Main Menu

182.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் கனேடியர் கைது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 21 வயதான கனேடிய நாட்டவர் என்றும், அவர் உயர்கல்வி பயிலும் மாணவர் என்றும் கூறப்படுகிறது.

குறித்த நபர் இன்று (28) அதிகாலை விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக போதைப்பொருளை கடத்த முயன்ற போது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நள்ளிரவில் துபாயிலிருந்து ஒரு தனியார் விமானத்தின் மூலமாக நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

அவரது பொதிகளை சோதனையிட்ட போது, சுங்க அதிகாரிகள் 72 சிறிய பாக்கெட்டுகளில் ஆறு பெரிய பொலித்தீன் பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 18 கிலோ கிராம் 253 கிராம் ஹாஷிஷ் போதைப்பொருளை கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட கனேடிய நாட்டவர் மீட்கப்பட்ட போதைப்பொருளுடன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.

பகிரவும்...
0Shares