Main Menu

யோஷித்த ராஜபக்ஷ சி.ஐ.டியில் ஒப்படைப்பு

பண மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யோஷித்த ராஜபக்ஷ  பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (25) காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், யோஷித்த ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலம் பெற்ற பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான காணி ஒன்றை வாங்கியமை தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இந்த காணியின் பிரதான சந்தேக நபர் டெய்சி பொரெஸ்ட் எனப்படும் யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி ஆவார். இவர் இரத்மலானை சிறிமல் பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்.

பகிரவும்...