யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் விவசாய உற்பத்திகள் மற்றும் பழவகைகள் போன்ற உள்ளூர் உற்பத்திகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தல், வெளிமாவட்ட உற்பத்தி பொருட்களை யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தில் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரை அழைத்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...
