Saturday, May 26th, 2018

 

பிரேசில் நாட்டு சாரதிகள் வேலைநிறுத்தம்: இராணுவம் தலையீடு

பிரேசில் நாட்டில் தேசிய அளவில்  இடம்பெற்ற கனரக வாகனச் சாரதிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இராணுவம் தலையிட்டு நிறுத்தி வருகின்றது. பிரேசில் நாட்டின் தொழில் நகரம் சொவ்போவ்லோவில்  வாகனங்களின் வேலைநிறுத்த போராட்டம் 5 நாட்கள் நடந்துவருகின்றது. குறித்த இந்தப் போராட்டம் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்படுகிறது. கனரக வாகனங்களை இயக்காமல் வீதிகளில் நிறுத்தி வைத்துப் போராட்டம் நடத்தியமையினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தினை நிறுத்துவதற்காக இராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் சொவ்போவ்லோ  நகரில் அவசரநிலை பிரகடன உத்தரவை பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


யேமன் புயலில் 7 பேர் உயிரிழப்பு

யேமனில் சொகோட்ரா தீவில் மெகுனு என்ற புயல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேரைக் காணவில்லை எனத் தெரியவந்துள்ளது. யேமனில் தெற்கு யேமனுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே அமைந்துள்ள சோகோட்ரா தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மெகுனு புயல் தாக்கியது. இந்நிலையில் புயல் கரையைக் கடக்கும் போது பயங்கரமாக காற்று வீசி பலத்த மழையும் கொட்டியது. இதன்போது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு படகுகள் மூழ்கியதாகவும் சொகோட்ரா தீவில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில்  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த நான் தயாரில்லை -அமைச்சர் மனோ கணேசன்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தரவும், ஏனைய பிரதான பிரச்சினைகளுக்கு முடிவை தரவும் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு. ஆனால், இப்படி சொல்லி ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடு இன்று ஒரு நம்பிக்கையற்ற கட்டத்தை அடைந்துள்ளது. புதிய அரசியலமைப்பு செயற்பாட்டின் பிரதான குழுவான வழிகாட்டல் குழு சும்மா கூடி கலையும் குழுவாக ஏறக்குறைய மாறி விட்டது. இதுவே இன்றைய உண்மை. இந்த உண்மைக்கு, புறம்பான போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த என்னால் முடியாது. அத்தகைய ஒரு முயற்சிக்கு துணை போகவும் முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது, தாம் பாராளுமன்றத்தில் முன்வைக்க போகின்ற, நிறைவேற்று அதிகாரம்மேலும் படிக்க…


தூத்துக்குடி படுகொலையின் எதிரொலி! – பழனிசாமியின் வீடு முற்றுகை

தூத்துக்குடி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று (சனிக்கிழமை) போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. சென்னை கிரீன்வேஸ் பகுதியில், புரட்சிகர இளைஞர் கழகத்தினரின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சினைப்பர் துப்பாக்கியைக் கொண்டு 13 பேரை எடப்பாடி அரசாங்கம் சுட்டுக்கொன்றுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். அத்துடன் ‘மக்களைச் சுட்டுக்கொன்ற எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்’ என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அண்மையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் தமிழக பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். அதில் 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு முதலமைச்சர் தலைமையிலான அரசே காரணமென தமிழகம் முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே இந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

”வடக்கு மாகாணத்தில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு. அவற்றினைத் தடுக்கும் உரிமை வேறு எவருக்கும் கிடையாது” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் இன்று (சனிக்கிழமை) யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது, கடந்த வாரம் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தினத்தன்று மாகாண கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டமை குறித்து தென்னிலங்கையில் பரவும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளால், மாகாணங்களுக்கு காணப்படும் சிறு அதிகாரங்களையும் குறைத்து விட்டு அதனையும் பறிக்க முயற்சிக்கின்றார்களோ தெரியாதென முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்தோடு, இவ்வருட நினைவேந்தலில் சில பிரச்சினைகள் உருவானதை ஏற்றுக்கொண்ட முதல்வர், அடுத்த வருடம் மக்கள் அனைவரும் இணைந்து செய்யக்கூடிய வகையில் அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளைமேலும் படிக்க…


பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் செரீனா – வீனஸ் ஜோடிக்கு வைல்ட் கார்ட் சலுகை!

