்று முதல் அமுல்

ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்புகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வருகிறது. அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் நேற்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். குறித்த மூன்று வர்த்தக பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு வரி விலக்களிக்கப்படாது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, உருக்கு பொருட்கள் மீது 25 வீதம் மற்றும் அலுமினிய பொருட்கள் மீது 10 வீத இறக்குமதி வரி இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு ‘உறுதியான மற்றும் சரிவிகித அளவிலான’ நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல்; மக்ரோன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் மிகவும்மேலும் படிக்க…


யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் ஜமுனா எரிக்குள் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வீதி நல்லூரை சேர்ந்த 27 வயதான மருதமுத்து கோவிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சித்த சுவாதீனமற்றவராக காணப்பட்ட இவர் நேற்று முன் தினம் வீட்டில் இருந்து காணாமல் போன நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


சமூக ஊடகங்கள் அதிகம் என் மீதே சேறு பூசுகின்றன…

சமூக ஊடகங்கள் தம்மீதே அதிகளவில் சேறு பூசுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களினால் மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்ட ஒர் நபராக தாம் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களின் வழியாக தம்மீது அவதூறு பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இவ்வாறு எவேரேனும் சேறு பூசியிருந்தால் அவர்கள் நீண்டகாலம் இருந்திருக்க மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்

தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (வெள்ளிக்கிழமை)37 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம்வரை மாறாது உள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இச் சம்பவமானது தமிழ் மக்களின் அடையாம், அறிவு மற்றும் பண்பாடு போன்றவற்றை இல்லாதொழிக்கும் தமிழ் இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள். இந்நூலக அழிப்பின் போது பல நூற்றாண்டு பழமைவாய்ந்த தமிழ், ஆங்கில நூல்களும் மற்றும் ஓலைச்சுவடிகளும் அழிந்து போயின. அழிந்த புத்தகங்கள் எவை? இவற்றில் கிடைப்பதற்கு அரிதான ஐசாக் தம்பையா நன்கொடை கொடுத்த இலக்கியம், சமயம், மொழியியல் தத்துவம் தொடர்பாக சுமார் 6000 நூல்களும், இந்திய வர்த்தகர் ஒருவரால் கொடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சத்தியசோதனை, 1672 ஆம்மேலும் படிக்க…


பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தல்

தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி, மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. கடந்த தசாப்த காலங்களில் இச்சட்டத்தினூடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரிப்பது மாத்திரமின்றி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவதும் தமது ஆணைக்குழுவின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”தயாரிக்கப்பட்டுவரும் தேசிய பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். இந்த சட்டமூலங்கள் விதிமுறைகளுக்கு ஏற்றமேலும் படிக்க…


உதவுவோமா – 29/05/2018


சுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 28/05/2018


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !