ஹமாஸ் பணயக் கைதிகளை தொடர்ந்தும் விடுவிப்பதற்கு இஸ்ரேல் நடவடிக்கை
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
முன்னதாக இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலையை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்திருந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக குற்றஞ்சாட்டியே ஹமாஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
எனினும், ஹமாஸ் பணயக்கைதிகளை தொடர்ந்தும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.