Main Menu

18வது பிறந்த நாள் வாழ்த்து – சத்தியராஜ் அபிவரதன் (08/02/2025)

தாயகத்தில் சங்குவேலியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnesஐ வதிவிடமாகவும் கொண்டிருக்கும் சத்தியராஜ் -சிவதர்ஷினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிவரதன் 04ம் திகதி மாசி மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது பிறந்த நாளை 08ம் திகதி மாசி மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார்.

இன்று 18வது பிறந்த நாளை கொண்டாடும் அபி வரதனை அன்பு அப்பா சத்தியராஜ், அன்பு அம்மா சிவதர்ஷினி, அப்பம்மா, அம்மம்மா, பெரியப்பா, பெரியம்மா, மாமா, மாமி. சித்தப்பா, சித்தி, அண்ணாமார், அக்காமார். மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று சிரஞ்சீவியாக பேரும் புகழும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் அபி வரதனை TRT தமிழ் ஒலி குடும்பமும் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம்.

இன்று TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப்பெற்றோர் சத்தியரஜ்-சிவதர்ஷினி தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி .

பகிரவும்...
0Shares