Main Menu

வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் – காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள்

மாவடிப்பள்ளி வீதியில் நேற்று (26) இரவு மதரஸா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் நீரில் மூழ்கியதில் காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்கிற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று இன்றைய தினம் (27) பார்வையிட்டார்.

நேற்று உழவு இயந்திரத்தில் சென்ற மாணவர்கள்  வெள்ளத்தில் காணாமல்போன விடயத்தை அறிந்த  பாராளுமன்ற உறுப்பினர் கடற்படையினரை தொடர்புகொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று கள விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டோர், காணாமல்போனோர் பற்றிய தற்போதைய நிலைமை  தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உரிய  நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசனைகளை வழங்கினார்.

பகிரவும்...
0Shares