விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களை நான்கு விசைப்படகுடன் இலங்கை கடற்படை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை நம்பி மீனவர்களின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் பிரசவ நேரத்தில் தனது கணவன் தன்னுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பகிரவும்...