Main Menu

17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெர்னோனியா ஜெய்லானிகா, ( Vernonia zeylanica) நிஜெல்லா சாடிவா, (Nigella sativa) ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், (Hemidesmus indicus) லூகாஸ் ஜெய்லானிகா (Leucas zeylanica) மற்றும் ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா (Smilax glabra) ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மருந்துகளின் கலவையானது புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடும் என்று பேராசிரியர் சமீரா ஆர். சமரக்கோன் உள்ளிட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...