Sunday, May 21st, 2017

 

21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா போர் வீரன் பால்ராஜ்

தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.   தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர்.   ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர். வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன்மேலும் படிக்க…


தமிழின அழிப்புக்கு நீதி கோரி பேர்லின் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும்,இறுதிக்கணம் வரை  எமது மண்ணுக்காய் தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவுகூரும் வகையிலும், தமிழின அழிப்புக்கு பன்னாட்டு ரீதியாக நீதிகோரும் வகையிலும் யேர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மலர்வணக்கம், சுடர்வணக்கம் செலுத்தி வணங்கினர்.தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பாரிய பதாதைகளை தாங்கியவண்ணம் , துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்து ஒலிபெருக்கியிலும் வாசித்தனர்.தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் வரை ஓயாது உறுதி குலையாது தொடர்ந்து போராடுவோம் என உறுதி  மொழியுடன் கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுற்றது. Webseite: www.tccgermany.com Email      : tccgermany27@gmail.com Facebook : https://www.facebook.com/TCC-Germany-546244298846170/


சுமந்திரன் அவர்களுடனான செவ்வி 3ம் பாகம் (காணொளி)


சுமந்திரன் அவர்களுடனான செவ்வி 2ம் பாகம் (காணொளி)


சுமந்திரன் அவர்களுடனான செவ்வி 1ம் பாகம் (காணொளி)


ஜெர்மனி டுசில்டோர்ப் நகரில் நடை பெற்ற தமிழின அழிப்பு நினைவுநாள்

பன்னாட்டு நாடுகளின் உதவியுடன் தமிழீழமக்களை சிறீலங்கா அரசாங்கம் இனவழிப்பு செய்ததுக்கு நீதிகோரி மே 18 அன்று யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் யேர்மனி வாழ் தமிழீழ மக்களால் ஆர்ப்பாட்டப் பேரணியும் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான வணக்க நிகழ்வும் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் யேர்மனியின் அனைத்து நகரங்களிலும் இருந்து டுசில்டோர்ப் நகரத்திற்கு அணிதிரண்டிருந்த தமிழீழ மக்கள் டுசில்டோர்ப் புகையிரத நிலயத்திற்கு முன்பாக அணிதிரண்டு அங்கிருந்து அந்த மாநிலத்தின் பாராளுமன்றம் இருக்கும் இடத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். செல்லும் வழிகளில் இனப்படுகொலை சம்பந்தமான துண்டுப்பிரசுரங்களை யேர்மனிய மக்களுக்கு விநியோகித்தபடியும் எமக்கான நீதி மறுக்கப்பட்டிருப்பதை இளையோர்கள் ஒலிபெருக்கிமூலம் யேர்மனிய மக்களுக்கு அறிவித்தபடியும் ஊர்வலமாகச் சென்றமக்கள் கைகளில் பதாதைகளைத் தாங்கியும் சென்றனர். பின் பாராளுமன்றத்திற்கு முன்பாக அணிதிரண்ட மக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த உறவுகளின் கல்லறைக்கு தீபம் ஏற்றி மலர்தூவி தமது இதயவணக்கத்தைச் செலுத்தினர்.மேலும் படிக்க…


கலிஃபோர்னியாவில் பரவிவரும் காட்டுத் தீ: 1000 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்!

கலிஃபோர்னியா மாநிலத்தின் சான் டியகோ (San Diego) பகுதியில் தொடர்ந்து வரும் கடும் காட்டுத் தீ காரணமாக இதுவரை சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பு கருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று (சனிக்கிழமை) பல தீயணைப்பு படைவீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர்களின் தீவிர முயற்சியின் பின்னர் சுமார் 20 சதவீதமான பகுதியின் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதிவேகமாக பரவி வரும் காட்டுத் தீ காரணமாக பாதுகாப்பு நோக்கம் கருதி மக்கள் வேறு இடத்திற்கு வெளியேற்றப்பட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காட்டுத் தீ பரவியதற்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படாத போதிலும் தற்போது நிலவிவரும் கடும் வெப்பம் மற்றும் அதிவேகக் காற்று என்பனவே இந்த தீ பரவக் காரணமாக உள்ளதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


குருநாகல் பள்ளிவாசல் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்!

குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அதுல் கெஷாப் வலியுறுத்தியுள்ளார். பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டுமெனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


மதுக்கடைகளை மூடக்கோரி பேரணி: தமிழிசை அறிவிப்பு!

மதுக்கடைகளை மூடக்கோரி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள மதுவுக்கு எதிரான தமிழகப் பெண்களின் போராட்டமானது, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாகவே  மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுக்கடைகளை மூடக் கோரி தமிழகம் முழுவதும் மகளிர் தாமாக முன் வந்து மதுக்கடைகளின் முன்பு போராடுவது மற்றும் மதுக்கடைகளை உடைப்பது போன்ற சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபடும் பொலிஸார் பொது மக்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலைகளை மேற்கொண்டுள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் மதுக்கடை உரிமையாளர்களின் ஏவல் துறையாக மாறி செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயமாகும். படிப்படியாக மதுக் கடைகளை மூடுவோம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாமேலும் படிக்க…


ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யேமனில் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சவூதி அரேபியாவுக்கான விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல்லாயிரக்கணக்கான ஹெளதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். யேமனில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் யேமனிய கொடிகளை கைகளில் ஏந்தியும் “அல்லாஹ் ஒருவனே சிறந்தவன்”, “அமெரிக்காவுக்கு அழிவு உண்டாகட்டும்”, “இஸ்ரேல் அழிய வேண்டும்”, “யூதர்கள் சபிக்கப்பட வேண்டும்”, “இஸ்லாமிற்கு வெற்றி உண்டாகட்டும்” போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் கோஷமிட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கருத்து தெரிவித்த போது, “தீவிரவாதம் வேண்டாம் என்பதே எமது விருப்பம். அமெரிக்கா தீவிரவாதத்தை தூண்டுகின்றது. சவூதியின் துணையுடன் யேமனில்  உள்ள மக்களை ட்ரம்ப் கொன்று குவிக்கின்றார்” என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த மற்றுமொருவர், “ட்ரம்பின் கூட்டணியுடன் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை யேமன் மக்களை மிகவும் பாதிக்கும். இருப்பினும், எவ்வளவு தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும் நாம் தைரியமாக முகங்கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.


சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து அணியை குறைத்து எடைபோட வேண்டாம்: டி வில்லியர்ஸ்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை குறைத்து எடைபோட வேண்டாம் என்று தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டி வில்லியர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 8 அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று  போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற புதன்கிழமை தொடங்குகிறது. இந்த தொடர் குறித்தும், வர இருக்கின்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்தும் டி வில்லியர்ஸ் கூறுகையில், இங்கிலாந்து அணியை தற்போது குறைத்து எடைபோட வேண்டாம் என்று டி வில்லியர்ஸ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் இங்கிலாந்துக்கும்மேலும் படிக்க…


வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை!

அரசுக்கு எதிராக சதி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அரசுக்கு எதிராக சதி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, வங்காள தேச தேசிய கட்சி தலைவரான இவர் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இந்த நிலையில், இவரது கட்சி அலுவலகத்தில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த அலுவலகம் தலைநகர் டாக்காவில் குல்ஷான் பகுதியில் உள்ளது. இங்கு சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு கலிதாஜியா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சி தலைவன் கலிதாஜியாவை மனரீதியாக துன்புறுத்தவே தேவையற்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்றனர். ஆனால், அரசுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய ஒரு லாரி புத்தகங்கள் கலிதாஜியாவின் கட்சி அலுவலகத்தில்மேலும் படிக்க…


என் மகனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுங்கள்: குல்பூ‌ஷன் தாயார் பாகிஸ்தானுக்கு கடிதம்

‘என் மகனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுங்கள்’ என பாகிஸ்தானுக்கு குல்பூ‌ஷன் ஜாதவ் தாயார் கடிதம் எழுதியுள்ளார். இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்தது. ஈரானில் இருந்து பாகிஸ்தான் பலுசிஸ்தானுக்குள் நுழைந்து உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு ஈரானில் ஒரு நிறுவனம் நடத்தி வந்ததாகவும், அங்கிருந்து கடத்தி வரப்பட்டு பொய் குற்றம் சுமத்தி தண்டனை வழங்கி இருப்பதாகவும் இந்தியா தெரிவிக்கிறது. மரண தண்டனையை ரத்து செய்யும் படி பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டு கொண்டது. அதற்கு பாகிஸ்தான் மறுக்கவே இந்தியா சர்வதேச கோர்ட்டை நாடியது. இந்தியாவின் மனுவை விசாரித்த கோர்ட்டு இந்த வழக்கு விசாரணை முடியும் வரை குல்பூ‌ஷன்ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என தடை விதித்தது. மேலும், அவரை இந்தியமேலும் படிக்க…


ரூ.1.5 கோடி வெளிநாட்டு பணத்துடன் துபாய் செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் கைது!

ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சவுதி ரியால்களுடன் துபாய் செல்ல முயன்றவரை சென்னை விமான நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை துபாய் புறப்பட்டு செல்லும் விமானத்தின் மூலம் ஒரு பயணி வெளிநாட்டு பணத்தை கடத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விரைந்து செயலாற்றிய அதிகாரிகள், பயணிகள் அனைவரையும் வெகு துல்லியமாக பரிசோதித்தனர். அப்போது, தனது கைப்பெட்டியில் ஒருவர் மறைத்து கொண்டு வந்திருந்த சுமார் 1.48 கோடி ரூபாய் மதிப்பிலான சவுதி அரேபியா நாட்டு ரியால்களை கண்டுபிடித்தனர். இதையடுத்து, சென்னையை சேர்ந்த அவரை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் – எந்தக் கட்சியிலும் சேர மாட்டார்: திருநாவுக்கரசர் திட்டவட்டம்

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார் வேறு எந்தக் கட்சியிலும் சேர மாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 26-வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். சமீபத்தில் பரபரப்பான விவாதப் பொருளாக மாறிவிட்ட நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்வியை அவரிடம் நிருபர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், ‘‘எனது நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்தை எனக்கு 35-40 ஆண்டுகளாக தெரியும். அரசியலுக்குமேலும் படிக்க…


2016 அதிக ஊதியம் பெற்ற டெக் நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் சுந்தர் பிச்சை பிடித்த இடம்?

உலகளவில் பிரபலமாக இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களி்ன் தலைமை செயல் அதிகாரிகள் கடந்த ஆண்டு பெற்ற மொத்த வருவாய் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பிடித்த இடம் என்ன? உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு வழங்கிய ஊதியம் சார்ந்த விரிவான பட்டியலை புளூம்பெர்க் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவில் அதிக ஊதியம் பெற்ற 200 அதிகாரிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. பட்டியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் பதிவு செய்த வர்த்தக அறிக்கையை தழுவி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு (2016) அதிக வருமானம் பெற்ற டாப் 5 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். டாப் 5: ஐ.பி.எம் தலைமை செயல் அதிகாரி: ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விர்ஜினியாமேலும் படிக்க…


மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குருநாகல் மல்லவபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் மீது,  இன்று அதிகாலை 03:30 மணியளவில் குறித்த பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பள்ளிவாசல் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில், அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளதோடு, தாக்குதலினால் பள்ளிவாசல் கண்ணாடிக்கு மாத்திரமே சேதமேற்பட்டுள்ளதகாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவமானது ஆறு பேர் கொண்ட கும்பலினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


கனேடிய கடற்படையின் ”வின்னிபெக்” கொழும்புத் துறைமுகத்தில்

கனேடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.   வின்னிபெக் என்ற கனேடிய கடற்படைக் கப்பலே, கூட்டுப்பயிற்சி மற்றும் நட்பு தேவைகளுக்காக நேற்று கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.   எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ள இந்தப் போர்க்கப்பலானது, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலங்களில் கூட்டுப்பயிற்சி, பரஸ்பர நட்புறவு மற்றும் நட்பு ரீதியான விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


18 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும்..

2017 ஆம் ஆண்­டிற்­கான தேருநர் இடாப்புத் திருத்தம் செய்­யப்­பட்டு வரு­கின்ற இச்­சந்­தர்ப்­பத்தில் 18 வயதை பூர்த்தி செய்த தமிழ், முஸ்லிம் மக்கள் தம்மை புதிய வாக்­கா­ள­ராக பதிவு செய்து கொள்ள முன்­வர வேண்டும் என சப்­ர­க­முவ மாகா­ண­சபை ஐ.தே.க உறுப்­பினர் வை.எம்.இப்ளார் வேண்டுகோள் விடுத்­துள்ளார். வாக்­காளர் தேருநர் இடாப்­பு­களின் திருத்தப் பணிகள் தற்­போது நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரி­வு­க­ளிலும் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. இதற்­கான விண்­ணப்பப் படி­வங்கள் கிராம சேவ­கர்கள் மூல­மாக குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 1999 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திக­திக்கு முன்னர் பிறந்த அனை­வரும் புதிய வாக்­கா­ளர்­க­ளாக தம்மை பதிவு செய்து கொள்ள முடியும். எனவே இது விட­ய­மாக கூடிய ஈடு­பாட்­டுடன் செயற்­ப­டு­மாறு அவர் கேட்டுக் கொண்டார். சப்­ர­க­முவ மாகா­ணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தம்மை வாக்­கா­ளர்­க­ளாக பதிவு செய்துமேலும் படிக்க…


கல்வி அமைச்சின் அனு­ம­தி­யின்றி பா­ட­சாலை நிர்­வா­கத்­தி­னரால் பணம் அறி­வி­டப்­பட்டால் 1988 க்கு அழை­க்­கவும்

கல்வி அமைச்சின் அனு­ம­தி­யின்றி, பாட­சாலை மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து, அப்­பா­ட­சாலை நிர்­வா­கத்­தி­னரால் பணம் அறி­வி­டப்­பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவ­சர அழைப்­பி­லக்­கத்­துக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்தித் தெரி­விக்­கு­மாறு, கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது. இதே­வேளை, கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ர­ண­தரப் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த நிலையில், உயர்­த­ரத்­துக்­கான கல்­வியைத் தொடர்­வ­தற்­காக, வேறு பாட­சா­லை­க­ளுக்குச் செல்லும் மாண­வர்­க­ளுக்­கான நேர்­முகப் பரீட்சை மற்றும் அம்­மா­ண­வர்­க­ளிடம் இருந்து, பாட­சா­லை­யினால் அற­வி­டப்­படும் தொகை தொடர்­பான முழு விவ­ரங்கள் அடங்­கிய அறிக்­கையை, தன்­னிடம் கைய­ளிக்­கு­மாறு கல்வி அமைச்சர் பணிப்­புரை விடுத்­துள்ளார். சில பாட­சா­லை­களில் நடத்­தப்­படும் நேர்­முகப் பரீட்­சைகள் மற்றும் மாண­வர்­க­ளிடம் அற­வி­டப்­படும் பணம் தொடர்பில் கிடைக்­கப்­பெற்ற முறைப்­பா­டு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே, மேற்­படி அறிக்­கையைத் தயா­ரித்து தன்­னிடம் சமர்ப்­பிக்­கு­மாறு, அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், உரிய அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார். பாட­சா­லை­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள தொகைக்கு மேல­தி­க­மாக, பாட­சாலை அபி­வி­ருத்­திக்­கென எவ­ரேனும் பணம்மேலும் படிக்க…


18 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும்

2017 ஆம் ஆண்­டிற்­கான தேருநர் இடாப்புத் திருத்தம் செய்­யப்­பட்டு வரு­கின்ற இச்­சந்­தர்ப்­பத்தில் 18 வயதை பூர்த்தி செய்த தமிழ், முஸ்லிம் மக்கள் தம்மை புதிய வாக்­கா­ள­ராக பதிவு செய்து கொள்ள முன்­வர வேண்டும் என சப்­ர­க­முவ மாகா­ண­சபை ஐ.தே.க உறுப்­பினர் வை.எம்.இப்ளார் வேண்டுகோள் விடுத்­துள்ளார். வாக்­காளர் தேருநர் இடாப்­பு­களின் திருத்தப் பணிகள் தற்­போது நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரி­வு­க­ளிலும் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன. இதற்­கான விண்­ணப்பப் படி­வங்கள் கிராம சேவ­கர்கள் மூல­மாக குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன. 1999 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திக­திக்கு முன்னர் பிறந்த அனை­வரும் புதிய வாக்­கா­ளர்­க­ளாக தம்மை பதிவு செய்து கொள்ள முடியும். எனவே இது விட­ய­மாக கூடிய ஈடு­பாட்­டுடன் செயற்­ப­டு­மாறு அவர் கேட்டுக் கொண்டார். சப்­ர­க­முவ மாகா­ணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தம்மை வாக்­கா­ளர்­க­ளாக பதிவு செய்துமேலும் படிக்க…


ஜனா­தி­பதி அவுஸ்­தி­ரே­லியா : பிர­தமர் அமெ­ரிக்­கா உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை மறுநாள் செவ்­வாய்­கி­ழமை உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு அவுஸ்­தி­ரே­லியா செல்­வ­து­டன்­ பி­ர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அமெ­ரிக்­கா­விற்கு செல்­கின்றார். மே மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஜனா­தி­பதி அவுஸ்­தி­ரே­லிய விஜ­யத்தில் கலந்து கொள்­வ­து­டன் ­அங்கு பல­த­ரப்­பட்ட நிகழ்­வு­க­ளிலும் பங்­கு ­பற்ற உள்ளார். மேலும், அவுஸ்­தி­ரே­லியா வாழ் இலங்­கை­யர்­களை சந்­தித்து விசேட உரை­யாற்­றவும் உள்ளார். இதன்போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் உள்­ளிட்ட அமெ­ரிக்க இரா­ஜாங்க திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார். அமெ­ரிக்­காவின் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் ஆட்சி நிறை­வ.ை­டந்து தற்­போது குடி­ய­ரசு கட்­சியின் ஜனா­தி­ப­தி­யான டொனால்ட் ட்ரம்பின் ஆட்­சியில் இலங்­கையின் தலைவர் ஒருவர் அமெ­ரிக்­கா­விற்கு விஜயம் செய்­வது இதுவே முதற் தட­வை­யாகும். எனவே பிர­தமர்மேலும் படிக்க…


ஜூலை மாதத்திற்குள் வடக்குக் கிழக்கில் 2000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு!

வடக்கு கிழக்கில் 2000 பேருக்கு அரசதுறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மற்றும் கிழக்கில் 2000 பட்டதாரிகளுக்கு ஜூலை மாத நடுப்பகுதியில் நியமனங்கள் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், 3000 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களிலும் பட்டதாரிகள் கவனத்தில் கொள்ளப்படவிருக்கின்றார்கள். எனவே அரசாங்கத்தினது வாக்குறுதிகளை ஏற்று வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் கைவிடப்பட வேண்டும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.


மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது தாக்குதல்!

குருநாகல் மாவட்டம் மல்வல பிட்டிய ஜூம்மா பள்ளிவாசல்மீது நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதில் ஒரு குண்டு மாத்திரமே வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஆறுபேர் கொண்ட குழுவொன்று ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலினால் பள்ளிவாசலின் கண்ணாடிகளில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மைக்காலமாக பெரும்பான்மை சிங்கள இனவாதிகளால் தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சிறுபான்மையினத்தவரை அச்சுறுத்தலுக்குளளாக்கும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய இனவாதச் செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்துநிறுத்தவேண்டுமெனவும், இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கும் கொண்டுசென்றார்.


கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு தயார்!

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் அடுத்த வினாடியே இணைவதற்கு தயார் என்று சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் கூறினார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லியில் கூட்டணி பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் அனைவருடன் கலந்து பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று தான் கூறினேன். தமிழக மக்களின் பல தேவைகளை, தீர்க்கப்பட வேண்டிய பல கோரிக்கைகளை பிரதமரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்து உள்ளோம். இவற்றை கவனமாக கேட்ட பிரதமர் பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார். பிரதமரிடம் அரசியல் பற்றி நான் எதுவும் பேசவில்லை. இரு அணிகளும் இணைவதற்கு சில கோரிக்கைகளை வைத்து உள்ளோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும். எங்கள்மேலும் படிக்க…


வெள்ளவத்தை ‘எக்சலன்ஸி’ கட்டடத்தின் உரிமையாளர் கைது!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டட சரிவுதொடர்பில் கட்டடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.   வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில்  சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள ‘எக்சலன்ஸி’ என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 21 பேர் காயமடைந்திருந்தனர். இந்த அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்ததுடன், நேற்று இரவு பத்தனை சேர்ந்த ராமன் நிரோஷன் என்ற இளைஞன் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த கட்டடத்தின் உரிமையாளர் தலைமறைவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் நேற்று இரவு  பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை இன்றைய தினம் கல்கிஸ்ஸை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சென்னையில் சட்டவிரோதமாக கூடினால் கைது!

சென்னை கடற்கரையில் சட்டவிரோதமாக கூடினால் கைது செய்யப்படுவார்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. ஈழப் படுகொலை நினைவேந்தலுக்கு அனுமதி கோரி தீபா விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. மெரீனா ஜல்லிக்கட்டு புரட்சியைத் தொடர்ந்து தற்போது கடற்கரையில் யாரையும் கூட விடாமல் கண் கொத்திப் பாம்பாக காவல் காத்து வருகிறது போலீஸ். இந்த நிலையில் தற்போது புதிய தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை மெரினா கடற்கரையில் விதிமுறைகளை மீறி குழுமினாலோ, கூட்டம் நடத்த முற்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையின் அழகை பாதுகாக்கும் வகையில் மெரினா கடற்கரையில் கூட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிதிகளுக்கு மாறாக மெரினாவில் குழுவாக கூடுவது.மேலும் படிக்க…


2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை – ராணுவ வீரர்கள் இருவர் மரணம்

காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே நேற்று (20 ) ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது இந்திய வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீர் மாநிலம் நாவுகாம் செக்டார் அருகே உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் இன்று இரு தீவிரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவ முயற்சித்துள்ளனர். இதனை, கண்டுபிடித்த எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, எல்லை பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது தீவிரவாதிகளின் தாக்குதலில் இரு இந்திய வீரர்கள் பலியாகினர். பலியான வீரர்களின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், அப்பகுதியில் வேறு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என்றும் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக எல்லைப்பகுதியில்மேலும் படிக்க…


ஆப்கானிஸ்தானில் முழுவதும் பெண்களுக்காக நடத்தப்படும் முதல் ஒளிபரப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் பெண்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் கொண்ட ஒளிபரப்பு (சனல்) புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு வரை தாலிபான்களில் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டில், அப்போது பெண் குழந்தைகள் கல்வி கற்கவும், பெண்கள் வேலைக்கு செல்லவும் தடை இருந்தது. பின்னர் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய அந்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் தங்களது உரிமைகளை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் முற்றிலும் பெண்களுக்காகவே நடத்தப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்று உதயமாகிறது. ஸான் டி.வி. என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை தொலைக்காட்சிகளில் பெண்கள் பணியாற்றுவதற்கு பண்பாட்டு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவற்றை உடைப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ”முழுவதும் பெண்களால் நடத்தப்படும் இந்த தொலைக்காட்சி தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி, இந்த ஒளிபரப்பு பெண்களுக்கான உரிமைகளை பறைமேலும் படிக்க…


அமைச்சர்களை நாளை காலை ஒன்று கூடுமாறு அவசர அழைப்பு

சிறிலங்கா அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களையும் நாளை காலை 8.30 மணிக்கு அதிபர் செயலகத்துக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, நாளை காலையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அமைச்சரவை மாற்றம் தொடர்பான சிக்கல்கள் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றையடுத்து, சிறிலங்காஅதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அவசரமாக சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். அமைச்சரவை மாற்றத்தினால் அரசியல் சதிப்புரட்சி ஒன்று ஏற்படலாம் என்று தேசிய புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை முன்னாள் அதிபர்  சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் மூடியமேலும் படிக்க…


திருமண வாழ்த்து – சாரதி & ஜெனிபர் (21/05/2017)

தாயகத்தில் கீரிமலையை சேர்ந்த நாகராஜா மகாலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வன் பார்த்தசாரதி (TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர் சாரதி) அவர்களும் பிரான்ஸ் Bondy இல் வசிக்கும் ஆன்திரே சூசைமேரி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜெனிபர் அவர்களும் நேற்று 20ம் திகதி மே மாதம் சனிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார்கள். அவர்களின் திருமண வாழ்த்து நிகழ்வை 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று கொண்டாடுகிறார்கள். சாரதி ஜெனிபர் தம்பதிகளை வாழ்த்துவோர் தாயகத்தில் வசிக்கும் அப்பா,அம்மா,தம்பி குமரன்,தங்கை அபிராமி,பிரான்சில் வசிக்கும் எழிலரசன் விமலா குடும்பத்தினர்,அன்புராஜ் நிர்மலா குடும்பத்தினர்,மற்றும் பிரான்சில் வசிக்கும் தனராஜ் தேவி குடும்பத்தினர்,ஜெர்மனியில் வசிக்கும் நந்தகுமார் கிரிஜா குடும்பத்தினர்,ஜெர்மனியில் வசிக்கும் சித்தப்பா ஜெகதீஸ்வரன் உமாதேவி குடும்பத்தினர்,மற்றும் தாயகத்தில் வசிக்கும் சித்தப்பா சித்தி குடும்பம்,மாமா மாமி குடும்பம்,தம்பிமார்,தங்கைமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,ஜெர்மனியில் வசிக்கும் தம்பி தர்ஷன்,இந்தியாவில் வசிக்கும் மாமா,மாமி,மச்சான்மார்,மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்மேலும் படிக்க…


பாடுவோர் பாடலாம் – 14/05/2017


சங்கமம் – 21/05/2017


சுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 15/05/2017


அரசியல் சமூக மேடை- 18/05/2017


ரான்சம்வேர் வைரஸ்க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – மறுக்கும் வடகொரியா

கம்ப்யூட்டர்களை ஹேக் செய்யும் வைரசான ரான்சம்வேர்-க்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது. கம்ப்யூட்டர்களை ஹேக் செய்யும் வைரசான ரான்சம்வேர்-க்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வடகொரியா மறுப்பு தெரிவித்துள்ளது. டெக் உலகின் அசுரர்களாக சமீபத்தில் உருவெடுத்த ’வான்னாக்ரை’ ஹேக்கிங் குழுவினர் இ-மெயில் மூலமாக ஹேக்கிங் மால்வேரை ஒருவரது கம்ப்யூட்டருக்கு அனுப்புகின்றனர். கம்ப்யூட்டரை இயக்கும் நபர் விபரமின்றி அந்த இ-மெயிலை திறக்கும் போது அந்த மால்வேரானது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை ஹேக் செய்து விடுகிறது. குறிப்பிட்ட அளவு பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்களை திரும்ப அளிப்போம், இல்லையெனில் அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் அக்குழுவினர் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த ‘ரான்சம்வேர்’ வைரஸின் தாக்குதலுக்கு உலகமுழுவதுமுள்ள மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் தப்பவில்லை. அனைத்து நாடுகளிலும் உள்ள இணைய பாதுகாப்புமேலும் படிக்க…


தெலுங்கானா மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 178 பேர் பலி!

46 டிகிரி அளவுக்கு சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 178 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 46 டிகிரி அளவுக்கு சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 178 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடை வெயிலின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்கள் இந்த ஆண்டு கடுமையாக பாதித்துள்ளது. பருவமழை தாமதம் உள்ளிட்ட காரணங்களால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தப்பிக்க இயலாத நிலையாகிவிட்டது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலில் சிக்கி இதுவரை 178 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெயிலினால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தது உள்ளிட்ட நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் வரை அம்மாநிலத்தில் கனிசமான பேர் பலியாகியுள்ளனர். 44 முதல் 46 டிகிரி வரைமேலும் படிக்க…


இரட்டை கேமரா கொண்ட சாம்சங்-இன் முதல் ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்

சாம்சங் நிறுவனத்தின் இரட்டை கேமரா அமைப்பு கொண்ட முதல் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி சி10 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் தகவல்களை இங்கு பார்ப்போம். சாம்சங் நிறுவனத்தின் சி சீரிஸ் ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு முன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இரட்டை கேமரா கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இணையத்தில் கசிந்துள்ள சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படத்தில் சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனின் சிறிய பாகம் மட்டுமே பதிவாகியுள்ளது என்றாலும் சில தகவல்கள் அம்பலமாகியுள்ளது. அதன்படி கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு நிறம்மேலும் படிக்க…


பட்ஜெட் விலையில் லாவா A77 அறிமுகம்

இந்தியாவில் லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லாவா A77 சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். லாவா நிறுவனத்தின் A77 எனும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ, 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கும் லாவா A77 நீலம், தங்கம், மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லாவா நிறுவனத்தின் Z10 மற்றும் Z25 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன. மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ள இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன. 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருக்கும் லாவா Z10 மற்றும் Z25 இந்தியாவில் முறையே ரூ.11,500 மற்றும் ரூ.18,000 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. Z10 ஸ்மார்ட்போன் கோல்டு நிறத்திலும், Z25 ஸ்மார்ட்போன் ஷேம்பெயின் கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் லாவா Z10மேலும் படிக்க…


எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கொடி நாட்டிய இந்திய கடற்படை வீரர்!

உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய கடற்படை வீரராக ப்ரீஸ் ஷர்மா என்பவர் சாதனை படைத்துள்ளார். உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்டில் ஏறிய முதல் இந்திய கடற்படை வீரராக ப்ரீஸ் ஷர்மா என்பவர் சாதனை படைத்துள்ளார். நேபாளம் நாட்டிலுள்ள எவரெஸ்ட் சிகரமானது உலகின் மிக உயரமான சிகரமாக உள்ளது. 8848 அடி உயரமுள்ள இந்த சிகரத்தில் ஏறும் முயற்சியில் உலகம் முழுவதுமிருந்து வந்திருக்கும் சாகச விரும்பிகள் ஈடுபடுவர். இதற்கென, அந்நாட்டு அரசு சிறப்பு திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய கடற்படை வீரர் ப்ரீஸ் சர்மா ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், நேற்று அவர் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார். இந்திய கடற்படை வீரர் ஒருவர் எவெரெஸ்டில் ஏறி சாதனை படைப்பது இதுவே முதன்முறையாகும். கடந்த 2015-ம் ஆண்டில் சர்மா ஏற்கனவே எவரெஸ்ட் சிகரத்தில்மேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !