ரஷ்யாவை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 121 ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், மொஸ்கோ நகரை குறிவைத்து குறித்த ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரியாசான் மற்றும் மொஸ்கோ உட்பட 13 பிராந்தியங்களில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...