வவுனியாவில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை (12) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளில் வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தை அடைந்தது.
“ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை மனதில் உண்டு நம்பி கை கொடுங்கள்“, “தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு“, “திறமைக்கு இயலாமை தடைகள் அல்ல“ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
குறித்த நிகழ்வு வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் ஓஹான் நிறுவனம் ஆகியவை இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...