ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த அனர்த்தத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிந்ததுடன், 16 பேர் படுகாயமடைந்தாக ராஜஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், உயிரிழந்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
57 பயணிகளுடன் வந்த பேருந்து ஜெய்சால்மரில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தின் பின்புறத்தில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது.
அதைக் கவனித்த சாரதி பேருந்தை நிறுத்தினார், ஆனால் சில நிமிடங்களில் அது தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பகிரவும்...