Tuesday, May 22nd, 2018

 

வன்முறை மற்றும் பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினிகாந்த்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 5 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.மேலும் படிக்க…


ராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை! – அசாத் சாலி

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகளுக்கு காரணமாக அமைந்த ராஜபக்ஷாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு திராணியில்லையென கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றஞ்சுமத்தியுள்ளார். அத்தோடு, கடந்த மூன்று வருட காலமாக ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் வேலையையே அரசாங்கம் செய்து வந்துள்ளதென்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்தோடு, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மிகவும் மோசமான ஒரு அரச அதிகாரியாகவும் வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியவருமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தார். எனினும், தன்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென தெரிந்துகொண்டு, தன்னை வீழ்த்தும் செயற்பாடாக மங்கள பொய்கூறியுள்ளதாக நேற்று முன்தினம் பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கோட்டா குறிப்பிட்டிருந்தார். இவ்விடயம் தொடர்பாகமேலும் படிக்க…


பிரதி சபாநாயகராகிறார் அங்கஜன் ராமநாதன்?

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைகளைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உள்ளடங்கலாக 16 பேர் பதவி விலகியிருந்தனர். நல்லாட்சியில் பிரதி சபாநாயகர் பதவியை வகித்துவந்த திலங்க சுமதிபாலவும் இவர்களுள் ஒருவர். இந்நிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு வேறொருவரை நியமிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினர் கோரியிருந்த போதும், திலங்க சுமதிபாலவே அப்பதவியில் நீடிக்க வேண்டுமென கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்த்தரப்பில் அமர்ந்த சுதந்திரக் கட்சியின்மேலும் படிக்க…


அரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா?- கைதிகள் அமைப்பு சந்தேகம்

யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் உயிருடன் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற யுத்த வெற்றியின் ஒன்பதாவது ஆண்டு நினைவுத் தினத்தின்போது, தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லையென அரசாங்கத் தரப்பின் கருத்தானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் சிறையில் இதுவரை காலமும் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கைதிகள் உண்மையில் இன்று உயிரோடு இருக்கின்றார்களா என்பதில் தற்போது மக்கள் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஆட்சியிலுள்ள நல்லாட்சி அரசாங்கம் அரசியல் கைதிகள் தொடர்பில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை எனவும் சிறைக் கைதிகள் அமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது. அரசாங்கம் தெற்கிற்கு ஒரு நீதியையும்மேலும் படிக்க…


ஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது!

ஹவாய் தீவின் கிலாயூயா எரிமலையின் சீற்றம் காரணமாக, அங்குள்ள மின் உற்பத்தி நிலையமொன்றை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹவாய் தீவில் பெரும் சீற்றத்துடன் வெளியாகிவரும் எரிமலை குழம்பு தற்போது புவிவெப்ப மின் உற்பத்தி ஆலையை நோக்கி நகர்ந்து வருகின்றது. இந்நிலையில், நச்சு வாயுக்களின் கட்டுப்பாடற்ற வெளியீட்டை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கிலாயூயா எரிமலை வெடிப்பினால் எதிர்நோக்கவுள்ள புதிய ஆபத்தாக இது அமைந்துள்ளது. உலகின் மிகவும் செயற்பாட்டிலுள்ள எரிமலைகளில், நூற்றாண்டுகளில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ள எரிமலை வெடிப்பாக இது அமைந்துள்ளதாக புவியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கிலாயூயா எரிமலையிலிருந்து வெளியாகிவரும் எரிமலை குழம்பு அண்மையில் குறித்த மின் உற்பத்தி ஆலையிலிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள ஹவாயின் பிரதான 137 நெடுஞ்சாலையை கடந்து கடலுடன் கலந்திருந்தது. இதனால் அங்கு அமில வாயு வெளியாகி பெரும்மேலும் படிக்க…


மீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா

யாருக்குமே பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்ததென, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்படி கூறியுள்ளார். கர்நாடகாவில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதாக, பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பா.ஜ.க. மீது நம்பிக்கையுள்ளதால் தான், கர்நாடகா மக்கள் பெரும்பான்மையான வாக்குகளை தமக்களித்துள்ளதாக கூறினார். அத்தோடு கர்நாடகாவில் அனைத்து உரிமைகளும் பா.ஜ.க.விற்கு உள்ளதென்றும், காங்கிரஸ் கட்சி தோல்வியை கொண்டாடி வருவதாகவும் கூறிய அமித்ஷா சாதி மற்றும் மத அடிப்படையில் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சி முயற்சித்ததாக குற்றம்சாட்டினார். இதேவேளை இருகட்சி கூட்டணி சேர்ந்து பெரும்பான்மையென கூறுவது நியாயமற்றதென்றும், மக்கள் அளித்த வாக்குகளின்படி பெரும்பான்மையை பெற்ற பா.ஜ.க.விற்கே கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் அதிகாரமுள்ளதென்றும் கூறினார். மேலும், அவ்வாறில்லையேல் இரு கட்சிகளும் அதிக பெரும்பான்மையை நிரூபிக்க தவறுவதால், மீண்டும்மேலும் படிக்க…


இலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்!

எதிர்வரும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தொடர்பான விடயங்களை உள்ளடக்கி அதன் மூலம் அழுத்தம் கொடுக்கப் போவதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். தமது கட்சியான தொழிற்கட்சியின் கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் நலன்சார் விடங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை விடயத்தை உள்ளடக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் ஹைட் பார்க் மைதானத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், பிரத்தானியாவின் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். இதன்போதே ஜெரமி கோர்பின் மேற்குறித்த விடயத்தை தெரிவித்தார். மனித உரிமையை மீறும் நாடுகள் தொடர்பில் மனித உரிமை பேரவை காத்திரமான நடவடிக்கையை எடுப்பது அவசியமென தெரிவித்த அவர், அவ்வாறான நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் விதிக்க வேண்டுமென வலியுறுத்தினார். அத்தோடு, ஆயுத ஏற்றுமதியையும் நிறுத்த வேண்டும் என்றும்மேலும் படிக்க…


முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்தது என்ன? ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் துளசி

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய யாழ். பல்கலைக் கழகத்திற்கு, ஒரு சிலரின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் கரும்புள்ளி ஏற்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்படாத நிலையில் அங்கு தொடர்ந்தும் நிற்க விரும்பாமலேயே தான் வெளியேறியதாகவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் துளசி தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகளின்போது, முன்னாள் போராளியான துளசி யாழ். பல்கலைக் கழக மாணவர்களினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட செய்தி வெளியாகியதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றுவருகின்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஆதவன் தொலைக்காட்சியின் நிலைவரம் நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே துளசி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் தினம் சிறப்பான முறையில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையிலேயே தங்களுடைய அனைத்து செயற்பாடுகளும் அமைந்திருந்ததாகவும்,  அந்தவகையில் தங்களுடைய எதிர்பார்ப்புமேலும் படிக்க…


அதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38 ஆயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போதே குறித்த  8 பேரும்  உயிரிழந்துள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது. வெள்ளம், மண்சரிவு மற்றும் இடிமின்னல் தாக்கம் ஆகியவற்றில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதிகரிக்கும் அனர்த்தங்களால் இதுவரை 19 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 918 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு களனி, மகாவலி போன்ற கங்கைகளின் நீர்மட்டம் அதியுச்ச கட்டத்தை தாண்டியுள்ளது.மேலும் படிக்க…


துருக்கியில் 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை

துருக்கியில் 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு இந்நாட்டு ஜனாதிபதி ரையிப் எர்டோகனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதிப்புபுரட்சியில் ஈடுபட்;டமைக்காகவே இவ்வாறு ஆயுள்தண்டனையை துருக்கி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.  இந்த இராணுவ சதிப் புரட்சி முயற்சியுடன் தொடர்புபட்டதாகத் தெரிவித்து ஏற்கனவே 23 ஊடகவியலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.   மேலும் இந்த சதிப்புரட்சி முயற்சியுடன் தொடர்புடைய 50, 000 பேர் கைது செய்யப்பட்டதுடன், 150,000 பேரின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இராணுவ உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்து கூட்டு எதிரணியினர் கேள்வி?

இலங்கையின் நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் எதிரொலிகள் கேட்கவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இலங்கை நேரம் பிற்பகல் ஆரம்பமாக உள்ள நாடாளுமன்ற அமர்வில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, மற்றும் இறுதி யுத்தம் குறித்து, ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜிதசேனாரட்ன தெரிவித்த கருத்துக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கூட்டு எதிரணியினர் கேள்விகளைத் தொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே மாதத்தின் இரண்டாம் வார நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகிறது. இதன்போது, பொது மனு தாக்கல்கள், வாய்மூல விடைக்கான கேள்விச் சுற்று, நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் குறித்த விசேட விவாதங்கள் உள்ளிட்ட விடயங்கள் முடிவுற்ற பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், அது குறித்து வடமாகாண சபையின் செயற்பாடுகள், அமைச்சர் ராஜதவின் கருத்துக்கள், பிரதமர், ஜனாதிபதியின் நிலைப்பாடுகள் குறித்தமேலும் படிக்க…


யாழில் இளைஞர்கள் தனியார் பேருந்தை வழிமறித்து தாக்குதல்

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதிக்கு ஏழாலையூடாக பயணித்த தனியார் பயணிகள் பேருந்தை வழிமறித்து இளைஞர்கள் குழு ஒன்று தாக்கியதன் காரணமாக பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி சிதறி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தனியார் பேருந்து நடத்துனருடன், அந்தப் பிரதேச இளைஞர் ஒருவர் முரண்பட்டுள்ளார். இதனை அடுத்து முரண்பட்டவர் தனது குழுவினருடன் இணைந்து, மாலை 6.30 மணியளவில் பேருந்தை மறித்து நடத்துனரை தேடியுள்ளார். அவர் இல்லாத நிலையில் பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி உள்ளதனால் கண்ணாடித்துகள்கள் பயணிகளை தாக்கியுள்ளன. இதனால் அச்சமடைந்நத பயணிகள் பதட்டத்துடன் சிதறி ஓடியுள்ளனர். இது குறித்து சாரதி சுன்ணாகம் காவல் நிலையத்தில் முறைப்பாட்டை அளித்துள்ளார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


துயர் பகிர்வோம் – திரு. சிவசம்பு சிவபாதசுந்தரம் (22/05/2018)

திரு சிவசம்பு சிவபாதசுந்தரம் (ஆஞ்சநேயர் குறோசறி புதுக்கடை) பிறப்பு : 2 நவம்பர் 1958 — இறப்பு : 21 மே 2018 யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவபாதசுந்தரம் அவர்கள் 21-05-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் நல்லம்மா (பிள்ளையார் ஸ்ரோர்- மல்லாவி) தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், கார்த்திகா(கனடா), தர்ஷன்(லண்டன்), ஜனகன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், மகேந்திரன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும், கபிலேஸ், மதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும், சிவமணி(இந்தியா), பாலேந்திரா, திலகவதி, புஷ்பவதி, கலாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஏரம்பு (இந்தியா), இந்திராணி, காலஞ்சென்ற இரத்தினசோதி, செல்வரத்தினம் (SVS), ரஞ்சினி, கமலாம்பிகை, இடபாரூடன், தர்மலிங்கம், அருளாம்பிகை, சோதிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மேலும் படிக்க…


பாட்டும் பதமும் – 388 (16/05/2018)

திருமதி.ரோஜா சிவராஜா, பிரான்ஸ்


பிறந்த நாள் வாழ்த்து – றவி றஜீவன் (22/05/2018)

தாயகத்தில் திருநெல்வேலியைப் பிறப்பிடமாக் கொண்ட Dr. றவி, றஞ்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வன் செல்வன் றஜீவன் (22.05.2018) மேமாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது பிறந்த நாளை லண்டனிலில் உள்ள தனது இல்லத்தில் அப்பா,அம்மா, அண்ணாவுடன் சேர்ந்து அமைதியாகக் கொண்டாடுகிறார். இன்று பிறந்த நாளை கொண்டாடும் செல்வன் றஜீவனை அப்பா, அம்மா, அண்ணா சஞ்ஜீவன், கனடாவில் வசிக்கும் அப்பம்மா, சித்தப்பா, சித்தி, தங்கை, தம்பி மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மாமாமார், மாமிமார், அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், ஜேர்மனியில் வசிக்கும் மாமாமார், மாமிமார், அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், அத்துடன் உடன் பிறவாச் சித்தப்பாமார் சித்திமார், மாமாமார், மாமிமார், அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், தங்கைமார், தம்பிமார், உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் திருநெல்வேலி சிவன் அருளோடும், கருணை உள்ளத்துடனும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு தேக ஆரோக்கியத்துடன் நோய் நொடியில்லாமல் வாழ்க வாழ்க என மனம் நிறைந்து வாழ்த்துகிறார்கள். இன்று பிறந்தநாளை கொண்டாடும் றஜீவனை TRT தமிழ்மேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !