Main Menu

ரஷ்ய பள்ளியில் 13 வயது மாணவர் சுத்தியலால் தாக்குதல்

ரஷ்யாவில் உள்ள பள்ளியில் 13 வயது மாணவர் ஒருவர் சுத்தியலை வைத்து நான்கு பேரைத் தாக்கியுள்ளார். கஸக்ஸ்தான் எல்லையில் உள்ள செலியாபின்ஸ்க் (Chelyabinsk) நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. காயமடைந்தோரில் இருவர் 13 வயது மாணவியர், ஒரு பையன், ஓர் ஆசிரியர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக ரஷ்யச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. தாக்குதல் நடத்திய மாணவரிடம் கத்தியும் துப்பாக்கியும் இருந்தது அவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் தெரியவில்லை. “மாணவர் சுத்தியலுடன் பள்ளிக்குள் சென்றது எப்படி? பாதுகாவல் அதிகாரிகள் அவரை ஏன் நிறுத்தவில்லை?” என்று மாநில ஆளுநர் அலஸ்கி டெக்ஸ்லர் (Aleksey Teksler) X தளப் பதிவில் கேள்வி எழுப்பினார். அப்பகுதியில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும்படி அவர் ஆணையிட்டார்

பகிரவும்...
0Shares