Sunday, April 15th, 2018

 

பிறந்த நாள் வாழ்த்து – தனிக்சன் & துஷான் காண்டீபன் (15/04/2018)

பிரான்சில் வசிக்கும் காண்டீபன்  ஜனிதா தம்பதிகளின்  இளைய புதல்வர் துஷான்  தனது  முதலாவது  பிறந்தநாளையும் மூத்த  புதல்வர் தனிக்சன் மூன்றாவது  பிறந்த நாளையும் இன்று 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைதியான முறையில்   கொண்டாடுகிறார்கள்.   இரு செல்வங்களையும்  அப்பா காண்டீபன்,அம்மா ஜனீதா, அப்பப்பா பசுபதிப்பிள்ளை,அப்பம்மா  செல்லம்மா,அம்மப்பா  யோகேஸ்வரன்,  அம்மம்மா   தவமலர், பெரியப்பா விஜிந்தன்,பெரியம்மா நீரஜா,அக்கா ஸலு , அண்ணா ஜானு , மாமா கிரிஷாந்தன்   அத்தை லக்சி, மச்சான் கிரான் , மாமா தெய்வேந்திரன்,அத்தை  சுசிலா தேவி ;மச்சான்மார்களான  தனேஸ் தனுஜன், மச்சாள்  தர்சிகா அக்கா சிந்து, பெரியப்பா ஸ்ரீதரன்  பெரியம்மா  ஸ்ரீமதி  அண்ணாமார்களான சுஜேன், அஸ்வின்; லக்சன் மாமா நடராஜா , அத்தை கமலாதேவி மச்சாள்மார்களான  தர்சா , தீபா  நிஷா  அண்ணா சுதன், ரஞ்சன், மாமா சிவா அத்தை  தபோதினி  மச்சான்மார்கள்  லக்சன் லதுசன்   மச்சாள்  பிருந்தா  சித்தப்பா கோவர்தன் மேலும் படிக்க…


திராவிட கட்சிகள் வெளியேறினால் தான் தமிழகத்தின் பிரச்சினைகள் தீரும் – எச்.ராஜா

திராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே தமிழக பிரச்சினைகள் தீரும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பா. ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி பிரச்சினை இவ்வளவு தூரம் விசுவரூபம் எடுத்ததற்கு தி.மு.க.தான் காரணம். செய்த தவறை மறைப்பதற்காக தான் மு. க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டார். மோடியை திரும்பி போக சொன்னவர்கள் கவர்னரை சந்தித்து, பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்டது ஏன்? வைகோவின் நடவடிக்கைகளை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். தேனியில் நடைபயணம் மேற்கொண்டு இருந்தவர், பிரதமர் வந்த போது திடீரென சென்னைக்கு வந்தது ஏன்? ஏதும் திட்டத்தோடு வைகோ சென்னைக்கு வந்தாரா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும். திராவிட கட்சிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே தமிழகமேலும் படிக்க…


கற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு – வரலட்சுமி அறிக்கை

கற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் வழக்கு இந்தியாவைக் உலுக்கி உள்ளது. இதற்கு பிரபல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம்? நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு. ஏற்கனவே #காலம்கடந்துவிட்டது. அரசியல்வாதிகள், கற்பழிப்பு குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்களின் கைகளில் சிக்கிமேலும் படிக்க…


அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர முடியாது- செந்தில் பாலாஜி பேட்டி

அ.தி.மு.க. அரசால் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வர முடியாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கரூரில் வருகிற 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்கிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் கரூரில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் முதலில் உண்ணாவிரதம் இருந்தார். அதன்பிறகு திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். தொடர்ந்து காவிரிபாயும் 9 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி கரூரில்மேலும் படிக்க…


நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா உடல் அடக்கம் செய்யப்பட்டது

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் போராடி, சிறைசென்று அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #WinnieMadikizela தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் 8-7-1918 பிறந்த நெல்சன் மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள “நெல்சன்” இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகானஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார். அப்போது ‘நோமதாம் சங்கர்’ என்ற செவிலியரைத் திருமணம் செய்து கொண்டார். மண்டேலாமேலும் படிக்க…


காமன்வெல்த் 2018 – 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 3-வது இடம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமல்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வென்று மூன்றாவது இடத்தை பிடித்தது. 21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. நேற்றைய 10-வது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. 10-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 59 பதக்கம் பெற்று இருந்தது. கடைசி நாளான இன்று இந்தியாவுக்கு ஒரே ஒரு தங்கம் கிடைத்தது. இது இந்தியா பெற்ற 26-வது தங்கமாகும். பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் தங்கம் வென்றார். இதே போலமேலும் படிக்க…


யாழ்ப்பாண இளைஞன் உட்பட 8 பேர் கனடாவில் வெட்டிப்படுகொலை காவல் துறையினரின்அதிர்ச்சித் தகவல்!

கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் உட்பட 8 பேர் அங்கு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட விடயம் சுமார் ஒன்றரை வருடங்களின் பின்னர் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலை அந்தநாட்டுப் பொலிஸார் அங்குள்ள உறவினரிடம் கூறி உறுதிப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினர் இதனை தெரிவித்துள்ளனர். நயினாதீவைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் கச்சேரியடியை வசிப்பிடமாக் கொண்டவருமான கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராகும். அவர் தனக்குத் தெரிந்த முகவர் ஊடாக சன்சீ கப்பலில் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். கனடாவில் அவரது உறவினர் ஒருவர் அவரைப் பொறுப்பேற்றிருந்தார். 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரது தொடர்பு அங்குள்ள உறவினருக்கோ யாழ்ப்பாணத்திலுள்ள பெற்றோருக்கோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற ஒரு சம்பவம் ஒன்றில் அதே நாட்டைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையிலேயே திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.மேலும் படிக்க…


இளவரசர் ஹரியின் திருமணத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ள சிறுமி!

தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுவரும் வெயித் டிக்கின்சன் எனும் சிறுமி இளவரசர் ஹரியின் திருமணத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார். 15- வயதுடைய ஒன்ராறியோ தெற்கைச் சேர்ந்த பெண் ஒருவர் தொண்டுப் பணிக்கான அதிக மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையிலேயே இவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹரியின் தாயாரும் வேல்ஸ் இளவரசியுமான மறைந்த டயானாவின் பெயரில் அமைக்கப்பட்ட புற்றுநோயாளர்களுக்கான தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய குறித்த சிறுமிக்கு டயானா விருது கிடைத்துள்ளது. குறித்த விருதிற்காகத் தெரிவு செய்யப்பட்ட ஏழு பேரில் இவர் ஒருவரே கனடியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திருமண வைபவத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் உலகத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை எனினும் 1,200 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கென்சிங்ரன் மாளிகை தெரிவித்துள்ளது.


சிரிய மோதலுக்குத் தீர்வு காண ஜேர்மன் ஒத்துழைப்பு- வெளிவிவகார அமைச்சர் Heiko Maas

சிரியாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சிக்கு ஜேர்மனி ஒத்துழைக்குமென, ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஹெய்க்கோ (Heiko Maas) மாஸ் தெரிவித்துள்ளார். பேர்லினில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். சிரியாவின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், ‘சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், சர்வதேச சமூகம் முன்னெடுக்கும் புதிய முயற்சிக்கு பிரான்ஸுடன் இணைந்து ஜேர்மனியும் ஒத்துழைக்கும்’ என்றார். மேலும், சிரியாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு ஐ.நா. சபை தலைமை தாங்க வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தியுள்ளார். ‘ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது மோதலின் ஒருபகுதி மாத்திரமே என்பதை நாம் அனைவரும் அறிவோமென்பதுடன், நிலைமையைப் பெரிதுபடுத்துவதில் எவருக்கும் ஆர்வமும் இல்லை. ஆகையால், சிரியாவில் அரசியல் தீர்வின் மூலம் மாத்திரமே சமாதானத்தை எட்ட முடியும்’ எனவும்மேலும் படிக்க…


பிரெக்சிற் உடன்படிக்கை: இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு வலியுறுத்து

இறுதிக்கட்ட பிரெக்சிற் உடன்படிக்கை தொடர்பாக பொதுமக்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எடின்பேர்க் நகரில் அண்மையில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், வாக்கெடுப்புக்கு வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ளது. இந்நிலையில், இறுதிக்கட்ட பிரெக்சிற் உடன்படிக்கை தொடர்பாக, நீதியானதும் ஜனநாயகமானதுமான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென, ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தாக்குதல் நடத்தப்படவில்லை- தெரேசா மே

சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சிரியாவில் தொடர்ந்து நடத்தப்படும் இரசாயன தாக்குதலுக்கு எதிராக, குரல் கொடுக்கும் வகையில், அமெரிக்க ஜனாபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரேசா மே கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கமைய பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து, பிரித்தானியா தற்போது சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், சிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, இராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். இதேவேளை, பிரித்தானியாவின் ‘டொர்னடோ ஜெட் போர் விமானங்கள்’, இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.


பரிஸ் – பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபருக்கு 9 வருட சிறை!

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூன்று பயங்கரவாதிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். Djebril Amara, Antoine Frerejean, I. K எனும் மூன்று பயங்கரவாதிகளே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூன்று பயங்கரவதிகளும் Cape Béar (Pyrenees-Orientales) பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள். உளவுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள், தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குறித்த பயங்கரவாதிகள் முறையே 23, 19 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர குறித்த பயங்கரவாதிகள் சமூக வலைத்தளத்தில் பயங்கரவாத பரப்புரை மேற்கொண்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை முடித்துகொண்டு, நேற்று வெள்ளிக்கிழமை பரிஸ் குற்றவியல் நீதிமன்றம், மூவருக்கும் 9 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


அரசின் புதிய வேகக்கட்டுப்பாடுக்கு எதிராக உந்துரு சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

அரசு கொண்டுவந்துள்ள புதிய வீதி வேகக்கட்டுப்பாட்டுக்கு எதிராக பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த உந்துருளி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்சில், இரண்டாம் நிலை வீதிகள் அனைத்தும் 90 கிலோமீட்டர்கள் வேகத்தில் இருந்து 80 கிலோமீட்டர்கள் வேகத்துக்கு குறைத்து அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த புதிய மாற்றத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த பல்வேறு அமைப்புகள் நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் ஆர்ப்பட்டங்களை முன்னெடுத்தன. காவல்துறையினர் தெரிவித்த தகவல்களின் படி, Strasbourg ந்கரில் 2000 பேரும், Clermont-Ferrand இல் 1400 பேர்களும், லியோனில் 600 பேர்களும், Orne மாவட்டத்தில் 3000 பேர்களும் உட்பட மேலும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். ‘வேகக்கட்டுப்பாடு 80 கிலோமீட்டர்கள் என்பது நிச்சயம் முட்டாள் தனமானது. கனரகவாகனம் ஒன்றும் உந்துருளியும் ஒரே வேகத்தில் பயணித்தால் நிச்சயம் விபத்து ஏற்படும். அரசுமேலும் படிக்க…


மீண்டும் வரலாறு படைத்த நாடோடி மன்னன்

எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த “நாடோடி மன்னன்” 60 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தின் டிஜிட்டல் வெர்சனில் வெளியாகி 25 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1958-ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள். இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில்,  எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள். இப்படம்மேலும் படிக்க…


கர்நாடக சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி மரணம்

கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பனின் கூட்டாளி சைமன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். தமிழக-கர்நாடக எல்லையான பாலாறில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் சுரக்காய் மடுவு என்ற இடத்தில் கடந்த 1993-ம் ஆண்டு வீரப்பன் கூட்டாளிகளால் கன்னி வெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த திடீர் தாக்குதலில் 5 போலீசார், 2 வன ஊழியர்கள், போலீஸ் உளவாளிகள் 17 பேர் என மொத்தம் 24 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். மேலும் அதிரடி படை எஸ்.பி. கோபால கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக தொடர் விசாரணை நடத்திய கர்நாடக போலீசார் வீரப்பன் கூட்டாளிகளான கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஒட்டர்தொட்டியை சேர்ந்த சைமன் (வயது 60), மீசைகார மாதையன், நாகேஷ் உள்பட 4 பேரை தடா வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சைமன்மேலும் படிக்க…


மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் – ஏஞ்சலினா ஜோலிக்கு முதலிடம்

சர்வதேச மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஆகிய இருவரும் முதலிடம் பிடித்தனர். சர்வதேச அளவில் மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியல் குறித்து ‘யூகோவ்’ என்ற நிறுவனம் ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. 35 நாடுகளில் 37 ஆயிரம் பேரிடம் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன்மூலம் மக்களை கவர்ந்த 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அவர்களில் ஆண்கள் பிரிவில் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2-வது இடத்திலும், நடிகர் ஜாக்கிஜான், சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோர் முறையே 3-வது மற்றும் 4-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் பிரிவில் ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி முதலிடம்மேலும் படிக்க…


அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி

சிரியா மீது அமெரிக்கா கூட்டுபடைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியா முன்வைத்தது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால்தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்னும் நிலையில் ரஷியாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷியாமேலும் படிக்க…


தேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஹங்கேரியில் 1 லட்சம் பேர் போராட்டம்

ஹங்கேரி நாட்டில் பிரதமர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி 1 லட்சம் பேர் பேரணியில் ஈடுபட்டு பின்னர் பாராளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹங்கேரியில் கடந்த வாரம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் விக்டர் ஆர்பன் கட்சி மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது. எனவே, விக்டர் ஆர்பின் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற 6 நாட்களுக்கு பிறகு தேர்தலில் அவர் பெற்ற வெற்றியை எதிர்த்து பொதுமக்கள் நேற்று பேரணி நடத்தினார்கள். தலைநகர் புடாபெஸ்டில் பேஸ்புக் குழுவினர் நடத்திய இப்பேரணியில் 1 லட்சம் பேர் திரண்டனர். பின்னர் பாராளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஹங்கேரியின் தேசிய கொடியையும், ஐரோப்பிய யூனியனின் கொடியையும் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். தேர்தலில் முறைகேடு செய்து பிரதமர் விக்டர் ஆர்பன் வெற்றிபெற்றுமேலும் படிக்க…


புதுவருடத்தில் வாள்வெட்டு! – ஒருவர் படுகாயம்

வவுனியா – சிதம்பரபுரம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பு வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த கோபி (வயது – 22) என்பவரே நேற்று (சனிக்கிழமை) படுகாயமடைந்தார். குறித்த இளைஞனின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவர் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் 55 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையே இச்சம்பவத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்ற நிலையில், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


பிறந்தநாளைக் கொண்டாடிய 100 வயது மூதாட்டி!

கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் வாழ்ந்துவரும் 100 வயதை பூர்த்தி செய்த மூதாட்டியொருவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். 1918ஆம் ஆண்டு பிறந்த, 5 பிள்ளைகளின் தாயான கருப்பையா லட்சுமி என்பவரே நேற்று (சனிக்கிழமை) தனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இப்பிறந்தநாளில் அவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டபிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்வுடன் கொண்டாடினர். இவரது மூத்த மகள் 80 வயதில் இந்தியாவில் வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர், இத்தனை வயதுவரை இருப்பதற்கு அந்நாட்களில் சிறந்த உணவுகளை உட்கொண்டமையே காரணம் எனக் குறிப்பிடுகின்றார்.


ஜனாதிபதி மைத்திரி பிரித்தானியா விஜயம்

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். நாளைய தினம் லண்டனில் ஆரம்பமாகவும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு, எதிர்வரும் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ‘பொதுவான எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில், இலங்கை சார்பில் ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 22ஆம் திகதிவரை பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார்.


மூன்று முக்கிய நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள மோடி!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஸ்வீடன், இங்கிலாந்து, மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இந்திய வெளியுறவு துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 16 ஆம் திகதி  ஆரம்பிக்கும் மோடி  ஏப்ரல் 20ம் திகதி  நிறைவு செய்யவுள்ளார். இதன்போது அந்நாடுகளின் ஜனாதிபதி,பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. இதில் முதல்கட்டமாக ஸ்வீடன் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் குட்சா, பிரதமர் லோவன் உள்ளிட்ட ஏனைய முக்கிய அமைச்சர்களுடன் சந்தித்து பேச்சுவார்களில் ஈடுபடுவார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து செல்லும் பிரதமர், ராணி எலிசபத்தையும் சந்திக்கவுள்ளதாகவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. இறுதியாக ஜேர்மன் தலைநகர் பெர்லின் செல்லும் மோடி அதிபர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து இருதரப்பு பரஸ்பரம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக, வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.


காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை : சித்தார்த்தன்

ஐ.நா. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில், எந்தவிதமான முன்னேற்றங்களும் இன்றி அரசாங்கம் செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து  வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வெறுமனே அரசாங்கத்தை கண்டிப்பதால் நடக்கப் போவது ஒன்றுமில்லையெனக் குறிப்பிட்ட சித்தார்த்தன், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சிந்திக்கும் நிலைக்குச் சென்றுள்ளதாக மேலும் தெரிவித்தார். அத்தோடு, அண்மையில் பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலையான தமிழ் அரசியல் கைதியொருவர், காணாமல் போனவர்கள் தடுப்பு முகாம்களில் சுயநினைவின்றி காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இவ்விடயத்தை சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், அரசாங்கம் இது குறித்து பேசாமல் இருப்பது கண்டித்தக்கதென்றும், இவ்விடயத்தின் அடிப்படையில் விரைவில்மேலும் படிக்க…


ராஜதந்திர உறவை சிதைத்த சீனா! – வடக்கு மாகாண முதலமைச்சர்

இலங்கையில் மேலோங்கியுள்ள சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியாவுடனான ராஜதந்திர உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார். அத்தோடு, மாகாண சபை அதிகாரங்களில் மத்திய அரசாங்கத்தின் தலையீடு அதிகமாக காணப்படுவதால், மாகாண ரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முட்டுக்கட்டைகள் காணப்படுவதாக சீ.வீ. சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இலங்கையில் தமது ஆதிக்கத்தை சீனா வலுப்படுத்திக்கொண்டது. அதனை நல்லாட்சியில் மேலும் பலப்படுத்திக்கொண்ட சீனா, இலங்கையில் பல்வேறு முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதனால் அண்டை நாடான இந்தியா இவ்விடயத்தில் அதிக கரிசனைகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், சீ.வீ. மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரதேச சபை உறுப்பினரின் படகு தீ வைத்து எரிப்பு

மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணி கடற்கரையில்  பிரதேச சபை உறுப்பினரது மீன்பிடி படகு இனந்தெரியாத நபர்களில் தீ வைத்து எரிக்கபட்டுள்ளாதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம்  சனிக்கிழமை நேற்று அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வாகரை பிரதேச சபைக்கு அண்மையில் தெரிவான கதிகாமத்தம்பி சந்திரமோகன் என்பவரது படகு தீ வைத்து எரிக்கபட்டுள்ளதாக  தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள தோட்டக்காரர் ஒருவர் தமக்கு குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியமையினையடுத்து குறித்த இடத்திற்கு சென்று பார்த்தபோது தமது படகும் அதனுள் காணப்பட்ட கரைவலை மற்றும் மீன்பிடி உபகரணங்களும் தீயினால் எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாக பாதிக்கபட்டவர் கவலையுடன் தெரிவித்தார்.   இதனால் தமக்கு 25 இலட்சம் ருபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த கடல் பிரதேசத்தில் 10மேலும் படிக்க…


கடற்தொழில் ஊழியர்களின் சம்பள கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை : மஹிந்த அமரவீர

கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பள கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கடற்றொழில் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சம்பள மிகுதியும், அனைத்துக் கொடுப்பனவுகளையும் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இவற்றைச் செலுத்துவதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் கடற்றொழில் கூட்டுத்தாபனம் இலாபம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.


தெரிந்து கொள்வோம் 14/04/2018


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !