Main Menu

13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் சமஷ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது – குருசாமி சுரேந்திரன்

அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஷ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “13வது அரசியல் திருத்தம் எங்களுடைய தீர்வல்ல என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.

ஆனால் 13வது அரசியலமைப்பு யாப்பில் இருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தாமல் அதைத் தாண்டிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்வது என்பது சாத்தியமற்ற ஒன்று.“ என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...