லெபனானில் அதிகரிக்கும் தாக்குதல் – தயாராகும் மருத்துவமனைகள்
லெபனானின் தென், கிழக்குப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அவசரமற்ற அறுவைச் சிகிச்சைகளை நிறுத்துமாறு அந்நாட்டுச் சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் வேளையில் அது அவ்வாறு கூறியது.தாக்குதலில் காயமடைவோருக்குச் சிகிச்சை அளிக்க வளங்களை ஒதுக்கவேண்டுமென்று அமைச்சு சொன்னது.இந்நிலையில் சீனா, இஸ்ரேலில் இருக்கும் அதன் குடிமக்களை அங்கிருந்து விரைவாக வெளியேறும்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறது. சீனர்கள் சீனாவுக்கே திரும்பவேண்டும் அல்லது இன்னும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவேண்டும் என்று அது வலியுறுத்தியது. அமெரிக்காவும் அதன் குடிமக்களை லெபனானிலிருந்து வெளியேறும்படிக் கேட்டுக்கொண்டுள்ளது.லெபனானில் வர்த்தக விமானச் சேவைகள் இன்னும் வழங்கப்படுகின்றன.அவற்றை இப்போதே பயன்படுத்தும்படி அது அமெரிக்கர்களைக் கோரியது.
பகிரவும்...