Main Menu

வெனிசுலா ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

அமெரிக்கப் படைகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததைத் தொடர்ந்து, எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பதட்டங்கள் நிலவியதாக கராகஸ் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

வெனிசுலாவின் மிராஃப்ளோரஸ் ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு மற்றும் கடுமையான மோதல்கள் நடந்ததாக கராகஸ் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மாளிகையின் மீது ட்ரோன்கள் காணப்பட்ட போதிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் இந்த தாக்குதலுடன் அமெரிக்கா சம்பந்தப்படவில்லை என்று வெள்ளை மாளிகை கூறியது.

துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகளை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் CNN செய்திச் ச‍ேவையிடம் கூறியுள்ளார்.

மிராஃப்ளோரஸ் அரண்மனைக்கு அருகிலுள்ள பாதுகாப்பு குழுக்களிடையே ஏற்பட்ட தவறான புரிதலில் இருந்து துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று அமெரிக்கச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

எனினும், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

வெனிசுலாவின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் திங்களன்று (05) நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இருந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக வெனிசுலா அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாட்டில் நடந்து வரும் அரசியல் கொந்தளிப்புடன் இந்த முன்னேற்றங்கள் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பகிரவும்...