Main Menu

யாழ். புன்னாலைக் கட்டுவனில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயம்

பலாலி வீதி புன்னாலைக்கட்டுடன் பகுதியில் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இராணுவ வாகனம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதன்போது இராணுவ வாகனத்தின் பின்னால் வந்த லொறி ஒன்று இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை பலாலி பக்கம் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது குறித்த லொறி மோதியது.

இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு முதியவர்களே படுகாயமடைந்துள்ளனர். விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...
0Shares