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனைகளும், சகோதரிகளுமான செரீனா – வீனஸ் வில்லியம்ஸ் ஜோடிக்கு ‘வைல்ட் கார்ட்’ சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செரீனா – வீனஸ் ஜோடி, தகுதி சுற்று போட்டிகளில் விளையாடமால் நேரடியாக பிரதான சுற்று போட்டியில் களமிறங்கும். இந்த ஜோடி, இரண்டு வருடங்களுக்கு பிறகு கைகோர்த்துள்ளதால், அவர்களின் விளையாட்டை காண இரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர். செரீனா – வீனஸ் ஜோடி, கடந்த 1999ஆம் ஆண்டு மற்றும் 2010ஆம் ஆண்டு பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது. எனினும், இந்த ஜோடி 2013ஆம் ஆண்டு முதல் சுற்றிலும், 2016ஆம் ஆண்டு மூன்றாவது சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறியது. இருவரும் இணைந்து 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தையில், நாமே வெற்றி பெறுவோம் – ட்ரம்ப் நம்பிக்கை

வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தையில், தாமே வெற்றி பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அதன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவிடையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “கனடாவை சமாளிப்பது பெரும் சிரமமான காரியமாக உள்ளது. அத்துடன் நான் எதனைப் பற்றி பேசுகின்றேன் என்பதனை மக்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள். தனது இந்த நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் வாகன உற்பத்தி துறையினரும், அதன் பணியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இந்த பேச்சுவார்த்தைகளின் போது கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளை சமாளிப்பதும், அவர்களுடன் ஈடுகொடுத்துச் செல்வதும் மிகுந்த சிரமமான காரியமாக உள்ளது. அவர்களின் வேண்டுகோள்களையிட்டு நாம் மகிழ்ச்சிமேலும் படிக்க…


பொருளாதாரத் தடை விதிப்பது வியாபாரக் கொள்கைகளில் ஒன்றாகிவிட்டது: புட்டின்

சிலநாடுகள் தமது வியாபாரக் கொள்கைகளில் ஒரு பகுதியாக பொருளாதாரத் தடைகளை விதிப்பதனைக் காணமுடிகின்றது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புட்டின் நேற்று (வெள்ளிக்கிழமை) St. Petersburg இல் இடம்பெற்ற ஒரு பொருளாதார மாநாட்டில் பேசும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், உலகளாவிய ரீதியில் பாதுகாப்புவாதம் அதிகரித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். கடந்த 2016 இற்கான அமெரிக்க தேர்தல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சில தீய செயல்களுக்காக மொஸ்கோவிற்கு ரஷ்ய ஜனாதிபதி தண்டனை விதித்தமைக்காக இவ்வருடம் ஏப்ரல் மாதம் வொஷிங்டன் 24 ரஷ்யர்களுக்குப் பொருளாதாரத் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.


உலக சக்திகளை இணைத்தால் சிரியாவிற்கு அரசியல் தீர்வு: மக்ரோன்

பிரான்ஸ் மற்றும் ரஷ்யா இணைந்து உலகசக்திகளை ஒன்றிணைக்க விரும்புவதாகவும் அப்படியொரு முறைமை மூலம் சிரியாவிற்கு அரசியல் தீர்வு கிடைக்கும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், பிரித்தானியா, ஜேர்மனி, ஜோர்தான், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகியவற்றை உள்ளடக்கி பிரான்சினால் தொடங்கப்பட்ட “சிறு குழு”வின் முயற்சிகளையும் ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் போன்றவற்றின் அஸ்டனா செயற்பாட்டால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிரியாவின் அகதிகள் உட்பட அணைத்து சிரியர்களையும் உள்ளடக்கிய தேர்தல்களை நடத்த இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகாலமாக சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு ஆதரவளித்திருந்த சர்வதேசக் குழுக்கள் இதுவரையில் சிறிய உள்நாட்டுப் போருக்கான அரசியல் தீர்வினைக் கண்டறியவில்லை.


காணிகளை விடுவிக்க படையினர் பணம் கேட்கிறார்கள் – தாருங்கள் காணிகளை என மக்கள் கேட்கிறார்கள்!

மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் பணம் கேட்கிறார்கள் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான பெருமளவு பணத்தை மீள்குடியேற்ற அமைச்சு படையினருக்கு கொடுப்பதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் பணம் கேட்கிறார்கள். மக்கள் தங்கள் காணிகளை தாருங்கள் என கேட்கிறார்கள். இந்த இக்கட்டான நிலையில் பணத்தை கொடுத்து மக்களுடைய காணிகளை பெற்று மக்களிடம் கொடுக்கிறோம். இராணுவத்திடமிருந்து காணிகளை பெற்று மக்களிடம் அதனை வழங்குவதற்காக மீள்குடியேயற்ற அமைச்சு பெருமளவு நிதியை இராணுவத்திற்கு வழங்குவதாக முதலமைச்சர் கூறிய கருத்து உண்மையான கருத்து. அதில் எந்தவொரு பிழையும் இல்லை. ஆனால் இராணுவம் மக்களுடைய நிலத்தில் பாரிய கட்டிடங்கள் மற்றும் தளபாடங்களைமேலும் படிக்க…


கோட்டாபயவிற்கு பணம் வழங்கிய பொன்சேகா?

