Wednesday, May 16th, 2018

 

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வாய்ப்பு தர வேண்டும் – கவர்னரை சந்தித்த பின்னர் குமாரசாமி பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தனிபெரும் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கூடாது என கவர்னரிடம் வலியுறுத்தியதாக மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்நிலையில், குமாரசாமி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தற்போது கவர்னர்மேலும் படிக்க…


பிறை தெரிந்ததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம் – தலைமை ஹாஜி அறிவிப்பு

பிறை இன்று தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் மாதமான ரமலான் நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், இன்று பிறை தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் தொடங்குவதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் இன்று தெரிவித்துள்ளார்.


சட்டவிரோதமாக நாடு திரும்பியபோது கைதானவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து படகு மூலம் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும், படகை செலுத்திய இருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் மூன்று ஆண்களும் இரண்டு சிறார்களும் அடங்குவதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை

மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மலேசிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 92 வயது நிரம்பிய மஹதிர் முகமது மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில், ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் அந்நாட்டு மன்னர். இதையடுத்து அவர் இன்று விடுதலையானார். அன்வர் இப்ராஹிமின் மனைவி தற்போது மலேசிய துணை பிரதமராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளரை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்

பாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளரை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான டைப் சயீடா ( Diep Saeeda) என்பவர் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  முகநூல் கணக்கின் ஊடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் மேல்வயர்களை அனுப்பி சைபர் தாக்குதல் முயற்சிக்கப்பட்டுள்ளன. மனித உரிமை செயற்பாட்டாளரான டைப் சயீடாவின் செல்லிடப்பேசி தகவல்களை திருடும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   பாகிஸ்தானிய புலனாய்வுப் பிரிவினர் இந்த தாக்குதல்களை நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் உறுதியான ஆதாரங்கள் ஏதுவும் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைக்கப்படவில்லை. பாகிஸ்தானில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது இவ்வாறான சைபர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது.


ஜே.வி.பி நினைவு தினம் அனுஷ்டிக்க அனுமதிக்கும் போது புலிகளை நினைவு கூருவதில் என்ன தவறு? – அமைச்சர் ராஜித

வடமாகாண சபையால் எதிர்வரும் 18ம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், அங்கு கொலை செய்யப்பட்டவர்கள் எமது மக்களே என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டது பயங்கரவாதிகள் மட்டுமல்ல என்றும், பயங்கரவாதிகளை மாத்திரம் கொலை செய்த இராணுவம் உலகில் எங்கும் இல்லை என்றும் அவர் கூறினார். இதே வேளை வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவித்த ஜேவிபியினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது, பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட அமைப்பு எனவும், ஆனால் ஜேவிபியினர் அவ்வாறு இல்லை என தெரிவித்த ஊடகவியலாளர்மேலும் படிக்க…


முள்ளி வாய்க்காலை நோக்கிப் புறப்பட்ட தீப ஊர்தி!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீப ஊர்தி இன்று (புதன்கிழமை) முள்ளிவாய்க்காலை நோக்கிப் புறப்பட்டது. வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று நல்லூரை வந்தடைந்த குறித்த ஊர்திக்கு வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர். குறித்த அஞ்சலி நிகழ்வில் வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சின் ஊடகப் பேச்சாளர் துளசி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இளைஞர்களால் ஒழுங்கமைத்து நடத்தப்படும் தீப ஊர்திப் பவனி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைவதுடன், தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களின் நினைவாக இந்த ஊர்திக்கு அஞ்சலி செலுத்துமாறு தாயக மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.


ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – தூதர்களை திரும்ப பெற்றது பாலஸ்தீன அரசு

அமெரிக்கா தனது புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தூதர்களை திரும்ப பெறுவதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன், கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது. கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், இவான்காவின் கணவர்மேலும் படிக்க…


காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு: இஸ்ரேல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம்

காசா எல்லையில் 59 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படைகள் கொன்று குவித்தன. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன், கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது. கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இது உலக அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில், அறிவித்தபடி அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க…


தென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா

அமெரிக்கா, தென்கொரியா இணைந்து நடத்திய ராணுவ பயிற்சி காரணமாக இன்று நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. கொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன. கடந்த மாதம் 27-ந் தேதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். “கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக ஆக்குவதற்கு வடகொரியா எடுக்கிற முக்கிய நடவடிக்கைகள் அர்த்தம் உள்ளவை என்று தென், வட கொரியா ஒப்புக்கொண்டு உள்ளன. இதில் இருமேலும் படிக்க…


வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

அயர்லாந்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. அயர்லாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை கடந்த வருடம் பெற்றது. அதன்பின் முதல் டெஸ்டை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட முடிவு செய்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் கடந்த 11-ந்தேதி டப்ளினில் தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் பாகிஸ்தானை 350 ரன்களுக்கு மேல் தாண்டவிடாமல் பார்த்துக் கொண்டது. ஆல்அவுட் ஆக மனமில்லாத பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னி்ங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் அயர்லாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. கே ஓ’பிரைன் அதிகபட்சமாக 40மேலும் படிக்க…


ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி: இந்தியா-சீனா இன்று மோதல்

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது. டோங்கா சிட்டி: தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இருந்தது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது


மகனின் பரீட்சை தோல்வியை விருந்துடன் கொண்டாடிய தந்தை

மத்தியபிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு தந்தை தடபுடல் விருந்து அளித்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் டிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ். கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் அன்சு. இவர், 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இதன் முடிவு நேற்று வெளியானது. அதில், அன்சு தோல்வி அடைந்தார். இதையறிந்த அன்சு மனவேதனை அடைந்தார். தனது தந்தை என்ன சொல்வாரோ? என்ற கவலையுடன் தந்தையை சந்திக்க சென்றார். அப்போது தந்தை சுரேந்திரகுமார் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை. மகனை கட்டித்தழுவி அவருக்கு இனிப்பு ஊட்டினார். தந்தையின் செயல்பாடு அன்சுவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுரேந்திரகுமார் இதோடு விடவில்லை. மகனின் பரீட்சை தோல்வியை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக அன்சுவுடன் படித்த மாணவர்கள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் எனமேலும் படிக்க…


பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது- 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 8 லட்சத்து 66,934 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. காலை 9.30 மணிக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசந்தராதேவி, தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ww.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளைமேலும் படிக்க…


இலங்கை புறக்கணித்தால் சர்வதேச வழக்கின் மூலம் உரியதீர்வு பெறப்படும் – ஜஸ்மின் சூக்கா

காணாமல்போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான புறக்கணிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் ஜஸ்மின் சூக்கா மேற்கொண்ட உரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வேறு வழியில்லாமல் இராணுவத்திடம் சரணடைந்த 280 பேரின் பெயர்களும் புகைப்படங்களும் அவர்கள்  தொடர்பான விபரங்களும் ITJP என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் காணாமல்போனோர் அலுவலகம் தனது விசாரணைகளை ஆரம்பிக்கும்‍போது இவர்களின் நிலைப்பாடு குறித்தும்மேலும் படிக்க…


விபத்தில் முதியவர் பலி : வவுனியாவில் சம்பவம்

வவுனியா,  தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் முதியவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து தாண்டிக்குளத்திற்கு துவிச்சக்கரவண்டியில் சென்ற 60 வயது மதிக்கத்தக்க வயோதிபரை கன்டர் ரக வாகனமொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளதாகவும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார், வயோதிபரின் சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.


தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுங்கள் – ஜனநாயக போராளிகள் கட்சி

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலியையும், துயரையும் தமிழ் மக்கள் சுமந்து நிற்கின்ற இந்த மே மாதத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து தர வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை அக்கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் இக்காலத்தில் அதிக சூடு பிடித்து காணப்படுகின்றது. தமிழீழ விடுதலை போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழினமுமே பங்கெடுத்து இருந்தது என்பதுதான் உண்மை. அப்படியிருக்க அவ்விடுதலைப் போராட்டத்தின் பெயரால் சில நூற்றுக்கணக்கானோர் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பது அநீதியும், இயற்கை நீதிக்குப் புறம்பான விடயமும் ஆகும் அதே நேரத்தில்மேலும் படிக்க…


வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 18 பேர் பலி – 50 பேர் காயம்

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டதுடன் அவ்வழியாக நடந்து சென்றவர்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி பலரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 50 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.


பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளன. பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் மெக்டொனாவ், ஜொனதன் அஸ்வோர்த், பெரி கார்டியன், பெபியன் ஹமில்டன் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்றின் Boothroyd Room ல் இன்றைய தினம் இடம்பெற உள்ள ஒன்பதாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில்  யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் மக்களின் சுயாட்சி உரிமைகள் உள்ளிட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் கருத்துரைக்க உள்ளனர். பிரித்தானிய தொழிற் கட்சி எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதாக தொழிற் கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் சென் கந்தையா தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளமேலும் படிக்க…


கிளிநொச்சி பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தென்கொரியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

தென்கொரியாவின் கொய்கா சர்வதேச அபிவிருத்தி செயல்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கல்வி அமைச்சிற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. இதற்கான கைசாத்து (15.05..2018) கல்வி அமைச்சில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் முன்னிலையில் கல்வி அமைச்சின் செயலாளர் சுணில் ஹெட்டியாராச்சிக்கும் தென்கொரியாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி வீடொங்கூ தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் பனிப்பாளர் நாயகம் ஏ.எம்.பி ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள்;¸ பனிப்பாளர்கள் உட்பட தென்கொரிய நாட்டின் கொய்கா நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதன்படி பளை¸ கண்டாவலை¸ கராச்சி¸ பூநகரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த கிளிநொச்சி இந்து ஆரம்ப பாடசாலை¸ பிரமந்தநாறு மகா வித்தியாலயம்¸ இயக்கச்சி அரசினர் தமிழ்மேலும் படிக்க…


9 வது ஆண்டு முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – பிரான்சு !

9 வது ஆண்டு முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பற்றிய அறிவித்தல் – பிரான்சு (காணொளியை காண படத்தில் அழுத்துக)


முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிரித்திகா பிரபாகரன் (16/05/2018)

டென்மார்க் கேணிங்  நகரில் வசிக்கும் பிரபாகரன் டினிஷா தம்பதிகளின் செல்வப்புதல்வி  பிரித்திகா தனது முதலாவது பிறந்தநாளை 16ம் திகதி மே மாதம்  புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் மகிழ்வோடு கொண்டாடுகிறார். இன்று தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் பிரித்திகா செல்லத்தை அன்பு அப்பா, அம்மா, அன்பு அக்கா பிரவீனா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, பெரியப்பா மதன்,பெரியம்மா துஷி, அக்கா சரண்யா, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கண்ணன் மாமா, சாந்தி அத்தை, மச்சான் அபிஜன், மச்சாள் சமீரா, குட்டி மச்சான் ஆரூஜன்,ஜெர்மனியில் வசிக்கும் சித்தப்பா டிலான்,சித்தி டயானி, அண்ணா ஜேஸ், அக்கா சியானா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடும் பிரித்திகா செல்லம் அனைத்து வளங்களும் பெற்று பார் போற்ற வாழ்கமேலும் படிக்க…


அரச மரக் கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொல குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 8 மில்லியன் பண மோசடி தொடர்பில் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டு பின்னர் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !