Sunday, May 6th, 2018

 

டிரம்பின் கருத்து “வெட்கக்கேடான” ஒன்று – ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்த்

மக்கள் கையில் துப்பாக்கி கொடுத்திருந்தால், 2015ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பிரான்ஸை கோபப்படுத்தியுள்ளது. “டிஷ்யூம்! இங்கே வாருங்கள்!” என்று தன் கையை துப்பாக்கிப் போல வைத்து தாக்குதல் சம்பவத்தை நடித்துக் காண்பித்தார் டிரம்ப். பாரிஸில் 2015-ல் நடந்த துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 2015ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று பாரிஸில் நடைபெற்ற தாக்குதல் குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதாகக் கூறிய பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. டிரம்பின் கருத்து “வெட்கக்கேடான” ஒன்று என தாக்குதல் சம்பவத்தின் போது பிரான்ஸ் அதிபராக இருந்த ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார். என்ன பேசினார் டிரம்ப்? டெக்ஸாசில் தேசிய துப்பாக்கி அமைப்பில் பேசிய அதிபர்மேலும் படிக்க…


ஜப்பானில் பெண்கள் மோதும் காளை விளையாட்டு ..!

ஜப்பானில் பெண்கள் மோதும் காளை விளையாட்டு. ஜப்பானில் காளைகள் மோதும் மைதானத்திற்குள் அதனை கட்டுப்படுத்துவதற்காக முதன்முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அந்நாட்டில் மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜப்பானிலும் ஆண்டுதோறும் பாரம்பரியமாக டோக்யு எனப்படும் காளை சண்டை போட்டி நடைபெறுகிறது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிபோல அல்ல. மாறாக, போட்டி நடைபெறும் சண்டை வளையத்திற்குள் இரண்டு காளை விடப்பட்டு மோத வைக்கப்படும். மாடுகளை உற்சாகப்படுத்தி அதனை மோத வைக்க காளைகளின் பயிற்சியாளர்கள் அனுமதிக்கப்படுவர். காளைகள் கடுமையாக மோதிக் கொள்ளும் என்பதால் உள்ளே செல்லும் பயிற்சியாளர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆண்கள் மட்டுமே போட்டி நடக்கும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதுவம் சரியான பயிற்சி உடையவர்கள், உடல் திறன் உடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் முதன்முறையாக மைதானத்தி்ற்குள் பெண் பயிற்சியாளர்கள் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். யாமகோஷி மாவட்டத்தில் நடைபெற்ற டோக்யுமேலும் படிக்க…


ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு 12 பலி..!

ஆஃப்கனின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் பலியானார்கள், டஜன் கணக்கானோர் காயம் அடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மதிய வழிப்பாட்டுக்காக மசூதியில் திரண்டு இருந்தபோது இந்த குண்டுவெடிப்பானது நிகழ்ந்துள்ளது. அந்த மசூதியானது வாக்காளர் பதிவு மையமாகவும் செயல்படுகிறது. காயமடைந்த சிலர் அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த குழுவும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால், இதுபோன்ற தாக்குதல்களை இதற்கு முன்பு ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்தி இருக்கிறது. அக்டோபரில் நடக்க இருக்கும் ஆஃப்கன் நாடாளுமன்ற தேர்தலுக்காக பல வாக்காளர் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த வாக்காளர் பதிவு மையங்களை குறி வைத்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஏப்ரல் 22ஆம் தேதி காபூலில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 57 பேர் பலியானார்கள். காபூல் தாக்குதலுக்குமேலும் படிக்க…


பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு படுகாயத்துடன் உயிர் தப்பினார்..!

கொலை முயற்சியில் இருந்து இன்று உயிர் தப்பிய பாகிஸ்தான் உள்துறை மந்திரி அஹ்சன் இக்பால் துப்பாக்கிச் சூடு காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டு உள்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் அஹ்சன் இக்பால்(59). ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த இவர், இன்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்குட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, ஒரு வாலிபர் அவரை நோக்கு துப்பாக்கியால் சுட்டார். குறிதவறி பாய்ந்த துப்பாக்கி தோட்டா அஹ்சன் இக்பாலின் வலதுகை தோள்பட்டயை பதம் பார்த்தது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், காயமடைந்த அஹ்சன் இக்பால் நாரோவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


காணாமல் போன துபாய் இளவரசி ஷேய்கா லத்தீஃபா எங்கே..?

காணாமல் போன துபாய் இளவரசி எங்கே என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகளை ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகளான ஷேய்கா லத்தீஃபா, சுதந்திரமான வாழ்க்கை வாழ வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், லத்தீஃபா பயணம் செய்த ஆடம்பரப் படகு இந்தியா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் மீண்டும் துபாய் திருப்பி அனுப்பப்பட்டதாக நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அப்போதில் இருந்தே அவரைக் காணவில்லை. சட்டரீதியான காரணங்களால், இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று துபாய் அதிகாரிகள் கூறினர். வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது லத்தீஃபா பிடிப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் நாட்டின் உளவாளி ஒருவர் மற்றும் ஃபின்லாந்தின் தற்காப்புக் கலை பயிற்றுநர் ஒருவரின் உதவி லத்தீஃபாவுக்கு கிடைத்துள்ளதாகமேலும் படிக்க…


முகேஷ் அம்பானியின் மகளான இஷாஅம்பானிக்கு திருமணம்..!

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும் தொழிலதிபர் அஜய் பிராமாலின் மகன் ஆனந்த் பிராமாலுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரமால் ரியாலிட்டீஸ் நிறுவனரான ஆனந்த் பிராமால், இந்திய வர்த்தக சபையின் இளைஞர் பிரிவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இளம் வயதிலிருந்தே இருவரும் குடும்ப நண்பர்களாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆனந்த் பிரமால், இஷா அம்பானியிடம் தமது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதன் ஓராண்டு நிறைவை இரு குடும்பத்தினரும் ஒன்றாக சந்தித்து கொண்டாடியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் ஆனந்த் – இஷா திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது


அடுத்த ஆண்டு தமிழக மையங்களிலேயே நீட் தேர்வு நடைபெறும் – கடம்பூர் ராஜூ

அடுத்த ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் உள்ள மையங்களிலேயே நடைபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதால், இந்த ஆண்டு நீட் தேர்வில் நிறைய மாணவர்கள் தேர்ச்சி அடைவார்கள் என்றும் கூறினார்.


ஹாங்காங்கில் குழந்தைகளுக்கு பொது இடத்தில் பாலூட்டிய இளம் பெண்கள்

ஹாங்காங்கில் 50க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தங்கள் குழந்தைக்கு பொது இடத்தில் பாலூட்டினர். குழந்தைக்கு பாலூட்டும் தாய்மையின் புனிதச் செயலை செய்வதற்கு யாரைக் கண்டும் அஞ்சவோ வெட்கப்படவோ வேண்டியதில்லை என்று இந்தப் பெண்கள் உறுதியுடன் கூறுகின்றனர். பணியிடங்கள், பொது இடங்களில் உடலைக் காட்டாமல் குழந்தைக்கு பாலூட்ட முடியும் என்பதை இந்தப் பெண்கள் நிரூபித்துக் காட்டினர்.


50கி.மீ. நடைப் பந்தயத்தில் உலகச் சாதனையை முறியடித்த சீனப் பெண்

சீனாவில் நடைபெற்ற உலக நடைப் பந்தயத்தில் மகளிருக்கான 50கிலோமீட்டர் பிரிவில் சீன வீராங்கனை உலகச் சாதனையை முறியடித்துள்ளார். சீனாவின் தாய்சாங் நகரில் உலகத் தடகளச் சங்கக் கூட்டமைப்பு சார்பில் உலக நடைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 50கிலோமீட்டர் பிரிவில் சீனாவின் லியாங் ரூய் 4 மணி 4 நிமிடம் 36நொடிகளில் போட்டித் தொலைவைக் கடந்து முந்தைய உலகச் சாதனையை முறியடித்துத் தங்கப் பதக்கம் பெற்றார். சீனாவின் இன் ஹாங் 4 மணி 9 நிமிடம் 9 நொடிகளில் போட்டித் தொலைவைக் கடந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆஸ்திரேலியாவின் கிளெயிர் டேலன்ட் 4 மணி 9நிமிடம் 33நொடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இதற்கு முன் கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல் நாட்டின் ஐனஸ் ஹென்ரிக்ஸ் 4 மணி 5 நிமிடம் 56நொடிகளில் 50கிலோமீட்டர் தொலைவைக்மேலும் படிக்க…


இளவரசர் லூயிசின் புகைப்படத்தை வெளியிட்ட பிரிட்டன் அரசக் குடும்பம்

பிரிட்டன் அரச குடும்பத்தினர் தங்களது குடும்பத்தின் புதுவரவான இளவரசர் லூயிசின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளனர். பிரிட்டன் இளவரசர் வில்லியம் – கேத் தம்பதிக்கு மூன்றாவது ஆண் குழந்தை கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பிறந்தது. இந்நிலையில், கடந்த மே 2ஆம் தேதி வில்லியம் – கேத் தம்பதியின் 2வது பெண் குழந்தையான சார்லோட்டின் 3வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது, இளவரசி சார்லோட் தனது தம்பியும், பிரிட்டன் ராணி குடும்பத்தின் புதுவரவான லூயிசை உச்சி முகரும் புகைப்படத்தை வில்லியம் – கேத் தம்பதியர் வெளியிட்டுள்ளனர். வில்லியம் – கேத் தம்பதிக்கு 3வது குழந்தையான இளவரசர் லூயிஸ், ராணி எலிசபெத்தின் 6வது கொள்ளுப் பேரனாவார்.


அணு ஆயுதச் சோதனைத் திட்டங்களைக் கைவிட்டதற்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமில்லை – வடகொரியா

அணு ஆயுதச் சோதனைத் திட்டங்களைக் கைவிட்டதற்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இப்போதுள்ள மைக் பொம்பியோ, அந்தப் பொறுப்புக்கு வருமுன் அதிபர் டொனால்டு டிரம்பின் பிரதிநிதியாக வடகொரியா சென்று கிம் ஜாங் உன்னுடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து அணு ஆயுதச் சோதனைத் தளங்களை மூடிவிட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே வடகொரியா அணுஆயுத ஒழிப்புக்கு இணங்கியதாக அரசியல் வல்லுநர்கள் கருதி வருகின்றனர். இதை மறுத்துள்ள வடகொரியா, கொரியத் தீபகற்பத்தை அணு ஆயுதம் அற்றதாக ஆக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை தங்களுக்கு உள்ளதாகவும் அதனாலேயே அணு ஆயுதச் சோதனைத் தளங்களை மூடியதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சி அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கியது போன்று ஒரு தோற்றத்தை அமெரிக்கா உண்டாக்குவதாகவும் வடகொரியா குற்றஞ்சாட்டி உள்ளது.


பிரெஞ்ச் ராணுவத்தை தோற்கடித்த தினத்தைக் கொண்டாடிய மெக்சிகோ

பிரெஞ்ச் ராணுவத்தை தோற்கடித்து விடுதலை பெற்ற 155 ஆவது ஆண்டை மெக்சிகோ நாட்டு மக்கள் வெகு உற்சாகத்துடன் கொண்டாடினர். நெப்போலியனின் தலைமையிலான பிரெஞ்சு ராணுவத்தை, மெக்சிகோ விடுதலைப் படையினர் 1862 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி தோற்கடித்தனர். சின்கோ டி மேயோ (Cinco de Mayo) என்ற பெயரில் இந்த நாளை ஆண்டு தோறும் மெக்சிகோ மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு, பிரெஞ்சு ராணுவ வீரர்களைப் போலவும், மெக்சிகோ விடுதலைப் படையினரைப் போலவும், அந்த மண்ணின் மைந்தர்களுக்கு உரிய ஆடைகளையும் உடுத்தி, பேரணியில் பங்கேற்றனர். மேலும், பிரெஞ்ச் ராணுவத்துடன் நடைபெற்ற இறுதிப் போரை நினைவு படுத்தும் காட்சிகளையும் அரங்கேற்றினர்.


எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல், அவரது  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.   திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவருக்கு எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தந்தை கிருஷ்ணசாமியுடன் அவர் எர்ணாகுளம் சென்றார். அவர் இன்று காலை நீட் தேர்வு எழுதச் சென்றிருந்த நிலையில், தந்தை கிருஷ்ணசாமி விடுதியில் இருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கிருஷ்ண்சாமி உயிரிழந்தார். தேர்வெழுதி முடித்த பின்னர் வெளியே வந்த பின்னரே, தந்தை இறந்த செய்தி மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.


தமிழகத்தில் தமிழ்வாயிலாக தேர்வெழுதுவோருக்கு இந்தியில் வினாத்தாள்: தாமதமாக தேர்வு

மருத்துவப் படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தமிழ்வாயிலாக தேர்வெழுதுவோருக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டதால் ஒரு சில இடங்களில் தாமதமாக தேர்வு நடத்தப்பட்டது. மருத்துவம் மற்று பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 255 மையங்களில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 480 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இதில் 5 ஆயிரத்து 800 மாணவர்கள் எர்ணாகுளம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் தேர்வு எழுதினர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 3 ஆயிரத்து 500 மாணவர்கள் தேர்வெழுதச் சென்றதால் நெல்லையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள 170 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கிய நீட்தேர்வு பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்தது. வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்மேலும் படிக்க…


10 வயதில் திருமணம்…தெருவில் பிச்சையெடுப்பு: உலகை திரும்பி பார்க்க வைத்த பெண்!