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது எனது வீட்டுக்கு வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒரு தொகைப் பணத்தினை வழங்கியதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெவிருந்த நிலையில் கட்டுப்பணத்தினைச் செலுத்துவதற்கும் பல தேர்தல் செலவுகளுக்கும் நானே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒரு தொகைப் பணத்தினை வழங்கியிருந்தேன். எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவதாயின் அவருக்குரிய வேட்பாளர் கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்குத் தயாராக இருக்கின்றேன். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் எனது வீட்டுக்கு வந்தமேலும் படிக்க…


தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவோம்: கமல்ஹாசன்

தூத்துக்குடி போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்கள் நீதி மய்யம் எடுக்கும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு இதுவரை தமிழகத்திலோ இந்தியாவிலோ கேட்டும், அறிந்தும் இல்லாத ஒரு நிகழ்வு. மனித உயிர்களை அதிக எண்ணிக்கையில் காவு வாங்கிய ஒரு துயரச்சம்பவம் அண்மைக் காலத்தில் நடந்தேறியது இல்லை. இந்த சம்பவம் குறித்து எந்த விளக்கமும் அளிக்காத தமிழக அரசின் மௌனம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவே உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் ‘மய்யம் விசில்’ செயலிக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் எழுப்பும் கேள்விகளுக்கு, தமிழகமேலும் படிக்க…


சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றக் காவல் – வேல்முருகனை புழல் சிறையில் அடைக்க உத்தரவு

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து எதிர்கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும்  பெரும்பாலான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் நேற்று தடையை மீறி தூத்துக்குடி சென்றதற்காக கைது செய்யப்பட்டு, மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்நிலையில் விழுப்புரம் போலீசார் இன்று தூத்துக்குடி சென்று மண்டபத்தில்மேலும் படிக்க…


சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் ரியல்மாட்ரிட்-லிவர்பூல் இன்று மோதல்

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் – லிவர்பூல் அணிகள் இன்று இரவு கீவ் நகரில் மோதுகின்றன. இந்த சீசனுக்கான ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)- லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் இன்று இரவு கீவ் நகரில் மோதுகின்றன. ரியல்மாட்ரிட் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கோப்பைக்கு முன்பாக நடக்கும் மிகப்பெரிய போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: தகுதி சுற்றுடன் குணேஸ்வரன் வெளியேற்றம்

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார். பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் தகுதி சுற்றில் விளையாடி வந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் இலியாஸ் மெரை (சுவீடன்) சந்தித்தார். இதில் குணேஸ்வரன் 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்று பிரதான சுற்றை எட்டும் வாய்ப்பை இழந்தார். பிரெஞ்ச் ஓபன் பிரதான சுற்று நாளை தொடங்குகிறது.


அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டங்களை மாற்ற மக்கள் பேராதரவு

அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், கருக்கலைப்புக்கு ஆதரவாக பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவர் சவிதா 2012ம் ஆண்டு உயிரிழந்தார். இந்த விவகாரம் அயர்லாந்து மக்களிடையே  கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அத்துடன், கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தினர். இதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது. அதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினைமேலும் படிக்க…


சீரற்ற காலநிலையில் மாற்றம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள நீர் நிலைமை அபாயம் நிலவிய களனி, களு, கிங், நில்வளா கங்கைகள் மற்றும்  மகா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 9 மணித்தியாலங்களில் நீரேந்தும் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் மாலா அலவத்துகொட தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 20 மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 50 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 3 ஆயிரத்து 841 வீடுகள் பகுதி அளவிலும், 64 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 13 ஆயிரத்து 199 குடும்பங்களை சேர்ந்த 53 ஆயிரத்து 616 பேர் 231மேலும் படிக்க…


அனுமதியின்றி இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை?

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை பல முறை அனுமதி இல்லாமல் இயங்கி வந்துள்ளமை குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “இதற்கு முன்பும் 1998 நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், 23.3.2013, 9.4.2018 ஆகிய திகதிகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23-ந் திகதி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஆலையை மூட உத்தரவிட்டால், மற்றொரு அமைப்பு மூலமாகவோ அல்லது மேல் முறையீடு மூலமாகவோ அனுமதி பெற்று ஆலையை நடத்தி வந்துள்ளனர். அது மட்டும் அல்ல அனுமதி இல்லாத நேரங்களில் கூட ஆலையை நடத்திய வரலாறும் உண்டு. அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையின் மாசுமேலும் படிக்க…


கனடாவின் ரொரண்டோவில் குண்டுவெடிப்பு – 15 பேர் காயம்

கனடாவின் ரொரண்டோ மாகாணத்தின் மிசிஸாயுகா பகுதியில் உள்ள இந்திய விடுதி; ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று  முன்தினம்  இரவு  ஏற்பட்ட இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகத்துக்கிடமைன முறையில் இருவர் குறித்த விடுதியினுள் சென்றமை தெரிய வந்துள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


இறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம்! – பா.துவாரகன்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக்  கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம். முள்ளிவாய்க்கால் என்பது 1956 முதல் தமிழர்கள் சந்தித்த மனிதப்பேரவலத்தின், தமிழர்களின் அழிவின் ஒரு குறியீடு. முள்ளிவாய்க்கால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த இடம்! இறந்தவர்களை நிவனவு கூர்ந்து வணங்குவது மனிதாபிமானம் மிக்கததெனவே உலக நீதி கருதுகின்றது. இந்த மனித பேரவலம் நிகழ்ந்த வன்னிப் பிரதேசத்தில் பணம் சம்பாதிக்க வந்த ஹற்றன் நசனல் வங்கியின் ஊழியர்கள் அப்பகுதி மக்களின் துயரத்தில் பங்குகொள்வது மனிதாபிமானம் மிக்க செயல், போற்றுதற்குரியது. இறந்தவர்களை நினைவு கூர்ந்தமைக்காக வங்கியின் ஊழியர்களை பணிநீக்கம் செய்தமையானது நாம் எத்தகைய மனிதாபிமானம் அல்லது உயிர்வாழ்வதற்கான உரிமையுள்ள நாட்டில் வாழ்கின்றோம் என்ற சிந்தனையை மீளவும் தோற்றுவிக்கின்றது. குறித்த வங்கியின் தலைமைப்பீடம் முகாமையாளர் ஒருவரையும் உத்தியோகத்தர் ஒருவரையும் பணிநீக்கம் செய்த பின்னர் வெளியிட்ட ஊடக அறிக்கையானது அது தன்னுடைய வாடிக்கையாளர்கள் தன்னைவிட்டு விலகுவதால் தனது பண வருவாய்மேலும் படிக்க…


ஜனாதிபதி வேட்பாளர் தேவை: மஹிந்த அறிவிப்பு!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேடிக்கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மல்வத்து பீடத்தின் மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்று சந்தித்தன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அடுத்து நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். விரைவில் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளரை அறிவிப்போம். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நானும் தேடிக் கொண்டிருக்கின்றேன், உங்களிடமிருந்தும் இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பார்க்கின்றேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு கூட்டு எதிரணியிலிருந்து போட்டியிடுவதா அல்லது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்புமேலும் படிக்க…


திருமண வாழ்த்து – கார்த்திக் & சபினா (26/05/2018)

தாயகத்தில் கைதடியை சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் திரு.திருமதி.மகாலிங்கம் செல்வராணி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கார்த்திக் அவர்களும் தாயகத்தில் கைதடியை சேர்ந்த சுவிஸில் வசிக்கும் சந்திரன் விமலா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபினா அவர்களும் 25ம் திகதி மே மாதம் வெள்ளிக்கிழமை நேற்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள். திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கார்த்திக் சபினா தம்பதிகளை வாழ்த்துவோர் அன்பு அப்பா, அம்மா, மாமா,மாமி,அப்பம்மா, அம்மம்மா ,அக்காமார், அத்தான்மார்,தங்கைமார், தம்பிமார், அண்ணாமார், அண்ணிமார், மாமனார், அத்தைமார், மச்சாள்மார், மச்சான்மார், சித்தப்பாமார், சித்திமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். 25ம் திகதி மே மாதம் வெள்ளிக்கிழமை நேற்று  திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட கார்த்திக் சபினா தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைவரும் மற்றும் அன்பு நேயர்களும் எல்லாமேலும் படிக்க…


மண்ணுக்காக போராட சென்ற ஸ்னோலின், வாயில் சுடப்பட்டு இறந்த பரிதாபம்..! கதறும் குடும்பம்.


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அமைதி திரும்ப, அரசு செய்ய வேண்டியது என்ன?


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !