Monday, October 2nd, 2017

 

உதவுவோமா – 26/09/2017

பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் இணைந்து கொண்டார்


அரசியல் சமூக மேடை – 28/09/2017


தமிழ் மொழி பாடநெறியை பூர்த்தி செய்த இராணுவத்தினருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் மொழி பயிற்சி பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (27) ஆம் திகதி புதன் கிழமை கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனவின் தலைமையில் ஆறுமாத காலமாக இந்த பயிற்சி நெறிகள் இடம்பெற்றன. 30 நாட்கள் இடம்பெறும் இந்த பயிற்சி நெறியில் கிளிநொச்சி படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் அனைத்து படைப் பிரிவுகள், படைத் தலைமையகங்கள் மற்றும் படையணியைச் சேர்ந்த படைவீரர்கள் பங்கு பற்றினர். இந்த பயிற்சி நெறிகள் மூன்று கட்டங்களாக நிகழ்த்தப்பட்டு 2373 இராணுவத்தினர் இந்த பயிற்சி நெறியை நிறைவு செய்திருந்தனர். இந்த் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன வருகை தந்து பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இந்மேலும் படிக்க…


புலிகள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவுப் பொருளாதாரம் இன்றில்லை! – அனந்தி சசிதரன்

புலிகள் காலத்தில் காணப்பட்ட தன்னிறைவுப்பொருளாதாரம் இன்று இல்லாமல் போயுள்ளமையே எமது சமூகம் பொருளாதார ரீதியில் எதிர்கொண்டுவரும் சவால்களுக்கு காரணமாகுமென, தொழில்துறை ஆராய்சி மற்றும் அபிவிருத்தி குழுமத்தின் (ஐசுனுபு) பிரதம நிறைவேற்று அதிகாரி தலைமையிலான குழுவினருடனான சந்திப்பின்போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சிசதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். எமது சமூகம் தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதாரப் பிரச்சினைகளின் அடிப்படைக் காரணங்கள் குறித்தும் அதிலிருந்து எவ்வாறு எமது மக்களை மீட்டெடுப்பது என்பது குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள தொழில்துறை ஆராய்சி மற்றும் அபிவிருத்தி குழுமத்தினர் (ஐசுனுபு) அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களைச் சந்தித்து கடந்துரையாடல் நடத்தியிருந்தனர். மகளிர் விவகார அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29-09-2017) அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அவர்களின் ஆய்வு குறித்து விளக்கிக்கூறியதுடன் அதனை நடைமுறைப்படுத்தி எமது மக்களை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஒத்துழைப்பினை வழங்குமாறும்மேலும் படிக்க…


இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி முதல் இருந்ததை விட பலப்படுத்தப் பட்டுள்ளது – ஜயம்பதி விக்கிரமரட்ண!

முன்பிருந்த அரசியலமைப்பு யாப்பை விட தற்போது வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தயாரித்த வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பில் நாட்டில் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருவதால் இடைக்கால அறிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அதிகாரப் பகிர்வு மற்றும் ஆட்சி முறை பற்றி இடைக்கால அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கை ஒற்றையாட்சி நாடாகக் காணப்படுகின்றது. இறையாண்மை பிளவு படாததும், பிரிக்கமுடியாததுமாகவே தெளிவாக வரையறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் தவறான கருத்துக்களை முற்றாக நிராகரிக்கின்றோம். சமஷ்டி ஆட்சி முறை பற்றி இடைக்கால அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. தற்போதைய அரசியலமைப்பில் இல்லாத ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் முன்மொழிவாக இலங்கை பிரிக்கப்படாததும் பிளவுபடாததுமான நாடாக உள்ளது. மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்படும். அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டுமெனில்மேலும் படிக்க…


வடகொரியா விவகாரத்தில் ஒபாமா போல் நான் தோல்வி அடைய மாட்டேன்: டொனால்ட் டிரம்ப்

வடகொரியா விவகாரத்தில் முந்தைய அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா போல் நான் தோல்வி அடைய மாட்டேன் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா கடந்த மாதம் 6-வதுதடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகாவது வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணுஆயுத சோதனையை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடகொரியா தன்நிலையில் இருந்து மாறவில்லை. மாறாக மீண்டும் ஒரு ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. சுமார் 3200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணை வடகொரியாவின் சுனான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செலுத்தப்பட்டு, ஜப்பான் நாட்டின் மீது பறந்து சென்று, பசிபிக் கடலில் விழுந்தது. ஜப்பான் நாட்டில் உள்ள குவாம் தீவில்மேலும் படிக்க…


பிரான்ஸில் ‘அல்லாஹு அக்பர் ‘ எனக் கூறியபடி கத்திக்குத்து : இரு பெண்கள் பலி : உரிமை கோரியது ஐ.எஸ். அமைப்பு

பிரான்ஸ் நகரின் தெற்கு பகுதியிலமைந்துள்ள மார்சே நகரின் புனித சார்லஸ் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, கத்தியால் தாக்குதல் மேற்கொண்ட மர்மநபரை பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். குறித்த ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர், `அல்லாஹு அக்பர்` என உரக்கக் கத்தியவாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்னர். இறந்த இருவரும் 17 மற்றும் 20 வயதுடைய பெண்கள் என்றும், ஒருவர் கழுத்து அறுபட்டும், மற்றொருவர் கத்தியால் குத்தப்பட்டும் இறந்துள்ளதாக பிரான்ஸின் ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சிங்கள ராவய அமைப்பின் தேரர் உட்பட இருவர் கைது

மியன்மார் அகதிகளுக்கு எதிராக இடையூறு விளைவித்த சிங்கள ராவயவின் தேரர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்கு முன்னால் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன  தயா­ரத்ன தேரர், அரம்­பே­பொல ரத்ன­சார தேரர் ஆகி­யோரை இன்று  தெமட்­ட­கொ­டையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜ­ராகுமாறு உத்­தர­வி­டப்­பட்­டிருந்தது. கல்­கி­சையில் கடந்த செப்­டம்பர் 26 ஆம் திகதி ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீதான அத்து மீறல் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக அவர்கள் இவ்­வாறு அழைக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர  தெரி­வித்திருந்தார். இந்நிலையில் இன்று சிங்கள ராவயமேலும் படிக்க…


காட்ட லோனியாவில் பொது வாக்கெடுப்பு: ஸ்பெயினில் இருந்து பிரிந்து செல்ல 90 சதவீத மக்கள் ஆதரவு

ஸ்பெயினில் இருந்து காட்டலோனியா மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான இந்த மாகாணத்திற்கு கூடுதல் சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயின் அரசியல் சட்டம் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அங்கு கடந்த 5 ஆண்டுகளாக தனி நாடு கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமா அல்லது ஸ்பெயினுடன் இணைந்தே இருக்கலாமா என்பது பற்றி பொதுமக்களின் கருத்தறியும் வகையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்பெயின் அரசும், அரசியலமைப்பு நீதிமன்றமும் இதற்கு அனுமதிக்காததால், வாக்கெடுப்பை முறியடிக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர்.மேலும் படிக்க…


அமெரிக்க ஓட்டலில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 2 பேர் உயிரிழப்பு-பலர் படுகாயம்

அமெரிக்காவில் ஓட்டலுக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கேசினோ ஓட்டலில் நேற்று இரவு கச்சேரி நடைபெற்றது. கச்சேரியை பார்க்க ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர். அனைவரும் கச்சேரியை ரசித்துக்கொண்டிருந்த வேளையில், கூட்டத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவன், தான் வைத்திருந்த எந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினான். இதில், பலர் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து சுருண்டு விழுந்தனர். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்தவர்கள நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போன்று காட்சியளித்தது. கச்சேரியும் உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் படிக்க…


இந்தியாவில் புற்று நோய், நீரிழிவினால் உயிரிழப்பு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

இந்தியாவில் புற்று நோய் மற்றும் நீரிழிவு நோயினால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் வெளியாகி உள்ளது. இந்தியாவில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் சுகாதார சீர்கேடுகளாலும், சத்துணவு குறைபாடுகளாலும் அவதிப்படுகின்றனர். இதனால் பலவித நோய்களின் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். அவற்றில் புற்று நோய், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் டெங்கு போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகளில் புற்று நோய் முதலிடத்தையும், அடுத்த இடத்தை நீரிழிவு நோயும் பிடித்துள்ளன. சமீப காலமாக புற்று நோய் அதிக அளவில் பரவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 46 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டில் மட்டும் 0.15 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு மக்களின் உணவு பழக்க வழக்கங்களும், வாழ்க்கை அமைப்புகளுமே காரணமாகும். புற்று நோய்க்கு அடுத்த படியாகமேலும் படிக்க…


174 நாட்களாக நடந்த நெடுவாசல் போராட்டம் ஒத்திவைப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் கிராமத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கு அந்தந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இதுபற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தினர். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில், மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், 174 நாட்களாக நடந்த போராட்டம் இன்று தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகளைமேலும் படிக்க…


காட்டலோனியா பொது வாக்கெடுப்பில் வெற்றி: மோதலில் 800 பேர் காயம்

ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடு ஆக சுதந்திரம் வேண்டி காட்டலோனியாவில் நடத்தப்பட்ட பொது வாக்கெப்பின்போது நடந்த மோதல்களில் 800-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் காட்டலோனியா மாகாணம் தன்னாட்சி உரிமை பெற்றுள்ளது, செழிப்பான இப்பகுதி ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடு ஆக சுதந்திரம் பெற விரும்புகிறது. அதற்கு ஸ்பெயின் அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே தனிநாடு கேட்டு கடந்த 5 ஆண்டுகளாக அங்கு போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஸ்பெயினில் இருந்து தனி நாடாக வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை அறிய நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அது சட்டவிரோதமானது என ஸ்பெயின் அறிவித்தது. இருந்தும் வாக்கு சாவடிகளுக்கு மக்கள் சாரை சாரையாக வந்து வாக்களித்தனர். பலர் முந்தைய நாள் இரவே வாக்கு சாவடியில் வந்து தங்கிவிட்டனர். வாக்குப் பதிவு தொடங்கியதும் போலீசார்மேலும் படிக்க…


மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை!

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில், இலங்கைத் தமிழர் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்று பபுவா நியூகினியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலையில் 32 வயதுடைய இலங்கைத் தமிழரான ஆண் ஒருவர், மருத்துவமனையில் மரணமானார் என்று பபுவா நியூகினியா காவல்துறை தலைவர் டொமினிக்ககாஸ், உறுதிப்படுத்தியுள்ளார். இவர் லொரென்கு மருத்துவமனையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று அகதிகள் நடவடிக்கை கூட்டணியைச் சேர்ந்த இயன் ரின்ரோல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையின் சமையல் கூடம் அருகே இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனுஸ் தீவு முகாமில், இரண்டு மாதங்களில் இடம்பெற்றுள்ள இரண்டாவது உயிர் மாய்ப்பு மரணம் இது என்றும் அவர் கூறினார். கிழக்கு லோரென்கு இடைத்தங்கல் நிலையத்தில் குறிப்பிட்ட நபர் தனக்குத் தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொண்ட சம்பவத்தை அடுத்து, மூன்று நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மனுஸ்மேலும் படிக்க…


முன்னாள் போராளியொருவர் தாய்லாந்தில் காலமானார்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மாலதிபடையணியின் முன்னாள்போராளியும், மணலாறு கட்டளைத் தளபதியாக இருந்த குமரன் என்பவரின் துணைவியுமான சந்தியா எனப்படும் முன்னாள் போராளியே தாய்லாந்தில் காலமானார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் 2ஆம் லெப் மாலதி படையணியில் இணைந்து தாயகவிடுதலைக்காக போராடியவரும் சிறந்த படைப்பாளியுமாவார்.


மதுரை மீனாட்சி கோயிலுக்கு சிறந்த தூய்மையான சின்னம் விருது!

தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான சின்னம் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தூய்மை இந்தியா சிறந்த கோயிலுக்கான தேர்வு தொடங்கப்பட்டு 10 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வாகியுள்ளது. இன்று (அக்டோபர் 2, 2017) மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீர ராகவ ராவ், நகராட்சி ஆணையர் எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடமிருந்து அதற்கான விருதைப் பெறுகின்றனர். இது குறித்து நகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் கூறும்போது, கோவிலை சுத்தப்படுத்தும் திட்டம் முதலில் அதன் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது என்ற கவனத்தில் தொடங்கப்பட்டது. இது ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது, மார்ச் 2018-ல் இதன் பணி முழுவதும்மேலும் படிக்க…


வாக்காளர் பட்டியல் ஒக்ரோபர் 12 இல் வெளிவரும்!

மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டதன் காரணத்தினால் நேற்று முன்தினம் வெளியிடப்படவிருந்த வாக்காளர் பட்டியல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 12ஆம் நாள் வெளியிடப்படும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்படும் என தேர்தல்கள் திணைக்களம் முதலில் அறிவித்திருந்தது. மூன்று மாகாணங்களின் ஆட்சிக்காலம் சென்றவாரம் நிறைவடைந்தது. இதனையடுத்து மூன்று மாகாணங்களின் தேர்தல்களும் நடத்தப்படவிருந்ததால் நேற்று முன்தினம் வாக்காளர்பட்டியல் வெளியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசாங்கம் மூன்று மாகாணங்களின் தேர்தல்களையும் பிற்போட்டுள்ளது. இதனையடுத்தே எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 12ஆம் நாள் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.


காணி, பொலிஸ் அதிகாரங்களை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் – இரா.சம்பந்தன்!

புதிய அரசியலமைப்பில் மக்களின் அடிப்படை உரிமைகளான காணி, பொலிஸ் அதிகாரங்களில் எந்த விட்டுக்கொடுப்புக்குமிடமில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மன்னார் ஆயரிடம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உருவாக்கப்படும் இந்த அரசியல் யாப்பினை நாங்கள் உதாசீனம் செய்யக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் மன்னார் ஆயர் இல்லத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகையை சந்தித்து ஆசீ பெற்றுக்கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், ஆயருடனான சந்திப்பின்போது, தற்கால அரசியல் நிலமை தொடர்பாக ஆயருடன் கலந்துரையாடினார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் மன்னார்மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையினையும் சந்தித்து புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடினார். இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் மறைமாவட்டமேலும் படிக்க…


கொக்குவிலில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசம்!

யாழில் வாள்வெட்டுக் கும்பல் நேற்றிரவு கடையொன்றினுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கியுள்ளதுடன், கடைக்கு முன்னால் நின்ற உந்துருளியையும் தாக்கிச்சென்றுள்ளதாக காவல்துறையினர்தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் கொக்குவில் சந்தியில் இரவு 8.00 மணிக்கு இடம்பெற்றதாக காவல்துறையினர்n தரிவித்துள்ளனர். கொக்குவில் சந்திக்கு 3 உந்துருளிகளில் வந்த 9பேர் சந்தியில் உந்துருளிகளை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்குள்சென்று பொருட்களைத் தாக்கி நாசம்செய்துவிட்டுச்சென்றுள்ளது. சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் காவல்துறைக்கு வழங்கிய தகவலையடுத்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


சிரியா உள்நாட்டுப் போர்: கடந்த மாதத்தில் மட்டும் 3 ஆயிரம் பேர் பலி!

சிரியாவில் அதிபரின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுப் போரில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் உள்பட 3 ஆயிரம் பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட ரஷியா நாட்டின் விமானப்படை துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. இதுதவிர சிரியாவின் சில பகுதிகளை பிடித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் உள்நாட்டு ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க விமானப்படை ஈடுபட்டுள்ளது. இப்படி, மும்முனை தாக்குதல்களை சந்தித்துவரும் சிரியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக அங்குள்ளமேலும் படிக்க…


மத்திய ஆட்சியின் மூன்றாண்டு கால செயல்பாடுகள் சாதனையா – வேதனையா என்பது அம்பலமாகியுள்ளது – ஸ்டாலின்

மத்திய ஆட்சியின் மூன்றாண்டு கால செயல்பாடுகள் சாதனையா – வேதனையா என்பது அம்பலமாகியுள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வண்ண வண்ண மத்தாப்புகளால் வாணவேடிக்கை காட்டுவது போல, வாக்குறுதிகளை அள்ளி வீசி, பெரும் பொருட்செலவில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இடைவிடாத பிரசாரம் செய்து, தனிப் பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆட்சி செய்யும் வகையில் வாக்குகளைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் கடந்துவிட்டது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றனவா எனக் கேட்டால் மத்திய ஆட்சியில் இருப்பவர்களால் பதில் சொல்ல முடியாது. ஆனால், ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்து வரும் தண்டனைகளை, அவர்களைச் சார்ந்தவர்களே வெளிப்படையாகச் சொல்லத்மேலும் படிக்க…


தீ விபத்து: உயிருக்கு போராடிய இந்தியரை புர்க்காவால் காப்பாற்றிய அரபு பெண்

ஐக்கிய அரபு அமீரக நெடுஞ்சாலையில் இரு லாரிகள் மோதிய விபத்தில் உயிருக்கு போராடிய இந்திய டிரைவரின் உடலில் பற்றிய தீயை அரபு நாட்டு பெண் புர்க்காவால் அணைத்து காப்பாற்றியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் கடைக்கோடியில் உள்ள நகரமான ரஸ் அல்-கைமாஹ் பகுதியை சேர்ந்த ஜவஹர் சைப் அல் குமைட்டி(22 என்ற பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். நெடுஞ்சாலை வழியாக வந்தபோது இரு லாரிகள் நேருக்குநேர் மோதி தீபிடித்து எரிந்து கொண்டிருப்பதை ஜவஹர் கண்டார். லாரியின் அருகில் இருந்து உடலில் தீப்பற்றியவாறு ஒருவர் ஓடி வருவதை கண்ட அவர் பதைபதைத்தார். அவ்வழியாக சென்ற அனைவரும் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த டிரைவரின் உயிரை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை.மேலும் படிக்க…


42வது ஆண்டு திருமண வாழ்த்து – திரு.திருமதி.செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் (02/10/2017)

தாயகத்தில் நயினாதீவை பிறப்பிடமாகக் கொண்ட பிரான்ஸ் La Courneuve இல் வசிக்கும் செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகள் 24ம் திகதி செப்ரெம்பர் மாதம் ஞாயிற்றுக் கிழமை வந்த தங்களது 42வது ஆண்டு திருமண நாளை 2ம் திகதி அக்டோபர் மாதம் திங்கட்கிழமை இன்று தங்களது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இன்று 42வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் செல்வராஜா மகேஸ்வரி தம்பதிகளை அன்பு மகள் சசிகலா அன்பு மகன் சசிகரன் அன்பு மகள் வளர்மதி அன்பு மருமக்கள் வசந்தன் இளங்கோ ரூபி பேரப்பிள்ளைகள் சஞ்சய் ரித்திக் பிரவீன் அபிஷா விக்ரன் விவியன் விரம்யா மற்றும் மச்சாள் விஜி இராஜேந்திரம் குடும்பம்,பேரப்பிள்ளைகள் விசந்தன் விருஷன் துர்ஷா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றார்கள். இன்று 42வது ஆண்டு திருமணமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !