Main Menu

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் (14)யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போதே மாவட்ட செயலகத்துக்கு முன்னால் பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பகிரவும்...
0Shares