Tuesday, December 12th, 2017

 

நான் கால்பந்தின் கடவுள் அல்ல: மரடோனா சொல்கிறார்

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என்று புகழப்படும் அர்ஜென்டினா வீரர் மரடோனா, ‘தான் கால்பந்தின் கடவுள் அல்ல’ என்று கூறியுள்ளார். அர்ஜென்டினா அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டியேகோ மரடோனா. 1986-ம் ஆண்டு இவரது தலைமையில் அர்ஜென்டினா உலகக்கோப்பை வாங்கியது. தனது அபார ஆட்டத்தால் தனி ஒரு மனிதனாக நின்று கோப்பையை வாங்கிக் கொடுத்தார். கால்பந்து வரலாற்றில் மரடோனா ஜாம்பவான், கால்பந்து கடவுள் என்றெல்லாம் அவரை அழைப்பதுண்டு. தற்போது அவர் கொல்கத்தா வந்துள்ளார். அங்குள்ள 12 அடி உயர அவரின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசுகையில் ‘‘நான் கால்பந்தின் கடவுள் அல்ல. ஆனால், ஒரு சிம்பிள் கால்பந்து வீரர். கொல்கத்தாவிற்கு மீண்டும் ஒருமுறை வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய சிலையை நானே திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.


ஆஸ்திரியா: இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கில் தீ விபத்து – ஒருவர் பலி; 18 பேர் படுகாயம்

ஆஸ்திரியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியானதாகவும், 18 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வியன்னா நகரின் கிழக்கு பகுதியில் பாவும்கார்டென் இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கு உள்ளது. ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு இங்கு சேமிக்கப்பட்டு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று காலை ஆலையில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும், 18 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன்: டுவிட்டரில் கமல் வாழ்த்து

ரஜினிகாந்த்துக்கு பலரும் வாழ்த்து சொல்லி வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன் என்று டுவிட்டரில் வாழ்த்து கூறியிருக்கிறார்.  சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் ரஜினிகாந்த், தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் நடித்துள்ள ரஜினி, இதுவரை 160 படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக `எந்திரன்’ படத்தின் இரண்டாவது பாகமான `2.0′ படமும், பா.ரஞ்சித் இயக்கத்தில் `காலா’ படமும் உருவாகி வருகிறது. இதில் `காலா’ படத்தின் இரண்டாவது போஸ்டரை தனுஷ் இன்று வெளியிட்டார். ரஜினி பிறந்தநாளுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும், மு.க.ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி வீட்டிற்குமேலும் படிக்க…


நேபாளம்: இம்மாத இறுதியில் புதிய அரசு – வெற்றி பெற்ற இடதுசாரி கூட்டணி அறிவிப்பு

நேபாளம் பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள இடதுசாரி கூட்டணி இம்மாத இறுதியில் புதிய அரசை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளன. நேபாள பாராளுமன்றம் மற்றும் 7 மாகாணங்களின் பேரவைகளுக்கு கடந்த நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. 275 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 165 பேர் தேர்தல் மூலமும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தலில் ஆளும் நேபாளி காங்கிரஸ், மாதேசி கட்சிகள் இணைந்து ஓரணியாகவும், நேபாள கம்யூனிஸ்ட் ஐக்கிய மாவோயிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்டு மையம், அடங்கிய இடதுசாரி கூட்டணி எதிரணியாகவும் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8-ந்தேதி முதல் எண்ணப்பட்டன. பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் எதிர்கட்சியான இடதுசாரி கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இந்த கூட்டணி 113 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதில்மேலும் படிக்க…


பெரு கால்பந்தாட்டத் தலைவருக்கு ஒரு வருட தடை

கடந்த ஒக்டோபர் மாதம் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பெரு கால்பந்தாட்ட அணித்தலைவரான பாப்லோ குயரிரோவுக்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (பீபா) ஒரு வருடத் ஓராண்டு தடை விதித்துள்ளது. பெரு கால்பந்தாட்ட அணித்தலைவரான 33 வயதான பாப்லோ குயரிரோவிடம் கடந்த ஒக்டோபர் மாதம் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டி நிறைவடைந்ததும் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ஒரு வருடத் தடை விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அவரது தடை காலம் கடந்த மாதம் 3 ஆம் திகதியில் இருந்து கணக்கிடப்படும். இதன் மூலம் ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு அவரால் பங்கேற்க முடியாது. குயரிரோ பெரு அணிக்காக அதிக கோல்கள் (88மேலும் படிக்க…


“தனித்த பயணம் ஒருபோதும் சாத்தியமாகாது”

கட்சியில் இருந்து தனித்து செயற்படும் சகல தரப்பினரும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்ளுங்கள். தனித்த பயணம் ஒருபோதும் சாத்தியமாகாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் தனித்த பயணம் அவரது வீழ்ச்சிக்கே வித்திடும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இராணுவத்துக்கு புதிய ஊடகப் பேச்சாளர்!

