Main Menu

விமர்சனங்கள் எழுந்த நிலையில் விருப்ப மனு கட்டணத்தை திருப்பிக் கொடுக்கிறது மநீம

தி​முக கூட்​ட​ணி​யில் கமல்ஹாசனின் மக்​கள் நீதி மய்​யம் கட்சி அங்​கம் வகித்து வரு​கிறது. சட்​டப்​பேரவை தேர்​தலில் மநீம சார்​பில் போட்​டி​யிட 60 பேர் விருப்ப மனு கட்​ட​ணம் (ரூ.50 ஆயிரம்) செலுத்​தி​யிருந்​தனர்.

ஆனால், தேர்​தலில் மநீம போட்​டி​யிட​வில்லை என்று கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் அறி​வித்​தார். தேர்​தலில் போட்​டி​யிட வாய்ப்பு கிடைக்​கும் என எதிர்​பார்ப்​பில் விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​தி​ய​வர்​கள் ஏமாற்​றம் அடைந்​தனர்.

இதைத் தொடர்ந்​து, தேர்​தலில் போட்​டி​யிட விருப்ப மனு கட்​ட​ணம் ரூ.50 ஆயிரம் செலுத்​தி​ய​வர்​களுக்கு அக்​கட்​ட​ணத்தை திருப்​பிக் கொடுக்க மநீம கட்சி முன்​வந்​துள்​ளது. இதுதொடர்​பாக விருப்ப மனு கட்​ட​ணம் செலுத்​திய நபர்​களுக்கு கட்சி தலைமை அலு​வல​கத்​தில் இருந்து நேற்று அனுப்​பப்​பட்ட சுற்​றறிக்​கை​யில், ‘தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் மக்​கள் நீதி மய்​யம் சார்​பில் போட்​டி​யிட விருப்ப மனு தாக்​கல் செய்​திருந்​தவர்​கள் தாங்​கள் செலுத்​திய கட்​ட​ணத் தொகையை கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் ஏப்​ரல் 8 (இன்​று) முதல் 16-ம் தேதிக்​குள் நேரில் வந்து திரும்​பப் பெற்​றுக்​கொள்​ளலாம்​’ என கூறப்​பட்​டுள்​ளது.