Friday, September 15th, 2017

 

பிரித்தானியாவில் ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டென் உருவப்படத்துடன் புதிய 10 பவுண்ட் கரன்சி வெளியீடு..

பிரித்தானியாவில் நேற்று முதல் உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டென் உருவப்படம் பொறித்த கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. கரன்சியின் பின்புறத்திலும் புத்தக வாசிப்பை போற்றும் விதமாக ஜேன் ஆஸ்டெனின் வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும் கண்பார்வையற்றவர்களும் எளிதில் பயன்படுத்தும் வண்ணம் கரன்சியில் பிரெய்லி புள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. நூறு கோடி மதிப்பிலான புதிய 10 பவுண்டு கரன்சி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன, இதில் AA01 0000001 வரிசை எண் கொண்ட முதல் நோட்டு எலிசபெத் மகாராணிக்கு வழங்கப்பட்டது. புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த போதும், சார்லஸ் டார்வின் உருவம் பொதித்த பழைய நோட்டுகள் 2018 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட சமுர்த்தி உத்தியோகத்தர்!

மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் 14 வயதுச் சிறுமியை தவறான முறையில் நடந்துகொண்டதுடன், அவற்றினை தனது தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை தனது அலுவலகத்திற்குள் அழைத்து தவறான முறையில் அணுகியுள்ளார். அத்துடன் அவற்றினை தனது தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இவற்றினை அவதானித்த சிலர் சமுர்த்தி உத்தியோகத்தரின் தொலைபேசியை பறித்ததும் சமுர்த்தி உத்தியோகத்தர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இவ்வாறு இழைக்கப்பட்ட சிறுவர் பாலியல் உரிமை மீறல்கள் மற்றும் சிறுமி சகிதம் வேலணை துறையூரில் வசிக்கும் குறித்த சமுர்த்தி உத்தியோகதருக்கு எதிராக பெற்றோர் ஊர்காவற்றுறைப் பொலிஸ்மேலும் படிக்க…


100 வருடத்திற்குப் பின் பிரான்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக்..

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் பாரிஸ் நகரிலும், 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடக்கும் என, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஒலிம்பிக் போட்டி வரும் 2020ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டொக்கியோவில் நடக்கிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒலிம்பிக் நடைபெற உள்ளது. 1924ஆம் ஆண்டுதான் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி பிரான்ஸில் நடைபெற்ற கடைசி ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


பெண் கான்ஸ்டபிள் 464 பேருக்கு பதவி

பொலிஸ் சேவையில் பெண் கான்ஸ்டபிள் 464 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தகுதிகளைக்கொண்டவர்களுக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தால் பதவி உயர்வு வழங்கப்படாமலிருந்தவர்களுக்கே பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


‘ஜனாதிபதி அப்பா’ நூல் வெளியீட்டு விழா

‘ஜனாதிபதி அப்பா’ என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (15) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய வரலாற்றை உருவாக்கிய மிகவும் எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர்  நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட உன்னதமான  கதையை அவரது மகளின் பார்வையால் கூறும் ‘ஜனாதிபதி அப்பா’ நூலின் வெளியீட்டு விழா இவ்வாறு இடம்பெற்றது. தனது தந்தையார் பிரதேச அரசியல்வாதியாக அரசியல் வாழ்வை ஆரம்பித்து, ஜனாதிபதி பதவி வரையான முன்னேற்ற பயணத்தை மேற்கொண்டபோது அவரது மூத்த மகளாக சத்துரிக்கா சிறிசேன பெற்ற அனுபவங்கள் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவி வகிக்கும் தனது தந்தை தொடர்பில் மகளால் எழுதப்பட்ட முதலாவது வாழ்க்கைச் சரிதமாக இந்த நூல் வரலாற்றில் இடம்பெறுகிறது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , தனதுமேலும் படிக்க…


என்னை விசாரியுங்கள், என் மகனை விட்டுவிடுங்கள்: ப.சிதம்பரம்

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அந்நியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட ஆறு பேருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலைக்குக் கைமாறியதில் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு தொடர்பு உண்டு என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ப.சிதம்பரம் கூறுகையில், “ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ தவறான தகவல்களைப் பரப்புவது வருத்தமளிக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று, திட்ட ஒப்பந்தத்துக்கு நான்தான் அனுமதி அளித்தேன். ஆனால், இது தொடர்பான விசாரணையில் என்னை விசாரிக்காமல்மேலும் படிக்க…


குழந்தையுடன் செரீனா வில்லியம்ஸ் புகைப்படம் வெளியீடு

டென்னிஸ் உலகின் முடிசூடா ராணியாக திகழ்ந்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது கர்ப்பமான காலத்திலேயே பல்வேறு போஸ்களில் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்த செரீனா, குழந்தையின் படத்தை எப்போது வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தன இந்த நிலையில் தற்போது குழந்தையை அரவணைத்தபடி செரீனா இருக்கும் புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் என்ற பெயர் வைத்துள்ளதாகவும் செரீனா குறிப்பிட்டுள்ளார்


விடுமுறையை கழிக்க இலங்கை வந்த பிரிட்டன் பத்திரிகையாளர் முதலை கடித்து உயிரிழந்த சோகம்!

விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் இலங்கைக்கு வந்த பிரிட்டன் பத்திரிகையாளர், முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் பால் மெக்லன் (வயது 24). லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளரான இவர், விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் இலங்கை வந்திருந்தார். நேற்று பிற்பகல் பனாமா கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது, கடலை ஒட்டியுள்ள நீர்நிலையில் பால் மெக்லன் இறங்கி கால் கழுவியுள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த முதலை அவரை கடித்து உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரைத் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க வில்லை. இந்நிலையில், இன்று பால் மெக்லன் உடல், அந்த நீர்ப்பரப்பின் சகதிக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காலில் ஆறேழு இடங்களில் காயம் இருந்தது. உடலை கைப்பற்றிமேலும் படிக்க…


இன்னும் 10 வருடங்களுக்கு ஆசிரியர்களே இருக்க மாட்டார்கள்: பிரபல விஞ்ஞானி தகவல்

21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப உலகில் அனைத்துமே கம்ப்யூட்டர் மற்றும் ரோபோட் மயமாகி வரும் நிலையில் விரைவில் ஆசிரியர்களுக்கு பதில் ரோபோட்டுக்கள் வகுப்பறையில் பாடம் எடுக்கும் என பிரபல விஞ்ஞானி அந்தோணி ஷெல்டன் அவர்கள் கூறியுள்ளார். ஒவ்வொரு வகுப்புக்கும் உரிய மாணவர்களுக்கு தேவையான டேட்டாக்களுடன் கூடிய ரோபோட்டுக்கள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கவிருப்பதாகவும் இன்னும் பத்து வருடங்களில் ஆசிரியர்கள் கொஞ்ச கொஞ்சமாக குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அந்தோணி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த வகை ரோபோட்டுக்கள் மாணவர்களின் முகக்குறிப்பை அறிந்து செயல்படும் என்றும், மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களை உள்வாங்கி பதிலளிக்கும் திறமைகள் இந்த ரோபோட்டுக்களுக்கு இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


இந்திய டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்த நோயாளி!

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய டாக்டர் ஒருவரை அமெரிக்காவின் நோயாளி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அச்சுத என்ற டாக்டர் அமெரிக்காவில் உள்ள கான்ஸாஸ் என்ற பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார். இவர் பல அமெரிக்க இந்தியர்களுக்கு குடும்ப டாக்டராக இருந்து வந்தார். இந்த நிலையில் அமெரிக்காவில் வாழும் இந்தியர் உமர் ரஷித் தத் என்பவருக்கும் டாக்டர் அச்சுதாவிற்கு இடையே சமீபத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் இதன் முடிவில் உமர், அச்சுதாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அமெரிக்க போலிசார் உமரை கைது செய்தனர்.


லண்டனில் சுரங்க ரயிலில் குண்டு வெடிப்பு!

லண்டனில் சுரங்க பாதையில் சென்றுக்கொண்டிருந்த ரயிலில் குண்டு வெடித்தால், ரயில் முழுவதும் தீ பரவியது. இதனால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடி உள்ளனர். மேலும் பலருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது என லண்டன் மெட்ரோ செய்தித்தாள் கூறியுள்ளது. தற்போது அங்கு மீட்பு பணியும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியும் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.


இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம்: பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் அபே தொடங்கி வைத்தனர்

அகமதாபாத் – மும்பை இடையே ‘புல்லட்’ ரயில் இயக்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே துவக்கி வைத்தனர். இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைப்பெற்றது.. ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை – அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, நேற்று விமானம் மூலம் ஆமதாபாத் வந்தடைந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார். இதையடுத்து இருவரும் திறந்த வாகனத்தில் பொதுமக்களை வணக்கம் தெரிவித்துக் கொண்டே புறப்பட்டு சென்றனர். பின்னர் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டனர். இந்த சூழலில் இந்திய-ஜப்பான் இடையேயான 12-வது உச்சி மாநாடுமேலும் படிக்க…


மனித மூலதனக் குறியீடு: இலங்கை, நேபாளத்தை விட பின்தங்கியது இந்தியா

காஷ்மீரில் இருந்து குஜராத்துக்கு இடம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு அகமதாபாத் ரயில் நிலையம் அருகே ஒரு கூடாரத்தில் பாடம் நடத்துகிறார் ஒரு காஷ்மீரி இளைஞர். உலகப் பொருளாதார மன்றம் என்னும் அமைப்பு உலகின் 130 நாடுகளில் உள்ள மனித மூலதனத்தை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் இந்தியாவுக்கு 103வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை, நேபாளம் மற்றும் சில பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகள் போன்றவை ‘உலக மனித மூலதனக் குறியீடு 2017′ அறிக்கையின் தரவரிசையில் இந்தியாவைவிட மேலே உள்ளன. மனித மூலதனம் என்பது என்ன? உலகப் பொருளாதாரத்தில் மதிப்புக் கூட்டும் வல்லமையை மக்களுக்கு அளிக்கும், அறிவும் திறமையுமே மனித மூலதனம் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சுருக்கமாக: மக்களுக்குள்ள அறிவும், திறமையுமே மனித மூலதனம். கல்வி மட்டுமல்ல வேலையும்… மனித மூலதனத்தை ஒரு நாடு எப்படி வளர்த்தெடுக்கிறது என்பதே அந்தமேலும் படிக்க…


பிரபல நிறுவனம் தாயாரித்த சாக்லேட் முழுவதும் புழுக்கள் – வைரலாகும் வீடியோ

பிரபல நிறுவனத்தின் சாக்லேட்டில் புழுக்கள் இருப்பதாக அமேரிக்காவைச் சேர்ந்த பெண் வெளியிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ரேச்சல் வைல் என்ற பெண் தான் உண்ட சாக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். மேலும் அது குறித்த வீடியோவையும் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில் அவர் பிரிக்கும் ஒவ்வொரு சாக்லேட்டிலும் புழுக்கள் இருந்தன. மேலும் அவர் இந்த சாக்லேட்டை யாரும் வாங்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதனை பார்த்த சாக்லேட் விரும்பிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த சாக்லேட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக ரேச்சல் கூறியிருந்தார். அவர் ‘எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட் சுகாதாரமானது. அது குறிப்பிட்டமேலும் படிக்க…


தடையை மீறி மீண்டும் அணுஆயுத சோதனை நடத்தியது வடகொரியா – தென்கொரியா ராணுவம் குற்றச்சாட்டு

தடைகளை மீறி வடகொரியா இன்று மீண்டும் கிழக்குத்திசை நோக்கி அணுஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரியா ராணுவம் குற்றச்சாட்டி உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது. இந்நிலையில், இன்று மீண்டும் வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங் நகரில் இருந்து கிழக்கு நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டது என தென்கொரியா கூறியுள்ளது. இந்த ஏவுகணை குறித்து அமெரிக்கா மற்றும் தென்க்கொரிய கூட்டுப்படையினர் ஆய்வுசெய்து வருகின்றனர் என கூட்டுப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.


அண்ணா பிறந்த நாளையொட்டி காவல்துறை, சீருடை அதிகாரிகள்-பணியாளர்கள் 128 பேருக்கு பதக்கம்: எடப்பாடி பழனிசாமி

அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை, சீருடை அதிகாரிகள்-பணியாளர்கள் 128 பேருக்கு பதக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அண்ணா பிறந்தநாளையொட்டி காவல்துறை, சீருடை அதிகாரிகள்-பணியாளர்கள் 128 பேருக்கு பதக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல் ரேகை பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தமிழக முதல்- அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலைகாவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் துணை இயக்குனர்மேலும் படிக்க…


ஈராக்கில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு

ஈராக்கின் திகார் மாகாணத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த கடுமையாக  போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தை அமெரிக்க படையினரின் உதவியால் ஈராக் தவிடுபொடியாக்கி வருகிறது. ஆனாலும் அவர்கள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி பெருத்த சேதத்தை விளைவித்து வருகின்றனர். இந்நிலையில், ஈராக் நாட்டின் திகார் மாகாணத்தில் நசிரியா பகுதியில் சாலையோர உணவகம் ஒன்றில் இன்று தீவிரவாதி ஒருவன் திடீரென நுழைந்தான். அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால்  சுட தொடங்கினான். இதைதொடர்ந்து, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனை சாவடியில் அவன்  கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினான். இந்த இரண்டு தாக்குதல்களிலும் சுமார் 52 பேர் பலியாகி உள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.மேலும் படிக்க…


யாழில் சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுதினம்

யாழ்ப்பாணத்தில் மகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் 96ஆவது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் அண்மையில் யாழ்ப்பாணம் அரசடியில் அமைந்துள்ள பாராதியாரின் உருவச்சிலை முன்பாக நடைபெற்றது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி மறைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் இந்திய துணைத்தூதுவர் நடராஜன் கலந்துகொண்டு பாராதிராஜாவின் உருவச்சிலைக்கு மாலைஅணிவித்தார். இந்த நிகழ்வினை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.இந்த நிழ்வில் சமயத்தலைவர்கள் , பேராசிரியர்கள் , மாணவர்கள் அறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.


பிரதேச மட்டங்களில் பெண்கள் அபிவிருத்தி உதவியாளராக நியமிக்கப்படுவர் – பிரதமர்

மகளிர் விவகார திட்டமிடல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக பிரதேச செயலக மட்டங்களில் பெண்கள் அபிவிருத்தி உதவியாளராக நியமிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம், அரச கொள்கை என்பன பற்றி அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், சிறு வர்த்தக அபிவிருத்தியின் போது பெண்களுக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புக்கள் பற்றி கவனம் செலுத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டார். அபிவிருத்திப் பணிகளுக்காக தனியார் முதலீடுகளை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் போது பிரதேச மட்டத்திலான சிறு வர்த்தகங்களை மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.


உலக ஜனநாயக தினம் இன்று

உலக ஜனநாயக தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனநாயகம் பற்றியும் சர்வஜன வாக்குரிமை பற்றியும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் தொடரை ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட தேர்தல்கள் அலுவலங்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஜனநாயக்கத்தின் ஆதாரம் வாக்குரிமையே – சர்வஜன வாக்குரிமையை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் சகல மாவட்டங்களிலும் விழிப்புணர்வு திட்டங்கள் நடைபெறவுள்ளது. இதன்கீழ் சுவரொட்டிகளும் பதாதைகள் , வீதி நாடகங்கள், சொற்பொழிவுகள் மற்றும் ஊர்வலங்களும் நடத்தப்படவுள்ளன.


யாழ் சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பமாகிறது. யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீடமும், ஹற்றன் நஷனல் வங்கியும் அரங்க அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ளும் இந்த திரைப்படவிழா எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. சுமார் 25 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இவற்றில் சர்வதேச விருது பெற்ற உள்நாட்டு வெளிநாட்டுத் திரைப்படங்களும் அடங்குகின்றன. யாழ் சர்வதேச திரைப்பட விழாவை Agenda-14 என்ற நிறுவனத்துடன் இணைந்து, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம், சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன. விழாவின் நிறைவு தினத்தில் திரைத்துறை சார்ந்த சாதனையாளர்களுக்கும், சிறந்த படைப்புகளுக்கும் விருது வழங்கப்படவுள்ளதுடன் , இலங்கையின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான தர்மசேன பத்திராஜா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.


கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமாகிறது. கொழும்பு பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 24ம் திகதி வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த புத்தக கண்காட்சியை 19 ஆவது வருடமாகவும் தொடர்ந்து இலங்கை புத்தக வெளியிட்டாளர் சங்கம் ஏற்பாடு செய்கிறது. இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், விநியோக நிறுவனங்கள் அடங்கலாக 400க்கு மேற்பட்ட அமைப்புக்களின் காட்சிக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தேசிய விபத்து தவிர்ப்பு வாரம் பிரகடனம்..

எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை விபத்து தவிர்ப்பு வார நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.  பொலிசாரின் துணையுடன்இ சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.  விபத்துக்களை இயன்றளவு குறைப்பது இதன் நோக்கமென தொற்றா நோய்ப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் திலக் சிறிவர்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போது  தொவித்துதார்.  ஆண்டொன்றில் பத்தாயிரம் பேர் வரை விபத்துக்களால்  உயிரிழப்பதாக தொவித்த டொக்டர் சிறிவர்தன விபத்துக்களில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கம் பெருந்தொகை பணத்தை செலவிடுவதாகவும்  கறிப்பிட்டார்.  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.டி.ஜெ.தனஞ்சய ,கவனயீனமும் பாதுகாப்பற்ற செயல்களும் விபத்துக்கள் அதிகரிக்க காரணம் என்றார்.  பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களுடன் தொடர்புடையவை. முச்சக்கரவண்டி விபத்துக்களும் அதிகரித்து வருவதாக பொலிஸ்மேலும் படிக்க…


ஆகக்கூடிய அந்நிய செலவாணி, மற்றும் பெறுமதிசேர் ஏற்றுமதியாளர்களுக்கு விருது!

சர்வதேச அமைப்புகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும் நடுநிலையான வருமானம் பெறும் நாடென்று எம்மை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கு எமது பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுப்பது இன்றியமையாததென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். தேசிய பொருளாதார பேரவையை நிறுவும் போது இவ்விடயம் கருத்தில் எடுக்கப்பட்டதுடன், கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் தேசிய விவசாயத்தை உயர்த்துவதும் அதன் முக்கியமான நோக்கமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். மொத்த தேசிய உற்பத்தியில் எமது ஏற்றுமதி வருமானம் ஒரு வீத பெறுமானத்தை கொண்டிருப்பதாகவும் எம்மைப்போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அது திருப்பதிகரமானது அல்ல என குறிப்பிட்ட ஜனாதிபதி , ஏற்றுமதி துறையில் அரசாங்கத்தை விடவும் ஊக்கமாகமேலும் படிக்க…


‘கடல் காகம் 2017’ கூட்டுப்போர்ப்பயிற்சிக்கு ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக எட்டாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் கூட்டுப்போர்ப்பயிற்சி நடவடிக்கையான ‘கடல் காகம் 2017’ (தியகாவா) போர் பயிற்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த கூட்டுப்போர்ப்பயிற்சி நடவடிக்கையானது இலங்கை முப்படையினர் உறுப்பினர்கள் மற்றும் 13 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு இராணுவத்தினரின் பங்குபற்றுதலுடன் இந்த போர்ப்பயிற்சி இம்மாதம் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமானது. திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற போர்ப்பயிற்சியினை தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தினூடாகப் பார்வையிட்ட ஜனாதிபதி ‘கடல்காகம்’ யுத்த பயிற்சியில் இணைந்து கொண்டுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கை இராணுவத்தினர் ஒழுக்க நெறிகளை மதித்துவருகின்ற காரணத்தினால் அவர்களது கௌரவம் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய யுத்த தந்திரோபாயங்கள் மற்றும்மேலும் படிக்க…


இன்று முதல் காணாமல் போனோர் அலுவலகம்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் இன்று முதல் தனது வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கின்றது. இந்த அலுவலகத்தை செயற்பட இடமளிப்பது தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்கிழமை கைச்சாத்திட்டார். காணாமல் போனவர்களது பெற்றோர் மற்றும் உறவினர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், ஜனாதிபதி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபித்து கடந்த காலத்தில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய உண்மைகளை கண்டறிந்து, அது தொடர்பில் நீதி நிலைநாட்ட வேண்டும் என்பது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டதை தமது பிள்ளைகளையும் உறவினர்களையும் இழந்த குடும்பங்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.


சேவைக்கு திரும்­பாத மின்­சார ஊழி­யர்கள் கட­மை­யி­லி­ருந்து வில­கியவர்களாக கணிக்­கப்­ப­டுவர்!

தற்­கா­லிக மற்றும் உடன்­ப­டிக்கை அடிப்­ப­டையில் மின்­சார சபையில் பணி­யாற்றும் சகல அத்­தி­ய­ாவ­சிய, அவ­சர மின்­சார சேவை வழங்கும் ஊழி­யர்­களும் இன்று காலை 8.30 மணிக்கு முன்னர் கட­மைக்குத் திரும்ப வேண்டும்.  அல்­லாத­வி­டத்து குறித்த ஊழி­யர்கள் தமது பணி­யி­லி­ருந்து விலகிச் சென்­ற­தாகக் கருதி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என மின்­சக்தி மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி வள அமைச்சு அறி­வித்­துள்­ளது. அவ்­வ­மைச்சு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே குறித்து விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் தாம் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் முன்­னெ­டுத்­துள்ள தொழிற்­சங்கப் போராட்­டத்தைக் கைவிடப்போவ­தில்லை என  ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்க முன்­னணி தெரிவித் ­துள்­ளது. மேலும் கடந்த புதன்கிழமை முதல் தொழிற்­சங்கப் போராட்டத்தில் ஈடு­பட்­டுள்­ள­போதும் வைத்­தியசாலை உள்­ளிட்ட  முக்­கிய இடங்­களில் சேவை இடம்­பெ­று­கி­றது. எனினும் இன்று நண்­ப­க­லுக்கு முன்னர் உரிய தீர்­வின்றேல் நண்­ப­க­லுக்குப் பின்னர் பரந்துபட்ட போராட்­டத்தில் ஈடுபடவுள் ளதாகவும்மேலும் படிக்க…


சைட்டம் தொடர்பில் தகுந்த தீர்­வொன்றை அர­சாங்கம் முன்­வைக்­கா­விடில் தொடரும் வேலை நிறுத்தம்!

சைட்டம் தனியார் மருத்­து­வக் ­கல்­லூரி தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சை­களை தீர்ப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து ஐந்தாம் நாளான இன்றும் பிர­தான ஐந்து மாவட்­டங்­களில் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் வேலை நிறுத்­தத்­தினை முன்­னெ­டுக்­க­வுள்­ளது. அதற்­க­மை­வாக கொழும்பு, புத்­தளம், கம்­பஹா, கேகாலை மற்றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­களில் ஒருநாள் அடை­யாள வேலை நிறுத்­தத்­தினை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும், இன்­றைய தினத்­துக்குள் தகுந்த தீர்­வொன்றை அர­சாங்கம் முன்­வைக்­கா­விடில் போராட்டம் தீவி­ர­ம­டையும் எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் நலிந்த டி சொய்ஷா தெரி­வித்தார். சைட்டம் மாலபே தனியார் மருத்­துவ கல்­லூரி தொடர்பில் எழுந்­துள்ள நடை­முறை சிக்கல் குறித்து ஆராய்ந்து அறிக்­கை­யொன்­றினை தயா­ரிப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வாறு நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கை­யா­னது பக்­கச்­சார்­பா­னது என  அதற்கு எதிர்ப்பு தெரி­வித்தும், பல்­வேறு கோரிக்­கைளைமேலும் படிக்க…


டெல்லியில் தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்!

டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் பங்கேற்றுள்ள விவசாயிகள் தினமும் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளின் இந்த போராட்டம் 61-வது நாளாக நேற்று நடைபெற்றது. அப்போது விவசாயிகள் பிச்சை எடுத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘மோடியே மோடியே எங்களை பிச்சை எடுக்க வைத்து விட்டாயே’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர்.


தீபா அணி முடங்கியது: ஆதரவாளர்கள் ஏமாற்றம்!

அ.தி.மு.க. தங்களுக்கே சொந்தம் என்று முழக்கமிட்டு வந்த தீபா அணி கடந்த சில நாட்களாக முடங்கி போய் உள்ளது. இந்த முடக்கத்தால் நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கிய அவர் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தனது வீட்டிலேயே தலைமை அலுவலகத்தையும் நடத்தி வந்தார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்தும் தீபா ஆலோசனை நடத்தினார். சசிகலா-எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்த அவர் அ.தி.மு.க.வை மீட்போம் என்று முழங்கினார். போயஸ் கார்டன் வீடு எங்களுக்கே சொந்தம் அதனை மீட்டெடுப்போம் என்றும் கூறினார். தீபாவுக்கு பக்கபலமாக முன்னணி நிர்வாகிகள் பலர் செயல்பட்டனர். வக்கீல் பசும்பொன் பாண்டியன் தலைமையில் தீபா அணியின் நிர்வாகிகள் டெல்லி சென்றும்மேலும் படிக்க…


எங்களை தாக்கினால் சவுதி எண்ணெய் கிணறுகளை தாக்குவோம்! – ஏமன் தலைவர்

ஏமன் நாட்டின் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தினால் அந்நாட்டில் உள்ள எண்ணெய் கிணறுகளை தாக்குவோம் என ஹவுத்தி அமைப்பு தலைவர் அப்தல் மாலிக் அல் ஹவுத்தி எச்சரித்துள்ளார். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா நடத்திவரும் தாக்குதலுக்கு அந்த அமைப்பின் தலைவர் அப்தல் மாலிக் அல் ஹவுத்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்துமேலும் படிக்க…


மு.க.ஸ்டாலினை இளைய சமுதாயம் மன்னிக்காது – தமிழிசை

நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்களை தமிழகத்தின் இளைய சமுதாயம் மன்னிக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வியையும், பள்ளிகளையும் எதிர்க்கும் அளவிற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் மற்ற கட்சிகளின் தலைவர்களும் குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களும் ஒரு எதிர்மறை அணுகுமுறையை கொண்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏழைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டிய இந்த காலகட்டத்தில் இந்தி திணிக்கப்படும் என்று இல்லாத கதையை சொல்வது, எப்படிப்பட்ட பள்ளிகளை ஏழைகளுக்கு கிடைக்காமல் தடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சர்வ வசதி கொண்ட கல்வி கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கக்கூடாது என மு.க.ஸ்டாலின், திருமாவளவன் போன்றவர்கள் முயல்கிறார்களா?. இதை தமிழகத்தின் இளைய சமுதாயம் மன்னிக்காது. நவோதயாமேலும் படிக்க…


20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக வட-கிழக்கு முதலமைச்சர்களின் கருத்து!

20ஆவது திருத்தச் சட்டம் திருத்தங்களுடன் வந்தால் அதனை மீள்பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஊடகங்கள் அதுகுறித்து வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 20வது திருத்த சட்டம் தொடர்பாக எந்தவித திருத்தங்களும் வரவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், முறையாக பரிசீலித்து சரியான முடிவுக்கு வருவோம். இதுவரையில் திருத்தங்கள் செய்யப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் தெரிவிக்கையில், அரசாங்கமானது சட்டமூலமொன்றைக் கொண்டுவரும்போது அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டிய தேவை மக்கள் பிரதிநிதிகளாகிய எமக்கிருக்கின்றது. 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றபோது அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதனால் எமக்கு எந்தவிதப் பாதகமுமில்லையென தெரிவித்துள்ளார்.


மியான்மரில் இருந்து மூன்றில் ஒரு பங்கு ரோகிங்யா மக்கள் அகதிகள்: ஐ.நா

ராணுவத்தின் ஒடுக்குமுறை காரணமாக மியான்மரில் இருந்து மூன்றில் ஒரு பங்கு ரோகிங்யா மக்கள் அகதிகளாக சென்றிருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். 1.மியான்மர் நாட்டில் ரோகிங்யா என்ற சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர்கள் அந்த நாட்டில் சிறுபான்மையினர் மக்களாக உள்ளனர். இவர்களுக்கும், அந்த நாட்டில் பெரும்பான்மையின மக்களாக உள்ள புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தில் பல லட்சம் ரோகிங்யா மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது மீண்டும் அங்கு கலவரம் வெடித்துள்ளது. ராணுவத்தினரே ரோகிங்கியா மக்களை தாக்கி கொன்று வருகிறார்கள். இதனால் ரோகிங்யா மக்கள் மீண்டும் அகதியாக வங்காளதேசத்திற்கு தப்பி ஓடுகின்றனர். இப்போது ஏற்பட்டுள்ள கலவரத்தில் மட்டும் 3 லட்சத்து 79 ஆயிரம் பேர் அகதிகளாக வங்காளதேசத்திற்கு சென்றுள்ளனர்.மேலும் படிக்க…


அரசியல் சமூக மேடை – 14/09/2017

பேராசிரியர்  சச்சிதானந்தம் இணைந்து கொண்டார்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !