வட்டவளை பஸ் விபத்தில் நால்வர் காயம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் இன்று திங்கட்கிழமை (25) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் இ.போ.ச பஸ் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின்போது தனியார் பஸ்ஸின் பின்புறம் இரண்டாகப் பிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின்போது நால்வர் காயமடைந்துள்ள நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தனியார் பஸ்ஸின் பின்புறப் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பகிரவும்...