இலங்கை இராணுவத்தின் புதிய ஊடாகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவின் நியமனம் குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதுவரை இராணுவ ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வரும் மேஜர் ஜெனரால் ரொஷான் செனவிரத்ன 51 ஆம் படையணியின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, ஏற்படும் வெற்றிடத்துக்கு பிரிகேடியர் சுமித் அத்தபத்து ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 52 ஆவது இராணுவ படையணியின் பிரிகேடியராக சுமித் அத்தபத்து கடமையாற்றியிருந்தார் என்று இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது..


அமெரிக்க ஜனாதிபதியை விமர்சித்த சம்பிக்க!

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சிலுவை யுத்தத்துக்கு வழி வகுத்துள்ளார்” என, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவு ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “விசேடமாக இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசேலத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேத்தில் அமைக்கவும் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே, ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “எனினும், இதற்கு கத்தோலிக்கர்களின் பிரதானியான போப்பாண்டவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். யூதர்களின் கைகளுக்கு ஜெருசலேத்தின் ஆட்சி அதிகாரம் சென்றால் கத்தோலிக்கர்களின் பிரச்சினையை எதிர்கொள்வர் என்பதே போப்பாண்டவரின் எண்ணம். இந்த விடயத்தால் பல குழப்ப நிலைகள் உருவாகியுள்ளது. ஒரு பக்கம் இஸ்லாம் நாடுகள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்லை காத்த மாவீரன் வீரப்பன் !

மாவீரன் வீரப்பன் ஜனவரி18 1952 ம் ஆண்டு கோபிநத்தம் என்னும் கிராமத்தில் வன்னியர் குலத்தில் பிறந்தார். வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ??? – வில்லன் போல் சித்தரித்த விபசார ஊடகங்கள் சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி. வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்டு நிலமும் பெற்று இன்றோடு பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய்யப் பட்ட பெண்களும், இட்லரின் நாஜிப் படையை விட மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளான ஆண்களும், பெண்களும், இன்றும் மவுனமேலும் படிக்க…


67ஆவது பிறந்ததினத்தை கொண்டாடும் ரஜினி

இன்றும் தென்னிந்திய சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் இன்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். 1950- டிசம்பர் 12 ஆம் திகதி பிறந்­தவர் ரஜினி. பெங்­க­ளூரில் பஸ் கண்­டக்­ட­ராகவிருந்த ரஜினி நடிப்பு தாகத்­துடன் சென்னை வந்து சினிமா வாய்ப்­புக்­காக அலைந்­த­போது, 1975 ஆம் ஆண்டு தான் இயக்­கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜி­னியை வில்­ல­னாக அறி­முகம் செய்தார் கே.பால­சந்தர். அதோடு ஏற்­க­னவே சிவா­ஜி­க­ணேசன் என்­றொரு நடிகர் தமிழ் சினி­மாவில் இருந்­ததால், சிவா­ஜிராவ் என்ற பெயர் அவ­ருக்கு சரி­வ­ராது என்று ரஜி­னிகாந்த் என்றும் மாற்றிவைத்தார் பால­சந்தர். அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜி­னி­காந்­தாக தமிழ் ரசி­கர்­க­ளுக்கு அறி­மு­க­மான அவர், முதல் படத்­தி­லேயே ரசி­கர்­களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்­ததால், அவ­ரது நடிப்­புக்கு வர­வேற்பு ஏற்­பட்­டது. பின்னர் சில படங்­களில் வில்­ல­னாக நடித்த ரஜினி, அதை­ய­டுத்து ஹீரோ­வாக அவ­த­ரித்தார்.மேலும் படிக்க…


அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு மீண்டும் அனுமதி: பெண்டகன் அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அதிபர் டிரம்ப் முட்டுக்கட்டை போட்ட நிலையில், கோர்ட் உத்தரவால் வரும் ஆண்டு முதல் திருநங்கைகள் சேர்க்கப்படுவார்கள் என பெண்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்த நிலையில், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை தேர்வு செய்வது தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறப்பட்டது. “என்னுடைய ஜெனரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகு அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணி புரிய அரசு அனுமதிக்காது என்பதை பரிந்துரைக்கிறேன். திருநங்கைகளால் ராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்காது. நன்றி” என டிரம்ப் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். டிரம்ப் உத்தரவுக்கு எதிராக நாடுமேலும் படிக்க…


துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் மெஸ்சி சகோதரர் வீட்டுக்காவலில் வைப்பு

அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் மெஸ்சியின் சகோதரர் துப்பாக்கி வைத்திருந்ததாக வீட்டிக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி தலைசிறந்த வீரராக விளங்கி வருகிறார். இவரது மூத்த சகோதரர் மத்தியாஸ் மெஸ்சி. இவர் கடந்த மாதம் 30-ந்தேதி மோட்டார் படகில் சென்றுள்ளார். அந்த படகு மணல்திட்டு மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்த மத்தியாஸ் மெஸ்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது படகை பரிசோதனை செய்யும்போது துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. நேற்று மத்தியாஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இதனால் சிறையில் அடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மெஸ்சியின் தந்தை உத்தரவாதம் கொடுத்ததால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி வைத்திருந்ததால் மத்தியாஸ் மெஸ்சி கைதாவது இரண்டாவது முறையாகும். துப்பாக்கி வைத்திருக்கும் குற்றத்திற்காக மூன்றரை ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்மேலும் படிக்க…


நியூயார்க் குண்டுவெடிப்பு எதிரொலி: குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் – டிரம்ப்

நியூயார்க் குண்டுவெடிப்பு சம்பவம் அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய பேருந்து முனையம் உள்ளது. இந்த முனையத்தை ஆண்டுதோறும் சுமார் ஆறரை கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் பஸ் முனையத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் (உள்ளூர் நேரப்படி) நேற்று காலை திடீரென்று மர்மப் பொருள் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட பயங்கர ஓசையால் அப்பகுதியில் இருந்தவர்கள் பீதியுடன் அலறியடித்து ஓட தொடங்கினர். இதையடுத்து அதே பகுதியில் உள்ள சுரங்க நடைபாதையில் மேலும் ஒரு வெடிப்பொருளுடன் வந்த ஒரு மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். அவர் வங்காளதேசம் நாட்டை சேர்ந்தவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளராக இருக்கலாம் என சிலமேலும் படிக்க…


பிரிட்டன் ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற வாலிபர் கைது

பிரிட்டன் ராணியின் பக்கிங்ஹாம் அரண்மனை கேட் மீது ஏற முயன்ற வாலிபரை லண்டன் போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனை ஆகும். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை உச்சக்கட்ட பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும். ஆனாலும் அவ்வப்போது பாதுகாப்பு படையினரின் பார்வைக்கு தப்பி சிலர் அந்த பகுதியில் நுழைந்து அசம்பாவித சம்பவங்களை நடத்த முயன்றுள்ள சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன. இந்த நிலையில், சுமார் 24 வயதுள்ள ஒரு வாலிபர், நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிற்கதவின் (‘கேட்’) மீது ஏற முயற்சித்தார். நல்ல வேளையாக அவர் அரண்மனைக்குள் குதிப்பதற்கு முன்பாக போலீசார் பார்த்து விட்டனர். உடனடியாக அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அவர் மத்திய லண்டன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுமேலும் படிக்க…


ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி

அப்பல்லோவில் அனுமதிக்கும் முன்பு ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால் உடல்நலம் பாதித்தது என்று விசாரணை ஆணையத்திடம் அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் கூறினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அதுபற்றி உண்மை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் ஜெயலலிதாவுடன் தொடர்பு உடையவர்களையும், அவருக்கு சிகிச்சை அளித்தவர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விவரங்களை தெரிவிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்து இருந்தார். அதன்படி அக்குபஞ்சர் டாக்டர் சங்கர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புமேலும் படிக்க…


தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிகிச்சை காரணமாக அவர் சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப் பட இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. இதுமேலும் படிக்க…


கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி

உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 குற்றவாளிகளுக்கு  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22) என்பவரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா (19) என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ்நிலையத்திற்கு சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் சங்கர் – கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்தமேலும் படிக்க…


எதிர்வரும் 23ம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நேற்றைய தினம் கூடிய போது சில சட்டங்கள் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டிருந்தன. அதன் பின்னர் பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 9ம் திகதி நடைபெற்றது. வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த ஒரு மாத காலமாக விவாதம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்திய மீனவர்கள் இருபத்து மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்திய மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்திய மீனவர்கள் பயணித்த படகுகள் ஐந்தும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. மீனவர்கள் பொலிஸாரிடம் கையளிக்க ஏற்பாடாகியிருப்பதாக தெரியவருகிறது.


அந்தமானில் நிலநடுக்கம் – 4.6 ரிக்டர்

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் நேற்று மாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவிசார் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4:49 மணியளவில் போர்ட் பிளேர் நகருக்கு கிழக்கே 121 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கு அடியில் 139.8 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.


இலங்கையின் பேண்தகு அபிவிருத்திக்கு ஆதரவு – உலக பசுமைக் கட்டிடங்கள் மன்றத்தின் தலைவர் Tai Lee Siang

நாட்டினைப் பசுமைத்தீவாக மாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டங்களுக்கு உலக பசுமைக் கட்டிடங்கள் மன்றத்தின் தலைவர் Tai Lee Siang பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டிற்கு வருகைத்தந்துள்ள உலக பசுமைக் கட்டிடங்கள் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்த போது இவ்வாறு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பேண்தகு அபிவிருத்தி செயற்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கும் பூரண ஆதரவு வழங்குவதற்கும் பசுமை நகர நிர்மாண செயற்பாட்டிற்கு தேவையான தொழினுட்ப மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கும் தமது மன்றம் தயாராக உள்ளதென பசுமைக் கட்டிடங்கள் மன்றத்தின் தலைவர் தெரிவித்தார். இலங்கை பசுமைக் கட்டிடங்கள் சங்கம் பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உலகப் பசுமைக் கட்டிடங்கள் மன்றத்தின் எதிர்கால செயற்திட்டங்கள் பற்றி இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. இலங்கை பசுமைக் கட்டிடங்கள்மேலும் படிக்க…


சவுதி அரேபியாவில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன

சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ‘2018 மார்ச் முதல் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன; ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக, முகமது பின் சல்மான் பதவியேற்ற பின் பல்வேறு சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2018 ஜூன் முதல் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேசிய தினத்தில் ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் 35 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த சினிமா ஒளிபரப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018 மார்ச் முதல், படங்கள் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முஸ்லிம் மதத் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­ல்; கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தீவிரம்

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம்செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இரண்­டா­வது சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. யாழ்ப்­பா­ணத்­தில், சங்­கானை பிர­தேச சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக்­குழு கட்­டுப் பணம் செலுத்தியிருக்கிறது. வல்­வெட்­டித்­துறை நகர சபை­யில் போட்­டி­யி­டு­வ­தற்கு சுயேச்­சைக் குழு நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யுள்­ளது. சாவ­கச்­சேரி நகர சபைத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஐக்­கிய சோச­லி­சக் கட்­சி­யும் நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்­தி­யது. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­லும் போட்­டி­யி­டு­வ­தற்கு அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ர­ஸும், மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் நேற்­றுக் கட்­டுப் பணம் செலுத்தியுள்ளது.


புதிய மாற்றுத் தலைமையானது மக்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உருவெடுக்கும் – சுரேஷ் நம்பிக்கை!

தமிழரசுக் கட்சி பிழையான வழியில் செல்வதால் தான் ஒருபொது அணியை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே, அந்த அடிப்படையில் எதிர்கால தேர்தல்களில் போட்டியிட்டு புதிய மாற்றுத் தலைமையானது மக்கள் மத்தியில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக உருவெடுக்கும் என நான் நம்புகின்றேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு தினசரி ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியிலேயே இதனை அவர் அவர் தெரிவித்தார். ” அவரது பேட்டியின் விபரம்: கேள்வி : உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக நீங்கள் நீண்ட பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்திருக்கிறீர்கள். இதன் பின்னணி என்ன? பதில் : இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து விலகி வட கிழக்கு இணைப்பைமேலும் படிக்க…


துயர் பகிர்வோம் – திருமதி பரமேஸ்வரி அருளானந்தம் (12/12/2017)

பிறப்பு : 8 டிசெம்பர் 1939 — இறப்பு : 10 டிசெம்பர் 2017 Dr.Ravee அவர்களின் சிறிய தாயார் திருமதி பரமேஸ்வரி அருளானந்தம் 10.12.2017 ஞாயிறு அதிகாலை இறைவனடி சேர்ந்தார். யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும், சதானந்தம்(சொக்கா- ஜெர்மனி), ரேவதி(லண்டன்), சன்முகானந்தா(அப்பன்- லண்டன்), பரமவேலானந்தா(டிக்கா- லண்டன்), சிவராஜனி(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான தவானந்தன், விவேகனந்தா, செந்தில்குமாரனந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தங்கேஸ்வரி, மகாராஜா, பவளக்கொடி சிவபாலசுந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வரதலட்சுமி(திருநெல்வேலி), மகாலட்சுமி(இணுவில்), பாமினி(ஜெர்மனி), சிவலோகன்(லண்டன்), துசியந்தி(லண்டன்), கவிதா(ஆசிரியர்- ஏழாலை), பேள்(லண்டன்), ஜீவரட்ணம்(ஜெர்மனி),மேலும் படிக்க…


சுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 11/12/2017


அரசியல் சமூக மேடை – 10/12/2017


இந்தியப்பார்வை – 11/12/2017


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !