வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பணப்பையிலிருந்து திருட்டு – தங்குமிட பணியாளர் கைது
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பணப்பையிலிருந்து வெளிநாட்டு நாணயங்களை திருடிய ஹோட்டல் பணியாளர் கோட்டை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோட்டல் ஒன்றின் சிறப்பு விருந்தினர் அறையில் வைத்திருந்த தனது பணப்பையிலிருந்து இலங்கை பணத்தில் சுமார் 330,000 ரூபாய் பெறுமதியுடைய திர்ஹம்கள் மற்றும் யூரோக்கள் திருடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் கடந்த 11ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஹோட்டலில் பணிபுரிந்த கந்தானை பகுதியை சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகிரவும்...