Main Menu

வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார் சீமான்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் பொலிஸ் வழங்கிய அழைப்பாணையை ஏற்று நேற்று இரவு 10 மணி அளவில் வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.

நேற்று காலை 11 மணி அளவில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென பொலிஸ் அழைப்பாணை அளித்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொலிஸ் மேற்கொண்டுள்ளது.

பொலிஸ் விசாரணைக்கு சீமான் ஆஜரான நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் வளசரவாக்கம் பொலிஸ் நிலையம் அருகே திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகளை பொலிஸ் அமைத்திருந்தது. பாதுகாப்பு கருதி 300 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பகிரவும்...
0Shares