வாகன இறக்குமதி – 2026இல் சாதாரண நிலைக்குத் திரும்பும்
2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் சாதாரண நிலைக்குத் திரும்பும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரியளவில் வாகனங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் வாகனங்களின் விலையும் கொள்வனவு செய்ய முடியாதளவில் உள்ளன.
இந்த நிலையில், ஏற்பட்டிருக்கும் கேள்வியின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்குள், இலங்கையர்கள் வாகன இறக்குமதிக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவார்கள் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
இது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒரு பில்லியன் டொலரை விட அதிகமாகும். வாகன இறக்குமதி வரிகளைக் கொண்டு இந்தமுறை, பாதீட்டு பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும் என்றும் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பகிரவும்...