மகாராஷ்டிராவில் வரதா எனும் நகரில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி பிறந்தவர் சிந்துதாய். இவரது தந்தை மாடுமேய்க்கும் வேலை செய்து வந்ததால், வறுமையின் பிடியில் இருந்தது இவர்களது குடும்பம். சிந்து தாயை எப்போதும் அவரது அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். நீயெல்லாம் உருப்படமாட்டாய்….எதற்கும் உபயோகம் இல்லாதவள் என்று எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். தாய் இவரைபள்ளி செல்வதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், படிப்பதற்கு தந்தை அனுமதியளித்தார். படிப்பதற்கு சிலேடு வாங்க கூட பணம் இல்லாமல் Bharadi மரத்தின் இலைகளில் எழுதி படித்தார். இருப்பினும் குடுபத்தின் வறுமை தொடர்ந்ததால், இவருக்கு, 10 வயது இருக்கையில் , நவர்கோன் எனும் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஹரி என்கிற ஹர்பாஜி எனும் 30 வயது, மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்த ஆணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபது வயதுக்குள் மூன்று குழந்தைகள்மேலும் படிக்க…


சீனா வருடத்திற்கு 600 கோடி கரப்பான்பூச்சி உற்பத்தி செய்வதன் பின்னணி..

கரப்பான்பூச்சி பலராலும் வெறுக்கப்படக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுவதால், சீன மருந்து தொழிலில் இந்த பூச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. வறுக்கப்பட்ட கரப்பான்பூச்சிகள் சீனாவில் பல ஆண்டுகளாக உண்ணப்பட்டு வருகின்றன. பல ஆசிய நாடுகளிலும் கரப்பான்பூச்சி உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி உற்பத்தியானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. மிகப்பெரிய அளவில் மருந்துகளை தயாரிக்கும் ஒரு மருந்து நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 600 கோடி கரப்பான் பூச்சிகளை தயாரித்து வருகிறது. நாட்டின் தென் மேற்கு நகரமான ஷிசங்கில் இது அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு இருக்கும் கட்டடத்தில் இந்த பூச்சிகள் வளர்க்கப்படுகின்றன என தென் சீன மார்னிங் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. உள்ளே பரந்த வரிசையில் உள்ள அலமாரிகளில் திறந்த உணவு மற்றும் நீர் கொள்கலன்கள் உள்ளன.மேலும் படிக்க…


2015 பாரிஸ் தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை கருத்து – கோபத்தில் பிரான்ஸ்

மக்கள் கையில் துப்பாக்கி கொடுத்திருந்தால், 2015ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பிரான்ஸை கோபப்படுத்தியுள்ளது. “டிஷ்யூம்! இங்கே வாருங்கள்!” என்று தன் கையை துப்பாக்கிப் போல வைத்து தாக்குதல் சம்பவத்தை நடித்துக் காண்பித்தார் டிரம்ப். பாரிஸில் 2015-ல் நடந்த துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். 2015ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று பாரிஸில் நடைபெற்ற தாக்குதல் குறித்த டிரம்பின் கருத்துகளுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதாகக் கூறிய பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.


எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர்

எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்குமாறு திருவாரூர் ஆட்சியருக்கு உத்தரவு கிருஷ்ணசாமியின் உடலை சொந்த ஊர் கொண்டுவருவதற்கு அதிகாரிகள் குழு எர்ணாகுளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது – முதலமைச்சர் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் – முதலமைச்சர்


நீட் தேர்வு எழுதும் மகனுடன் சென்ற தந்தை மாரடைப்பால் மரணம்..! தந்தை இறந்த செய்தி அறியாமல் மகன் நீட் தேர்வெழுதும் சோகம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுதும் மகனுடன் சென்ற கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தலைமைச் செயலருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவு நீட் தேர்வு எழுதும் கிருஷ்ணசாமியின் மகனுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் முதலமைச்சர் உத்தரவு


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சிங்கள மக்களுமா?

முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தினரும் இறந்துள்ளதால் சிங்கள மக்களையும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கு அழைக்க வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளதைப் பார்க்கிறோம். இவ்வாறான செயற்பாடுகளை என்ன செய்ய வேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி தமிழர்கள் வரலாற்றை, தமிழினத்தை வேரோடு சர்வதேசமும் அன்றைய அரசும் இணைந்து மேற்கொண்ட இன அழிப்பு முள்ளிவாய்க்காலில் நடந்தேறியதை அனைவரும் அறிவோம். ஆனால் சுடுகாடாய் ஆக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த இனத்தின் வேர்கள் முளைவிட்டு துளிர் விட்டு நிற்பதை, எம் இனத்தின் வேர்களை அறுக்க நினைத்த முட்டாள்கள்மேலும் படிக்க…


ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் – 1,600 பேர் கைது!

ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் நவால்னி உட்பட சுமார் 1,600 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே, பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி வலியுறுத்தி வருகிறார். இந்த கருத்தை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுமாறு தனது கட்சியினரை அவர் கேட்டு கொண்டுள்ளார். மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அலெக்சி நவல்னி-யை புஷ்கின்ஸ்கயா சதுக்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனர். இந்நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புஷ்கின் சதுக்கத்தில் நேற்று போராட்டத்தில்மேலும் படிக்க…


புதிய மாற்றங்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு லெபனானில் பாராளுமன்ற தேர்தல்

கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு லெபனான் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. இன்று இரவு அல்லது நாளை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல், சிரியாவை அண்டை நாடாக கொண்ட லெபானானில் கடைசியாக 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதன்பின்னர், பிராந்திய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு முறை பாராளுமன்றத்திற்கு நீட்டிப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. 128 இடங்களுக்கான வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது. பல்வேறு மாற்றங்களுடன் இம்முறை தேர்தல் நடப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்களும் வாக்களிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. சாத் ஹரிரி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வசிக்கும் லெபனானில் தற்போது அதிபராக மிச்சேல் அவுன் இருந்துமேலும் படிக்க…


கர்நாடகா தேர்தலில் 5 மந்திரிகள் தோற்பார்கள் – காங்கிரஸ் ஆய்வில் தகவல்

கர்நாடகாவில் சித்தராமையா மந்திரி சபையில் உள்ள 5 மந்திரிகள் தோல்வி அடைவார்கள் என்று காங்கிரஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றவும் போராடி வருகிறது. இதற்காக இரு கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியே கருத்து கணிப்புகள் மற்றும் ஆய்வு பணியை மேற்கொண்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இரண்டு ஆய்வும், மாநில காங்கிரஸ் ஒரு ஆய்வையும் நடத்தியது. இந்த கருத்து கணிப்பில் சித்தராமையா மந்திரி சபையில் உள்ள 5 மந்திரிகள் தோல்வி அடைவார்கள் என்று தெரிய வந்துள்ளது. பிரியங்கார்கே, எம்.பி.படேல், மஞ்சு, ரோசன் பெய்க், வினய் குல்கர்னி ஆகிய 5 மந்திரிகள் வெற்றி பெற மாட்டார்கள் என்று கருத்துமேலும் படிக்க…


ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக் பத்திரிகையாளர் அதிபர் தேர்தலில் போட்டி

2008-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ் மீது இரண்டு ஷுக்களை வீசி சிறை தண்டனை அனுபவித்த ஈராக் பத்திரிகையாளர் மண்டேசர் அல்-ஸைதி அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் தனது கடைசி பயணமாக ஈராக் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். பாக்தாத் நகரில் ஈராக் அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து புஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஈராக்கிய பத்திரிகையாளர் மண்டேசர் அல்-ஸைதி திடீரென எழுந்து தனது ஷூக்களை கழற்றி புஷ்-ஐ குறிவைத்து வீசினார். புஷ் கீழே குனிந்து தாக்குதலில் இருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் அப்போது உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. ஈராக்கில் நடக்கும் எல்லா சீரழிவுக்கும் புஷ்தான் காரணம் என்பதால் ஷூவை வீசினேன் என அல்-ஸைதி தெரிவித்திருந்தார். எனினும், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனைமேலும் படிக்க…


கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களை மரியாதையுடன் அழைக்க வேண்டும்- கமல்ஹாசன்

கட்சியில் உள்ள நிர்வாகிகள், அமைச்சர்களை குறிப்பிட்டு பேசும் போது மரியாதையுடன் பேச வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. இதில் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட பலர் பங்கேற்றனர். இவர்களுடன் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் உரையாடினார். கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:- அரசியலில் ஈடுபடுவதற்கு பெண்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. நமது கட்சியில் இணைய அதிக அளவில் பெண்கள் விரும்புகிறார்கள். எனவே பெண்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு கட்சியினர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மய்யம் விசில் செயலி கட்சிக்கு உதவுவதோடு, தமிழகத்தை சீர்திருத்தம் செய்யவும் பயன்படும்.மேலும் படிக்க…


தொடங்கியது நீட் தேர்வு – கடுமையான சோதனைக்கு பின்னரே மாணவர்கள் அனுமதி

மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வான நீட் இன்று நடைபெற்று வருகிறது. சுமார் 13.26 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம்  ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி.யின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. கடும் சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் மையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏ பிரிவு நுழைவுச்சீட்டுமேலும் படிக்க…


காங்கிரஸ் அல்லாத கர்நாடகாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம் – யோகி

விரைவில் நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி அங்கு  தீவிர பிரச்சாரத்தினை மேற்கொண்டுவருகின்றனர் அரசியல் கட்சியினர். அதிரடியான குற்றச்சாட்டுகளை தங்களது எதிர் தரப்பினர் மீது அதிரடியாக சுமத்திவருகின்றனர் இரு தரப்பினை சேர்ந்தவர்களும். அந்த வகையில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சியின் (பாஜக) வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவருகிறார். நேற்று பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற யோகி, “காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தின் வளர்ச்சியை முடக்க்கிவிட்டதுடன், ஜிகாதி தன்மையுடன் ஆட்சி செய்துவருகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடர்ச்சியாக தன்னிச்சையான போக்குடன் ஆட்சி செய்து ஜனநாயக முறைமைகளை சீர்குலைத்துவருகிறார்” என பேசினார். மேலும், “காங்கிரஸ் அல்லாத கர்நாடகத்தினை உருவாக்குவதே தங்களது இலட்சியம்” எனவும் குறிப்பிட்டார் யோகி. முன்னதாக, யோகி ஆட்சி புரியும் உத்திர பிரதேச மாநிலத்தில் பிஞ்சு குழந்தைகளுக்கு அளிக்க போதிய ஆக்சிஜன் இல்லாமல்மேலும் படிக்க…


விரைவில் வெளியாகிறது வைரக்கண்ணாடிகள் உடைய ஸ்மார்போன்கள்.!

இன்றைய காலக்கட்டத்தில் நமது வாழ்வின் அத்துணை அத்தியாவசிய செயல்களுமே ஸ்மார்ட்போன்கள்,இணையம்,கணினி ஆகியவற்றை முன்னிறுத்தியே நிகழ்கின்றன.அத்தகைய அளவினுக்கு நமது வாழ்வின் ஓர் இன்றியமையாத பொருளாகவும்,நமது ஆறாவது விரலாகவுமே ஆகிப்போய்விட்டன ஸ்மார்ட்போன்கள். முக்கியமாக ஸ்மார்ட்போன்கள் தகவல் தொடர்பு சாதனம் என்கிற நிலை மாறி இப்போது நமது வாழ்வினூடே இரண்டறக் கலந்து தவிர்க்க இயலாத பொருளாக உள்ளன. அத்தகைய ஸ்மார்ட்போன்கள் வைரக்கண்ணாடிகளைக் கொண்டு வெளிவரக்கூடிய வகையில் தயாரிக்கப்படுமெனத் தெரிகிறது. அதுகுறித்த தகவல் கீழே.. ஸ்மார்ட்போன்கள்: நமது வாழ்வினுடைய தவிர்க்க இயலாத பொருட்களாக ஸ்மார்ட்போன்கள் ஆகிப்போனதற்கான காரணம் தொலைத் தொடர்பு கருவி என்பதனைத் தவிர்த்து நொடிப்பொழுதில் நமக்கு தேவையான செயல்களை செயல்படுத்தித் தருகிற கருவிகளாக ஆகிப்போனதுதான்,இன்றைய காலகட்டத்தில் செய்திகளைப் பறிமாறிக்கொள்ள,பணப்பரிவர்த்தனை,மொபைல் பாங்கிங் உள்ளிட்ட அத்துணை செயல்களிலுமே இத்தகைய ஸ்மார்ட்போன்களின் துணை கொண்டே நிகழ்கின்றன-நிகழ்த்தமுடிகிறது. தேவை: மேற்குறிப்பிட பயன்பாடுகள் அத்தனைக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுவதனால் இத்தகையமேலும் படிக்க…


கருக்கலைப்புக்கு எதிராகப் பெருவில் ஆர்ப்பாட்டம்

பெரு, நாட்டின் லீமாவில் குடிமக்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்து கருக்கலைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். பெரு நாட்டவர் ஆயிரக்கணக்கானோர் இணைந்து கருக்கலைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நேற்று (சனிக்கிழமை) நடாத்தியுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்புலமாகக் கத்தோலிக்க மற்றும் ஏனைய கிறிஸ்தவக் குழுக்களின் ஊக்குவிப்பு இருப்பதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. கருக்கலைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட அவர்கள் பெருவின் தலைநகரின் மையப்பகுதியில் முக்கியமான வீதிகள் அமைந்துள்ள பிரேசில் அவன்யுவிலிருந்து Costa Verde எனும் இடம்வரை நடந்தே சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கருக்கலைப்புக்கு ஆதரவான குழு ஒன்றும் தமது சார்பாக ஊர்வலம் ஒன்றினை நடத்தியதாகத் தெரிகின்றது, மேலும் அக்குழுவினர் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையினால், கருக்கலைப்பு அவசியம் வேண்டும் என கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெருநாட்டினைப் பொறுத்தவரையில் கருக்கலைப்பு சட்டவிரோதமானது எனும் நிலை காணப்படுகின்ற போதிலும் பெருவின்மேலும் படிக்க…


131 இலங்கையர்கள் மலேசியாவில் கைது!

அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சி செய்த 131 இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மாற்றியமைக்கப்பட்ட டான்கர் ‘Modified Tanker’ ஒன்றினை நேற்றைய தினம் (சனிக்கிழமை) சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள், 10 சிறுவர்களும் உள்ளடங்குவதாக மலேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், குறித்த தினத்தில் புலம்பெயர்ந்தோரை கப்பலில் வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்த 3 இந்தோனேஷிய நாட்டவர்களையும், 4 மலேசிய நாட்டவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் சிறந்த தலைமைத்துவம் இல்லை – கோட்டாபய ராஜபக்ஷ

நல்லாட்சி அரசாங்கத்தில் சிறந்த தலைமைத்துவம் இல்லாமையே அபிவிருத்தி திட்டங்களின் வீழ்ச்சிக்கு காரணமென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த அரசாங்கத்தில் சிறந்த தலைமைத்துவமோ அல்லது திடமான சிந்தனைகளோ இல்லாமையே ஆகும். அத்துடன் அரசாங்கம் ஆட்சியை தொடர்ச்சியாக கைப்பற்றுவதற்காக அரசியல் பழிவாங்கல்களையே முன்னெடுத்து வருகின்றது. இதனால் நாட்டுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதில் ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது. மேலும் இதற்கு முற்பட்ட அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான சிறந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அபிவிருத்தி திட்டங்கள் பாரியமேலும் படிக்க…


பல்கலைக்கழக கட்டமைப்பில் போதைபொருள் வர்த்தகம்

இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் போதைபொருள் வர்த்தகம் தாக்கம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று சிகரட் கொள்வனவு குறைவடைந்துள்ளதுடன், மதுபானங்கள் கொள்வவும் வீழ்ச்சியடைந்துள்ளது. எமது பல்கலைக்கழக சமூகத்தில் அதிகளவில் போதைப்பொருள் பயன்பாடு காணப்படுகின்றமை வருத்தம் அளிக்கும் விடயமாக உள்ளனது. எமதுக்கு கிடைத்த புதிய தகவலின் படி, பல்கலைக்கழக வளாகத்திற்குள் பல்கலைக்கழக மாணவர்களைப் போல், உடையணிந்து, மாணவர்களுக்கு போதைபொருட்களை விநியோகிப்பதாக அறியமுடிகிறது. புதிய மாணவர்களுக்கு இவை இலவசமாகவும் விநியோகிக்கப்படுகின்றன. நகரங்களில் மாத்திரம் அன்றி கிராமங்களிலும் இன்று போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளன. இந்தநிலையில், அனைவரும் இணைந்தால் இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் ஏதிலிகளாக தங்கியுள்ளவர்கள்..

இலங்கையில் ஏதிலிகளாக 805 பேர் தங்கியுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களைத் தவிர மேலும் 637 பேர் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் பிரஜைகள் எனவும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வீசா மற்றும் எல்லைப்புற நிர்வாகி சமிந்த ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் ஏதிலி தொடர்பான ஆணையாளரின் அறிக்கையின் படி, இந்த ஆண்டின் மார்ச் 31ஆம் திகதி வரையில், இலங்கையில் 805 பேர் உள்ளனர். பாகிஸ்தான் பிரஜைகளே அதிகளவில் உள்ளனர். அவர்களைத் தவிர, மியன்மார், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக தொடர்ந்து செயற்படுவோம் இரணைதீவில் மா.வை!

இரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தொடர்ந்து செயற்படுவோம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா இரணைதீவில் தெரிவித்தார். தமது வாழ்விடங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரணைதீவு மக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்காத நிலையில், கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரது துணையுடன் படகுகளில் ஏறி தமது பூர்வீக வாழ்விடமான இரணைதீவுக்குச் சென்று அங்கு தற்போது தங்கியுள்ளார்கள். அங்கு அவர்களது வாழ்விடங்கள் சிதைவடைந்த நிலையிலும் பற்றைக் காடு பற்றியும் காணப்படுகின்றமையால் அங்குள்ள தேவாலயத்திலும் தேவாலயத்திற்கு அருகிலும் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கு அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. இரணைதீவில் தரையிறங்கி தங்கியுள்ள மக்களைச் சந்திப்பதற்காக உலருணவுப் பொதிகளுடன்மேலும் படிக்க…


ஆபத்துக்கு மத்தியில் கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் தேவன் பிட்டி,அந்தோனியார்புரம் கிராம பெண்கள்.

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி மற்றும் அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களில் உள்ள அதிகலவான பெண்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே கடற்தொழிலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். குறித்த இரு கிராமங்களையும் சேர்ந்த சுமார் 60 ற்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களை தலைமைத்துவமாக கொண்ட பெண்கள் மற்றும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற பெண்கள் உள்ளடங்களாக இவ்வாறு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பெண்கள் அட்டை,நண்டு,இறால் போன்ற கடல் உணவுகளை பிடித்து விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். குறித்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும்,ஆபத்துகளுக்கும் கடலில் முகம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். தமது பிள்ளைகளின் கல்விமேலும் படிக்க…


சட்டவிரோதமான முறையில் மொரிசீயஸ் தீவுகளுக்கு சென்ற இலங்கையர்கள் கைது..

சட்டவிரோதமான முறையில் மொரீசியஸ் தீவுகளுக்கு சென்ற எட்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களினால் இந்த இலங்கையர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள், தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெருந்தொகைப் பணத்தை அறவிட்டு குறித்த இலங்கையர்களை மொரிசீயஸில் நிர்க்கதியாக்கி சென்றுள்ளனர். நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மொரிசீயஸ் அதிகாரிகள் இலங்கையர்களை கைது செய்துள்ளனர். இந்த இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சீசேலஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


நட்புடன் கமலா செல்வராஜ் & விஜய சாமுண்டீஸ்வரி (ஜெமினி சாவித்திரி பற்றி) பாகம் 2


அரசியல் சமூக மேடை – 03/05/2018


நட்புடன் கமலா செல்வராஜ் & விஜய சாமுண்டீஸ்வரி (ஜெமினி சாவித்திரி பற்றி) பாகம் 1


திருமண வாழ்த்து – குகேந்திரன் & சினோஜா (06/05/2018)

தாயகத்தில் பருத்தித்துறை உடுப்பிட்டியை சேர்ந்த குகதாசன்  செல்வராணி தம்பதிகளின் செல்வப்புதல்வன் குகேந்திரன்  அவர்களும் கொக்குவில்லை சேர்ந்த கமலேந்திரன் சுதாஸ்ரீ தம்பதிகளின் செல்வப்புதல்வி சினோஜா அவர்களும் 6ம் திகதி மே மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள். இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட குகேந்திரன் சினோஜா தம்பதிகளை வாழ்த்துவோர் : அன்பு அப்பா, அம்மா,மாமா,மாமி, மற்றும் சுவிஸில் வசிக்கும் அண்ணா அகிலன்  சரிதா குடும்பம், ஜெர்மனியில் வசிக்கும் சின்னண்ணா பிரதீபன்  மோகன ராஜி  குடும்பம், தாயகத்தில் வசிக்கும் அக்கா தயாழினி  திலகநாதன் குடும்பம், மலேசியாவில் வசிக்கும் தம்பி,மச்சான் ரமண ராஜ் ;மருமக்கள் அபிஷா,கோசிகன்,மகிஸ்பன் , பெறா மகள்மார் அனுஷ்கா , அக் ஷயா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். இன்று திருமணமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !