வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றிச் சென்ற கார், ரயிலுடன் மோதி விபத்து
காலி, பியதிகம ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காலியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலிலேயே இந்த கார் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண உதவிகளை கொண்டு சென்ற கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...