Main Menu

2வது ஆண்டு நினைவு தினம் – அமரர். திருமதி. சந்திரமணி செல்வராஜா (01/02/2025)

தாயகத்தில் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் திருகோணமலை, பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி சந்திரமணி செல்வராஜா அவர்களின் 2 வது ஆண்டு நினைவு தினம் 1ம் திகதி மாசி மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

அமரர் திருமதி செல்வராஜா சந்திரமணி அம்மாவை நினைவு கூருபவர்கள் அன்புத்தாயார், பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்.

அன்புத்தாயார் அமரர். திருமதி சந்திரமணி செல்வராஜா அவர்கள் 1986ம் ஆண்டு பிரான்ஸ் வருகை தந்து PARIS 10 Rue Cail இல் VT CASH & CARRY என்ற நிறுவனத்தை உருவாக்கி கண்ணியமான முறையில் வழி நடத்தி Garges-lès-Gonesse இல் VT SUPER STORE, COFFEE INDIA ஆகியவற்றையும் உருவாக்கி நல்ல பண்பான அன்பான கண்ணியமான தாயாக எல்லோர்க்கும் வாழ்ந்து காட்டியவர்.

எம் மக்களுக்கு அருள் பாலிக்க திருகோணமலை நிலா வெளியில் ஓர் சிவன் ஆலயத்தையும் அமைத்துக் கொடுத்தார்.

இவ்வாறு பல பெருமைகளை செய்த அன்புத்தாயாரை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

அமரர் திருமதி செல்வராஜா சந்திரமணி அம்மாவை TRT தமிழ் ஒலி குடும்பமும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப்பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

அவர்களுக்கும் எமது நன்றி

பகிரவும்...
0Shares