Friday, March 23rd, 2018

 

திருமணம் செய்து கொள்ளவிருந்த மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை

வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் செய்து கொள்ளவிருந்த மகளை கொடூரமாக கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் பூவதி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா (22). இவர் மருத்துவ கல்லூரியில் டயாலிசிஸ் மையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை ராஜன். இவர் டிரக் ஓட்டுநராக உள்ளார். ஆதிரா, மாற்று சமூகத்தை சேர்ந்தவரான இளைஞரைக் காதலித்து வந்தார். அந்த இளைஞர் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆதிராவின் தந்தை ராஜனுக்கு இந்த காதலில் விருப்பமில்லை என்று தெரிகிறது. ஆனாலும் ஆதிராவின் தாய் மகளின் ஆசைப்படி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆதிராவின் தந்தையைத் தவிர குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் இந்த திருமணத்தில் முழு சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது.மேலும் படிக்க…


நல்லிணக்க முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்: கனடா

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன், தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை இலங்கை அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கனடா வலி்யுறுத்தியுள்ளது. கனாடா அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  “ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை கனடா வரவேற்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடனான இலங்கை அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளை ஆதரிக்கிறது. “அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, நல்லிணக்கமான, வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில், உள்நாட்டு மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் கடப்பாடுகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். “மனித உரிமைகள் தொடர்பான ஆரம்ப கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக் கொள்வதுடன், காணாமல் போனோருக்கான அலுவலகம்மேலும் படிக்க…


கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது. இதனை அடுத்து, தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. 10மேலும் படிக்க…


சிரியாவில் ரஷ்ய ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 37 பேர் பலி

சிரியா நாட்டின் அர்பின் பகுதியில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 37 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் அர்பின் பகுதியில் உள்ள இன்று ரஷ்ய விமானப்படை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதாக என சிரியா மனித உரிமைகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்ய அரசு மறுத்துள்ளது. இந்த தாக்குதலை நடத்தியது யார் என விசாரணை நடத்திமேலும் படிக்க…


வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 13 பேர் பலி

வியாட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரில் உள்ள 20 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். வியட்நாம் நாட்டின் ஹோசிமின் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள 8-வது மாவட்டத்தில் 20 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் பிடித்த தீ மற்ற வீடுகளுக்கும் வேகமாக பரவியது. இதனால், குடியிருப்பு வாசிகள் ஜன்னல் வழியாக கயிறுகளை கட்டியபடி இறங்கினர். பலர் கீழே குதித்தனர். இரண்டு மணிநேரம் போராடி மீட்புக்குழுவினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுதீ விபத்தில் சிக்கி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாய் வசுமதி, நித்ய நிக்ருதி ஆகிய இருவர் இன்று உயிரிழந்தனர். தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி கடந்த 15-ம் தேதி பரிதாபமாக மரணமடைந்தனர். மறுநாளில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவிமேலும் படிக்க…


சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்துகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து ஆராயப்பட்ட போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டை வலிமையாக வரவேற்கின்றோம். அதேசமயம், இலங்கை விடயத்தில் குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எமதுமேலும் படிக்க…


அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி மதுவின் தங்கைக்கு காவல்துறையில் வேலை

கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபர் மதுவின் தங்கைக்கு காவல்துறையில் வேலை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆதிவாசி வாலிபர் உணவு திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். எனினும் அவர்மிதான குற்றச்சாட்டு போலியானது என தொயவந்ததனை அடுத்து கேரளாவில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்தநிலையில் ஆதிவாசி வாலிபர் மதுவின் தங்கை சந்திரிகா கேரளாவில் காவல்துறை எழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் காவல்துறை எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளநிலையில் சந்திரிகா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு முதல்நிலை பெண் காவலர் பணி கிடைக்க உள்ளது.


அமெரிக்காவுக்கு தலை சாய்த்து இருந்தால் இன்றும் மகிந்தவே ஜனாதிபதி

நாமல் ராஜபக்ஷக்கு அமெரிக்க செல்ல தடை விதிக்கப்பட்டமையானது இலங்கையில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுக்காட்டுவதாக முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லவில்லை , அல்லது நாட்டிற்கு எதிராக சூழ்ச்சி செய்ய செல்லவில்லை. அவரது நெருங்கிய உறவினரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவே அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால் காரணம் இன்றி அவரது பயணத்தை அமெரிக்க தடை செய்துள்ளமையானது அமெரிக்காவின் இலங்கை ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க எதிர்ப்பு கொள்கையில் உள்ளவர் என்பது உலகறிந்த விடயம் எனவும் அவர் எப்போதும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான பலஸ்தீனுக்கு ஆதரவான கொள்கையில் இருப்பவர். அவர் அன்று அமெரிக்காவுக்கு தலை சாய்த்துமேலும் படிக்க…


சிறுநீரகம் பாதிப்படைந்த முன்னாள் போராளி வவுனியாவில் மரணம்

வவுனியா ஓமந்தைப்பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் யாழ் பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஓமந்தை மாதர்பனிக்கர்குளம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளியான இராசையா இராசகுமாரன் 42வயதுடைய 6பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைப்பலனின்றி கடந்த 20ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார். இதையடுத்து நேற்று சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்டு நேற்று பிற்பகல் 2.30மணியளவில் இறுதிக்கிரியைகள் ஓமந்தை, மாதர்பனிக்கர்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவர் கடந்த சில வருடங்களாக சிறுநீரகம் பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் இவரது உறவினர்கள்மேலும் படிக்க…


யாழ். சாவகச்சேரியில் கத்தி குத்து!

யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு முன்னால் வைத்து நபர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவசக்சேரி நீதிமன்றில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு வந்தவர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


நிலைமை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள் – அங்கத்துவ நாடுகளிடம் கஜேந்திரன் கோரிக்கை

”இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மோசமடைவதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவ நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும்.” எள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்றுமுன்தினம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விடயம் ஆராயப்பட்ட போது உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். உண்மையான நல்லிணக்கத்துக்கு மட்டுமல்ல, மீண்டும் (மோசமான நிகழ்வுகள்) இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்பதால் பொறுப்புக் கூறல் என்பது விட்டுக் கொடுக்கப்படவே முடியாததாகும். பொறுப்புக் கூறல் விடயத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகமோ, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அங்கத்துவ நாடுகளோ தங்களை கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய முடியாது. குற்றவிலக்களிப்பைத் தொடர்ந்தபடி தங்களின் விருப்பப்படி எப்படியும் செயற்படலாம் என்ற தத்துவத்தால் தான் யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளாக இலங்கை அரசு தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அதன் தொடராக,மேலும் படிக்க…


ஜனாதிபதி ஊடக பிரிவு பொய் பிரச்சாரம் செய்கிறது. – அருட்தந்தை மா. சக்திவேல்

இடையூறுகளுக்கு மத்தியில் ஜனாதிபதியிடம் முன்னாள் அதிபரின் படத்தைக் கொடுத்தபோது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காட்டியே சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சந்திப்பு நடை பெற்றதாக பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது. என அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கவில்லை என முன்னதாக மா. சக்திவேல் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அந்நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமை ஜனாதிபதி ஊடக பிரிவு அருட்தந்தையின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி சந்தித்தார் எனவும் , சந்திக்கவில்லை என்பது விஷமத்தனமான செய்தி எனவும் அறிக்கை வெளியிட்டது. குறித்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து இன்றைய தினம் அருட்தந்தை மா. சக்திவேல் ஊடகங்களுக்கு செய்தி அறிக்கை அனுப்பிமேலும் படிக்க…


இலங்கை ஜனாதிபதிக்கு பாகிஸ்தானில் சிறப்பு வரவேற்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக நேற்று இரவு பாகிஸ்தானை சென்றடைந்துள்ளார். இஸ்லாமாபாத் நூர்கான் விமானப்படைத் தளத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாகிஸ்தான் ஜனாதிபதி மமூன் ஹுசேன் வரவேற்றார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு செங்கம்பள மரியாதையும் அளிக்கப்பட்டது.  இன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறும், பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.


கதைக்கொரு கானம் – 21/03/2018

திரு.உதயன் ஜேர்மனி


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !