Main Menu

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர் கைது

விமான எதிர்ப்பு தோட்டாக்களை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் திவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 09 விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மற்றும் 84S ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பீரங்கி இராணுவ படையில் கடமையாற்றுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பகிரவும்...
0Shares