Main Menu

வரதட்சனை கொடுமை – உயிரிழந்த ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம்

இந்தியா – திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரும் பிணையில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து, ரிதன்யாவுக்கு சொந்தமான 2 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று தோழிகளிடம் ரிதன்யா பேசியைமை தொடர்பாக குறித்த கையடக்கத் தொலைபேசியில் தகவல்கள் காணப்படுவதால், அவரது கையடக்கத் தொலைபேசியை ஆய்வுக்கு உட்படுத்துமாறு அவரது கணவர் கவின்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், கையடக்கத் தொலைபேசிகள் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டால் அவை ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 2 கையடக்கத் தொலைபேசிகளையும் தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகிரவும்...
0Shares